நண்பர்களே உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. குசேலன் ,ஆளவந்தான், குருவி இது மாதிரியான படங்களைப் பார்த்ததால நீங்க மனதளவுல வலிமையாத்தான் இருப்பீங்க. அதனால பிரமாண்டமான ஒப்பனிங்குல நான் தரப் போற அதிர்ச்சி உங்களுக்கு ஒரு மேட்டரே கிடையாது. தைரியமா வாங்க.
01.01.2010 முதல் புதிய தளத்தில் இளையபாரதம் இயங்கப் போகிறது. ஆனால் பெயரும் அதே. பதிவிடப்போற ஆளும் அதே. வில்லங்க விஷயத்தையும் விவரமான யோசனைகளையும் பற்றி எழுதலன்னா சமூகத்துக்கு எதுவும் செய்யாம இருக்குற மாதிரி ஒரு பீலிங். (நீ எழுதாம இருக்குறதே பெரிய சேவைதான்னு சொல்லி கம்பெனி ரகசியத்தை காலி பண்ணக் கூடாது. ஒ.கே?)
நாலு நாளைக்கு முன்னாலேயே புது வருஷத்துல பிரமாண்டமான ஒப்பனிங் தர்றதுக்காக என்னுடைய நடிப்பு அனுபவங்களை படங்களோட பதிவிட்டு வெச்சிட்டேன். புது வருஷத்து அன்னைக்கு பதிவை வெளியிட வேண்டியதுதான். மறுபடி சொல்றேன். அங்க உங்களுக்காக நீங்க மட்டும் இல்லை நானும் எதிர்பார்க்காத இன்ப அல்லது துன்ப அதிர்ச்சி காத்திருக்கு.
வழக்கம் போல படிச்சுட்டு பின்னூட்டத்துல துவைச்சு காயப் போடுறவங்க செய்யலாம். நல்ல வார்த்தை சொல்லி பாராட்டுறவங்க தாராளமா வரலாம். நாலு பேரு வந்தாதானே கடை களை கட்டும். அதை விட்டுட்டு ஆளில்லா கடையில யாருக்கு டீ ஆத்தப் போறேன்?
இளைய பாரதம் 2010 க்கு போகனுமா...அப்புறம் என்ன யோசனை? இங்க அமுக்குங்க.
அன்பின் சரண்
பதிலளிநீக்குபுதுமணை புகுவிழ்ழவீற்கு நல்வாழ்த்துகள்
புது மனைக்கும் சென்று வாழ்த்துகிறேன்
நல்வாழ்த்துகள் சரண்
அன்பின் சரண்
பதிலளிநீக்குபுதுமனை புகுவிழாவிற்கு நல்வாழ்த்துகள்
புதுமனைக்கும் சென்று வாழ்த்துகிறேன்
நல்வாழ்த்துகள்