Search This Blog

வியாழன், 7 நவம்பர், 2013

திருவாரூரில் திரைப்பட கலை இயக்குனர் டிராட்ஸ்கி மருது

12-11-2013 செவ்வாய் மாலை 6 மணி முதல் 9 மணி வரை திருவாரூர், கமலாலயம் தென்கரை, இராசம்மாள் திருமண அரங்கத்தில் நடைபெறும் விழாவில் ஓவியரும் திரைப்பட கலை இயக்குனருமான டிராட்ஸ்கி மருது மற்றும் பலர் பங்கேற்கிறார்கள்.

வைகறை எழுதிய மெளனமும் மணிமுடிகளும் நூல் அறிமுக விழாவை

இலக்கிய வளர்ச்சிக்கழகம் திருவாரூரில் நடத்துகிறது. அந்த விழாவிற்குதான் ஓவியர் டிராட்ஸ்கி மருது வருகை தர இருக்கிறார். திருவாரூர் பகுதியில் உள்ள இலக்கிய ஆர்வலர்கள், ஓவியர்கள் ஆர்வமிருந்தால் விழாவிற்கு வருகைதரலாம்.

-திருவாரூர் சரவணன்.
***********************
ஓவியர் டிராட்ஸ்கி மருது பற்றி சில வார்த்தைகள்.... அந்திமழை இணைய இதழில் வெளிவந்தது இங்கே....

"பத்திரிக்கைச் சித்திரங்களில் மருதுவினுடையது கற்பனை வளமிக்க ஓவியங்கள்.மருது செய்வது கதைகளுக்கான சித்திரங்கள் அல்ல.அவைகள் கலைப் படைப்புகள்.பத்திரிக்கைகாரர்கள் அவற்றை கதைகளுக்கு சித்திரங்களாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்"என்று சிற்பி தட்சிணாமூர்த்தி. கணையாழியில்(மார்ச் 1994)முன்பு குறிப்பிட்டிருந்தார்.

கலை சார்ந்த எல்லா தளங்களிலும் இயங்கும் டிராட்ஸ்கி மருது தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஓவியர்.

மதுரையில் பிறந்த மருது சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்றார்.பல விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த அவர் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் ஆர்ட் டைரக்டராகவும் பணிபுரிந்துள்ளார்.எழுபதுகளில் மங்கையர்மலர் ,தொண்ணூரில் குமுதம்(சுஜாதா ஆசிரியராக இருந்த காலம்),சென்னை நெசவாளர் கூடத்தில் டெக்ஸ்டைல் டிசைனராக பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ளார்.

சிறு பத்திரிக்கைகள் மற்றும் தீவிர இலக்கியங்களுக்கு நிறைய வரைந்துள்ளார்.

கோமலின் சுபமங்களாவில் இவர் வரைந்த நடுபக்க ஓவியங்கள் பெரிதாக சிலோகிக்கப்பட்டது.ஆனந்த விகடனில் மருது வரைந்த அனேக ஓவியங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது .

ஜனரஞ்சக பத்திரிக்கைகள் மற்றும் சிறு பத்திரிக்கைகளின் அன்பை ஒரு சேர பெற்ற ஓவியர்களில் மருது குறிப்பிடத்தக்கவர்.

தேவதை,அசுரன் மற்றும் மூன்று NFDC சினிமாக்களின் கலை இயக்குனராக மருது பணிபுரிந்துள்ளார்.

இது தவிர பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்பெஷல் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.அவற்றில் ராஜகாளியம்மன்,பாளையத்தம்மன்,நாகேஸ்வரி,நைனா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

தமிழ், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது தீராத காதல் கொண்ட மருது தமிழின் முண்ணனி இலக்கியவாதிகளை கோட்டோவியத்தில் பதிவு செய்துள்ளார்.

நன்றி : அந்திமழை

ஞாயிறு, 3 நவம்பர், 2013

காவலர்களுக்கு நூலகம் உருவாக்கிய திருவாரூர் எஸ்.பி.

தொலைக்காட்சி ஆதிக்கத்தினால் புத்தகம் வாசிக்கும் பழக்கமே மிகவும் அரிதாகிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.காளிராஜ் மகேஷ்குமார் ஐ.பி.எஸ் இங்குள்ள காவலர்கள் படிப்பதற்காக நீண்ட தூரம் செல்வதை பார்த்து நூலகத்தை உருவாக்கியுள்ளார்.

இது தொடர்பான கட்டுரை தினமலர் - வாரமலரில் இன்று வெளியாகியுள்ளது.

அது அப்படியே உங்கள் பார்வைக்கு.

ஒரு மாவட்டத்திற்கு, கண்காணிப்பாளராக இருந்தோமா, சட்டம் ஒழுங்கு, குற்றங்களை பார்த்தோமா என்றுதான், பெரும்பாலான, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருக்கின்றனர். இதில், சிலர் விதிவிலக்கு. அவர்களில் ஒருவர்தான், காளிராஜ் மகேஷ்குமார் ஐ.பி.எஸ்., திருவாரூர் மாவட்ட, காவல் துறை கண்காணிப்பாளர்.

இவர், வாரமலர் இதழில், இடம் பெற காரணம், கான்ஸ்டபிள்களும், தன்னைப் போல, ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர வேண்டும் என்பதற்காக, இவர் எடுத்துள்ள முயற்சிகள்தான். உயர் அதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் உட்பட, அனைத்து பிரிவு போலீசாரையும், இதில், ஸ்பான்சர்களாக சேர்த்து, போலீசாருக்கென்றே ஒரு நூலகத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்நூலகத் திற்கு, எஸ்.பி., முதல் கான்ஸ்டபிள் வரை, புத்தகங்களை வழங்கியுள்ளனர். தவிர, ஒவ்வொரு போலீசாரும், சுழற்சி முறையில், மாதந்தோறும், ஒரு நாளிதழ், வார இதழை, தங்கள் சொந்த செலவில், வழங்கி வருகின்றனர். எதிர்காலத்தில், அரசு நூலகம் போன்று, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆயுதப்படை டி.எஸ்.பி., திருமலைகுமார் கூறியதாவது:

அரசு நூலகம் அமைக்க, சொந்தக் கட்டடம் இருக்க வேண்டும். திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில், கடந்த, 2000ம் ஆண்டிலிருந்து, நூலகத்திற்கான, கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 

 தற்போது, போலீஸ் குடியிருப்பு ஒன்றை, தற்காலிக நூலகமாக, மாற்றியுள்ளோம். டேபிள், சேர்களை சொந்த செலவில், எஸ்.பி., வழங்கியுள்ளார். நூலகம், தற்போது, தினமும் காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரையிலும் இயங்குகிறது. விடுமுறை கிடையாது. கர்ப்பிணி பெண் போலீஸ் ஒருவரை, நூலகராக நியமித்துள்ளோம்.

தற்போது, ஐ.பி.எஸ்., - ஐ.ஏ.எஸ்., மற்றும் போலீஸ் தேர்வுக்கான, நூல்களை வைத்துள்ளோம். போலீஸ் குடும்பங்கள் மட்டுமே, தற்போது, உறுப்பினர்களாக உள்ளனர். விரைவில், அரசு நூலகத்துடன் இணைந்து, இன்னும், புதுவித திட்டங்களை உருவாக்க உள்ளோம்.

Image Credit : dinamalar.com

 இதற்கு வித்திட்ட, மாவட்ட எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமார் கூறுகையில், 'நான், எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், அங்குள்ள போலீசாருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், ஏதாச்சும் செய்யணும்ன்னு நினைப்பேன்.

ராமநாதபுரத்தில் வேலை செஞ்சப்போ, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன். திருவாரூக்கு வந்த பின், படிப்பதற்காக, போலீசார், நீண்டதூரம் சென்றனர். அதை பார்த்த பின் தான், நூலகம் அமைக்கும் எண்ணம் உருவானது.

'முக்கியமாக, ஐ.பி.எஸ்., தேர்வுக்கு தயார் செய்வது குறித்து, கூடுதல் எஸ்.பி., ஒருவர் மூலம், பயிற்சி அளித்தோம். பயிற்சிக்கு பின், அந்த கூடுதல் எஸ்.பி., தன் நூல்களை எல்லாம், இங்கே கொடுத்து விட்டார். அதேபோல், நான் உட்பட, மாவட்ட போலீஸ் அதிகாரிகள், ஏதாவது விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, நூல்களை மட்டுமே பெற்று, நூலகத்திற்கு வழங்குமாறு கூறியுள்ளேன். இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு...' என்றார்.

இவர், விவசாய பட்டப்படிப்பு படித்தவர் என்பதால், தற்போது ஆயுதபடை மைதானத்தை சுற்றி, பலவகை பழ மரங்களை நட்டு, பராமரித்து வருகிறார். தவிர, ஆலமரத்தின், கிளைகளை வெட்டி, மைதானத்தில் நட்டு, நிழல்தரும் வகையில், வளர ஏற்பாடு செய்துள்ளார்.

தொடர்புக்கு இமெயில் முகவரி: skmaheships@gmail.com

-----------

இந்த கட்டுரையை தினமலர் இணையதளத்தில் படிக்க...

சனி, 2 நவம்பர், 2013

ரோஷித் ஷர்மா 209 (கிரிக்கெட், தீபாவளி சரவெடி)

ரோஹித் ஷர்மா ஒரு நாள் போட்டியில் 200 ரன்னை கடந்தார்

தீபாவளி அன்று சரவெடி வாண வேடிக்கை நிகழ்த்தி158 பந்துகளில் 12 நாலு ரன்கள், 16 ஆறு ரன்கள்  உட்பட 209 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மாவுக்கு பாராட்டுக்கள்.

சச்சின்,

சேவக் வரிசையில்

ரோஹித் ஷர்மா.

ஆனால் ரன் வரிசையில்

சேவக் - 219 (149 பந்து)

ரோஹித் ஷர்மா - 209 (158 பந்து)

சச்சின் 200 நாட் அவுட். (147 பந்து)

இந்திய அணியின் மொத்த ஓட்டங்கள் 383/6

அப்படியே இந்த மேட்ச் வின் பண்ணினா நல்லா இருக்கும்.

---------------------

3-11-2013 அதிகாலை அப்டேட் செய்தது இங்கே....

7வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஆறு போட்டிகளின் முடிவில், தொடர் 2-2 என சமநிலை வகித்தது. ஏழாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடந்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். தோகர்டி, மேக்ஸ்வெல், பால்க்னர் ஆகியோரது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித், ஒருநாள் போட்டியில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். மெக்கே வீசிய 50வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித், ஒருநாள் போட்டியில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்தார். இவர், 158 பந்தில் 16 சிக்சர், 12 பவுண்டரி உட்பட 209 ரன்கள் எடுத்து அவுட்டானார்.இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 383 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் தோகர்டி 2, மெக்கே, பால்க்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஆஸி., தோல்வி: இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.  இறுதியில் ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவரில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.

ரோகித் சாதனை: 16 சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா, அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்

ரோஷித் ஷர்மா 209

தீபாவளியும் படம் பார்த்த அனுபவங்களும் (சினிமா, தீபாவளி, முதல் கதை)

சின்ன வயதில் இருந்தே கதை எழுதும் ஆசை ஒரு ஓரத்தில் இருந்து வந்தது. ஆனால் அதை எப்படி எழுதுவது என்றே தெரியாமல்தான் பல காலம் இருந்தேன். கல்லூரி ஆண்டுமலர் முதன் முதலில் என்னுடைய கதையை பிரசுரம் செய்து முயற்சியை தூண்டி விட்டது. கல்லூரி ஆண்டுமலரில்  வேறு யாரும் கதையே எழுதாததாலும், நான் எழுதிய கதையில் (?!) கொஞ்சமாக மாணவர் சமுதாயத்துக்கு செய்தி இருந்ததாலும் பிரசுரம் செய்து விட்டார்கள். ஆனால் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்பியபோதெல்லாம் பல்புதான்.

ரா.கி.ர எழுதிய எப்படி கதை எழுதுவது என்ற புத்தகத்தை படித்த
பின்புதான் கதையை எப்படி வடிவமைப்பது என்ற வித்தை கொஞ்சூண்டு அளவில் லேசாக எனக்கு பிடிபட ஆரம்பித்தது. அதன்பிறகு நான் எழுதிய பல கதைகள் பரிசு வாங்கித்தந்திருந்தாலும், 2003 ஆம் ஆண்டு கொஞ்சம் ஸ்பெசல்தான்.

2003 ஆம் ஆண்டு திருச்சி மாலைமுரசு பொங்கல் மலரில் முதல் சிறுகதை பிரசுரமானது. (கல்லூரி ஆண்டுமலர்கள் தவிர்த்து)

தொடர்ந்து மூன்று நான்கு கதைகள் வந்தாலும், 2003 தினமலர்-வாரமலர் (திருச்சி, வேலூர்) டிவிஆர் நினைவு சிறுகதைப்போட்டியில் முகங்கள் என்ற சிறுகதை ஆறுதல் பரிசு பெற்றது. போட்டி முடிவுகள் தீபாவளிக்கு முன்பே வெளிவந்து விட்டதால் ஒரு சின்ன சந்தோசம். அதற்கடுத்த வருடங்களில் எல்லாம் ஆறுதல் பரிசு கதைகள் எழுதியவர்களின் புகைப்படங்களையும் குறிப்பையும் பிரசுரித்தார்கள். ஆனால் என்னிடம் போட்டோ, குறிப்பு வாங்கினாலும் கதை மட்டும்தான் பிரசுரமானது.

அதிலும் ஆறுதல் பரிசுக்கதை பட்டியலில் 5வதாக என்னுடைய கதை வெளிவரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து, அடுத்து ஒவ்வொரு வாரமும் காலை 5 மணியில் இருந்து எதிர்பார்த்து ஏமாறுவது வாடிக்கையாகிப்போனது. கடைசியாக 10வது கதையாகத்தான் என்னுடையது பிரசுரமானது. ஆனால் சிறிய கதையாக இருந்தாலும் வண்ண ஓவியத்துடன் 4 பக்க கதையாக பிரசுரம் ஆனதுதான் ஒரே ஆறுதல்.

2003ல் மாலைமுரசு தீபாவளி மலரில் நான் அனுப்பிய கவிதை மூன்றாம்பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டு வெள்ளி குங்குமச்சிமிழ் என்று அறிவித்தார்கள். நாலு மாதம் எந்த தகவலும் அவர்கள் பத்திரிகையில் இருந்து வராததால் நானும் மறந்துவிட்டேன். திடீரென்று ஒருநாள் கடிதம் அனுப்பியிருந்தார்கள். எடுத்துப்பார்த்தால் அன்று மாலை 4 மணிக்கு திருச்சி பேர்ட்ஸ் ரோட்டில் உள்ள மாலை முரசு அலுவலகத்திற்கு பரிசு வாங்கிக்கொள்ள வர சொல்லி அந்த கடிதம் இருந்தது.

அப்போது ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தேன். திருவாரூர் கிளையில் நான் ஒரு ஆள்தான். அதனால் காரைக்கால் தலைமை அலுவலகத்துக்கு வேறு எதோ காரணம் சொல்லிவிட்டு மதியம் 12 மணிக்கு திருவாரூரில் இருந்து திருச்சிக்கு பஸ் ஏறிவிட்டேன். ஏற்கனவே 1999 தேர்தல் சமயத்தில் ஒரு நாள் இரவில் ஏதோ விளம்பரம் எடுத்துக்கொண்டு மாலைமுரசு, மாலை மலர் ஆகிய அலுவலகங்களுக்கு சென்ற ஞாபகம் இருந்தது. அதனால் முகவரி கண்டு பிடிக்க அலையாமல் சென்றுவிட்டேன். கதை,கவிதை ஆகியவற்றில் தலா மூன்று பேர் வீதம் ஆறு பேருக்கும் பரிசு வழங்கியதை போட்டோவுடன் மாலைமுரசு நாளிதழில் அடுத்த நாளே பிரசுரமானது.

அதைப்பார்த்து திருவாரூர் கடைத்தெருவில் இருந்த பலர் என்னிடம் விசாரித்தார்கள். இவ்வளவு கவனமாகவா பேப்பர் படிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அந்த போட்டோக்கள் வெளியான ஃபுட் நோட்டில்தான் திருவாரூர் சரவணன் என்று குறிப்பிட்டிருந்தார்கள். நானும் அதன் பிறகு வேறு சில கதைகளுக்கு புனைப்பெயர் வைத்து
அனுப்பினாலும் அது எப்படியோ திருவாரூர் சரவணன் என்றே தொடர்ந்து நாலைந்து முறை பிரசுரமானது. அப்படியே இருக்கட்டும் என்று நானும் விட்டுவிட்டேன்.

இப்போதெல்லாம் இருபத்து நான்கு மணி நேரமும் தொல்லைக்காட்சிகளில் ஏதாவது ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கிறது. எதுவுமே குறைவாக கிடைக்கும்போதுதான் போற்றப்படும். மிதமிஞ்சினால் அலட்சியம்தான் மிஞ்சும் என்பதற்கு சினிமாவும் விதிவிலக்கல்ல. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இப்போதும் திரையரங்குகளில் அதிகமாக கூடுபவர்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்தான்.

சினிமாக்கள் தொலைக்காட்சிகளில் சிரிப்பாய் சிரிக்கத்தொடங்கும் முன்பு எல்லாம் தீபாவளி விடுமுறையில் எங்கள் ஊரில் உள்ள 5 திரையரங்குகளிலும் வெளியான படங்களைப் பார்த்துவிட்டு வந்து ஒரு மாணவன் எங்கள் வயிற்றெரிச்சலை கிளப்புவான். அவன் பெயர் செந்தில் முருகன். 2 ஆம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரை நாங்கள் ஒன்றாக படித்தோம். (1988-92) நன்றாக படம் வரையும் அவன் இப்போது என்ன செய்கிறான் என்று தெரியவில்லை. அதே போல் இன்னும் சிலர் குறைந்தது 5ல் 3 படங்களையாவது பார்த்துவிட்டுதான் வருவார்கள்.  என்னால் ஒரு படம் கூட பார்க்க முடியவில்லையே என்று மிகவும் கவலைப்பட்டு மனம் புழுங்கியதுண்டு. இப்போது நினைத்துப்பார்த்தால் நம் வாழ்க்கையின் காமெடி சீக்சென்சில் இதுவும் ஒன்றாக உணர முடிகிறது.

அதன் பிறகு 1993ல் ஏற்கனவே திருவாரூரில் ரிலீசாகாததால் சோழா தியேட்டரில் ஜென்டில்மேன் படம் தீபாவளிக்கு திரையிடப்பட்டிருந்தது. அந்த தியேட்டரில் பணியாற்றிய ஒருவரின் அண்ணன் மகள் எங்கள் வீட்டின் ஒரு போர்சனில் குடியிருந்தார். அவருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக என்னையும் அந்த பெண்ணின் மகனையும் அனுப்பி வைத்தார்கள். அப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் குறைந்தது 5 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிடப்படுவது உறுதி.

நாங்கள் மதியம் ஒண்ணரை மணிக்கு தியேட்டருக்கு போனபோது இரண்டாவது காட்சியின் இடைவேளை முடிந்து படம் ஓடிக்கொண்டிருந்தது. அவர் மூன்றாம் வகுப்பு டிக்கட்டை (2 ரூபாய்) எங்கள் இரண்டு பேருக்கும் கிழித்து கொடுத்து 3 மணி காட்சியை பார்க்க சொல்லிவிட்டார். எனக்கு பைசா செலவில்லாமல் ஜென்டில்மேன் படக்காட்சி.
1994ல் அதே சோழா தியேட்டர். நம்மவர் படம் ரிலீஸ். திரைக்கு பின்னால் உள்ள ஸ்பீக்கர்களை அப்போதுதான் கூடுதல் திறனுடன் மாற்றினார்கள். நம்மவர் படத்தின் ஆரம்ப காட்சியில் கல்லூரியில் கலவரம் நடக்கும். கமல்ஹாசன் வருவதை காட்டியவுடன் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடித்து உதைத்து அமைதியை கொண்டு வருவார்கள் என்று பார்த்தால் ஏமாத்திட்டாரே... இதெல்லாம் படமா என்று திட்டினேன். ஆக்சன் பிளாக்குகளை எதிர்பார்க்கும் வயது அது. (8ஆம் வகுப்பு படித்த சமயம்) அதுவரை நான் பார்த்திருந்த படங்கள் பெரும்பாலும் அந்த வகைதானே.

1995ல் சோழாவில் முத்து படம் ரிலீஸ். நான்கு நாட்கள் கழித்துதான் போனேன். காலையில் எட்டே முக்காலுக்கு சென்றுவிட்டேன். 50 பேர் கூட இருக்க மாட்டார்கள். ஆனால் 9 மணிக்கு சரியாக படத்தை திரையிட்டுவிட்டார்கள். படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவராக கதவைத்திறந்து கொண்டு வந்து கொண்டே இருந்தார்கள். எதுவரைக்கும் என்றால், ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்து படம் போட்டு ரொம்ப நேரமாச்சா தம்பி என்று கேட்டார். நான் பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன்பே இடைவேளை என்று லைட்டைப்போட்டார்கள்.

1996 பொங்கலுக்கு நடேஷ் தியேட்டரில் பரம்பரை, உள்ளத்தை அள்ளித்தா, நாட்டுப்புறப்பாட்டு, பூவே உனக்காக, காலம்மாறிப்போச்சு, சிவசக்தி, பாஞ்சாலங்குறிச்சி என்று நன்றாக ஓடிய படங்கள் (சிவசக்தி திருவாரூரில் நன்றாகத்தான் ஓடியது.) அதிகம். அப்போது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாலும் பெரும்பாலும் மாலை வேளையிலும், சனி, ஞாயிறிலும் தியேட்டரில்தான் இருப்பேன்.

1996 தீபாவளி அன்று பாஞ்சாலங்குறிச்சி படப்பெட்டி வரவில்லை. ஏன் இப்படி லேட் செய்யுறாங்க என்று பேசிக்கொண்டிருந்தபோது, பிரசாத் பிலிம் லேபில் ஒரு பிரிண்ட் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். ஆனால்
ஜெமினி கலர் லேபில் 1 லட்சம் ரூபாய்தான். அதனால் எல்லாரும் ஜெமினியில் கொடுத்துவிடுகிறார்கள். அதுவும் நாலு நாளைக்கு முன்பு சென்சார் சர்டிபிகேட் வாங்கினால் அதன் பிறகு வசனம், காட்சிகளை சென்சார் சொன்ன மாதிரி திருத்தி பிரிண்ட் போடுறது சாமானியமா என்பார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது. 

தொழில் நுட்ப கலைஞர்கள் பெயர் உட்பட டைட்டில்கள் மஞ்சள் கலரில் ஓட ஆரம்பித்தால் பெரும்பாலும் அது ஜெமினி கலர் லேப்பில் தயாரான பிரிண்ட் ஆக இருக்கும். எழுத்துக்கள் வெள்ளைக்கலரில் லேசான ட்ராப் ஷேடோவில் இருந்தால் அது பிரசாத் லேப் என்று கூறும் அளவுக்கு எல்லாவற்றையும் கவனிப்போம். பெரும்பாலும் அந்த கணிப்பு சரியாக இருக்கும்.

இப்போதெல்லாம் ஒரு படத்துக்கு 50 முதல் 1000 பிரிண்ட் என்றாலும் பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் திரையிடப்படுவதால் சிரமம் இல்லை. அப்போதெல்லாம் திருச்சி ஏரியாவில் 10 முதல் 12 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனாலும் படப்பெட்டி தாமதத்தை தவிர்க்க முடியாது. அதிலும் பண்டிகை தினங்களில் 7 முதல் 10 படங்கள் ரிலீசான காலம் அது.

பாஞ்சாலங்குறிச்சி படத்திற்கு தேவா இசை. வந்தியளா... ஆன்னா... ஆவன்னா...ஆகிய இரண்டு குத்துப்பாட்டு, ஜென்டில்மேன் படத்தில் உசிலம்பட்டி பெண்குட்டி பாடல் மெட்டை நினைவு படுத்தும் ஹரிஹரன் பாடிய ஒரு பாட்டு ( உன் உதட்டோரம் சிவப்பை மருதாணி கடனா கேட்கும்...) என கிட்டத்தட்ட எல்லா பாடல்களும் சூப்பர்ஹிட். படப்பெட்டி வராததால் ஏற்கனவே ஓடிய இன்ஸ்பெக்டர் அஸ்வினி என்ற டப்பிங் படத்தை திரையிட வேண்டிய கட்டாயம். சரி... பாடல்களையாவது போட்டு ஹவுஸ்புல்லான தியேட்டரில் ரசிகர்களை சந்தோசப்படுத்தலாம் என்று பார்த்தால் கேசட் பிளேயரில் பெல்ட் அறுந்துவிட்டது. எப்போதும் புரொஜக்டர் ரூமில் இதெல்லாம் ஸ்பேர் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அப்போது இல்லை. கடைகளும் தீபாவளிக்கு விடுமுறை என்பதால் பாடல்களும் போட முடியவில்லை. ஏதோ தியானக்கூடம் மாதிரி திரையரங்கில் அமைதி.

எந்த இசையும் இல்லாமல் வெல்வெட் ஸ்கிரீனை மேலே தூக்கும் ஸ்விட்சை அழுத்துவோம். கலர் பல்புகள் எரிய ஸ்கிரீன் மேலெழும்புவதை பார்த்து ரசிகர்கள் ஓ வென்று அலறுவார்கள். இன்ஸ்பெக்டர் அஸ்வினி என்ற அந்த டப்பிங் படத்தில் படம் ஆரம்பிக்கும்போது சென்சார் சர்டிபிகேட் காப்பி கிடையாது, (ஜெராக்ஸ் காப்பியை பெட்டியில் வைத்து அனுப்பியிருந்தார்கள் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை) நன்றி கார்டுகள் எதுவும் கிடையாது. வெல்வெட் ஸ்கிரீன் முக்கால்வாசி மேலெழும்பியதுடன் புரொஜக்டரை ஆன் செய்ததுடன், சைடில் இருக்கும் ஸ்பீக்கர் ஸ்விட்சுகளையும் ஆன்செய்துவிடுவோம். 1980களில் வரும் படங்களில் கலர் கலரான பின்புலத்தில் டைட்டில் வருமே அப்படி தொடங்கும் அந்த படம்.

இரண்டு பாடல்கள்தான். அதிலும் இடைவேளைக்கு பின்பு வரும் ஒரு பாடலில் நடுவில் வரும் டிரம்ஸ் இசைக்கு லேசாக சவுண்ட் அதிகமாக வைத்ததுடன் சரி. இவ்வாறாக 1996 தீபாவளி கடந்து எங்களை கடந்து சென்றது.

1997ல் ஜுலை மாதம் சூரியவம்சம் படம் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் என்று அனைவருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்த படம். திருவாரூர் சோழா தியேட்டரில் சுமார் 90 நாட்கள் ஓடி முடிந்திருந்தது. அங்கே சத்யராஜின் பெரியமனுசன்,
தைலம்மையில் சரத்குமார் நக்மா நடித்த ஜானகிராமன், நடேஷில் பொற்காலம். பாரதிகண்ணம்மா மூலம் சேரனின் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல் தீபாவளிக்கு ரிலீசான அந்த படம் பொங்கல் வரை ஓடியது. அப்போது சிலமாதங்கள் பத்தாம் வகுப்பு முடிந்த உடன் படிப்பை தொடராமல் ஐடிஐ க்கு அப்ளிகேசன் போட்டுவிட்டு கிடைக்கவில்லை என்று நான் செங்கம் தியேட்டரில் வேலை பார்த்தேன். அங்கே ஜூராசிக் பார்க் படத்தின் இரண்டாம் பாகம் தி லாஸ்ட் வேர்ல்டு திரையிடப்பட்டது.

அடுத்த ஆண்டு 1998ல் செங்கத்தில் டைட்டானிக், தைலம்மையில் புதுமைப்பித்தன், நடேஷில் சேரனின் தேசியகீதம்  இவற்றில் தைலம்மையில் புதுமைப்பித்தன் படப்பெட்டி வராததால் டைட்டானிக் இரண்டு திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது. 1998ல் 22 நாட்கள் செங்கம் தியேட்டரில் ஓடிய டைட்டானிக் தினசரி சுமார் 10 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்தது என்று நினைக்கிறேன். நிச்சயமாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த தியேட்டருக்கு அது பெரிய வசூல்தான். அதற்கு முக்கிய காரணம் அந்த காலகட்டத்தில் திருவாரூரைப் பொறுத்தவரை சவுண்ட், லைட் இரண்டுமே செங்கத்தில்தான் நன்றாக இருக்கும் என்பார்கள்.

1999 தமிழ் வருடப்பிறப்பு சமயத்தில் செங்கத்தில் ஆனந்தப்பூங்காற்றே திரையிடப்பட்டது. அப்போது ஆப்ரேட்டர் ஒருவர் லீவ் போட்டு சென்றதால் ஆக்டிங் டியூட்டி பார்த்த பிறகு மீண்டும் பிளஸ் டூ படிப்பை தொடர வேண்டும் என்று பாதையை மாற்றினேன். திரையரங்குக்குள்ளான என் அனுபவம் அதன் பிறகு இல்லை.

1999 தீபாவளி அன்று தைலம்மையில் முதல்வன் பார்த்தேன். திருப்தியாக இருந்தது. 2000ல் தெனாலி. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் என்னைப்பொறுத்தவரை ஏமாற்றமாகத்தான் இருந்தது. 2001ல் ஆளவந்தான், 2002 ல் ரமணா. 2003ல் தீபாவளிக்கு மறுநாள் பிதாமகன். அதன்பிறகு தீபாவளி அன்று படம் பார்ப்பதை விட்டுவிட்டேன். பிறகு வந்த தீபாவளி அன்று எல்லாம் நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகங்கள், மதியத்தில் தூக்கம் என்றுதான் கழிந்தது.

2010ல் தீபாவளியின் போது தினமலரில் பணியாற்றினேன். முதல்நாள் மிக அதிக அளவில் பக்கங்கள் டிசைன் செய்து கொடுத்துவிட்டு பரபரப்பாக முதல் நாள் இரவு 9 கிளம்பிய நினைவு இருக்கிறது. வெளியில் பணியாற்றிய போது தீபாவளிக்கு போனஸ் என்றெல்லாம் எதுவும் நான் பெரிதாக வாங்கியதில்லை.

2003ல் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது வேலைக்கு சேர்ந்து 1 மாதம் கூட ஆகாததால் ஒன்றும் இல்லை.

2004ல் நூற்றாண்டு கண்ட கம்பெனி ஒன்றில் தீபாவளி வரை 6 மாத காலம் பணியாற்றியதற்கு சுமாராக 1000 ரூபாய் அளவில் போனஸ் கிடைத்தது. அது ஒரு மேனுபேக்சரிங் கம்பெனி. அதனால் வழக்கமாக தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னதாகவே உற்பத்தி செய்த பொருட்களை பார்சலில் அனுப்பிவிடுவார்கள். அந்த ஆண்டு வியாழக்கிழமை தீபாவளி என்பதால் செவ்வாய்கிழமை மதியமே போனஸ் கொடுத்து ஞாயிறு வரை லீவு விட்டுவிட்டார்கள். சம்பளத்துடன் கூடிய அந்த லீவுதான் எக்ஸ்ட்ரா போனஸ்.

2010ல் கூரியர் கம்பெனியில் ஒரு சிறிய தொகை போனஸ் கிடைத்தது. அதே சமயம் தினமலரில் வேலைக்கு சேர்ந்து 40  நாட்கள் மட்டுமே ஆனதால் அதுவரை சம்பளம், போனஸ் எதுவும் இல்லாமல் 500 ரூபாய் மதிப்புள்ள பட்டாசு கிப்ட் பாக்ஸ் ஒன்றும், 1 கிலோ ஸ்வீட், ஒரு கிலோ காரமும் கிடைத்தது. அலுவலகத்துக்கு அருகில் இருந்த ஒரு வங்கி மேலாளர் எங்கள் அலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் ஒரு கிலோ ஸ்வீட் கொடுத்து வாழ்த்து சொன்னார்.

2011ல் நாம சொந்தமாக அலுவலகம் திறந்துவிட்டதால் போனஸ் கொடுக்கவோ, வாங்கவோ வேலையில்லை. அப்போது நம்ம அலுவலகம் இருந்த கட்டிடத்திற்கு வாட்ச்மேன் யாரும் கிடையாது. அதனால் போனஸ் கொடுக்க யாருமில்லை. இப்போது 2012,13 இரண்டு ஆண்டும் நம் அலுவலகம் இயங்கும் வளாகத்திற்கு வாட்ச்மேன், கூட்டி சுத்தம் செய்யும் ஒரு வயதான அம்மா இருப்பதால் என்னால் முடிந்த மிகச்சிறிய தொகை ஒன்றை தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னதாகவே கொடுத்து விடுவதை வழக்கமாக்கிவிட்டேன். நம்ம அலுவலகத்தில் என்னைத்தவிர யாரும் இல்லாததால் பணியாளருக்கு போனஸ் கொடுக்கும் வேலை இல்லை. பார்ப்போம்... அடுத்த வருடம் நாமும் போனஸ் கொடுக்கும் அளவுக்கு
தொழிலை வளர்க்க முடிகிறதா என்று...

எக்ஸ்ட்ரா போனஸ்
கொஞ்சம் வேலை இருந்ததால் காலை 8.30 மணிக்கே நம்ம அலுவலகத்துக்கு போனேன். தியேட்டர் ரொம்ப அமைதியா இருந்துச்சு. வேலை பார்த்துகிட்டு இருக்கும்போது திடீர்னு பேண்டு வாத்தியம், பட்டாசுன்னு அமர்க்களம்... வெளியில் எட்டிப்பார்த்தால் கார்த்தி ரசிகர்கள் கொண்டாட்டம்.

அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாத வரை இது மாதிரி கொண்டாட்டங்கள் எல்லாம் ஓ.கே... இளைமையில இது மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள் இல்லைன்னா அப்புறம் என்ன அது வாழ்க்கை?!.............

தீபாவளியும் படம் பார்த்த அனுபவங்களும்

வெள்ளி, 1 நவம்பர், 2013

ஆரம்பம் - ஆடியோ விழா நடத்துவது அவசியமா?

ஒண்ணுமே இல்லாத மொக்க படங்களுக்கெல்லாம் ஆடியோ ரிலீஸ், டீசர் ரிலீஸ் அப்படி இப்படின்னு பல லட்சம் (சமயங்களில் கோடிகள்) செலவில் விழா நடத்துவார்கள். அது மட்டுமில்லாம மூன்றாவது காட்சியிலேயே முப்பது பேர் கூட பார்க்காத படத்துக்கு திரையரங்குகளில் திருவிழா மாதிரி கூட்டம் அப்படி இப்படின்னு சில தொல்லைக்காட்சிகளில் ஆத்து ஆத்துன்னு சிலர் ஆத்திகிட்டு இருப்பாங்க. (நான் எல்லாரையும் சொல்லலை.)

ஆனா ஆரம்பம் படத்துக்கு போட்டோ ஷூட் நடத்த கூட எங்களுக்கு நேரமில்லை. 120 நாள் படப்பிடிப்பு அப்படி இப்படின்னு விஷ்ணுவர்தன் பேட்டியில் சொல்லியிருப்பதை பார்க்கவும் இது ஒரு வகை விளம்பர உத்தியோ என்றுதான் நினைத்தேன். ஆனால் ஆரம்பம் படத்துக்கு மாஸ் ஓப்பனிங் கிடைத்ததுடன் படம் ஒரு முறை பார்க்க விறுவிறுப்பாக இருக்கிறது என்பதுதான் படம் பார்த்தவர்களின் பெரும்பான்மை கருத்தாக இருக்கிறது.

படம் பார்த்து முடித்து விட்டு வெளியே வந்ததும் ஆயிரம் குறை சொல்லலாம். ஆனால் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே முதல் சீன் பற்றி அடுத்த சீனில் ரசிகன் விமர்சித்துக்கொண்டிருந்தால் படம் காலி என்று இயக்குனர் விக்ரமன் எழுதிய நான் பேச நினைப்பதெல்லாம் என்ற புத்தகத்தில்  கூறியிருந்தார். அது உண்மை என்பதை பல படங்கள் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

சென்டிமெண்ட் படங்களில் காட்சி அமைப்புகள், பாடல்கள், நகைச்சுவை என்று எல்லா அம்சங்களும் நன்றாக இருந்தால் மட்டுமே ஹிட் ஆகும். ஆனால் ஆக்சன் படங்களைப் பொறுத்தவரை இவை எல்லாவற்றையும் விட பரபரவென வேகமாக ஓடும் திரைக்கதைதான் முக்கியம். பாட்ஷா, கில்லி, சிவகாசி, சிங்கம் 1, 2 என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். அதற்காக படம் ஆரம்பித்ததில் இருந்து எந்த இலக்கும் இல்லாமல் சுட்டுக்கொண்டோ, அடித்துக்கொண்டே இருந்தாலும் படம் கோவிந்தா... 

இன்னொரு முக்கியமான விசயம், ரசிகன் என்ற வரம்பையும் மீறி, சாதாரண மக்களுக்கு பிடிக்க வேண்டும் என்றால் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட சம்பவங்கள் ஓரளவாவது இருப்பது நல்லது என்ற தகவலையும் ஆரம்பம் சொல்லியிருக்கிறது. ரசிகன் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு படத்தை பார்க்கும்போது பிடித்தால் போதும் படம் வெற்றிதான்.

புல்லட் ப்ரூப் ஜாக்கெட் விஷயத்தை சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கழித்து அனைவரும் மறந்து விட்ட நிலையில் கதைகருவாக கொண்டு படமாக்கியிருக்கிறார்கள். சூழ் நிலைபுரிஞ்சவங்க பிழைச்சுகிட்டாங்க.

ஆனால் விழா அது இது என்று நடத்தி ரசிகனை ஓவராக உசுப்பேற்றி தியேட்டருக்குள் அனுப்பினால் அவன் மனதில் உள்ள பிம்பத்தை விட்டு விலகிய கதையுடன் எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் ஊத்திக்கொள்வதும் நடக்கும். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை திரைக்கதையாக்க அனைவரும் பயப்பட இதுதான் காரணம். 60 ஆண்டுகளாக அதை மூன்று நான்கு தலைமுறையினர் புத்தகத்தில் படித்து மனதளவில் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். அனைவரையும் திருப்தி படுத்தும் விதத்தில் திரைக்கதை அமைக்க முடியுமா என்ற கேள்வியில்தான் அதை எல்லோரும் முயற்சி என்ற அளவிலேயே வைத்திருக்கிறார்கள்.

புது வீட்டை கட்டுவதை விட ஏற்கனவே இருக்கும் வீட்டை மாற்றி நல்லவிதமாக அமைப்பது கடினம். இதே கான்சப்ட்தான் பட விசயத்திலும். ரசிகர்களை கண்டபடி எதிர்பார்க்க வைத்து சூடுபடுவதை விட இப்படி எதையும் பேசாமல் படத்தை விட்டால் படம் பேசும். ஏற்கனவே சில படங்களில் திரையுலகம் பட்ட சூட்டில் ஆரம்பம் படக்குழு இந்த முடிவுக்கு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதுவே நல்லதொரு ஆரம்பமாக இருந்தால் நல்லது.

ஓவர் பேச்சு நம்ம உடம்புக்கு ஆகாது தம்பி என்று ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் சினிமாவுக்கு மட்டுமல்ல... எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

அதிலும் சமீப காலமாக சில திரைப்படங்கள் படும் அவதியைப் பார்க்கும்போது ரொம்பவே அடக்கி வாசிப்பது நல்லது என்று தோன்றுகிறது. ஆடியோ, டி.வி. புரோமோ என்று ஓவர் பில்ட்அப் கொடுப்பதற்கு பதில் பட ரிலீசுக்கு ஒரு மாதம் முன்பிருந்தே மக்களுக்கு படம் ரிலீசாகும் செய்தியை கொண்டு போய் சேர்க்கும் விதமாக மட்டும் விளம்பரங்கள் இருந்தால் அது தயாரிப்பாளரின் பர்சுக்கும் நல்லது. ரசிகனும் எதிர்பார்த்து ஏமாற மாட்டான்.

அஜீத் படங்கள் - என் அனுபவம்