Search This Blog

கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 நவம்பர், 2013

ரோஷித் ஷர்மா 209

ரோஹித் ஷர்மா ஒரு நாள் போட்டியில் 200 ரன்னை கடந்தார்

தீபாவளி அன்று சரவெடி வாண வேடிக்கை நிகழ்த்தி158 பந்துகளில் 12 நாலு ரன்கள், 16 ஆறு ரன்கள்  உட்பட 209 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மாவுக்கு பாராட்டுக்கள்.

சச்சின்,
சேவக் வரிசையில்
ரோஹித் ஷர்மா.

ஆனால் ரன் வரிசையில்
சேவக் - 219 (149 பந்து)
ரோஹித் ஷர்மா - 209 (158 பந்து)
சச்சின் 200 நாட் அவுட். (147 பந்து)
இந்திய அணியின் மொத்த ஓட்டங்கள் 383/6

அப்படியே இந்த மேட்ச் வின் பண்ணினா நல்லா இருக்கும்.

---------------------
3-11-2013 அதிகாலை அப்டேட் செய்தது இங்கே....

7வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஆறு போட்டிகளின் முடிவில், தொடர் 2-2 என சமநிலை வகித்தது. ஏழாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடந்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். தோகர்டி, மேக்ஸ்வெல், பால்க்னர் ஆகியோரது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித், ஒருநாள் போட்டியில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். மெக்கே வீசிய 50வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித், ஒருநாள் போட்டியில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்தார். இவர், 158 பந்தில் 16 சிக்சர், 12 பவுண்டரி உட்பட 209 ரன்கள் எடுத்து அவுட்டானார்.இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 383 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் தோகர்டி 2, மெக்கே, பால்க்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஆஸி., தோல்வி: இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.  இறுதியில் ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவரில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.

ரோகித் சாதனை: 16 சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா, அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்

புதன், 16 பிப்ரவரி, 2011

என்னதான்யா நடக்குது இங்க?...

சமீப காலமாக நடிகர் விஜய் படங்களில் பேசும் பஞ்ச் டயலாக்குகள் அவரையே பஞ்சராக்கும் அளவுக்கு படங்களை கவிழ்த்து விட்டாலும் அவரது  பல படங்களில் பஞ்ச் டயலாக் ரசிகர்களின் ரத்த ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்தது உண்மைதான்.

வாழ்க்கை ஒரு வட்டம். இதன் சுழற்சியில் கீழே இருப்பவன் மேலே போவதும் மேலே இருப்பவன் கீழே போவதும் தவிர்க்க முடியாது. (ஜெயிக்கிறவன் தோற்பான், தோற்குறவன் ஜெயிப்பான்- இது பல தோல்விகளுப்பின்பு விஜய்க்கு பெரிய ஹிட் கொடுத்த திருமலை படத்தில் வரும் வசனம்.)

இந்த டயலாக்குல இருக்குற உண்மை எனக்கு ரொம்ப பிடிக்கும். கிரிக்கெட்ல அத்தனை பேருக்கும் ஆப்பு வெச்சுகிட்டு இருந்த ஆஸ்திரேலியாவுக்கு இப்போ கஷ்ட காலம் அடிக்கடி எட்டிப் பார்க்குது. உலககோப்பை பயிற்சியின் முதல் ஆட்டத்துல இந்திய அணி முதல் ஆப்பை ஆஸ்திரேலியாவுக்கு வெச்சாச்சு. (உபயம்:ஸ்பின்னர்கள்.) அதே வேகத்துல தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த அடி கொடுத்துட்டாங்க.

ஊரையே அடக்கி ஆள்ற தாதா படத்தின் இறுதி காட்சியில ஹீரோகிட்ட அடி வாங்கும்போது ஊர் மக்கள் கூடி நின்னு சந்தோஷமா வேடிக்கை பார்ப்பாங்க. இப்போ ஆஸ்திரேலியா அடி வாங்கும்போதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மன நிலையிலதான் இருக்காங்கன்னு தோணுது. (ஆஸ்திரேலியா தோற்கணும்னு பயபுள்ளைக யாகம் வளர்க்குறாங்களாம்.)

இரண்டாவது பயிற்சி ஆட்டத்துல இந்தியா நியூசிலாந்துக்கு எதிரா படபடன்னு 360ரன் அடிச்சுட்டாங்க. முன்னால எல்லாம் நியூசிலாந்துக்கு ஒரு கெட்ட பழக்கம். 150ரன்னுக்கு 5 விக்கெட் விழுந்தாலும் அதுக்கப்புறம் விக்கெட்டே விழாம 320 ரன் அடிப்பாங்க. அப்படி எதாவது நடக்குமான்னு பார்த்தேன். ஒண்ணும் நடக்கலை.

நம்ம பசங்களோட ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பினிஷிங் எப்படியோ?


ஆட்டம் 50 ஓவரும் பரபரப்பா இருந்தாதான் பவுலர் பந்துல எச்சி தடவுறதுக்குள்ள எட்டு  விளம்பரம் போட முடியும்னு ரன் குவிக்கிறது மாதிரி பிட்ச் தயார் பண்ணியிருக்காங்களாம்.

அதனால டாஸ் விண் பண்ணின உடனே பனி வரும், புயல் வரும்னு யோசிச்சு முதல் பேட்டிங் எடுக்குறது பெருசு இல்லை.அதுல ஏழு ரன்ரேட்ல அடிச்சு சாத்துனாதான் பொழைக்க முடியும். பார்ப்போம் திரும்பப்போறது 1983 வரலாறா? 2003ம் வருஷம் ஆஸ்திரேலியா நமக்கு வெச்ச ஆப்பான்னு.

பட உதவி:தினமலர் இணையதளம்