Search This Blog

வியாழன், 31 டிசம்பர், 2009

புது வீட்டுக்குப் போறேன்... எல்லாரும் வந்துடுங்க...





வணக்கம் நண்பர்களே...

இளைய பாரதத்தின் புதிய url முகவரியில்  முன்னோட்டமாக ஒரு பதிவு இடப்பட்டிருக்கிறது. இனி இளைய பாரதம் 2009 தளத்தில் புதிய இடுகைகள் எதுவும் காணப்படாது. எனவே வாசகர்கள் அனைவரும் இளையபாரதத்தின் புதிய வீட்டிற்கு வருகை தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த தளம் 2009 ல் இடப்பட்ட எழுபத்தைந்து இடுகைகளுடன் தொடர்ந்து இருக்கும்.

தங்கள்
சரண்

இளைய பாரதம் புதிய முகவரியில் இயங்கப்போவதை முன்னிட்டு ஒரு பிரமாண்டமான ஒப்பனிங்.



நண்பர்களே உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. குசேலன் ,ஆளவந்தான், குருவி இது மாதிரியான படங்களைப் பார்த்ததால நீங்க மனதளவுல வலிமையாத்தான் இருப்பீங்க. அதனால  பிரமாண்டமான ஒப்பனிங்குல  நான் தரப் போற அதிர்ச்சி உங்களுக்கு ஒரு மேட்டரே கிடையாது. தைரியமா வாங்க.

01.01.2010 முதல் புதிய தளத்தில் இளையபாரதம் இயங்கப் போகிறது. ஆனால் பெயரும் அதே. பதிவிடப்போற ஆளும் அதே. வில்லங்க விஷயத்தையும் விவரமான யோசனைகளையும் பற்றி எழுதலன்னா  சமூகத்துக்கு எதுவும் செய்யாம இருக்குற மாதிரி ஒரு பீலிங். (நீ எழுதாம இருக்குறதே பெரிய சேவைதான்னு சொல்லி கம்பெனி ரகசியத்தை காலி பண்ணக் கூடாது. ஒ.கே?)

நாலு நாளைக்கு முன்னாலேயே புது வருஷத்துல பிரமாண்டமான ஒப்பனிங் தர்றதுக்காக என்னுடைய நடிப்பு அனுபவங்களை படங்களோட பதிவிட்டு வெச்சிட்டேன். புது வருஷத்து அன்னைக்கு பதிவை வெளியிட வேண்டியதுதான். மறுபடி சொல்றேன். அங்க உங்களுக்காக  நீங்க மட்டும் இல்லை நானும் எதிர்பார்க்காத இன்ப அல்லது துன்ப அதிர்ச்சி காத்திருக்கு.

வழக்கம் போல படிச்சுட்டு பின்னூட்டத்துல துவைச்சு காயப் போடுறவங்க செய்யலாம். நல்ல வார்த்தை சொல்லி பாராட்டுறவங்க தாராளமா வரலாம். நாலு பேரு வந்தாதானே கடை களை கட்டும். அதை விட்டுட்டு ஆளில்லா கடையில யாருக்கு டீ ஆத்தப் போறேன்?

இளைய பாரதம் 2010 க்கு போகனுமா...அப்புறம் என்ன யோசனை? இங்க அமுக்குங்க.

புதன், 30 டிசம்பர், 2009

கல்யாணப் பத்திரிகையை படிக்க கூட கஷ்டப்படுறாங்களே...கல்வித்துறை அமைச்சர் விகடன் குழும விழாவில் சொன்ன தகவல்.

புதிய சட்டசபை வளாகம் அமைவதால் சாலைவிரிவாக்கம் செய்ய சென்னை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தை இடித்துவருவதாக படத்துடன் செய்தி வெளிவந்தது. முன்பு ஒரு நாள் நம் முதல்வர், இன்னும் சிறப்பான வசதிகளுடன் புதிய அரங்கம் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். அது தேர்தல் வாக்குறுதியாகி விடாது என்று நம்புவோம்.

இந்த அரங்கத்தில் நானும் ஒரு விழாவுக்கு பார்வையாளராக சென்றேன். 2007 ஏப்ரலில் விகடன் பிரசுரம் பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் வெளியிடும் விழாவை பிரமாண்டமாக நடத்தியது.

விழாவை சிறப்பித்தவர்கள், கலைஞர் மு.கருணாநிதி, கவிக்கோ. அப்துல்ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, இளமைக்கவிஞர் வாலி, பொள்ளாச்சிமகாலிங்கம், கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுதா சேஷய்யன், விகடன் குழும உரிமையாளர்கள் எஸ்பாலசுப்ரமணியன், பா. சீனிவாசன் மற்றும் ஒரு சிலர் என்

நினைவில் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியவர் சீர்காழி சிவ சிதம்பரம.

அப்போது நான் சென்னையில் இருந்ததால் குறுஞ்செய்தி மூலமாக விண்ணப்பித்து அழைப்பிதழ் பெற்றேன். கெல்லீஸ் ஏரியாவில் இருந்து  சென்ற நான் எம்.எல்.ஏ விடுதிக்கு பக்கமாக மிதிவண்டியை பார்க் செய்தது ஒரு  சாதனை(?!) (சுற்றுப்புறச் சூழலை காக்கிறேனாக்கும்.)

விழா குறித்த நேரத்திலிருந்து ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தாமதமாக தொடங்கியது எனக்கு மகிழ்ச்சி தந்த அதிர்ச்சி.

விழாவில் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு, "என்னப்பா...கல்யாணம் எப்ப வெச்சிருக்க...எந்த மண்டபம்...மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காரு...அப்படின்னு கேள்வியா கேட்டு அடுக்குவாரு ஒருத்தரு. எப்பன்னு கேட்குறீங்கிளா?...பொண்ணோட கல்யாணப் பத்திரிகையை கொடுக்க வந்தவர்கிட்ட பத்திரிகையை வாங்கி கையில

வெச்சுகிட்டே இவ்வளவு கேள்வி வரும். படிக்கிற பழக்கம் அந்த அளவுக்குதான் இருக்கு. இந்த நிலை மாறனும்." அப்படின்னு பேசினார்.

பெருமை வாய்ந்த அந்த அரங்கம் 2009ம் ஆண்டோட நம்மை விட்டு விலகிடுச்சு.

இது மாதிரி பல விஷயங்கள் புது வருஷத்துல வரும். போகும். நாம நல்ல விஷயங்களுக்கு மனதின் ஓரத்துல இடம் கொடுப்போம். கசப்பான அனுபவங்கள் மறுபடி வராம பார்த்துக்குவோம். இதுதான் புத்தாண்டுல நாம எடுத்துக்குற பாசாங்கில்லாத உறுதிமொழியா இருக்க முடியும்.

செவ்வாய், 29 டிசம்பர், 2009

அகன்ற கோணம் - நான் முதன் முதலில் வலைப்பூ ஆரம்பித்த போது சூட்டிய பெயர்



இதைப் பற்றிய சந்தேகம் இளைய பாரதம் வாசகர்களுக்கு வந்தது. அதற்கு மின்னஞ்சல் மூலமாக ஒரு வரியில்தான் விளக்கம் சொன்னேன். அப்பாடா...இந்த பதிவுக்கு ஒரு மேட்டர் கிடைச்சிடுச்சு.

தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பது குறுகிய பார்வை. நம்முடைய நலனுக்காக ஒரு செயல் நடைபெறும்போது யாருக்காவது நிச்சயமாக எதாவது ஒரு வழியில் சிறு பாதிப்பாவது இருக்கத்தான் செய்யும்.

அதைப் பற்றியும் யோசிப்பதே அகன்ற கோணம்.

நியாய விலைக் கடையில் எடை குறைவாகத்தான் பொருட்களை வழங்குவார்கள். சரியான எடை இருந்தது என்றால் அந்தப் பணியாளருக்கு மனதளவில் பிரச்சனை எதுவும் இருக்கக்கூடும். அவரிடம் கவனம் தேவை.

அங்கே, விவாதம் செய்து அல்லது சண்டை பிடித்தாவது சரியான அளவில் பொருள்களை வாங்குவது நம் உரிமை. இது சாதாரண பார்வை. நியாய விலைக் கடையில் உள்ள பணியாளர் ஏன் எடை குறைப்பு செய்கிறார்? மொத்தமாக பொருட்கள் கடைகளுக்கு வரும்போதே எடை குறைவாக இருக்கும். கடையிலும் எலி, மழை உள்ளிட்ட சில காரணங்களால் பொருட்கள் வீணாகலாம். அதை மேலதிகாரிகள் ஏற்க மறுக்கலாம்.

அல்லது வேறு சில காரணங்களுக்காக லஞ்சம் கேட்கலாம். இப்படி எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்.

நியாய விலைக்கடையின் பணியாளர் மட்டும் சரியாக இருக்க வேண்டும் என்பது குறுகிய கோணம். அவர் அப்படி நடக்கக் காரணமான அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என நினைப்பது அகன்ற கோணம்.

2010ம் ஆண்டு பொங்கலுக்குள் இது பற்றி விரிவான பதிவு எழுதுகிறேன்.

திங்கள், 28 டிசம்பர், 2009

கட் ஷாட் தெரியும்...அது என்ன கண்ணை காலி பண்ற ஷாட்?


உலகின் தலை சிறந்த பம்பு இன்றும் மனிதனின் இதயமே. (ஆமைக்கு இதயம் இல்லையான்னு கேட்கக்கூடாது. ஒரு விளம்பரத்துல இந்த அளவு உண்மையை ஒத்துகிட்டு இருக்குறதே பெரிய விஷயம்.) அதற்கு அடுத்த தரம் வாய்ந்த பம்புகளை நாங்கள் தயாரிக்கிறோம் அப்படின்னு சொல்லுவாங்க.

அதே மாதிரி உலகின் தலைசிறந்த கேமரான்னா அது மனிதனின் கண்கள்தான்னு உறுதியா சொல்லலாம். நம்ம கண்ணு எதையும் பதிவு பண்ணி வெக்கிற ஹார்ட் டிஸ்க் இல்ல. அவ்வளவுதான். ஆனால் கண் ஒரு அற்புதமான டிஸ்பிளே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்ப சமீப காலமாவே உணவு, அதிக நேரம் தொலைக்காட்சி, இணையம்
உட்பட பல காரணங்களால் மனிதர்களின் பார்வைக் கோளாறுகள் அதிகரித்து வருவது வேதனையான விஷயம்.

ஒரு கொடுமைக்கார கணவன். தினமும் அவனிடமிருந்து அடி, உதையைத் தவிர வேறு எதுவும் அந்த மனைவிக்கு கிடைத்திருக்காது. குறிப்பிட்ட காட்சியில் வீட்டுக்கு வரும் அவன்,"சீக்கிரம் பிள்ளைங்களோட கிளம்பு...வெளியில போயிட்டு வருவோம்." என்று சொல்வான்.

 உடனே வெளியே ஓடி வந்த இவள் அண்ணாந்து வானத்தைப் பார்ப்பாள். கேமரா, மேகம் எதுவுமின்றி நீல நிறமாகத் தெரியும் வானத்தை ஒரு வட்டமடித்துக்காட்டும்.

சொதப்பலான காரியங்களையே தொடர்ந்து செய்யும் ஒருவர் வழக்கத்துக்கு
மாறா மகிழ்ச்சி தரும் வார்த்தையை சொன்னாலே மழை வரப்போகுதான்னுதான் கேட்போம். அதை அந்த ஷாட்டுகளில் வெகு அழகாக சாதாரண மக்களுக்கும் புரியும்படியாக கேமரா காட்டியிருக்கும்.

உதிரிப்பூக்கள் படத்தில் இடம்பெற்ற இந்தக் காட்சியைப் பற்றி நான் ஒரு புத்தகத்தில் படித்ததுதான். படம் பார்க்கவில்லை.

கதைக்குத் தேவைப்படும்படியாக மட்டுமே கேமரா இயங்க வேண்டும் என்று இப்போதும் உறுதியாக இருக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

 கேமரா கோணங்களைப் பொறுத்த வரை ஒன்பது வகையாகப் பிரித்து நான் ஒரு புத்தகத்தில் படித்தேன்.(கூடக் குறைச்சு இருக்கலாம். அது நமக்கு இப்ப தேவையில்லை.) எனக்கு கூட அந்தக் கோணங்களை எப்படி வைக்கணும்னு கொஞ்சம் புரியுது.

ஆனா இப்ப சில ஒளிப்பதிவாளர்கள் தெரியாம செய்ய்யுறாங்களா  இல்ல... பார்வையாளர்களோட கண்களை புடுங்கிட்டுதான் மறுவேலைன்னு ஒரு நோக்கத்தோட இப்படி செய்யுறாங்களான்னு புரியலை.எந்தக் காட்சிக்கு எந்த கோணம் வைக்கலாம்னு ஒரு வரைமுறையே இல்லாம பல படங்கள்ல அக்கப்போர் பண்றாங்க.

முன்னாடி மாதிரி பிலிமை வெட்டி ஒட்டி மட்டுமே படத்தொகுப்பு செய்யணும்னா சிரமப்படுவாங்க. ஆனா இப்பதான் Avid, Fcp அப்படி இப்படின்னு சில படத்தொகுப்பு மென்பொருட்கள் வந்துடுச்சே.

Telecine மெஷினைப் பயன்படுத்தி DV இல்லன்னா BETA கேசட்ல பதிவுபண்ணி கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்ல படத்தைக் கொண்டு வந்துடுறாங்க.

அப்புறம் என்ன...அந்த பைல் எல்லாம் கதறக்கதற கட்வலையே படாம படக்குழுவினர் எடிட்டிங் பண்ணிக்குவாங்க. இது வரைக்கும் மத்தவங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை.(எடிட்டிங் ஸ்டுடியோ வாடகை ஒரு பக்கம் தயாரிப்பாளரோட கழுத்தை நெறிக்கும். அதுவும் இப்ப நமக்கு தேவையில்லை.)

கடந்த சில ஆண்டுகளாகவே பாடல் காட்சிகளை கவனித்தால் ஒரு உண்மை புரியும்.

மிட் ஷாட், மிட் லாங் ஷாட்  இந்த மாதிரி ரெண்டு கோணங்கள்ல நடனக்காட்சிகளை மொத்தமா எடுத்துக்க வேண்டியது.

அப்புறம் கணிப்பொறி உதவியோட அந்த இரண்டு காட்சிகளையும் மாறி மாறி காண்பிக்க வேண்டியது. ஒரே ஷாட்டைப் பார்த்தா சலிச்சுப் போயிடும்னுதானே சொல்றீங்க...அது உண்மைதான். அதுக்காக அறுபது நொடிக்குள்ள நூறு தடவையா இந்த ரெண்டு ஷாட்டையும்  மாத்தியே காண்பிக்கிறது?

உங்க வீட்டு தொலைக்காட்சியில ஒரு நிமிஷம் யாராவது ரிமோட் மூலமா சேனலை மாத்திகிட்டே இருந்தா எவ்வளவு கோபம் வருது?அந்த மாதிரிதாங்க இதுவும்.

ஒரு நொடிக்கு பிலிம்ல 24 பிரேம் கடந்து போகுறது தான் சரியான சரியான தொழில்நுட்பம். ஒரு அடி நீள பிலிமுக்கு 16 பிரேம் இருக்கும். ஒரு நொடியில ஒண்ணரை அடி பிலிம்ல படம் காட்டுவாங்க.

ஆனா வீடியோ தொழில் நுட்பத்துல ஒரு நொடிக்கு 25 பிரேம் பதிவாகும். இதெல்லாம் நம்ம கண்ணுல பார்வை நிலைச்சு இருக்குற நேரத்தைக் கணக்கிட்டு அறிவியல் அடிப்படையில நிர்ணயம் பண்ணியிருக்குற தொழில்நுட்பம்.

இவங்க டெக்னாலஜி டெவலப்மெண்ட் அப்படின்னு சொல்லிகிட்டு ஒரு நொடிக்கு நாலு கட் ஷாட் போட்டு பார்க்குற நம்மளுக்கு கண்வலி, தலைவலி மட்டுமில்லாம நிரந்தர பார்வைக்கோளாறுக்கும் வழி செய்யுறாங்க.


ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவ், இன்றைய (28.12.2009)தினகரன் நாளிதழ்ல பேட்டி கொடுத்திருக்கார். கட் ஷாட் மிக அதிகமா இருக்குற இந்த மாதிரிக் காட்சிகளைப் பார்க்குறதை தவிர்க்கும்படி டாக்டர்கள் கூட சொல்றாங்கன்னு  அவர் ஒத்துகிட்டு இருக்குறத நினைச்சு எனக்கு ஓரளவு நிம்மதியா இருக்கு.

பாடல் காட்சிகள் 24X7 அப்படின்னு தொலைக்காட்சிகள்ல ஒளிபரப்பாகுது.அதனால படத்தின் உச்சகட்ட காட்சி, கதைக்கு அவசியமான காட்சின்னு எதுவா இருந்தாலும் மக்களோட கண்களையும் மனசுல வெச்சுக்குங்க.

உதிரிப் பூக்கள் ஒளிப்பதிவாளர் அசோக் குமாரா இல்ல பாலு மகேந்திராவான்னு எனக்கு சரியா தெரியல. அதனால் பெயரை அங்கே குறிப்பிடவில்லை.

சனி, 26 டிசம்பர், 2009

திண்ணை இணைய இதழில் கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை...இளைய பாரதம் தொகுத்து அனுப்பிய துணுக்கு.


தொடக்க காலங்கள்ல நான் எழுதி அனுப்பிய வாசகர் கடிதம் கூட பிரசுரமானது இல்லை. ஆனா இப்போ நான் கடந்த மூணு வாரமா எழுதி அனுப்பின விஷயங்கள் மூணுமே திண்ணை இணைய இதழில் வெளிவந்துள்ளன.

என்னுடைய எழுத்து தொடர்ந்து மேம்பட்டு வருதுன்னு ஒரு சின்ன சந்தோஷம். சிலர் ஒரு வாதத்துக்காக, "உன் எழுத்து உன் மனசாட்சிக்கு பிடிச்சா போதும்." அப்படின்னு சொல்லலாம். அதுக்கு நான் என் மனசுக்குள்ளயே எழுதிட்டுப் போயிடலாமே...எதுக்காக அச்சு ஊடகத்தையும், இணையத்தையும் தேடணும்?

இலக்கியப் புலமை உள்ளவங்க தன் மனதுக்கு தீனி போட எப்படி வேணுன்னாலும் எழுதுவாங்க. ஆனா நான், இந்த சமூகத்துக்காக அதாவது எனக்காகவும், என்னைச் சுற்றி இருக்குறவங்களுக்காகவும்தான் எழுதுறேன். அப்படி இருக்கும்போது பல வகையான அங்கீகாரமும் முக்கியம்.

இளைய பாரதத்தில் எழுதுறதுக்கு எனக்கு யார் அனுமதியும் தேவையில்லை. நினைக்கிறதை எழுதுறேன். ஆனா இன்னொரு ஊடகத்துல மற்றவர்களால தன் எழுத்து அங்கீகரிக்கப்படும்போதுதான் ஒரு எழுத்தாளனுக்கு உண்மையான சந்தோஷமும்,

ஊக்கமும் கிடைக்கும். பதிவுகளுக்கு வர்ற பின்னூட்டமும் இப்படி ஒரு மகிழ்ச்சியைத்தான் கொடுக்கும்.

பத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை....கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை.

இதை இளைய பாரதத்துல படிக்கணுமா...

திண்ணை இணைய இதழ்ல படிக்கணுமா?

திண்ணை இணைய இதழில் கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை...இளைய பாரதம் தொகுத்து அனுப்பிய துணுக்கு.


தொடக்க காலங்கள்ல நான் எழுதி அனுப்பிய வாசகர் கடிதம் கூட பிரசுரமானது இல்லை. ஆனா இப்போ நான் கடந்த மூணு வாரமா எழுதி அனுப்பின விஷயங்கள் மூணுமே திண்ணை இணைய இதழில் வெளிவந்துள்ளன.

என்னுடைய எழுத்து தொடர்ந்து மேம்பட்டு வருதுன்னு ஒரு சின்ன சந்தோஷம். சிலர் ஒரு வாதத்துக்காக, "உன் எழுத்து உன் மனசாட்சிக்கு பிடிச்சா போதும்." அப்படின்னு சொல்லலாம். அதுக்கு நான் என் மனசுக்குள்ளயே எழுதிட்டுப் போயிடலாமே...எதுக்காக அச்சு ஊடகத்தையும், இணையத்தையும் தேடணும்?

இலக்கியப் புலமை உள்ளவங்க தன் மனதுக்கு தீனி போட எப்படி வேணுன்னாலும் எழுதுவாங்க. ஆனா நான், இந்த சமூகத்துக்காக அதாவது எனக்காகவும், என்னைச் சுற்றி இருக்குறவங்களுக்காகவும்தான் எழுதுறேன். அப்படி இருக்கும்போது பல வகையான அங்கீகாரமும் முக்கியம்.

இளைய பாரதத்தில் எழுதுறதுக்கு எனக்கு யார் அனுமதியும் தேவையில்லை. நினைக்கிறதை எழுதுறேன். ஆனா இன்னொரு ஊடகத்துல மற்றவர்களால தன் எழுத்து அங்கீகரிக்கப்படும்போதுதான் ஒரு எழுத்தாளனுக்கு உண்மையான சந்தோஷமும்,

ஊக்கமும் கிடைக்கும். பதிவுகளுக்கு வர்ற பின்னூட்டமும் இப்படி ஒரு மகிழ்ச்சியைத்தான் கொடுக்கும்.

பத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை....கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை.

இதை இளைய பாரதத்துல படிக்கணுமா...

திண்ணை இணைய இதழ்ல படிக்கணுமா?

வெள்ளி, 25 டிசம்பர், 2009

மிரள வைத்த வெற்றி - இளைய பாரதத்துக்கு வேட்டைக்காரன் விஜய், ரஜினி, கமல் மற்றும் தமிழ்மணம் தந்த பிரமாண்டமான ஓப்பனிங்

23 டிசம்பர் அன்று வேட்டைக்காரன் திரையிடப்பட்டிருந்த திரையரங்கம் ஒன்றில் ஒருவர்

மொக்கையாகிப் போனதைப் பற்றி எழுதியிருந்தேன். அதற்கு வேட்டைக்காரன் என்ற வார்த்தை வரும்படி தலைப்பு அமைத்திருந்தது எதேச்சையாகத்தான் அமைந்தது. அந்த பதிவில் நான் சொல்ல வந்த விஷயம் படம் சம்மந்தப்பட்டது என்பதால் வேறு தலைப்பை யோசிக்க வில்லை.

அன்று நான் இட்ட மற்றொரு பதிவில் ஃபாலோயர்ஸ் விட்ஜெட் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தால்  இளையபாரதம் URL முகவரியை மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்ததைப் பற்றி எழுதியிருந்தேன். எதற்காக அந்தப் பதிவுக்குரிய தலைப்பில் குசேலன், ஆளவந்தான், குருவி ஆகிய படங்களின் தலைப்பை சேர்த்திருந்தேன் என்று பலருக்கும் புரிந்திருக்காது.

அந்தப் புதிரை 01.01.2010 அன்றுதான் விடுவிப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

இப்போது என்னை மிரள வைத்த விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு தலைப்பும் இருந்ததைப் பார்த்து அன்று ஒரே நாளில் இளையபாரதத்துக்கு 1194 ஹிட்ஸ்  கிடைத்தன. அன்று முழுவதும் நான் இளைய பாரதத்தில் நுழைந்த சமயங்களில் எல்லாம் குறைந்தது முப்பது பேராவது ஆன்லைனில் இருந்தார்கள். கிடுகிடுவென ஹிட்ஸ் ஏறிக்கொண்டே போனதில் நான் மிரண்டு போனது உண்மை.

சினிமா ஹீரோக்களை விரும்பாதவர்கள் பலர் இருந்தாலும் அவர்கள் சம்மந்தப்பட்ட விஷயம் மக்களிடையே ஏற்படுத்தும்  தாக்கத்தைப் போல் வேறு எதுவுமே செய்வதில்லை.

நடிகர்களை மக்கள் மிகப்பெரிய உயரமும் செல்வங்களும் கொடுத்து வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள், இந்த மக்களுக்காகவும் அந்த சினிமாவுக்காகவும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

நான் ஒன்றும் நடிகர்கள், தாங்கள் சம்பாதித்த பணத்தை அப்படியே கருணை இல்லங்களுக்கு கொடுத்துவிட்டு காந்தி மகான் போல அரையாடை உடுத்தி எளிய உணவு உண்ண சொல்லவில்லை.

அதுதான் அவர்கள் ஏழைகளுக்கு நிறைய உதவிகளை உலகிற்கு தெரிந்தும் தெரியாமலும் செய்கிறார்களே...என்று சொல்லும் கட்சியாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு ஒரு விண்ணப்பம்.

ஒன்றுமே செய்ய இயலாதவர்களுக்குதான் நீங்கள் பொருளுதவி செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு அவர்களே பொருளைத் தேடுவதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதே சமூகத்துக்கு செய்யும் உண்மையான உதவியாக இருக்க முடியும்.

பாபா படத்தின் வெற்றி பற்றிய பேச்சு எழுந்தபோது யானை படுத்தாலே குதிரையின் உயரம். நான் ஜெயிக்கிற குதிரை என்று தன்னம்பிக்கையுடன் பேசினார். அடுத்த படத்திலேயே செய்தும் காட்டினார்.


அவருடைய படத்தில் பணியாற்றுபவர்களும், திரையரங்க உரிமையாளர்கள்,  விநியோகஸ்தர் என்று பலன் பெறுபவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ என்று அவரது ஆதரவாளர்கள் சொல்வார்கள்.

அவருடைய திறனுக்கு அவரால் வாழ்பவர்கள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஆலமரம். ஆனால் அவரது படங்களால் ஒரு புங்க மரத்தடியில் மழைக்கு ஒதுங்கி நிற்பவர்களின் அளவுக்குதான் பலன்பெறுபவர்களின் எண்ணிக்கை இருக்கிறது என்று சொல்கிறேன்.

தமிழில் பிரமாண்ட இயக்குநர் என்று தனிப் பாதையில் செல்லும் ஷங்கர், புதுமுகங்களைக் கொண்டு ஈரமான ரோஜாவே என்ற மெகா ஹிட் படம் தந்த கேயார் ஆகிய இருவரையும் முன்னுதாரணமாகக் கொண்டு நான் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு காலுடன் நடனமாடி தன் திறனை நிரூபித்த குட்டி என்ற இளைஞரை வைத்து படம் எடுத்த கேயாருக்கு லாபம் கிடைப்பது கடினம்தான் என்பது நன்கு தெரியும்.. ஆனால் அந்த சினிமாவின் மூலம் குட்டிக்கு நிறைய கச்சேரி வாய்ப்புகள் கிடைத்தன. இன்னும் பெரிய சிகரம் தொட்டிருக்க வேண்டிய அந்த இளைஞர், அகால மரணம் அடைந்தது என்னைக் கலங்க வைத்த விஷயம்.

கேயார் நினைத்திருந்தால் தனக்கு தெரிந்த இடங்களில் நடனவிழா நடத்த குட்டியை அறிமுகம் செய்திருந்தால் போதும். ஆனால் அவரது திறமை உலகிற்கு பளிச்சென்று தெரிந்து அவரை நடனம் ஆட நாலு பேர் தேடி வரச்செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததால்தான் லாபம் எதிர்பார்க்காமல் டான்சர் என்ற படத்தை அவரால் எடுக்க முடிந்தது.

காதல், இம்சைஅரசன் 23ம் புலிகேசி, ஈரம் போன்ற படங்கள் ஷங்கர் தவிர வேறு யாரும் தயாரிக்க ரொம்பவே தயங்கியிருப்பார்கள். தமிழில் உச்சம் தொட்ட இயக்குநர்கள் பிறருடைய தயாரிப்பில்தான் சிறந்த படங்களை மிக அதிகமாக தந்திருக்கிறார்கள். அந்த இயக்குநர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருந்தாலும் ஷங்கர் போல் புதிய முயற்சிக்கு ஆதரவு தரவில்லை.

ரஜினி தயாரித்து இயக்கிய வள்ளி தவிர வேறு முயற்சியில் அவர் ஈடுபடவில்லை.

மிகச் சிறிய முதலீட்டில் சிறப்பான படம் எடுக்க இப்போதும் பலர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அச்சுறுத்தும் விஷயம் தியேட்டர் வாடகை. மீண்டும் கடன் வாங்கி படத்தை வெளியிட்டால் மீடியா மூலமாக படம் பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டு தியேட்டருக்கு கூட்டம் வருவதற்கு இரண்டு வாரங்களாவது ஆகிவிடும். அதுவரை தியேட்டரில் படத்தை ஓட்ட வேண்டும் என்றால் வாடகை கொடுக்க தயாரிப்பாளரால் முடியாது.

அப்படியே அவர் வாடகை தரத் தயாராக இருந்தாலும் பெரிய நடிகர்கள் படம் ரிலீசானால் வலுக்கட்டாயமாக சிறிய படங்கள் வெளியேற்றப்படும். என்னுடைய வலைப்பதிவுக்கு ஒரே நாளில் 1194 ஹிட்டுகள் கிடைத்ததற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா?

அன்று நான் பதிவிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து ஏதோ தொழில் நுட்பக்காரணங்களால் இரவு வரை சில பதிவுகள் மட்டுமே தொடர்ந்து முகப்பு பக்கத்தில் இடம்பெற்றன. அதனால்தான் அவ்வளவு ஹிட்ஸ்.

இதைக் கண்டு நான் மகிழலாம். ஆனால் என்னை விட சிறப்பாக, பயனுள்ள பதிவுகள் எவ்வளவு இடப்பட்டிருக்கும்?. அவை வாசகர்களைச் சேராததால் எவ்வளவு பேருக்கோ

வருத்தமும், நிறைய நல்ல செய்தி பயன்படாத நிலையும் ஏற்பட்டிருக்கலாம்.

இது தவிர்க்க இயலாத தொழில் நுட்பக் கோளாறாக இருக்கும்.

ஆனால் பெரிய பட்ஜெட் படங்களால் சிறிய படங்கள் இப்படித்தான் பார்வையாளர்களை அடையாமல் நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

பெரிய நடிகர்கள் ஒன்றும் இந்த மாதிரி படங்களைத் தயாரிக்க கூட வேண்டாம். அவர்கள் இந்த மாதிரியான நல்ல படங்களை நியாயமான விலை கொடுத்து வாங்கி திரையிட்டால் அவர்களின் பாப்புலாரிட்டியால் முதல் சில நாட்களிலேயே   காதல், இம்சைஅரசன் போன்ற படங்கள் குறிப்பிட்ட சதவீதம் லாபம் ஈட்டும். சேது படமே இப்படி ஒரு பெரிய ஆள் வாங்கி வெளியிட்டிருந்தால் எவ்வளவோ நாட்களுக்கு முன்னாலேயே வெளியாகியிருக்கும்.

இந்தப் படங்களால் நிச்சயம் நஷ்டம் வரப்போவதில்லை. இதை மையமாக வைத்து நான் எழுதிய ஒரு பக்க கதையைப் படிக்க இங்கே அமுக்கவும்.

பெரிய நடிகர்கள் செய்யும் உதவி பாத்திரத்தில் உள்ள தண்ணீராக ஒரு சிலருக்கு மட்டுமே பயன் தரும்.  கிணற்று நீராக இருந்தால் இரைக்க இரைக்க தொடர்ந்து ஊறி நிறைய பேருக்கு பலன்  தருவதாக அமையும். இப்படி நன்மை அடைந்தவர்கள், தங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவலாம். இது சங்கிலித் தொடராக அமைந்தால் திரைத் துறைக்குதான் நல்லது.

ரியல் எஸ்டேட், திருமண மண்டபம், வணிக வளாகம் போன்றவற்றில் முதலீடு செய்வதோடு, திரைத்துறையிலும் அவர்கள் கவனமாக முதலீடு செய்தால் திரையுலகம் ஆரோக்கியமான பாதையில் செல்லத் தொடங்கும்.

மிரள வைத்த வெற்றி - இளைய பாரதத்துக்கு வேட்டைக்காரன் விஜய், ரஜினி, கமல் மற்றும் தமிழ்மணம் தந்த பிரமாண்டமான ஓப்பனிங்

23 டிசம்பர் அன்று வேட்டைக்காரன் திரையிடப்பட்டிருந்த திரையரங்கம் ஒன்றில் ஒருவர்

மொக்கையாகிப் போனதைப் பற்றி எழுதியிருந்தேன். அதற்கு வேட்டைக்காரன் என்ற வார்த்தை வரும்படி தலைப்பு அமைத்திருந்தது எதேச்சையாகத்தான் அமைந்தது. அந்த பதிவில் நான் சொல்ல வந்த விஷயம் படம் சம்மந்தப்பட்டது என்பதால் வேறு தலைப்பை யோசிக்க வில்லை.

அன்று நான் இட்ட மற்றொரு பதிவில் ஃபாலோயர்ஸ் விட்ஜெட் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தால்  இளையபாரதம் URL முகவரியை மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்ததைப் பற்றி எழுதியிருந்தேன். எதற்காக அந்தப் பதிவுக்குரிய தலைப்பில் குசேலன், ஆளவந்தான், குருவி ஆகிய படங்களின் தலைப்பை சேர்த்திருந்தேன் என்று பலருக்கும் புரிந்திருக்காது.

அந்தப் புதிரை 01.01.2010 அன்றுதான் விடுவிப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

இப்போது என்னை மிரள வைத்த விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு தலைப்பும் இருந்ததைப் பார்த்து அன்று ஒரே நாளில் இளையபாரதத்துக்கு 1194 ஹிட்ஸ்  கிடைத்தன. அன்று முழுவதும் நான் இளைய பாரதத்தில் நுழைந்த சமயங்களில் எல்லாம் குறைந்தது முப்பது பேராவது ஆன்லைனில் இருந்தார்கள். கிடுகிடுவென ஹிட்ஸ் ஏறிக்கொண்டே போனதில் நான் மிரண்டு போனது உண்மை.

சினிமா ஹீரோக்களை விரும்பாதவர்கள் பலர் இருந்தாலும் அவர்கள் சம்மந்தப்பட்ட விஷயம் மக்களிடையே ஏற்படுத்தும்  தாக்கத்தைப் போல் வேறு எதுவுமே செய்வதில்லை.

நடிகர்களை மக்கள் மிகப்பெரிய உயரமும் செல்வங்களும் கொடுத்து வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள், இந்த மக்களுக்காகவும் அந்த சினிமாவுக்காகவும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

நான் ஒன்றும் நடிகர்கள், தாங்கள் சம்பாதித்த பணத்தை அப்படியே கருணை இல்லங்களுக்கு கொடுத்துவிட்டு காந்தி மகான் போல அரையாடை உடுத்தி எளிய உணவு உண்ண சொல்லவில்லை.

அதுதான் அவர்கள் ஏழைகளுக்கு நிறைய உதவிகளை உலகிற்கு தெரிந்தும் தெரியாமலும் செய்கிறார்களே...என்று சொல்லும் கட்சியாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு ஒரு விண்ணப்பம்.

ஒன்றுமே செய்ய இயலாதவர்களுக்குதான் நீங்கள் பொருளுதவி செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு அவர்களே பொருளைத் தேடுவதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதே சமூகத்துக்கு செய்யும் உண்மையான உதவியாக இருக்க முடியும்.

பாபா படத்தின் வெற்றி பற்றிய பேச்சு எழுந்தபோது யானை படுத்தாலே குதிரையின் உயரம். நான் ஜெயிக்கிற குதிரை என்று தன்னம்பிக்கையுடன் பேசினார். அடுத்த படத்திலேயே செய்தும் காட்டினார்.


அவருடைய படத்தில் பணியாற்றுபவர்களும், திரையரங்க உரிமையாளர்கள்,  விநியோகஸ்தர் என்று பலன் பெறுபவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ என்று அவரது ஆதரவாளர்கள் சொல்வார்கள்.

அவருடைய திறனுக்கு அவரால் வாழ்பவர்கள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஆலமரம். ஆனால் அவரது படங்களால் ஒரு புங்க மரத்தடியில் மழைக்கு ஒதுங்கி நிற்பவர்களின் அளவுக்குதான் பலன்பெறுபவர்களின் எண்ணிக்கை இருக்கிறது என்று சொல்கிறேன்.

தமிழில் பிரமாண்ட இயக்குநர் என்று தனிப் பாதையில் செல்லும் ஷங்கர், புதுமுகங்களைக் கொண்டு ஈரமான ரோஜாவே என்ற மெகா ஹிட் படம் தந்த கேயார் ஆகிய இருவரையும் முன்னுதாரணமாகக் கொண்டு நான் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு காலுடன் நடனமாடி தன் திறனை நிரூபித்த குட்டி என்ற இளைஞரை வைத்து படம் எடுத்த கேயாருக்கு லாபம் கிடைப்பது கடினம்தான் என்பது நன்கு தெரியும்.. ஆனால் அந்த சினிமாவின் மூலம் குட்டிக்கு நிறைய கச்சேரி வாய்ப்புகள் கிடைத்தன. இன்னும் பெரிய சிகரம் தொட்டிருக்க வேண்டிய அந்த இளைஞர், அகால மரணம் அடைந்தது என்னைக் கலங்க வைத்த விஷயம்.

கேயார் நினைத்திருந்தால் தனக்கு தெரிந்த இடங்களில் நடனவிழா நடத்த குட்டியை அறிமுகம் செய்திருந்தால் போதும். ஆனால் அவரது திறமை உலகிற்கு பளிச்சென்று தெரிந்து அவரை நடனம் ஆட நாலு பேர் தேடி வரச்செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததால்தான் லாபம் எதிர்பார்க்காமல் டான்சர் என்ற படத்தை அவரால் எடுக்க முடிந்தது.

காதல், இம்சைஅரசன் 23ம் புலிகேசி, ஈரம் போன்ற படங்கள் ஷங்கர் தவிர வேறு யாரும் தயாரிக்க ரொம்பவே தயங்கியிருப்பார்கள். தமிழில் உச்சம் தொட்ட இயக்குநர்கள் பிறருடைய தயாரிப்பில்தான் சிறந்த படங்களை மிக அதிகமாக தந்திருக்கிறார்கள். அந்த இயக்குநர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருந்தாலும் ஷங்கர் போல் புதிய முயற்சிக்கு ஆதரவு தரவில்லை.

ரஜினி தயாரித்து இயக்கிய வள்ளி தவிர வேறு முயற்சியில் அவர் ஈடுபடவில்லை.

மிகச் சிறிய முதலீட்டில் சிறப்பான படம் எடுக்க இப்போதும் பலர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அச்சுறுத்தும் விஷயம் தியேட்டர் வாடகை. மீண்டும் கடன் வாங்கி படத்தை வெளியிட்டால் மீடியா மூலமாக படம் பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டு தியேட்டருக்கு கூட்டம் வருவதற்கு இரண்டு வாரங்களாவது ஆகிவிடும். அதுவரை தியேட்டரில் படத்தை ஓட்ட வேண்டும் என்றால் வாடகை கொடுக்க தயாரிப்பாளரால் முடியாது.

அப்படியே அவர் வாடகை தரத் தயாராக இருந்தாலும் பெரிய நடிகர்கள் படம் ரிலீசானால் வலுக்கட்டாயமாக சிறிய படங்கள் வெளியேற்றப்படும். என்னுடைய வலைப்பதிவுக்கு ஒரே நாளில் 1194 ஹிட்டுகள் கிடைத்ததற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா?

அன்று நான் பதிவிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து ஏதோ தொழில் நுட்பக்காரணங்களால் இரவு வரை சில பதிவுகள் மட்டுமே தொடர்ந்து முகப்பு பக்கத்தில் இடம்பெற்றன. அதனால்தான் அவ்வளவு ஹிட்ஸ்.

இதைக் கண்டு நான் மகிழலாம். ஆனால் என்னை விட சிறப்பாக, பயனுள்ள பதிவுகள் எவ்வளவு இடப்பட்டிருக்கும்?. அவை வாசகர்களைச் சேராததால் எவ்வளவு பேருக்கோ

வருத்தமும், நிறைய நல்ல செய்தி பயன்படாத நிலையும் ஏற்பட்டிருக்கலாம்.

இது தவிர்க்க இயலாத தொழில் நுட்பக் கோளாறாக இருக்கும்.

ஆனால் பெரிய பட்ஜெட் படங்களால் சிறிய படங்கள் இப்படித்தான் பார்வையாளர்களை அடையாமல் நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

பெரிய நடிகர்கள் ஒன்றும் இந்த மாதிரி படங்களைத் தயாரிக்க கூட வேண்டாம். அவர்கள் இந்த மாதிரியான நல்ல படங்களை நியாயமான விலை கொடுத்து வாங்கி திரையிட்டால் அவர்களின் பாப்புலாரிட்டியால் முதல் சில நாட்களிலேயே   காதல், இம்சைஅரசன் போன்ற படங்கள் குறிப்பிட்ட சதவீதம் லாபம் ஈட்டும். சேது படமே இப்படி ஒரு பெரிய ஆள் வாங்கி வெளியிட்டிருந்தால் எவ்வளவோ நாட்களுக்கு முன்னாலேயே வெளியாகியிருக்கும்.

இந்தப் படங்களால் நிச்சயம் நஷ்டம் வரப்போவதில்லை. இதை மையமாக வைத்து நான் எழுதிய ஒரு பக்க கதையைப் படிக்க இங்கே அமுக்கவும்.

பெரிய நடிகர்கள் செய்யும் உதவி பாத்திரத்தில் உள்ள தண்ணீராக ஒரு சிலருக்கு மட்டுமே பயன் தரும்.  கிணற்று நீராக இருந்தால் இரைக்க இரைக்க தொடர்ந்து ஊறி நிறைய பேருக்கு பலன்  தருவதாக அமையும். இப்படி நன்மை அடைந்தவர்கள், தங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவலாம். இது சங்கிலித் தொடராக அமைந்தால் திரைத் துறைக்குதான் நல்லது.

ரியல் எஸ்டேட், திருமண மண்டபம், வணிக வளாகம் போன்றவற்றில் முதலீடு செய்வதோடு, திரைத்துறையிலும் அவர்கள் கவனமாக முதலீடு செய்தால் திரையுலகம் ஆரோக்கியமான பாதையில் செல்லத் தொடங்கும்.

இரண்டடிக்கும் குறைவான இடைவெளியில் இளம்பெண் - நிம்மதியான பயணம்...


வெளிநாடு, வெளிமாநிலம் போறவங்க மட்டும்தான் பயணக்கட்டுரை எழுதணுமான்னு ரொம்ப நாளா யோசிச்சுகிட்டே இருந்தேன். ஏற்கனவே ரொம்ப அதிகமா யோசிச்சு முன் தலையில ஒளி பிரதிபலிக்கிறதெல்லாம் வேற விஷயம்.

வெளியூர் போயிருந்த அம்மாவை மதுரைக்கு வர சொல்லிட்டு 24 டிசம்பர் 2009 காலை 5 மணிக்கு நானும் திருவாரூர்ல பஸ்சுக்குள்ள ஏறிட்டேன். ஏற்கனவே இரண்டரை ஆண்டு, ஒன்னரை ஆண்டு இடைவெளியில அவங்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து ரெண்டு கண்ணுக்கும் ஃபோல்டிங் லென்ஸ் வெச்சாச்சு.

இப்ப ஒரு கண்ணுல சின்ன பிராப்ளம். அதுக்காகதான் இந்த மதுரை பயணம். திருவாரூர்ல இருந்து போகும்போது தஞ்சை ரயில் நிலையத்து முகப்புல வெச்சிருந்த ஒரு விளம்பரப் பலகை "கரெக்ட்...விளம்பரம்னா இப்படித்தான் இருக்கணும்." அப்படின்னு வாய்விட்டு சொல்ல வெச்சுதுங்க.

நொடிக்கணக்குல செல்போன் கட்டணப் போட்டி ஆரம்பமானதும் ஒரு நிறுவனம்

"இப்ப எங்க இருக்க?"

"கிளாஸ்ல"

இப்படி சின்ன சின்ன விஷயத்துல சந்தோஷமா பேசுங்கன்னு தொலைக்காட்சிகள்ல கூவுனுச்சு. படிக்கிற புள்ளைங்க வகுப்புல இப்படி பேசுறதை ஊக்குவிக்கும் விதமா இந்த விளம்பரம் இருந்ததால எனக்குப் புடிக்கலை.(உனக்கு பிடிக்கணும்னு எவன் சொன்னான்.)

அதே நிறுவனம்,
***********

"எங்க வரணும்.?"

"ரெண்டாவது பிளாட்பாரத்துக்கு."

**********


"எங்க நிக்கிற?"

"புக் ஸ்டால்ல."

***********

"டிக்கட் கன்ஃபர்ம் ஆயிடுச்சா?"

"இல்ல...வெயிட்டிங் லிஸ்ட்டுதான்."

**********

"எந்த கோச்?"

"S 10"

**********

இப்படி சின்ன சின்ன விஷயத்தை கட்டணம் பற்றி  கவலைப்படாம பேசுங்க...ஏன்னா, இப்ப நீங்க பேசுற நொடிகளுக்கு மட்டுமே கட்டணம். அப்படின்னு விளம்பரம் விளம்பரம் வெச்சிருந்தாங்க.

ஒரு நிறுவனத்தை வளர்க்க விளம்பரங்கள் அவசியமே. அந்த விளம்பரங்கள் மக்களுக்கும் நல்ல திசையைக் காட்டுறதா இருக்கணும்.

நிறுவனத்தோட பேர் என்னன்னுதானே கேட்டீங்க?...நான் எழுதுற பிளாக்குல காசு வாங்காம ஏன் அவங்க விளம்பரத்தைப் போடணும்?

******************

அடுத்து என் கவனத்துல அதிகமா பதிஞ்ச விஷயம் மேலூர் புறவழிச்சாலை. மதுரை - திருச்சி சாலை நான்கு வழிப்பாதையாக்குற வேலை முடியுற நிலையில இருக்கு. ஆனா அதுக்குள்ள சுங்கம் வசூலிக்கிற டோல்கேட் அமைக்கும் பணி நிறைவடைஞ்சு கல்லாப்பெட்டியைத் திறந்து வெச்சுடுவாங்க போலிருக்கு.

அது சரி...இது எந்த நாடு...இந்தியா. ஒருத்தர் பணம் கட்டலைன்னா அடுத்த நாளே ஒரு சேவையை நிறுத்திடுவாங்க. ஆனா நீங்க அதன் பிறகு பணம் கட்டினா கூட ஒரு வாரமோ, ஒரு மாசமோ ஏன் ஒரு வருஷம் கழிச்சு...இல்லன்னா அந்த சேவை கிடைக்காமலேயே கூட போகலாம்.

விட்டது தொல்லை. அந்த நாட்களுக்கு செலவாவது மிச்சம் அப்படின்னு உங்களை நிம்மதியா இருக்க விட்டுடுவோமா?... பணம் கட்ட சொல்லி மாசம் மாசம் ரொம்ப சரியான தேதிக்கு பில்லை மட்டும் அனுப்பிகிட்டே இருப்போம். நாங்க சுறுசுறுப்பா வேலை செய்யலைன்னு நீங்க சொல்லிடக்கூடாதுல்ல.

இந்த சேவை எனக்கு வழங்கப்படுறதை நிறுத்தி நாற்பது வருஷமாச்சே...அப்படின்னு நீங்க பாட்டுக்கு நம்ம முதல்வர் மாதிரி கடிதம் எழுதிகிட்டே இருக்க வேண்டியதுதான். அதுக்கு மட்டும் எங்களை பதில் போட வெச்சிடுங்க...சவாலுக்கு சவால்...இதுதான் இன்றைக்கு பல அரசு, தனியார் சேவை நிறுவன குளறுபடிகள் செய்வதன் உச்ச கட்டம்.

அநியாயமா பணம் கட்ட சொல்லி பில் வந்தா அதைக் கட்டாம இருக்க முடியாதா?

ஏன் முடியாது... அநியாயத் தொகையை மட்டுமில்லை. நியாயமான தொகையையும் முழுசாவே ஏப்பம் விட்டுடலாம். எல்லாம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துதான்.

விலை வாசி ஏறிப்போச்சே...நீங்க கொடுக்குற ஐநூறு  ஆயிரத்தை வெச்சு அதிகாரிகள் எல்லாம் கோடிக்கணக்குல சொத்து வாங்குறதுக்கு எத்தனை பிறவி எடுக்குறது...

அவங்களுக்கே நீங்க லட்சக்கணக்குல லஞ்சம் கொடுக்கணும்னா, குறைந்தபட்சம் கோடிக்கணக்குல ஏமாத்துனாதான் முடியும். வியாபாரம் கட்டுபடியாகனுமில்ல?...

ஆயிரம் கட்டாதவனுக்கு ஆப்பு வெக்கிறதும், ஆயிரக்கணக்கான கோடி கட்டாதவனுக்கு மாலை மரியாதை பண்ணி அடுத்த கடன் அல்லது சேவைக்கு ஏற்பாடு செய்யுறது ஏன்னு இப்பவாச்சும் புரியுதா?...ஊழலுக்கும் வரி ஏய்ப்புக்கும் ஒரு மரியாதை இருக்கு. அதை புரிஞ்சுக்குங்கப்பா...

ஆமா... நான் எங்க இருக்கேன்...(மதுரை போற பஸ்சுலதான்...பத்து ரூபா அரசாங்கத்தை ஏமாத்த தெரியலை... உன்னை எல்லாம் மதுகோடா மாதிரி

ஆஸ்பத்திரியிலயா வெக்க முடியும்?)

எதுக்கு சொல்ல வந்தேன்னா...இன்னும் கொஞ்ச நாள்ல உங்க வீட்டை விட்டு வெளில வந்தாலே இது தனியார் காண்ட்ராக்ட் மூலமா போட்டது. நடக்கணும்னா அம்பது ரூபா கொடுன்னு கேட்கதான் போறாங்க.

அதுக்கு முன்னோட்டம்தான் ரோட்டுக்கு ரோடு இந்த சுங்கம் வசூல். முப்பதாயிரம் டன் நாற்பதாயிரம் டன் வரை லாரியில சுமை ஏற்றிகிட்டுப் போய் சாலையை வீணடிச்சுட்டா பிறகு மறுபடி முதல்லேர்ந்து ஆரம்பிக்க எங்க போறதுன்னு நீங்க கேட்குறது புரியுது.

இதுல அமைச்சர்லேர்ந்து வட்டம் மாவட்டம் வரை பெரிய ஆளுங்க கோடீஸ்வரனாயிட்டே இருக்காங்க.

அப்ப என்ற கதி? இப்படியெல்லாம் கேள்வி கேட்கப் பிடாது...திருவோடுதான்...அதையும் அவங்க புடுங்கிட்டா ஏன்னு கேட்க கூடாது. இதை எல்லாம் பார்த்துட்டு அங்க எதாவது நான் வாயைத் திறந்தேனா?...நான் பாட்டுக்கு வீட்டுல வந்து உட்கார்ந்து பிளாக்ல எண்ட்ரி போட்டுகிட்டு இருக்கேன்ல...இப்படித்தான் பொழைக்கிற வழியைக் கத்துக்கணும்.

அரசுப் பணத்துல போட்ட சாலையில கூட சுங்கம் வசூல் செய்ய தனியார் குத்தகைக்கு விட்டுடுறாங்க. இதுல எவ்வளவு வசூல், எவ்வளவு ஒப்பந்தத் தொகை அப்படின்னு எதுவுமே வெளிப்படை இல்லை.

இது தவிர, இரவு நேரங்கள்ல கார், வேன் இது மாதிரி வாகனங்கள்ல பயணம் செய்யுற பெண்கள் கிட்ட டோல்கேட் ஆளுங்க பாலியல் தொந்தரவு கொடுக்குறதாவும் புகார் இருக்கு.

நான் என்ன சொல்றேன்னா...எவ்வளவு பணம் வசூலாகுதுன்னு வெளிப்படையா எல்லாரும் தெரிஞ்சுக்குறபடி செய்துட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்துடும்.

 உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை?ன்னு யாருப்பா சவுண்ட் விடுறது?

ஒரு நாடு நல்லா இருக்கணும்னா ஒரு ஊர் மட்டும் துன்பம் அனுபவிக்கிறதோ, அழியிறதோ தப்பில்லைன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. நம்ம அரசியல் வியாதிங்க அதுல சின்ன திருத்தம் பண்ணிட்டாங்க. நாலு குடும்பம் நல்லா இருக்கணும்னா நாடு அழிஞ்சா தப்பே இல்லை...- இதைக் கேட்கும்போதே எவ்வளவு கொடூரமா இருக்கு?

இப்ப இந்தியாவோட பயணம் இந்தப் பாதையிலதான் போய்கிட்டு இருக்கு.

நீங்க உடனே சாதனைகளோட பட்டியலைப் படிக்காதீங்க. பால்ல தண்ணீரைக் கலக்கலாம். பெரிய  பாதிப்பு வெளியில தெரியாது. ஆனா சிலர் தண்ணியில பாலைக் கலந்தாக் கூட பரவாயில்லைங்க...விஷத்தல்ல கலக்குறாங்க. நினைச்சுப் பார்க்கும்போதே பகீர்னுங்குது.

@@@@@@@@@@@@

தெலுங்கானா கோரிக்கையால ஆந்திராவே அவதிப்பட்டுகிட்டு இருக்கு. நாணயம் மாதிரி இந்தப் பிரச்சனைக்கும் ரெண்டு பக்கம் உண்டு. அதாவது நன்மை - தீமை. அதனால அவங்க கோரிக்கை நியாயமா இல்லையான்னு இப்ப நான் கருத்து சொல்லப் போறது இல்லை.

ஆனா வன்முறை நிரந்தரத் தீர்வு இல்லைன்னு மட்டும் புரியுது.

எதாவது ஒரு பிரச்சனைன்னா பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கிற போக்கு இப்ப மறுபடி அதிகமாயிருக்கு. இதுக்கு முக்கிய காரணம், கூட்டம்தான். ஒருத்தனோட அடிமனசுல இருக்குற வன்முறை எண்ணம் இந்த மாதிரி கலவரங்களின் போது ரொம்ப சுலபமா வெளிவந்துடுது.


நேற்றும் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நாங்க வந்துகிட்டிருந்த பேருந்துக்கு பக்கத்துல வந்த மற்றொரு பேருந்தை பெரிய கும்பலே சூழ்ந்துடுச்சு. பஸ்சுக்குள்ள ஏறி டிரைவர், கண்டக்டரை அடிச்சா கேஸ் ஸ்ட்ராங்கா ஆயிடும்னு பயந்த கும்பல், யடேய்... கீழ இறங்குடான்னு கத்தினாங்க. ஆனா அவங்க ரெண்டு பேரும் இறங்கவே இல்லை.

அந்த அரசுப்பேருந்து எந்த வண்டியிலயாவது மோதிட்டுதா இல்ல வேற எதுவும் பிரச்சனையான்னு  எனக்கு தெரியலை. ஆனா இந்தப் போக்கு மிகவும் தவறானதுன்னு மட்டும் புரியுது.


அவங்க செய்தது மட்டும் சரியான்னு நீங்க கேட்கலாம். எந்த ஓட்டுநரும் அலட்சியமாக இருந்திருக்கலாமே தவிர விபத்தை ஏற்படுத்தி உயிர்களைப் பலியாக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் என்பது பொதுவான கருத்து.

அந்த அலட்சியத்தைப் போக்கும் விதமாகத்தான் தண்டனை இருக்க வேண்டுமே தவிர மேலும் சில உயிர்களை பலியாக்கும் வகையில் நாம் நடந்து கொள்ளக் கூடாது.

சட்டத்தின் கையிலிருந்து எப்படியும் தப்பிவிடலாம். ஆனால் இந்த மக்களின் கையில் சிக்கினால் மரணம்தான் என்ற அச்சமே அவர்கள் இருவரையும் அங்கிருந்து ஓடச் செய்திருக்கிறது. இல்லை என்றால் மேலும் நாலு குழந்தைகளையாவது காப்பாற்றி இருக்கலாம் என்பது நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்ளும் உண்மை.

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலும் பேருந்தையும், அந்த ஓட்டுநர், நடத்துனரையும் அடித்து நொறுக்கும் ஆவேசத்துடன் நெருங்கினார்கள். அப்போது அங்கே வந்த போலீசார் கூட்டத்தை வீடியோ, புகைப்படம் எடுக்கத் தொடங்கியதும் பாதிப்பேர் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

நாங்கள் பயணம் செய்த பேருந்து கிளம்பி விட்டதால்  என்ன பிரச்சனை, என்ன ஆனது என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. துணிச்சலாக குற்றத்தை ஒப்புக்கொண்ட வரலாறெல்லாம் சுதந்திரப்போராட்டத்தில்தான். ஏனென்றால் அந்த நோக்கத்தில் ஒரு நியாயம் இருந்தது. அப்படியும் வன்முறையை யாரும் விரும்பவில்லை. ஆனால் இப்போது நிகழும் கலவரங்களில் ஈடுபடுபவரெல்லாம்  நானும் தப்பு செஞ்சேன்னு யாருக்கு தெரியப்போகுது...என்ற தப்பித்தல் மனோபாவத்தில் மட்டுமே இப்படி குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். கூகிள் எர்த் மூலமா கலவரத்துல ஈடுபடுற ஆளுங்களை அடையாளம் கண்டு கடுமையா தண்டிக்கிற தொழில்நுட்பம் இருந்தா ரொம்பவே நல்லதுன்னுதான் தோணுது.

மக்களின் பிரச்சனைக்கு காரணமான சில  அரசியல் வியாதிங்களோட  சொத்துக்களை சேதப்படுத்துறவங்களைப் பற்றிய விவரங்களை மறைக்கிற அறிவு அந்த தொழில் நுட்பத்துக்கு இருந்தா அதுதாங்க எனக்கு கடவுள். அரசியல்வாதிகளோட ஊழல் சொத்துக்கள் நொறுங்கி நாசமாயிடும்னா யாருங்க வன்முறையைத் தூண்டுவாங்க?
********************

ரொம்பவே சீரியசா பேசிட்டேனா...பயணத்தை எனக்கு இனிமையாக்குன விஷயம் பற்றி சொல்லிடுறேன்.

நான் இன்னும் சின்ன புள்ளைதாங்க. (ஆரம்பிச்சுட்டான்யா...)காலை நேரத்துல பேருந்துப் பயணம் எனக்கு வாந்தியை வரவழைச்சுடும். திருவாரூர்ல இருந்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் 65 கி.மீ. தூரம். ஆனா முப்பது கிலோ மீட்டர் தூரம் போறதுக்குள்ள வாந்தி கியாரண்டியாத்தான் இருந்துச்சு. இப்ப நிலைமை கொஞ்சம் தேவலாம். ஆனா ரொம்ப அசதியா இருக்கும்.

இரவு நேரப் பயணம் இந்த மாதிரி தொந்தரவு தந்ததில்லை. அது ஏங்க? அது மட்டுமில்லை. சில சமயம், பரமக்குடியிலேர்ந்து அதிகாலை நாலுமணிக்கு திருச்சி போற பஸ்சுல ஏறி சிவகங்கை, திருப்பத்தூர், புதுக்கோட்டை (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்) தஞ்சாவூர் வழியா திருவாரூர் ஆறே மணி நேரத்துல வந்துடுவேன். அப்பவும் வாந்தி தொந்தரவு இருந்ததில்லை.

இதுக்கு என்ன காரணம்னுதானே கேட்டீங்க?...

தெரியலையேப்பா...தெரியலையே....

எதுக்கு இந்த விஷயங்களை சொல்றேன்னா, பேருந்துப் பயணம் ஒத்துக்கொள்ளாத ஆசாமிங்களுக்கு ஒரு இருக்கையில இருந்து இன்னொரு இருக்கைக்கு மாறுற விஷயம் இருக்கே...அது கூட இமயமலையில இருந்து தலைகீழா(?!) இறங்குற மாதிரி.

யோவ்... நீ என்ன .................................................கட்சித் தலைவரா.ஒரு ஊர்ல இருந்து இன்னொரு இடத்துக்குப் போறதுக்குள்ள நாலு இருக்கைக்கு மாறினாதான் மரியாதைன்னு நினைப்பு அப்படின்னு  திட்டாதீங்க.

உடம்பு இந்த கண்டிஷன்ல இருக்கும்போது பஸ்சுல இருக்குற ஐம்பத்தேழு இருக்கையிலயும் மாறி உட்காரணும்னு வேண்டுதலா என்ன? நம்ம நாட்டுக் கலாச்சாரம் செய்யுற அக்கப்போர்தான் இது. "சார்...கொஞ்சம் மாறி உட்காருங்களேன்..." அப்படின்னு ஒரு அழகான பொண்ணோ மரியாதைக்குரிய தாய்க்குலமோ யார் சொன்னாலும் மாறி உட்கார்ந்துக்க வேண்டியதுதான். இல்லன்னா நடத்துனர் வந்து சாவுகிராக்கின்னு ஒரு புது விருது கொடுத்து நம்மளை இருக்கையை விட்டு (முரண்டு பிடிச்சா பேருந்தை விட்டே) நகர்த்திட்டுதான் மறுவேலை பார்ப்பார். ஏன் இந்த வம்பு...( சுனாமி இந்தோனேஷியாவுல பஸ்...ச்சை..கப்பல் ஏறின உடனேயே சென்னை எல்.ஐ.சி பில்டிங் மொட்டை மாடிக்கு போயிடுற அளவுக்கு நாங்க எல்லாம் அப்பாவி.)

திருமலை படத்துல விஜய் கூட இண்டர்வியூவுக்கு கிளம்புற விவேக்கை, டேக் டைவர்ஷன் அப்படின்னு சொல்லியே திருப்பதியில கொண்டுபோய் விட்டுடுவாங்க. ஆறு மாசத்துக்கு முன்னால இப்படித்தான் தஞ்சாவூர்ல இருந்து திருவாரூர் வர்றதுக்குள்ள (65 கி.மீ தூரம்தான்) டிரைவருக்கு பின் சீட்டுல உட்கார்ந்து இருந்த நான் இப்படி இடம் மாறி மாறி கடைசி வரிசைக்கு வந்துட்டேன். ஏற்கனவே நான்கு மணி நேரம் பயணம் பண்ணி வந்த எனக்கு இந்த அனுபவம் எப்படி இருந்திருக்கும்?(இதுல லக்கேஜ் வேற)

கடைசி வரிசைக்கு போகும்போது "இனிமேலும் பின்னால போகச் சொன்னா கண்ணாடியை உடைச்சுட்டு கீழ குதிக்க வேண்டியதுதான்" அப்படின்னு சொன்னேன். அதுக்கு அந்த யுவதி (சரித்திர நாவல்கள் அதிகமா படிச்சதோட பாதிப்பு) லேசா சிரிச்சதோட சரி...

ஆறு மாசத்துக்கு முன்னால நடந்தது இருக்கட்டும்... நேத்து என்ன ஆச்சுன்னுதானே உங்க கேள்வி?

போகும்போது ரெண்டு பேர் உட்காருற இருக்கையில மதுரை வரை ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் உட்கார்ந்து வந்ததால பிரச்சனை இல்லை.

திரும்பி வரும்போது அம்மா வெளியூர்ல இருந்து எடுத்துவந்த பைகள் இருந்ததால மூணு பேர் சீட்டுல உட்காரவேண்டியதாயிடுச்சு. என்ன ஆகப் போகுதோன்னு பயந்தேன். (காலை நாலு மணியிலேர்ந்து தூக்கம் இல்லை. மருத்துவமனை பகுதியில சரியான சாப்பாடும் இல்லை. வயிறை நிறைக்க நினைச்சு சாப்பாடு ஒத்துக்காம வயிறு காலியாக ஆரம்பிச்சுட்டா என்ன பண்றதுன்னு ஒரு குழப்பம். அதனால வயிறு காலி. டெஸ்ட் கிரிக்கெட்ல நாலு நாளா தொடர்ந்து பீல்டிங் பண்ணின மாதிரி ஆயிட்டேன்.

ஜன்னல் ஓரத்துல வாந்தி எடுக்க வசதியா(?!) நான் உட்கார்ந்துட்டேன். பக்கத்துல அம்மா. அடுத்ததா ஒரு இளம்பெண் (கல்லூரி மாணவியாத்தான் இருக்கும்.) ரெண்டு பெரிய பைகளோட வந்து உட்கார்ந்து புதுக்கோட்டைக்கு பயணச்சீட்டு வாங்கியதும் அப்பாடா...மூணு மணி நேரத்துக்கு கவலை இல்லைன்னு நிம்மதியாச்சு.

அந்தப் பொண்ணோட புண்ணியத்தால சீட் டைவர்ஷன் அப்படின்னு யாரும் அக்கப்போர் பண்ணலை. நானும் நிம்மதியா தூங்கினேங்க.(அம்மா பக்கத்துல இருக்கும்போது வேற என்ன பண்றது.)

அந்தப் பொண்ணு புதுக்கோட்டையில இறங்கினதும் சுப்பிரமணியபுரம் சுவாதி மாதிரியெல்லாம் திரும்பிப் பார்க்கலைங்க. (உன்னைய மூணு மணி நேரம் ஒரே இடத்துல உட்காரவிட்டதே பெரிசு. இதுல என்ன லுக்கு?)

நான் அடுத்த ஷெட்யூல் தூக்கத்தைக் கண்டினியூ பண்ண ஆரம்பிச்சேன்.

கல்லூரியில படிச்சப்ப முதல் சில வாரங்கள்தான் நான் மாணவிகள் யார்கிட்டயும் பேசலை. அப்புறம் சக மாணவிகள்கிட்ட பேச தயக்கமே இல்லைங்க. ஆனா பஸ்சுல பழக்கமில்லாத ஒரு பொண்ணு ஒரு ஆள் இடைவெளியில வந்து உட்கார்ந்ததும் நம்ம இதயத்துடிப்போட வேகம் கொஞ்சம் அதிகமாத்தான் இருந்துது. இந்த லட்சணத்துல  வெளிநாடு மாதிரி ஆணும் பெண்ணும் பக்கத்துல உட்கார்ந்து போற அளவுக்கு பக்குவப்பட நாளாகும்னுதான் தோணுது. (நன்கு பழகியவர்களையும் சில நகரங்களின் பழக்கத்தையும்  சொல்லவில்லை. அறிமுகம் இல்லாத ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் விஷயத்தில் எல்லாருடைய மனதிலும் ஒரு குறுகிய வட்டம் இருந்து கொண்டு தடை செய்வதைத் தவிர்க்க முடியாது.

அப்போ என்னை மாதிரி மயக்கம் வர்ற பார்ட்டிங்களுக்கு என்னதான் வழி?

ரெண்டு பேரா போனா, இடப்பக்க இருக்கையில யாரும் இடம் மாற சொல்ல மாட்டாங்க.

தனியா போனா?

வேற வழி...சீட் டைவர்ஷன்தான்.

புதன், 23 டிசம்பர், 2009

ரஜினி நடிச்சது குசேலன், கமல் வாழ்ந்தது ஆளவந்தான், விஜய் பறந்தது குருவி - இப்போ...ஒரு பிரமாண்டமான ஓப்பனிங்.



செல்போன் வாங்கின மூணு வருஷத்துக்குள்ள நாலு நம்பர் மாத்திட்டேன்.(ஏன்?...கடன் கொடுத்தவங்க தொல்லை தாங்கலையா...) ஆனா அந்த நம்பரை எல்லாம் எனக்குப் பழக்கப்பட்டவங்க கிட்ட கொடுக்குறதுல அக்கறை காட்டினது கிடையாது. ஆனா இளைய பாரதம் முகவரி மாற்றத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையான்னு என் மனசுலயே ஒரு கேள்வி உண்டு.

அதுக்காக ஒரு சிலர்கிட்ட ஆலோசனை கேட்கலாம்தான். நீங்களும் நல்ல வழியைத்தான் காட்டுவாங்க. ஆனா நம்மதான் ஒரு வேலையை பலூனை ஊதுற வேகத்துல தொடங்குனா அதை ஊசியால குத்தி உடைக்கிற வேகத்துல டமாராயிடுது...இது மாதிரி அனுபவங்கள் எனக்கு ரொம்பவே இருக்கு. அது தனி பதிவுல வரும்.

இளைய பாரதம் டெம்ப்ளேட்டுல ஃபாலோயர்ஸ் விட்ஜெட் சேர்க்க முடியாத காரணத்தால மறுபடியும் முதல்ல இருந்து புது URL முகவரியில என்னுடைய பதிவுகளைத் தொடங்க வேண்டிய நிலமை. இதுலயும் ஒரு நன்மைங்க. ஒவ்வொரு வருஷத்து பதிவையும் தனித்தனி வலைப்பூவுல வெச்சு பராமரிக்கிறதுனால எதாவது அக்கப்போர் பார்ட்டிங்க, (வேற யாரு...மால்வேர் புரோகிராம்கள்தான்) குறுக்க புகுந்து ஆட்டையைக் கலைச்சாலும் பெரிய பாதிப்பு இல்லாம தப்பிச்சுடலாம்.

உண்மைத்தமிழன் உட்பட சில பெரிய பிரபலங்களே இம்சை வில்லன்கள்கிட்ட சிக்கி தப்பிச்சுருக்காங்க. எனக்கு கணிப்பொறி பற்றிய தொழில்நுட்ப அறிவு பூஜ்யம். (உதாரணம்தானே...எனக்கு சமைக்கத் தெரியாது...நல்லா சாப்பிடத்தான் முடியும்னு சிலர் சொல்லுவாங்களே...அது மாதிரிதான்.) அப்புறம் எதாவது ஆயிட்டா வடை போச்சேன்னு புலம்பனும். இது தேவையா.

உன்னுடைய வலைப்பக்கத்துல வேற கெஜட் எதையும் சேர்க்கத் தெரியாதுன்னு சொல்லு... ஒத்துக்குறோம்... அதுக்காக மால்வேர் மேல எல்லாம் பழியைப் போடாதன்னு சொல்லாதீங்க.

இதுக்காக வடிவமைச்சிருக்குற பக்கத்துல ரஜினி, கமல், விஜய் எல்லாம் இருக்காங்க. ஓ.கே. கீழ ஏன் திருஷ்டி அப்படின்னுதானே கேட்குறீங்க. அதுக்கு காரணம் நம்ம நாஞ்சில் பிரதாப் சார்தான்.


நாம ஒரு படத்துல நடிச்சு, அந்தக் காட்சி எடிட்டிங்ல காணாமப் போகாம மக்களோட பார்வைக்கும் போயிருக்கு. அப்புறம் ஏன் நாம அந்த அனுபவங்களை எழுதக் கூடாது...எப்படின்னு மனசாட்சிகிட்ட இருந்து ஒரு குரல்.(அது அவலக்குரல் இல்லை)

ஜனவரி 1ந் தேதி புது URL முகவரியில இந்தப் பதிவை எழுதப் போறேன். அதுக்குதாங்க இந்த விளம்பரம்.

ச்சே...இப்படித்தானா போய் அசிங்கப்படுறது?...(எல்லாம் வேட்டைக்காரன் மேட்டருதான்...)


விஜய்க்கு முதன்முதலா மெகா ஹிட் படம்னா அது பூவே உனக்காகதான். ஆனா நான் அதுக்கு முன்னாலயே அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கேன். செந்தூரபாண்டி படத்தை கேபிள் டி.வி யில பார்த்ததுக்கு அப்புறமும் தியேட்டர்ல போய் ரசிச்சுருக்கேன்.(?!)

அப்புறம் ரசிகன்,தேவா - இந்தப் படங்களை எல்லாம் முதல் நாளே போய் பார்க்குறதுல ஒரு ஆர்வம். தியேட்டர் உரிமையாளர் குடும்பத்துடனே நட்பு என்பதால் அப்போதெல்லாம் சில சமயம் பணம் கொடுப்பேன். பல நேரங்களில் பெயரளவு கணக்குதான்.(காந்தி கணக்குன்னு சொல்லி அவரை அவமரியாதை செய்ய எனக்கு விருப்பம் இல்லை.)



ஆனா வரிசையில நின்னு அனுமதிச்சீட்டு வாங்கி, கவுண்டர் வழியா போனதே இல்லை. திரையரங்க உரிமையாளர், ஊழியர்கள் போற வழிதான். சின்ன வயசுல இதனால ஒரு சந்தோஷம் இருந்துச்சுங்க.


ஆனா கடந்த பத்து ஆண்டுகள்ல திரையரங்கத்துல போய் படம் பார்த்தது ரொம்பவே குறைவு. தியேட்டர்காரங்க படத்தை திரையிட பெரிய தொகை கொடுக்குறதால இலவசமா நம்மளை உள்ளே விட்டா கட்டுபடியாகாது. அவங்களை தர்மசங்கட நிலையில நிறுத்திடக்கூடாது.

சின்ன ஊர்லேயே சாதாரண நாட்கள்ல டிக்கட் ஐம்பது ரூபாய்னு சொல்லுவாங்க. இப்பவும் என்னால ஒரு நாளைக்கே ஐம்பது ரூபாய் சம்பாதிக்க முடியலை.அவ்வளவு பணம் கொடுத்து பார்க்குற அளவுக்கு படங்களும் வர்றது இல்லை. அப்புறம் ஏன் கடன் வாங்கி தலைவலியை பர்சேஸ் பண்ணணும்ன்னு என் மனசாட்சி ஒரு கேள்வி கேட்டுச்சு. அதனால அதிகமாவே அவாய்ட் பண்ணிட்டேன்.



இப்ப வேட்டைக்காரன் விஷயத்துக்கு வர்றேன். எங்க ஊர்ல உள்ள பத்திரிகை செய்தியாளர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு நண்பர்கள்தான். அதுல ஒருத்தர்கிட்ட இன்னைக்கு காலையில பேசிகிட்டு இருந்தேன்.

அவருதான் தமிழகத்தின் வட மாவட்டத்துல வேட்டைக்காரன் பார்க்கப் போன ஒரு ஆள் அசிங்கப்பட்டு காமெடி பீசானது பத்தி சொன்னார்.

அவரு எதோ ஒரு தொண்டு நிறுவன பொறுப்பாளரா இருக்காராம். அந்த பழக்கத்துல ஒரு தியேட்டர்ல இலவச அனுமதியிலதான் எப்பவுமே படம் பார்ப்பாராம். வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன அன்னைக்கும் அப்படியே போயிருக்காரு. போட்ட பதினஞ்சு லட்சம் பாயாசமாயிடுமோன்னு கவலையில இருந்த உரிமையாளர், இலவசமா உள்ளே நுழைய முயன்ற ஆள்கிட்ட,"யோவ்...நூறு ரூபா காசைக் கொடுத்துட்டு உள்ள போய்யா."ன்னுருக்கார். இப்படி சிக்கிடும்போது அவரைச் சுத்தி நின்னவங்க என்ன நினைச்சுருப்பாங்கன்னு யோசிச்சேன். நீங்க சொல்லுங்க...காமெடி பீசுன்னுதானே சொல்லுவாங்க?

ஒருத்தர் என்ன மனநிலையில இருப்பாங்கன்னு ரொம்ப சுலபமா கண்டுபிடிச்சுடலாங்க. நீங்க செய்யப்போற காரியத்தை அவரு செய்தா நாம என்ன மனநிலையில இருப்போம்னு யோசிச்சா போதும். அந்த காரியத்தை செய்யலாமா வேணாமான்னு நம்ம மனசாட்சி சொல்லிடும்.

அது பேச்சைக் கேட்டு நடந்தா நேரங்காலம் தெரியாம யார்கிட்டயாவது சிக்கி மொக்கையாகுறதுலேர்ந்து தப்பிச்சுடலாம். ஒரு திரையரங்கத்துல எனக்கு இலவச பாஸ் எழுதியே கொடுத்திருந்தாங்க. அதை வெச்சு 1999ம் ஆண்டு ஐந்து அல்லது ஆறு படங்கள் பார்த்திருப்பேன். பிறகு அதை நான் பயன்படுத்தியதே இல்லை. இது வேண்டாமேன்னு மனசுதான் சொல்லுச்சு. அதனால அடுத்தவங்க சொல்லி மொக்கையாக்க வேலையில்லை.

மற்றவங்க அனுபவத்துல இருந்தும் பாடம் கத்துகிட்டா ரொம்ப நல்லது. ஏன்னா, நம்ம அனுபவத்துல இருந்து பாடம் கத்துக்கணும்னா எத்தனை பிறவி எடுத்தாலும் வாய்ப்பே இல்லைன்னு ஒரு பழமொழி இருக்கு. நான் அதன்படி நடக்குற ஆள்.

அப்ப நீ எதுலயுமே சிக்கலையான்னுதானே கேட்குறீங்க...இதைவிட பெரிய மொக்கையாகியிருக்கேங்க. அந்த அனுபவத்தை அடுத்த வருஷம் எழுதுறேன்.

உங்கள் சிந்தனைக்கு ஒரு சின்ன உதாரணம். கல்லூரியில படிக்கும்போது (ஆஹா...ஆரம்பிச்சுட்டான்யா...ஆரம்பிச்சுட்டான்யா...) ஐந்தாவது செமஸ்டர்ல ஒரு குறிப்பிட்ட அக்கவுண்ட் பேப்பர்ல ஒரு சில மாணவிகள் நூற்றுக்கு நூறு எடுத்திருந்தாங்க. நிறைய பேர் எண்பது, தொண்ணூறுன்னு எல்லாம் எடுத்திருந்தாங்க. ஆனா நான்

ஐம்பத்தொன்னுதான் எடுத்தேன். (கல்யாண மண்டபத்துல மொய் எழுதுன பேனாவால பரிட்சை எழுதுனியா)

ஆனா ஷேர் மார்க்கெட் தொடர்பான பாடத்துல எல்லாரும் ரொம்பவே திணறுனாங்க.

நான், எண்பத்தி ரெண்டு மார்க் எடுத்தேன். (என் வழி தனி வழி...குறைவான மார்க் எடுத்தாலும்  தனியா...அதிகமா மார்க் எடுத்து பேராசிரியர்கள் கிட்ட பாராட்டும், சக மாணவர்கள், மாணவிகள்கிட்ட வயிற்றெரிச்சல் வாங்கினாலும் தனியாதான்.)

அதெல்லாம் சரி...வேட்டைக்காரன் பார்த்தியா இல்லையான்னுதானே கேட்டீங்க...நான் சிக்க மாட்டேனே...

செவ்வாய், 22 டிசம்பர், 2009

சாரி அங்கிள்...அய்யய்யோ...வயசாகிப்போச்சா? (இது ஒரு மழைக்காலம்)

போனவாரத்துல யாராவது புயல் மையம் கொண்டிருக்குன்னு சொன்னா எங்க உங்க வீட்டு வாட்டர் டேங்க்லயான்னு நக்கலா கேட்டேன். திருவாரூர்ல அப்போ விடாம மழை பெய்தாலும் காத்து இல்லீங்க...ஒரு வழியா வார்டு எபிசோடு முடிஞ்சுது.

இப்ப ரெண்டு நாளைக்கு மழைதான் இருக்குன்னு சொன்னாங்க. ஆனா இன்னைக்கு மதியம் நம்மளையே தூக்கிட்டுப் போய் செல்போன் டவர் உச்சியில மாட்டி வெச்சுடுற அளவுக்கு காத்து அடிச்சுதுங்க. நான் கொஞ்சம் எடை குறைவுதான். பர்ஸ், செல்போன் மாதிரியான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எதையும் சேர்க்காம 65 கிலோ மட்டுமே.

என்னையே அவ்வளவு உயரத்துக்கு லிப்ட் உதவி இல்லாம தூக்குற வேகத்துக்கு காத்து அடிச்சுது. இதுல டயட் கண்ட்ரோல்ல இருக்குறதா சொல்லிட்டு ஒரு வேளைக்கு ஒண்ணேமுக்கால் இட்லி மட்டுமே தின்னுட்டு முப்பது கிலோ மட்டுமே(தூக்கில்லாம் பார்க்கலைங்கோ.) இருக்குறவங்க நிலமை என்ன ஆகும்னு ஒரே கவலையாப் போச்சுங்க.(உன்னை மாதிரி யூத்து எல்லாம் இப்படி கவலைப்பட்டா நாடு எந்த காலத்துலப்பா வல்லரசாகுறது.)

ஆனா அடிக்கிற காத்துக்கு அஞ்சாம கோயிலுக்கு போறதுன்னு கிளம்பிட்டேன். 2009 மார்ச் மாசம் நாலாவது செவ்வாய்க்கிழமையில இருந்து அம்மாவோட விருப்பத்துக்காக ஒரு காளி கோயிலுக்குப் போறதை வழக்கமா
வெச்சிருக்கேன்.

மதியம் 3.00 மணியிலேர்ந்து 4.30 மணிவரை ராகுகாலத்துல சிறப்பு பூஜை நடக்கும். பானகம், ஏலக்காய் - சர்க்கரை போட்டு நைவேத்யம் செய்த பால்,(ரெண்டு ஸ்பூன்தாங்க) வெண்பொங்கல் அல்லது புளிசாதம் இதுல ரெண்டு உறுதியா கிடைக்கும்.

ஆனா அதுக்காக போகலைங்க.(எப்படியும் நம்பப்போறது இல்லை)

38 வாரம் இந்த நேரத்துல தொடர்ந்து கோயிலுக்குப் போனது நமக்குத் தேவையில்லை. நான் இந்தப் பதிவை எழுதக் காரணம் - இன்னைக்கு நான் கோயிலுக்குப் போய் வந்தபோது ஒரு எதிர்பாராத தாக்குதல்ல சிக்கிட்டேங்க.

மதியம் மூணு மணிக்குதான் பூஜைக்குரிய பொருட்களை எல்லாம் வாங்கிட்டு சைக்கிள்ல கிளம்பினேன்.(வண்டி வாங்குற அளவுக்கு வசதி இல்லைங்க.) அந்த நேரத்துல மழை ரொம்ப அதிகமா பெய்ததால பாதை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுது.(ஆத்துல தண்ணி இல்லைன்னுதானே வருத்தப்படுறீங்க...இப்ப ரோட்டுலயே ஓடுறேன் பாருன்னு மழையோட குரல்.)

ரோட்டோட இந்த நிலமையைப் பார்த்ததும் பேசாம தனிப்படை அமைச்சு அவங்க துணையோட கோயிலுக்கு கிளம்பியிருக்கலா............மோன்னு மனசுக்குள்ள ஒரு சிந்தனை.(இது உனக்கே அதிகமா தெரியலை...)

நீங்க தப்பா நினைச்சுடாதீங்கப்பா. திருவாரூர்ல புதை சாக்கடை அமைக்கும் வேலை துவங்கி ரெண்டு வருஷம் ஒரு மாதம் ஆகிடுச்சு. எப்ப பணிகள் பூர்த்தி ஆகும்னுதான் தெரியலை. (வேலையின் மதிப்பு, பணி முடியும் காலம் இதெல்லாம் அறிவிப்பு பலகையில எழுதி வெச்சுருப்பாங்களேன்னுதானே கேட்குறீங்க?...அதுல போட்டுருக்குற காலக்கெடு முடிஞ்சு ஏழு மாசமாகுது. வேலை முடிஞ்சுருக்குற நிலவரப்படி பார்த்தா இன்னும் எத்தனை வருஷம் ஆகும்னு தெரியலை.

அதுக்கும் நீ கோயிலுக்குப் போறதுக்கும் என்னய்யா சம்மந்தம்....

இருக்கே...சம்மந்தம் இருக்கே...

நிறைய வீதிகள்ல குழாய் பதிச்சுட்டு அரைகுறையா மூடிட்டுப் போயிட்டாங்க.(சில நடிகைங்களுக்குப் போட்டி?) அதுல மழை தண்ணி வேற நிறைய ஓடுறதால ரோடு எங்க...குழி எங்கன்னு கண்டுபிடிக்கவே தனிப்படைதான் தேவைப்படும்னு தோணுச்சு.

அப்புறம் ஒரு வழியா நகர எல்லையைத் தாண்டினதுக்கப்புறம் குழித்தொல்லை இல்லை. ஆனா மயிலாடுதுறை செல்லும் பாதையில் மூணு கிலோ மீட்டர் தூரம் போறப்ப வேற ஒரு பிரச்சனை. அதிகமாவே திறந்தவெளி ஏரியாவா இருந்ததால குடையைக் காப்பாத்துறதுக்கு ரொம்பவே போராட வேண்டியதாயிடுச்சு.

திடீர்னு லாரி, பஸ் கிராஸ் ஆகிப் போகும்போது குடை கையை விட்டு ஏழெட்டு கிலோமீட்டர் தூரம் போயிடுமோன்னு ஒரு பயம் விலகவே இல்லைங்க.

இதெல்லாம் எனக்கு சிரமமா தெரியலை. வழிபாட்டை முடிச்சுட்டு திரும்பவும்
ஊருக்குள்ள வரும்போது மறுபடி அதே குழி, அதே ரோடு...அதே பயணம்.

சாலையின் குறுக்கே மிருகங்கள் போகும்போது நாம அதோட பின்பக்கமா விலகிப் போகணும்னு விதி இருக்கு. ஏன்னா அதுங்களுக்கு ரிவர்ஸ் கியர்னா என்னன்னே தெரியாது. இந்த விஷயம் நமக்குத் தெரியும் அதனால பிரச்சனை இல்லை.

ஆனா மனுஷன் பூனையை விட மோசம்னு நினைக்கிறேன். ஏன்னு கேட்குறீங்கிளா?

தேரோடும் வீதியைக் கடந்து ஒரு தெருவுக்குள்ள ரோட்டைக் கண்டுபிடிச்சு குடையையும் காப்பாத்தி வீட்டுக்குப் போய்கிட்டு இருக்கேன்.

மூணு பள்ளி மாணவிகள் ஒரு ஓரமாத்தான் போய்கிட்டு இருந்தாங்க. அவங்களும் குழிகளுக்கு நடுவுல இருந்த ரோட்டைக் கண்டுபிடிச்சுட்டாங்க போலிருக்கு. திடீர்னு சைக்கிளுக்கு குறுக்க வந்துட்டாங்க. ஒரு கையில குடை இருந்ததால பெல் அடிக்க முடியாத நிலை. "ஏய்..."அப்படின்னு கத்திட்டேன்.

சட்டுன்னு மூணு மாணவிகளும் ஓரமா விலகிட்டாங்க. அதுல ஒரு மாணவி சொன்ன வார்த்தைகளை சுத்தமா எதிர்பார்க்கலைங்க.

காலேஜ் முடிச்சு ஆறரை வருஷம்தான் ஆகுது... அதுக்குள்ள இப்படி ஒரு மரியாதை கிடைச்சது பெரிய அதிர்ச்சிதான்.

அப்படி என்னதான் சொன்னுச்சுன்னுதானே கேட்டீங்க? பதினோராம் வகுப்பு இல்லைன்னா பனிரெண்டாம் வகுப்பு படிக்கிற அந்த மாணவி என்னைப் பார்த்து "சாரி அங்கிள்" அப்படின்னு சொல்றதை தாங்கிக்கவே முடியலங்க.

வயசு ஏறிகிட்டு இருக்கு...கல்யாணம் பண்ணுடான்னு அம்மா சொன்னப்ப காதுல விழலை. இப்படி யாராச்சும் பேச்சுலேயே வெடி வெச்சாதான் நாம முழிச்சுக்குவோமோ?

தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்.தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்.

இதை நாம கண்ணை மூடிகிட்டு நம்ப வேண்டாங்க. ஏன் அப்படின்னு   விளக்கம் சொல்றதுக்கு முன்னால ஒரு சிறிய நகரத்துல நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துக்குறேன்.
எங்க குடும்ப நண்பர் ஒருத்தர் வேலை பார்த்த இடம் ஒரு பெரிய தனியார் நிறுவனம்.சில ஆண்டுகளுக்கு முன்னால வேற ஊருக்கு மாற்றலாகி குடும்பத்தோட போயிட்டார். அதே ஊரிலேயே அவர் பொண்ணையும் திருமணம் செய்து கொடுத்தார்.

மாப்பிள்ளை - செல்போன் ரீசார்ஜ், உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். அக்கம் பக்கத்துல உள்ளவங்க ஆசை வார்த்தையால வாடகை சைக்கிள் கம்பெனியும் நடத்தி வந்தார். செல்போன் தொடர்பான வியாபாரத்துல அவர் ரொம்பவே திறமைசாலிதான். ஆனால் சைக்கிள் விஷயத்தில் பூஜ்யம் என்பதால் ஒரு ஆளுக்கு நிறைய சம்பளம் கொடுத்து அந்தக் கடையை நடத்தி வந்தார். ஆனால் அதில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் சைக்கிள் கடையை மூடிவிட்டார்.

அது ஏற்படுத்திய பொருளாதார இழப்பினால் பிறகு செல்போன் கடையும் தள்ளாடியது. சைக்கிள் கடையால் பல மாதங்கள் நஷ்டம் வந்திருந்தாலும் நண்பரின் பெண் திருமணமாகிப் போன நேரம்தான் ஒரு கடையை இழுத்து மூடவேண்டியுள்ளது என்று சுற்றத்தார் பேசியிருக்கிறார்கள். இதனால் இரண்டு குடும்பங்களிலும் நிம்மதி இல்லை.

ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது உண்மைதான். (உதவியாக இருந்தாலும் சரி, தொந்தரவு கொடுக்காமல் இருந்தாலும் சரி...இரண்டையுமே வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.)

ஆனால் முற்றிலும் தெரியாத தொழிலில் ஈடுபட்டுவிட்டு அதில் நஷ்டம்

ஏற்பட்டால் உடனே மனைவி வந்த நேரம்தான், குழந்தை பிறந்த நேரம்தான்னு சொல்லி தப்பிக்கிறவங்களை என்ன செய்யுறது?

தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்.தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான். - இந்தப் பழமொழி குறித்த என்னுடைய கருத்தை சொல்றேன்.

இந்தப் பழமொழிக்கு முக்கிய காரணங்களா சோம்பேறித்தனமும், ஆர்வமின்மையும்தான் இருக்கணும். ஏன்னா, செய்யுற தொழிலை விடுறவன் சோம்பேறியா இருக்கலாம். ஆர்வம் இல்லாதவன்தான் தெரியாத தொழிலை அதனுடைய போக்குலேயே விட்டு நஷ்டப்படுவான்.

பேராசை மற்றொரு காரணமா இருக்கும். நீங்க யோசிச்சுப் பார்க்கும்போதும் ஒரு தொழில் வீழ்ச்சி அடைய பல காரணங்கள் இருக்குறதா தெரியலாம். ஆனா அதுக்கெல்லாம் அடிப்படையா மேலே சொல்லியிருக்குற மூணு காரணங்கள்தான் அதிகமா இருக்கும்.

இது 2008 ஜனவரியில் ஒரு பத்திரிகையில் பிரசுரமான என்னுடைய படைப்பு.

திங்கள், 21 டிசம்பர், 2009

மறுபடியும் முதல்லேருந்தா...இளைய பாரதம் URL முகவரி மாறுகிறது.


சில சமயம் நாம் செய்யக்கூடாதுன்னு நினைக்குற விஷயத்தைதான் கட்டாயமா செய்ய வேண்டியிருக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு அந்த அனுபவம் பலதடவை ஏற்பட்டிருக்கு. இப்பவும் அப்படித்தான்.

இதுவரை ஆங்கிலப் புத்தாண்டுக்கு பெரிசா அலட்டிக்காமதான் இருப்பேன். ஆனா 2010க்கு இளைய பாரதம் வலைப்பதிவுல மாற்றம் செய்ய வேண்டிய சூழ் நிலை வந்துடுச்சு.

என்னுடைய வலைப்பதிவில் பின்தொடருபவர்கள் கெஜட்டை சேர்க்குற ஆப்ஷன் வேலை செய்யலை. நானும் மனம் தளராம பின்னூட்டம் இட்ட நண்பர்கள்கிட்ட உதவி கேட்டேன். பூங்குன்றன், நாஞ்சில் பிரதாப், angel இவங்க எல்லாம் சரியான வழிதான் சொல்லியிருந்தாங்க. ஆனா எதுவும் ஒர்க் அவுட் ஆகலை.

டாஷ்போர்டை ஆங்கிலத்துல வெச்சு இந்த ஆப்ஷனை சேர்க்கலாம்னு angel , நாஞ்சில் எக்ஸ்பிரஸ் தளத்துல பின்னூட்டம் போட்டிருந்தாங்க. அந்த  முயற்சியை நான் தொடக்கத்துலேயே செய்து பார்த்துட்டேன்.

கடைசியா என்னுடைய மூளையை கசக்கிப் பிழிஞ்சு (துணியையே துவைக்கிறது இல்லை...இவருதான் மூளையை கசக்குறாராம்...அப்படின்னு ஒருத்தர் முனங்குறது காதுல விழுதுங்க.) உண்மையை கண்டுபிடிச்சுட்டேன்.

ஆங்கில ஃபார்மெட்டுலேயே புது தளத்தை உருவாக்குறதுதான் சரியான வழின்னு புரிஞ்சு போச்சு. writer-saran இந்த முகவரியை இழக்கணுமேன்னு வருத்தம்தான். அப்புறம்தான் இது என்ன படிச்சு வாங்குன பட்டமா...அது கிடக்குது...அப்படின்னு வேற முகவரிக்கு முயற்சி பண்ணினேன். http://ilaiyabharatham.blogspot.com கிடைச்சுடுச்சுங்க. இந்த தளத்துல எல்லா பதிவையும் சேர்த்துட்டேன்.

ஆனா, பழைய இம்சைஅரசன் 23ம் புலிகேசியில தங்கச்சுரங்கத்துல வடிவேலு மாட்டிக்கொள்வார். வடிவேலு இடத்தில் வேறு ஆள் மன்னராக இருப்பது பற்றி காவலர்கள் ஒவ்வொரு செய்தியைப் பேசும்போதும்  ஒரிஜினல் அரசனான அவர், அதிர்ச்சி அடைவார்.


அதே போல் நீங்களும் இளையபாரதத்தை தேடி அது இல்லாமல் அதிர்ச்சி அடையக்கூடாதுன்னு ஒரே காரணத்துக்காக 2009ம் ஆண்டு பதிவு எல்லாத்தையும் இதுலயே விட்டு வெச்சுடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.(ஆளில்லா கடையில டீ ஆத்திகிட்டு பேசுற பேச்சைப் கேளுன்னுதானே சொல்ல வர்றீங்க?)

2010 தொடக்கம் முதல் புதிய பதிவுகளை மட்டும் http://ilaiyabharatham.blogspot.com இதுல வெச்சுகிட்டு ரெண்டு வீட்டையும் ச்ச...ரெண்டு தளத்துலயும் பயணம் பண்ணலாம்னு ஒரு யோசனை.

இவன் பின்னால எல்லாம் போக வேண்டியிருக்கேன்னு அலுத்துக்காம புது தளத்துக்குப் போய் வரிசையில சேர்ந்துக்குங்க. அங்க போனதும் நானே முதல் ஆளா அங்க சேர்ந்து இருக்குறதைப் பார்த்து பயப்படக்கூடாது. என்னைய நானே மதிக்கலைன்னா வேற யார்கிட்ட இருந்து அந்த மரியாதையை எதிர்பார்க்க முடியும்?

பின்தொடருதல்  தொடர்பான ஆலோசனை வழங்கிய பதிவுலக நண்பர்களுக்கு நன்றி.

என்னது?...மூணு மணி நேரத்துல அறுபதாயிரமா...



நிறைய பெண்கள் கொடூரமான நெடுந்தொடர்களால குடும்பத்துல நிம்மதியை இழந்து தவிக்கிறாங்க. இது தெரிஞ்சும் அந்த போதையை விட முடியாம பலர் அவதிப்படுறதை யாரும் மறுக்க முடியாது.

அது எப்படி தொலைக்காட்சி பார்க்காம இருக்க முடியும்? எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு இந்த தொடர்கள்தானே.அப்படின்னு சில பெண்கள் சொல்லுவாங்க. இவ்வளவு தொடர்களைப் பார்த்தா என்ன ஆகும்...அவங்களை அறியாமலே ஆழ்மனசுல ஒரு அச்சத்தை விதைச்சுடும். இது புரியாம குடும்ப உறுப்பினர்கள் கிட்ட வார்த்தை வன்முறையைப் பயன்படுத்தி தனித்தீவாகிடுவாங்க.

நிறைய குடும்பங்கள்ல என்ன பிரச்சனை தெரியுமா? இன்றைய பெண்களுக்கு அன்றாட குடும்ப வேலைகளே மிகப் பெரிய பணிச்சுமையா தெரியுது. உண்மையில் அவ்வளவு வேலை இல்லை.

பின்ன ஏன் அந்த உணர்வு?

வேலைக்குப் போகும் பெண்களுக்கு மற்றவங்க சின்ன சின்ன வேலைகளைக் கூட செய்யாம இருக்குறாங்களேன்னு ஆத்திரம் வரும். வீட்டுலேயே இருக்குறவங்களுக்கு பகல் நேரத்துல மட்டும் குறைந்தது ஐந்து தொடர்களைப் பார்க்க முடியாத நிலை வரும்போது கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு கோபம் வரும்.

போதைப் பழக்கத்துக்கு அடிமையானவங்க அது கிடைக்கலைன்னா எப்படி வெறிபிடிச்சு அலையுவாங்களோ...அதுக்கு கொஞ்சமும் கொடுந்தொடர் போதை குறைஞ்சது இல்லை.

என்ன...இவங்க கோபம் குடும்பத்துக்குள்ள கொஞ்சமும் நியாயமே இல்லாத வழியிலதான் வெடிக்கும். அதை எதிர்கொள்ளும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு இவ என்ன இந்த அநியாயம் பண்றா...அப்படின்னு புரியாமயே விரோதத்தை அதிகமாக்கிடுவாங்க.

இதன் ஒரு பகுதிதான் தன் பிறந்த வீட்டு சொந்தம் தவிர கணவரோட அப்பா அம்மாவுக்கு கூட எதுவும் செய்யக்கூடாதுன்னுங்குற பிடிவாதம்.

அப்ப வீட்டுக்குள்ள இருக்குற அந்தப் பொட்டியை என்னதான் செய்யுறது? அதனால நல்லதே இல்லையா? அப்படின்னு நீங்க கேட்குறது புரியுது.

இந்த கிரீமைப் பூசிகிட்டா நீங்க சிரிச்சுகிட்டே போய் அந்தக் கிணத்துல விழுந்து சாவீங்க. ஆனா உலகம் முழுவதும் பிரபலமாயிடுவீங்கன்னு சொன்னா நாம செய்வோமா?

நிச்சயம் மாட்டோம். ஆனா பல விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் சில விஷயங்களை - நமக்கு தீமை தரக்கூடியதுன்னு தெரிஞ்சும் விட முடியாத அளவுக்கு நம்ம மனசை கட்டிப்போட்டு வைக்கிற வேலைகளை செய்துகிட்டு இருக்கு.

நேரடியா எந்த பாதிப்பும் இல்லை. அதாவது நான் உங்க குடும்பத்துக்குள்ள வந்து நெரடியா சண்டை போட்டா அது குற்றம். அப்படி பண்ணாம நான் உங்க மனசை என்னவோ பண்ணி நீங்களே உங்க குடும்பத்துக்குள்ள அடிச்சுக்குங்கன்னு விட்டுட்டா...அதுக்குப் பேர் என்ன?...

என்ன?...

இதுதாங்க எனக்கும் புரியலை.

இப்ப விஷயத்துக்கு வர்றேன்...(அடப்பாவி அப்ப இது வரைக்கும் வெட்டியாத்தான் பேசிகிட்டு இருந்தியா?)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு உதாரணம் சொல்லணும்னா வாகனத்தை ஒப்பிடலாங்க.

வண்டியில ஆளையும் ஏத்தலாம்...ஆள் மேல வண்டியையும் ஏத்தலாம்.(எப்படி நம்ம பஞ்ச் டயலாக்கு?...

இது புரிஞ்சா நீங்க சூப்பரு...புரியலைன்னா...எப்படியாச்சும் போங்க.

சாக்லெட் படத்து ஸ்டில் இருக்கு. அந்த மேட்டருக்கு இன்னும் வரலியேன்னு நீங்க எல்லாம் பொறுமை இழக்குறது தெரியுது. வர்றேன்...வர்றேன்...


16 - 31 டிசம்பர் 2009ந் தேதியிட்ட தேவதை மாதமிருமுறை இதழ்ல (ஆங்...நம்ம ராமலக்ஷ்மி அக்காவோட வலைப்பக்கம், ரம்யா அக்காவோட தன்னம்பிக்கை பத்தி எழுதியிருந்தாங்களே...அதேதான்.) ஒரு சகோதரி, மூணுமணி நேர வேலையில 60,000.00 ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது பத்தி சொல்லியிருந்தாங்க.

ஒரு கிலோ சாக்லெட் தயாரிச்சு விற்பனை செய்தா 200 ரூபா லாபம் கிடைக்குதுன்னு சொன்னதோட மூலப்பொருள் எங்க வாங்கலாம், செய்முறை என்ன அப்படின்னு எல்லாம் ஓரளவு விபரம் இருக்கு. சாக்லெட் கலர்லேயே மூணு பக்கம் இந்தக் கட்டுரை வந்திருக்கு.

அறுபதாயிரம் ரூபாய் வருமானம்னுங்குறதை விட இன்னொரு விஷயம்தான் இந்தக் கட்டுரையை எழுத தூண்டுகோலா இருந்துச்சு.

அவங்க சாக்லெட் செய்ய ஆரம்பிச்சது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துதானாம்.

தொலைக்காட்சித் தொடர்களால் குடும்பத்தையே பாதாளத்துக்கு கொண்டு செல்லும் பெண்கள் சிகரம் நோக்கி முன்னேறும் இந்த சகோதரியையும் கவனிப்பது நல்லது.

ஊதுற விசிலை ஊதிட்டேன். இனிமே உங்க விருப்பம்.

நன்றி: தேவதை 16-31 டிசம்பர் 2009 இதழ்