Search This Blog

தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 அக்டோபர், 2013

திருவாரூரில் சினிமா இரசனை மற்றும் திறனாய்வு பயிலரங்கு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில் அமைந்துள்ளது. இங்கு சினிமா இரசனை மற்றும் திறனாய்வு குறித்த இரண்டு நாள் பயிலரங்கு நடைபெற உள்ளது என மத்திய பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி.

தமிழ்நாடு மத்திய பல்கலை கழகத்தில் சினிமா இரசனை மற்றும் திறனாய்வு குறித்த இரண்டு நாள் பயிலரங்கு வரும் நவம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற உள்ளது. எல்.வி.பிரசாத் அகடமி இயக்குனர்  ஹரிஹரன் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளார். சினிமா மீது ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் பங்கு பெற்று பயன்பெறலாம்.

ஒரு கல்லூரியில் இருந்து அதிக பட்சமாக 5 நபர்கள் பங்கு பெறலாம் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய கடைசி நாள் அக்டோபர் 30. மேலும் இது குறித்து தகவல் தெரிந்து கொள்ள மற்றும் உங்கள் பெயர்களை பதிவு செய்ய ஆதி இராமானுஜம் துணைபேராசிரியரை 9176643777 என்ற தொலைபேசி எண்ணிலும் athiramanujam@cutn.ac.in  என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருவாரூர் திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் காட்சித்தொடர்பியல் துறை (Visual Communication) சுய நிதிப்பிரிவாக இயங்கிவருகிறது. அந்த மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். பெரிய நகரங்களில் படிப்பவர்களுக்கு, வசிப்பவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் அடிக்கடி கிடைக்கலாம். இந்த ரெண்டு நாள் கருத்தரங்கில் உலகத்தையே புரட்டிப்போடுற மாதிரி படம் எப்படி இருக்கணும்னு புரிஞ்சுடப்போகுதான்னு சிலர் நினைக்கலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரை அவனளவில் பெரிய சாதனைகளுக்கு அடித்தளம் என்பதற்கு யாராவது சொன்ன நல்ல வார்த்தைகளாகவோ, யாராவது அவமானப்படுத்திய சம்பவமாகவோ அல்ல்து எதாவது புத்தகம் படிக்கும்போது சட்டென்று ஸ்பார்க் ஆக வைத்த இரண்டு வரிகளாகவோ, ஒரு மணி நேரம் நம்முடன் பயணம் செய்த நபர் சொன்ன வார்த்தைகளாகவோ இருக்கலாம்.

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை அவ்வப்போது பல துறைகளிலும் எதாவது கருத்தரங்கங்கள், வகுப்புகள் என்று நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை எந்த அளவு மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இது போன்ற நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள் சமீப காலமாகத்தான் வெளியில் தெரிகின்றன.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் இணையதளம்

பிரசாத் அகாடமி


 Image Credit : PrasadAcademy.com

******************************************************
டொமை நேம் ரிஜிஸ்ரேஷனுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி.
(இப்போது சொல்லப்போகும் தகவல்கள் பலரும் அறிந்த ஒன்றுதான்)

mullaicomputers.com என்ற வார்த்தைகளை கூப்பனாக பயன்படுத்தினால் Big Rock.in இல் டொமைன் நேம் ரெஜிஸ்ட்ரேஷனுக்கு, புதுப்பித்தலுக்கு போன்றவற்றுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. யுஆர் எல் முகவரி - http://www.bigrock.in/

வலைப்பூ எழுதும் பலரும் தற்போது சொந்த டொமைன் வைத்திருக்கிறார்கள். நானும் கூகிள் மூலம் நேரடியாக அதே போல் டாட்.காம் வாங்க முயற்சித்தேன். கிரடிட் கார்டு இருந்தால் மட்டும் வாங்க முடியும் என்ற நிலை இருந்ததால் விட்டுவிட்டேன். பிறகு பிக்ராக் மூலம் பெயரை ரெஜிஸ்டர் செய்துவிட்டேன். ஆனால் ப்ளாக்கை எப்படி Hosting செய்வது என்று தெரியாமல் ஆறு மாதங்கள் writersaran.com ஐ பயன்படுத்தாமலேயே வைத்திருந்தேன். பிறகு கற்போம்.காம் தளத்தில் பிரபுகிருஷ்ணாவுக்கு மெயில் அனுப்பி கேட்டதில் அவர் வழிமுறைகளை தெரிவித்து பதில் அனுப்பினார். கூகிளிலில் தேடினாலும் தெளிவான விளக்கங்களுடன் நிறைய கட்டுரைகள் கிடைக்கும். (எனக்குதான் ஆங்கிலம் தகராறு)

எவ்வளவோ எஸ்டென்ஷனுடன் டொமைன் நேம் இருந்தாலும் இப்போதும் பலருடைய முதல் சாய்சாக இருப்பது .com தான். அது நான் வாங்கும்போது 500 ரூபாயாக இருந்தது. அடுத்து ஒரு ஆண்டு புதுப்பிக்கும்போது 599 என்று நினைக்கிறேன். இப்போது 659 ரூபாயாகிவிட்டது. (எல்லாம் டாலர் மதிப்பு செய்யும் மாயம்)

தீபாவளி ஆஃபர் இருப்பதால் கொஞ்சம் விலை குறைவாக வாங்க நினைப்பவர்கள் இப்போது முயற்சிக்கலாம்.

mullaicomputers.com என்ற கூப்பனை பயன்படுத்தினால் கூடுதலாக கொஞ்சம் டிஸ்கவுண்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் ரெஜிஸ்டர் செய்த பிறகு உங்கள் டொமைன் நேமும் கூப்பனாக பயன்படும். அதை வைத்து பலர் டொமைன் வாங்கும்போது உங்களுக்கும் சில ஆபர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. பண பலன் நேரடியாக கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு வேறு சில ஆப்ஷன்ஸ் இருக்கிறது. அவற்றை http://www.bigrock.in/  தளத்திற்கு போனால் அறிந்துகொள்ளலாம்.

சனி, 25 மே, 2013

பழைய வீட்டை இடிக்காதது நல்லது!


திருவாரூர் நகர்பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு தகவல். ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் இதே பதிவில் இருக்கும் அடுத்த செய்திக்கு போய்விடலாம். திருவாரூர் நகரின் மையப்பகுதியில் உள்ளது பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயம். இந்த ஆலயத்தின் கும்பாபிசேகம் வரும் 14-07-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. மீதமிருக்கும் வேலைகளில் பெயிண்டிங் வேலைகள் மட்டுமே பெரிய அளவில் பக்தர்களின் பங்களிப்பு தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.

பெயிண்டிங் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை என்ற பட்டியல் எஸ்.பி.கண்ணா என்ற ஓவியரிடம் இருந்து பெறப்பட்டு இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. விருப்பமிருப்பவர்கள் (எங்கிருந்தாலும்) தொடர்புகொள்ளுங்கள். அனைவரும் கும்பாபிசேகத்துக்கு வருகை தந்து தரிசனம் செய்ய அன்புடன் அழைக்கிறோம்.

---------------
பழைய வீட்டை இடிக்காமல் அப்படியே நகர்த்தி புதிய இடத்தில் பொருத்தும் தொழில்நுட்பம் தமிழகத்திற்கும் வந்துவிட்டது என்பது குறித்த கட்டுரை 30.05.2013 புதிய தலைமுறை இதழில் பிரசுரமாகியுள்ளது. அந்த கட்டுரையின் இறுதியில் சாலைவிரிவாக்கத்திற்காக லட்சக்கணக்கான வீடுகள் இடிக்கப்படுகின்றன. இந்த நகர்த்தும் முறையை பரிசீலித்தால் மக்களுக்கும் பிரச்சனையில்லை. அரசுக்கும் சங்கடமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றுடன் இன்னும் கூடுதலாக சில வரிகளை சேர்த்துக்கொள்ளலாம். இடிப்பதற்கு அவசியமில்லாத வகையில் வலுவாக இருக்கும் கட்டிடங்களை கூடுதலாக பல ஆண்டுகள் பயன்படுத்த முடியுமானால் மணல், ஜல்லி, மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களும், சிமெண்ட் போன்ற செயற்கை வளங்களும் கூடுதலாக வீணாவதை தடுக்க முடியும். அது சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.