Search This Blog

கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 டிசம்பர், 2009

வெள்ளி குங்குமச்சிமிழுடன் அழைப்பு (கவிதைக்கு முன்னுரை)


கவிதையை படிக்க படத்தைக் க்ளிக்கவும்.

2002ம் ஆண்டின் பிற்பகுதி. என் கல்லூரி வாழ்வில் மூன்றாம் ஆண்டு. மாணவர்களின் படைப்பாற்றலுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் கல்லூரியின் ஆண்டு மலரின் ஆசிரியர் குழுவில் நானும் உண்டு. படைப்புக்களை பரிசீலனை செய்யும் பணியில் நானும் என்னை தொடக்கம் முதலே ஊக்கப் படுத்தி வரும் பேராசிரியரும் ஈடுபட்டிருந்தோம்.

குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் அதனைத் தொடர்ந்த கலவரமும் மக்களை ஆழமாகவே காயப்படுத்திய வருடம் என்பதால் அதன் வலியை உணர்த்தும் விதமாக ஒரு படைப்பு இடம் பெற வேண்டும் என்று நினைத்தோம்.

வெறியாட்டம் போட்ட வன்முறையாளர் ஒருவரிடம் சிக்கிய நபர் கதிகலங்கிப் போய் கைகூப்பி உயிர்ப்பிச்சை கேட்ட காட்சி ஒரு பிரபல பத்திரிகையில் வெளிவந்திருந்தது.

அதைப் பார்த்து ஒருவர் (மாணவனா மாணவியா என்பது நினைவில்லை) எழுதியிருந்த கவிதை கொஞ்சமும் திருப்தியாக இல்லை. அதனால் ஆண்டு மலரின் துணையாசிரியர் என்னையே கவிதை எழுத சொல்லி விட்டார்.

இப்போதும் பல பத்திரிகைகளில் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.

சார்...கதை, கட்டுரைன்னா எழுதிடுவேன்...கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்...அப்படின்னு சொன்னேன்.

பரவாயில்லை...வரிக்கு ரெண்டு, மூணு வார்த்தை மட்டும் போட்டு எழுதிட்டு வந்துடுன்னார்.

நாம எப்ப பெரியவங்க பேச்சை மீறியிருக்கோம்? (நீ பொய் பேசுவன்னு தெரியும்...அதுக்குன்னு இப்படி மனசாட்சி இல்லாமலா பொளந்து கட்டுறதுன்னு யாருங்க அது சவுண்டு விடுறது?)

அதே மாதிரி எழுதிட்டுப் போனேன். அதை துணையாசிரியர்கிட்ட காண்பிச்சா அப்ப இன்னொரு சோதனை. எனக்கு இப்ப வேலை இருக்கு...அதனால அப்புறமா படிச்சுக்குறேன்...நீ இன்னொரு பிரதி எடுத்து அச்சகத்துல கம்போசிங் செய்ய கொடுத்துடு...உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொல்லிட்டார்.

திருடன் கையிலயே சாவியைக் கொடுக்குறதுன்னா அர்த்தம் புரியாம இவ்வளவு நாள் இருந்த விஷயத்தை பேராசிரியர் எப்படி கண்டு பிடிச்சாரோ தெரியலை. தெனாலி படத்துல கமலுக்கு செய்த மாதிரி பிராக்டிகல் ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டார். எனக்கு முன்பை விட பல மடங்கு பொறுப்பு அதிகமாயிடுச்சு.(இந்த வசனத்தையே சொல்ல வேண்டியிருக்கு...என்ன பண்றது?)

இந்த கவிதை கல்லூரி ஆண்டு மலர்ல பிரசுரம் ஆனப்ப நான் சான்றிதழ்களை எல்லாம் வாங்கிட்டு வெளியில வந்துட்டதாலதான் (மூணு வருஷம் முடிஞ்சுடுச்சுங்க) யாரும் உதைக்கலையோ...இல்ல... நிசமாலுமே கவிதை(?!) நல்லாயிருக்கான்னு இப்ப வரைக்கும் ஒரு சந்தேகம் தீரவே இல்லைங்க.

அந்த வருஷம் தீபாவளி சமயத்துல ஒரு போட்டியில வெள்ளி குங்குமச் சிமிழ் பரிசை இந்தக் கவிதை வாங்கிக் கொடுத்துச்சு. உன் கல்யாணத்தப்ப இதுல குங்குமம் வெச்சுதான் நான் எல்லாரையும் அழைக்கப் போறேன்னு எங்கம்மா சொல்லிகிட்டு இருக்காங்க. மகன் தாய்க்காற்றும் உதவி?