Search This Blog

திங்கள், 30 நவம்பர், 2009

இளைய பாரதம் - மலை - புரொஜக்டர் - நண்பர்கள் - ஒரு விளக்கம்.

இளைய பாரதம் வலைப்பூவின் முகப்பில் உங்களை வரவேற்பது இந்த பேனர்தான்.

இதன்  உள்ளடக்கம் பசுமையான மலை, புரொஜக்டர், மூன்று இளைஞர்கள் , வலைப்பூவின் தலைப்பு மற்றும் துணைத்தலைப்பு.

எனக்கு பொழுது போகாத நேரத்தில் மனதில் தோன்றியதை வடிவமைத்து  இங்கே வைத்துவிடவில்லை. நாம் கவனத்தில் வைப்பதுடன் பின்பற்ற வேண்டிய சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன் தான் இந்த பேனரை உருவாக்கியிருக்கிறேன்.

இந்த இடம் மருதமலை கோவில் அமைந்துள்ள பகுதி.

ஒரு தாவரம் வளருகிறது என்றால் நிலம், நீர், காற்று, வெப்பம், ஆகாயம் ஆகியவற்றின் பங்களிப்பை தெளிவாக உணரலாம். மனிதன் இல்லை என்றால் தாவரங்கள், விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால் மரங்கள் குறைந்ததன் இல்லை இல்லை குறைத்ததன் பலனை நாம் இப்போதே அனுபவிக்கத்தொடங்கிவிட்டோம். மரங்களை அதிகமாக வளர்ப்பதுடன்  மலைகளை சிதைக்காமல் அந்த அழகை அப்படியே விட வேண்டும். இது தாவரங்களையும் இயற்கை வளங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. நம்மையும் வருங்கால சந்ததிகளையும் காப்பாற்றிக்கொள்வதற்காக என்ற என்னுடைய எண்ணமே பேனரில் பின்னணியாக உள்ளது.

புரொஜக்டர் : திரைப்படம் கண்டறியப்பட்டு சுமார் நூறு ஆண்டுகளாகி விட்டது. ஆனாலும் மிக சமீப காலம் வரை பிலிம் சுருள் மூலமாக திரையிடும் கருவியின் அடிப்படை தத்துவத்தில் பெரிய மாற்றம் இல்லவே இல்லை. இது அந்த தொழில் நுட்பத்தின் உறுதியைக் காட்டுகிறது.

பிலிம் இல்லாமல் படம் திரையிடும் விஷயமெல்லாம் இன்றைய முன்னேற்றம்தான்.

அந்தக் கருவியின் மூலம் எந்த படத்தைத் திரையிட்டாலும் அதில் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே காண்பிக்கும். ஆனால் தவறான விஷயங்கள் அந்த புரொஜக்டர் மூலம் திரையிடப்பட்டால் அதன் பிறகு அந்த திரையரங்கத்திற்கு அஸ்தமனமே...

பிரச்சனைக்குரிய எந்த ஒரு சூழ்நிலையையும் மனிதன் விருப்பு வெறுப்பின்றி அணுக வேண்டும். தவறான பக்கம் சேர்ந்தால் வீழ்ச்சிதான் என்பதை இந்த புரொஜக்டரும் உணர்த்துகிறது.

என்னுடையது  இந்த பார்வை. உங்கள் கோணம் வேறு ஒன்றாக இருக்கலாம். ஏனென்றால் ஒரு விஷயத்தை பத்து பேர் பார்த்தால் பதினைந்து கோணங்கள் கிடைக்க வேண்டும். அது மனிதனின் சிந்திக்கும் குணாதிசயத்தைக் காட்டுகிறது. எந்த கோணத்தில் பார்த்தாலும் நியாயமான விஷயத்தின் பக்கமே உங்கள் வாக்கு இருக்க வேண்டும். நியாயமான விஷயத்தை எப்படி தீர்மானிப்பது?...

நீங்கள் எந்த சூழ் நிலையில் இருந்தாலும் எதிராளியின் நிலையில் உங்களை வைத்து சில நிமிடம் யோசித்துப் பாருங்கள். உங்கள் மனசாட்சி நியாயத்தை சொல்லும்.

(திரையரங்குகள் மூடப்படுவதற்கான காரணங்களை வேறு ஒரு கட்டுரையில் அலசலாம். இந்தக் கட்டுரையின் நோக்கம் அது அல்ல.)

மூன்று இளைஞர்கள் : இந்த உலகில் நீங்கள் வாழ உங்கள் குடும்பமும் உறவினர்களும் மட்டும் ஒத்துழைத்தால் போதாது.

சமூகத்தின் துணையும் வேண்டும். சமூகம் என்பதும் ஒரு வகையில் நண்பர்கள்தான். சிந்தித்துப் பாருங்கள். புரியும். இந்த கோணத்தில் அணுகினால் பல நன்மைகள் உண்டு.

ஆனால் இது இரு வழிப் பாதையாக இருக்க வேண்டும். ஒருவழிப்பாதையாக இருந்தால் பலன் இல்லை. நீங்கள் சாலையில் சரியாக சென்றாலும் எதிரில் வருபவர் விதிகளை மதிக்கவில்லை என்றால் விபத்துதான். ஒருவர் மட்டும் சரியாக இருந்தால் பல நேரங்களில் விபத்துக்களை தவிர்த்துவிடலாம். சில நேரங்களில் பெரிய பாதிப்பு இருக்காது. அவ்வளவுதான்.
 
இனிவரும் காலம் இளைஞர் காலம் என்பது எந்த காலத்துக்கும் பொருந்தும்.

இதுதான் சரியான திசை என்பதை தேர்ந்தெடுக்கும் திறமைதான் ஒவ்வொருவருக்கும் அவசியத் தேவை. இதற்கு பத்து வரிகளில் விளக்கம் கூறிவிட என்னால் முடியாது.

வீட்டில் தனியாக இருப்பவர்கள் கொலைகாரர்களிடமிருந்தும் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் தப்பிப்பது எப்படி?

குங்குமம் 07.12.2009 இதழில் தனிமையாக இருப்பவர்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்யும் வழிகள் குறித்த கட்டுரை வெளியாகி இருக்கிறது.

முன்பெல்லாம் புறநகர்ப்பகுதிகளில்தான் கொள்ளை அடிப்பதும் அந்த நேரத்தில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள் ஆகியவரை கொலை செய்வதும் நடந்துகொண்டிருந்தன. இப்போது இந்த வகை குற்றங்கள் நகரின் நெரிசலான பகுதிகளிலும் நடைபெற்று நம்மை எல்லாம் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நேரத்தில் இந்த கட்டுரை பிரமாதமான வழிகாட்டியாக வந்திருக்கிறது.

 அதற்காகவே கட்டுரையை வெளியிட்ட குங்குமம் இதழுக்கு முதலில் நன்றியோடு வாழ்த்துக்களை சொல்லிவிடுவோம்.

இது போன்ற சம்பவங்களில் கொள்ளையுடன் கொலையும் நடக்க முக்கிய காரணம் என்ன தெரியுமா? இதற்கான திட்டமிடலுக்கு முக்கிய அச்சாணியாக இருப்பது நமக்கு நன்றாக தெரிந்தவர்கள், உறவினர்கள், நம் வீட்டின் பணியாளர்கள்.

எனவே நாம் எந்த நேரத்திலும் யாரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அதற்காக இருபத்துநாலு மணிநேரமும் இசட் பிரிவு பாதுகாப்பை வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வில்லை. நமக்கு சாத்தியமாகக் கூடிய வழிகளைத்தான் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

நம்முடன் இருக்கும் ஒருவர் உண்மையாகவே தவறான திட்டமிடலுடன் இருந்தாலும் அல்லது வெள்ளையான மனதுடன் பழகினாலும்(?!) அவர்கள் தப்பு செய்ய தூண்டுவதை நம்மை அறியாமல் நாம் செய்துவிடுவதுண்டு.

தப்பு செய்ய வரும்போதே மாட்டிக்கொள்வோம் என்ற வகையிலான பாதுகாப்பை தனியாக வீட்டில் இருப்பவர்கள் ஏற்படுத்திக்கொள்வது மிக அவசியம் என்று அதிகம் செலவில்லாத சில கருவிகளை பரிந்துரைக்கிறார்கள்.

இதை நான் படித்துவிட்டேனே என்று சொல்பவர்களுக்கு ஒரு சபாஷ் மற்றும் 'ஓ' ஹோ.

வார இதழில் இதைப் படிக்காதவர்களுக்கு ஒரு சில வரிகள். வேலை, பள்ளி (அ) கல்லூரிப்படிப்பு அதனால் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் போன்றவற்றைப் படிக்கவே நேரம் இல்லை என்று மட்டும் சொல்லாதீர்கள். பலர் நள்ளிரவு வரை அதாவது ஐந்து மணி நேரம் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை (உருப்படியான நிகழ்ச்சி என்றால் சரி) பார்ப்பது உண்டு தானே. அந்த நேரத்தில் குறைந்தது ஒரு மணி நேரமாவது முதலில் திருடுங்கள்.

நிச்சயம் அது உங்கள் வாழ்க்கைக்கு உரிய நல்ல விஷயம் ஒன்றையாவது உங்களிடம் ஒப்படைக்காமல் போகாது. துரோகம் செய்யாத நல்ல நண்பர்களில் முதலிடம் பெறுவது  நல்ல புத்தகம்தான் என்று உறுதியாக சொல்ல முடியும்.

இப்போது வீட்டில் தனியே இருக்கும் முதியவர்கள், பெண்கள் போன்றோரை பல ரூபத்திலும் நெருங்கும் ஆபத்துக்களைக் கண்டறியவும் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்கவும் இருக்கும் சில பாதுகாப்புக் கருவிகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

அவை
  • மேக்னடிக் சென்சார்: வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் பொருத்தலாம். வீட்டுக்குள் யாரேனும் அத்து மீறி நுழைந்தால் அலாரம் அடித்து ஊரைக் கூட்டும்.
  • மோஷன் சென்சார்: வீட்டுக்குள் 2 ஜன்னல்கள், 4 கதவுகளுக்கு சேர்த்துப் பொருத்தக் கூடியது. 6 மீட்டர் தூரம், 90 டிகிரி கோணத்தில் கண்காணிக்கும். அத்து மீறி யாரேனும் நுழைந்தால், அந்த அசைவை வைத்து அலாரம் எழுப்பும்.
  • கிளாஸ் பிரேக் சென்சார்: கண்ணாடி ஜன்னல், கதவுகளில் பொருத்தலாம். கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய யாராவது முயற்சித்தால் இது அலறும்.
  • வீடியோ டோர் போன்: வெளியே காலிங் பெல் பக்கத்தில் கேமராவும், வீட்டினுள் மானிட்டரும் பொருத்தப்படும். வீட்டுக்குள்ளிருந்தபடியே மானிட்டரில் பார்த்துவிட்டு, தெரிந்தவர்களாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கலாம்.
  • சிசிடிவி: பெரிய அலுவலகங்களில் உபயோகிக்கிற இது, இப்போது வீடுகளுக்கும் பயன்படுகிறது.

சில ஆயிரம் ரூபாய் செலவில் சாத்தியமாகக்கூடிய பாதுகாப்புக் கருவிகள்தானாம் இவை.

அந்தக் காலத்தில் மட்டுமல்ல இப்போதும் கூட சில கிராமங்களில் ஒருவருக்கும் தெரியாமல் அன்னிய நபர் உள்ளே நுழைய முடியாது.

நகர வாழ்க்கையில் இதற்கெல்லாம் சாத்தியம் குறைவுதான். ஆனால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் எந்த வகையில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று உதாரணமாக சென்னை வாலஜா சாலையில் உள்ள நாராயணா அரிஹந்த் ஓஷன் டவர்ஸ்  பற்றிய ஒரு அறிமுகம் குங்குமம் இதழில் கொடுக்கப்பட்டுள்ளது.

இது நிச்சயம் மற்றவர்களுக்கு வழிகாட்டிதான் என்பதில் சந்தேகமே இல்லை.

மீண்டும் குங்குமம் இதழுக்கு ஒரு நன்றி.

ஞாயிறு, 29 நவம்பர், 2009

மனத்திருப்தி

"நீ எதுவும் வேலைக்கெல்லாம் போக வேண்டாம்"என்று முதலிரவு அன்றே கணவன் சொல்வான் என்று சசிகலா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

திருமணத்துக்கு முன்பே அவன் சசிகலாவிடம்,"ஓவியம்,படிப்பு அப்படின்னு உனக்கு இருக்கும் தனித்தன்மைகள் நம்ம வீட்டோடயே முடங்கிட நான் காரணமாக மாட்டேன்."என்று உறுதியளித்திருந்தான்.

இப்போது என்னவென்றால் முதலிரவு அறைக்குள் வந்ததும் வராததுமாக நீ எந்த வேலைக்கும் போக வேண்டாம் என்று சொல்கிறானே...கடைசியா இவனும் சராசரி மனிதன்தானா  என மனதுக்குள்ளேயே புழுங்கினாள்.

ஆனால் அவன் அடுத்து சொன்ன வார்த்தைகள் சசிகலாவுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தன.

"நீ ஒரு இடத்துக்கு வேலைக்குப் போனா சம்பளம் கிடைக்கும். ஆனா உன்னோட மற்ற திறமைகள் வெளிவராமலேயே போற அபாயம் இருக்கு. அதனால நீ நம்ம ஊர்ல இருக்குற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு தினமும் குறிப்பிட்ட நேரம் போனா உன் திறமைகளை நாலு பேருக்கு கற்றுக் கொடுத்த மனத் திருப்தியும் இருக்கும். சந்தோஷமும் கிடைக்கும்."என்று அவன் சொன்னதும் சட்டென்று கணவனைக் கட்டிக் கொண்டாள் சசிகலா.

கதாசிரியர் - (வந்த படத்துக்கா? வராத படத்துக்கா?)

"சார்...டைட்டில்ல கதைன்னு உங்க பேரைப் பார்த்ததும் முகில் எதுவும் பிரச்சனை பண்ணிட மாட்டானே..."

அவன் சொன்னா யாருய்யா நம்புவாங்க?...நாம ரெண்டு பேரும் இருபது வருஷமா சினிமாத்துறையிலதான் இருக்கோம். இதுவரைக்கும் ஒரு படத்துலயாவது நான் சொந்தமா எழுதின கதை இருந்ததா...இல்லைன்னு உனக்கும் எனக்கும்தான் தெரியும்.

ஆனா இதை நானே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. அதான்யா நேரம்னுங்குறது.  இதுக்காகத்தான் அவனை உதவி இயக்குனரா வெச்சுகிட்டே சினிமாவுக்கு இப்படி இருக்கணும்...அப்படி மாத்தணும்னு சொல்லியே கதையை வேற வடிவத்துக்கு மாத்திட்டேன். விடுய்யா பார்த்துக்கலாம்."என்ற அந்த பிரபல இயக்குனர் மேலும் ஒரு கோப்பை உற்சாக பானத்தை உள்ளே ஊற்றினார்.

அப்போது கதையைத் தந்த அப்பாவி உதவி இயக்குனரான இளைஞன் வந்தான். அவன் கையில் இரண்டு கடிதங்கள்.

"வாடா...அடுத்த வாரம் நம்ம படம் வெளியாகப் போகுது. நீயும் இப்ப ஒரு கிளாஸ் ஊத்திக் கொண்டாடு..."என்று அழைத்தார் பிரபல இயக்குனர்.

"அதெல்லாம் வேண்டாம் சார். என்னுடைய கதையை நீங்க திரைக்கதையா மாற்றினதும் அது நான் எழுதி தமிழா மாத இதழ்லல வெளிவந்த நாவலாவே மாறிடுச்சு. அதான் அந்த பத்திரிகை நிர்வாகத்துகிட்ட இந்தக் கதையைப் படமாக்க அனுமதிக்கடிதம் வாங்கிட்டு வந்துட்டேன்.

இதுல என்னோட அனுமதிக்கடிதத்தையும் சேர்த்து வெச்சிருக்கேன்.

டைட்டில்ல கதைன்னு என் பேரைப் போடும்போது தமிழா மாத இதழ்லல பிரசுரமானதுன்னும் ஒரு வரி சேர்த்துடுங்க..."என்று அந்த உதவி இயக்குனர் சொன்னதும் பிரபல இயக்குனர் மயங்கிச்    சரிந்தார்.

சனி, 28 நவம்பர், 2009

தட்சணை

"ஏம்மா...நான் அவ்வளவு தூரம் சொல்லியும் என் பேச்சைக் கேட்காம உன்னை யார் வரதட்சணை கேட்கச் சொன்னது? " என்ற சந்திரனின் குரலிலேயே கோபம் தெரிந்தது.

"அடப்பாவி...இதுக்காகவா பொண்ணு வீட்டுல இருந்து இங்க வந்து சேர்ற வரைக்கும் மூஞ்சியை உம்முன்னு வெச்சுகிட்டு இருந்த?...மண்டு...பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட இத்தனை பவுன் நகை போடணும்...அவ்வளவு சீர்வரிசை சாமான் வேணுன்னு கண்டிச்சுக் கேட்டாதாண்டா அதுக்குப் பேர் வரதட்சணை. உங்க சக்திக்கு என்ன செய்ய முடியுமோ அதை உங்க பொண்ணுக்கு செய்யுங்கன்னு நான் சொன்னதுக்கு காரணம் என்னன்னு தெரியுமா?

புகுந்த வீட்டுக்கு பொண்ணு வர்றப்ப அவ வீட்டுல இருந்து எதுவுமே கொண்டு வரலைன்னு வெச்சுக்கோயேன்...நாம இந்த வீட்டுக்கு வேண்டாத விருந்தாளியோ அப்படின்னு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துட வாய்ப்பு இருக்கு.அவ கல்யாணமாகி ஓரளவு அத்தியாவசியமான பொருட்களோட வந்தா இது நம்ம வீடு...இது நாம கொண்டு வந்த பொருள்...அப்படின்னு ஒரு அக்கறை வரும். மனசுல எந்த வித விகல்பமும் இல்லாம புகுந்த வீட்டோட ஒட்டிக்குவா.

நான் பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட ஏதாச்சும் செய்யுங்கன்னு சொன்னது அவங்களை கஷ்டப்படுத்துறதுக்காக இல்லை. அந்தப் பொண்ணு மனசு சங்கடப்படாம இங்க வந்து வாழ்றதுக்காகன்னு இப்ப புரியுதா?"என்று சந்திரனின் அம்மா சொன்னதும் அவன் மனதில் இருந்த மிகப் பெரிய பாரம் நீங்கி லேசானது.

அனுபவம்

"கயல்விழி...பல நேரங்கள்ல நீ செய்ய்யுறதெல்லாம் எதுக்குன்னே புரிய மாட்டெங்குது..."எனறார் பரசுராமன்.

"கல்யாணமாகி எட்டு வருஷம் கழிச்சு என்னங்க குழப்பம்?"

"நம்ம வீட்டுவேலை செய்யுற மாலினியோட பொண்ணு சாந்தினியோட படிப்புக்குரிய செலவை நீதான் பார்த்துக்குற... அதுக்காக ஞாயிற்றுக்கிழமை சாந்தினியும் அவ அம்மாவோட நம்ம வீட்டுக்கு வரணும்னு சொல்றதுதான் ஏன்னு எனக்குப் புரியலை.

அவ வீட்டுலேயே இருந்தா எதையாச்சும் படிப்பா...இல்லன்னா விளையாடுவா...அது ரெண்டையும் செய்ய விடாம இங்க வரவழைச்சுடுற,,,

அப்படி வர்றவ அவ அம்மாவுக்கு உதவியா இருந்தாலாவது ரெண்டு பேரும் சீக்கிரமா வீடு போய்ச் சேருவாங்க.

சாந்தினி எந்த வேலையும் செய்யாம அவ அம்மா நம்ம வீட்டு வேலை செய்யுறதை உட்கார்ந்து வேடிக்கை பார்க்குறதால யாருக்கு என்ன லாபம்? "என்றார்.

"குழந்தைத் தொழிலளிங்க நம்ம வீட்டால உருவாகாம தடுக்குறதுக்காகத்தான் சாந்தினியை எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு சொன்னேன். மாலினியோட புருஷன் குடிச்சுட்டு பொறுப்பில்லாம இருக்குறான். அதனால மாலினி எவ்வளவு கஷ்டப்படுறான்னு சாந்தினி உணரணும்.

அதுக்காகத்தான் ஞாயிற்றுக்கிழமையானா சாந்தினி அவ அம்மாவோட வரணும்னு சொன்னேன்." என்று கயல்விழி  கூறியதும்  அவளுடைய சமூக அக்கறையை நினைத்து பூரிப்படைந்தார் பரசுராமன்.

அங்கீகாரம்

ஆடியோ ரிலீஸ் ஆனதும் அந்தப் பாட்டு இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று திரைஉலகம் மட்டுமல்ல...படத்தை உருவாக்கியவர்களே எதிர்பார்க்கவில்லை. பாடல் ஹிட் ஆனதையடுத்து ஆங்கில பாப் பாடகரே வலிய வந்து மிகக்குறைவான சம்பளத்தில் ஆடித் தர சம்மதித்தார்.

உடனடியாக தயாரிப்பாளரும் வெளியில் கடன் வாங்கி ஏற்கனவே படம் பிடித்த பாடல் காட்சியை மீண்டும் ஆங்கில பாப் பாடகரை வைத்து படப்பிடிப்பை நடத்த ஏற்பாடு செய்தார்.

படத்தொகுப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தன. "தமிழ் நடன நடிகரை வைத்து ஏற்கனவே எடுத்த பாடல் காட்சியை சேர்க்க வேண்டாம்"என்று தயாரிப்பாளர் சொன்னார்.

'அந்த பாடலுக்காக பதினைந்து நாள் உழைத்த நடனக் கலைஞனுக்கு  நாமதான் பணம் கொடுத்தாச்சே...பிறகு பாடலை சேர்ப்பது பற்றி ஏன் கவலைப் படணும்?...யாரும் எதுவும் சேர்க்க மாட்டாங்களே...'என்பது தயாரிப்பாளரின் வாதமாக இருந்தது.

"சம்பளம் கொடுத்ததோட நம்ம பொறுப்பு முடிஞ்சிட்டதா யார் சொன்னா? ஒரு கலைஞனுக்கு ஊதியத்தைவிட பெரிசா நினைக்கிறது ரசிகர்களோட கை தட்டலைத்தான். அது அவருக்கு கிடைக்கனும்னா பாடலை படத்துல சேர்த்து மக்களோட பார்வைக்கு கொண்டு போகணும்.

இது தான் நம்ம கடமை. அந்தப் பாட்டை எங்க சேர்க்குறதுன்னு குழப்பமே வேண்டாம்...கிளைமாக்ஸ் முடிந்ததும் இந்தப் பாட்டோட எண்ட் டைட்டிலை ஓட விட்டுடலாம்." என்று இயக்குனர் சொன்னதில் இருந்த மனிதநேயம் புரிந்ததால் தயாரிப்பாளர் மகிழ்வுடன் சம்மத்தார்.

வெள்ளி, 27 நவம்பர், 2009

தண்டனை

"உங்க பையன் வகுப்பறையில வேணுன்னே நாற்காலியை தள்ளிவிட்டு உடைச்சுட்டானாம். தலைமையாசிரியர் உங்களை பள்ளிக்கூடத்துக்கு வர சொன்னார். "என்று அவர் சொன்னதும் சேகர்பாபுவுக்கு ஆத்திரமாக வந்தது.

விக்னேஷ் பற்றி அந்த தெருவுக்கே தெரிந்ததுதான். கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஏதாவது வாகனம் அல்லது வீட்டின் கண்ணாடியை உடைத்து விடுவான். இதற்காக மாதம் ஐந்து முறையாவது நஷ்ட ஈடு வழங்குவது சேகர்பாபுவுக்கு ரெகுலர் செலவாகவே இருக்கும்.

"தெருக்காரங்களுக்கு குடுத்ததை இப்ப பள்ளக்கூடத்துக்கு தரும்படியா பண்ணிட்டான்...எல்லாம் என் தலை எழுத்து..."என்று புலம்பிக் கொண்டே தலைமையாசிரியரைப் பார்க்கச் சென்றார்.

"சார்...என் பையனைப் பற்றி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். கட்டி வெச்சு நல்லா தோலை உரிங்க. பண நஷ்டத்தை நான் தந்துடுறேன்."என்றவாறு பர்சை வெளியில் எடுத்தார்.

உடனே தலைமையாசிரியர், "உங்க கிட்ட யார் சார் பணம் கேட்டா?... பள்ளிக்கூடத்துல சரியில்லாத பர்னிச்சர்களை எல்லாம் சரிசெய்ய வர்ற சனிக் கிழமை கார்பெண்டர் வர்றாரு. உங்க பையன் அவருக்கு உதவியா இருந்து  வேலை செய்யணும். இந்த தண்டனையில உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே? "என்றார்.

"தண்டனைன்னா ஒருத்தனை மேலும் முரடனாக்காம திருத்தணும்னு நினைக்குற உங்க நோக்கம் சிறப்பானது சார்..."என்று தலைமையாசிரியரைப் பாராட்டி விட்டு மன நிறைவுடன் கிளம்பினார் சேகர்பாபு.

கொடைவள்ளல்

அழைப்பு மணியோசை கேட்டதுமே என் மனதில் குழப்பம்.

"இங்க குடி வந்து ரெண்டு நாள்தானே ஆகுது. வேண்டியவங்களுக்கு எல்லாம் இனிமேதான் முகவரியை தெரியப்படுத்தணும். அதுக்குள்ள யாரா இருக்கும்"என்று நினைத்துக் கொண்டே கதவைத்திறந்தேன்.

ஆறு நடுத்தர வயது ஆண்கள் காவியுடை, நெற்றியில் விபூதி குங்குமம், நோட்டீஸ், மஞ்சள் பை என்று நின்றதுமே, "இந்த மாதிரி ஆளுங்களோட தொல்லை தாங்காதே..."என்று மனதுக்குள்ளேயே முணுமுணுத்தபடி "என்ன விஷயம்?" என்றேன்.

ஒருவர் தன் பற்களை எல்லாம் என்னிடம் காட்டியே தீருவது என்ற முடிவுடன் ஒரு சிரிப்பையும் உதிர்த்துவிட்டு, "சார்...பத்து நாள்ல நம்ம தெரு அம்மன் கோயில் திருவிழா..."என்றவாறு நோட்டீசை என் கையில் திணித்தார். மற்றொருவர் ரசீதுப் புத்தகத்தில் எழுதத் தயாரானார்.

'என் மனைவிக்கு பக்தி அதிகம்னு இவங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா...பர்சை விட்டு பறந்துடுச்சுடா பெரிய தொகை' என்று நான் மனதுக்குள் அதிர்ந்த  நேரத்தில்தான் அந்த திருப்பம்.

"என்னங்க...நான் பேசிக்குறேன்..." என்று அருகே வந்த என் மனைவி,

"அய்யா...இந்த மாதிரி கோயிலுக்கெல்லாம் பணம் கொடுக்குறது என் வீட்டுக் காரருக்கு சுத்தமா பிடிக்காது. இருந்தாலும் வீடு தேடி வந்த உங்களை வெறும் கையோட அனுப்ப எனக்கு மனசில்லை. இந்தாங்க...இருபது ரூபாய்..."என்று அவர்களிடம் கொடுத்தாள்.

வந்தவர்கள் எதுவும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீது தந்துவிட்டுச் சென்றார்கள்.

'புது வீட்டுக்கு வந்ததும் என் மனைவி இப்படி மாறிட்டாளே' என்ற சந்தோஷம் எனக்கு. அவளிடமே என் சந்தேகத்தைக் கேட்டுவிட்டேன்.

"நீங்க ஏதேதோ கற்பனை பண்ணீக்காதீங்க. நான் அவங்களை இருபது ரூபாயோட அனுப்பக் காரணமே வேற. நேற்றே அந்தக் கோயிலைப் பற்றி விசாரிச்சுட்டேன். இங்க ரெகுலரா பூஜை செய்ய ஆள் கிடையாதாம். வருஷம் ஒரு முறை திருவிழாவுக்கும், தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களுக்கு மட்டும் ஒரு குருக்களை வெச்சு பூஜை செய்யுறாங்களாம். மற்ற நாட்களில் சரியா  விளக்கு கூட எரியுறது இல்லைன்னு சொன்னாங்க.

ஆனா இந்த ஆட்கள் ஒவ்வொரு வருடமும் வசூல் பண்ணி பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சின்னு செலவழிக்கிறாங்களாம். இந்த மாதிரி வசூல் செய்த பணத்தை வெச்சு தினமும் ஒருகால வழிபாடு நடக்க ஏற்பாடு பண்ணின பிறகு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தினா பரவாயில்லை.

வருஷம் பூராவும் பட்டினி போட்டுட்டு ஒரே ஒரு நாள் விருந்து வைக்கிற செயலுக்கு நாம் ஏன் அதிகமா கொடுக்கணும்னு நினைச்சுதான் இருபது ரூபாயோட அனுப்பினேன். இந்த திருவிழா முடிஞ்ச பிறகு தினமும் வழிபாடு நடக்க கண்டிப்பா நான் ஏற்பாடு செய்வேன்...

அப்ப ஒரு பெரிய தொகையை நீங்கதான் தரணும்..." என்று என் மனைவி சொல்லி முடிப்பதற்குள் 'தடால்' என்று ஒரு சத்தம்...

என்னவோ ஏதோன்னு பயந்துடாதீங்க...நான் தான்  மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.

வியாழன், 26 நவம்பர், 2009

சிமுலேட்டர் வெச்சு கத்துகுடுப்போமா? (சமச்சீர் கல்வி)

சிமுலேட்டர்னா என்னன்னு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னால இது தேவைப்படுற அளவுக்கு என்ன பிரச்சனைன்னு புரிஞ்சுக்குவோம். இப்ப நிறையபெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு இரு சக்கர மோட்டார் வாகனங்களை வாங்கிக்கொடுக்குறாங்க. இது சரியா?

நாங்க சம்பாதிக்கிறோம். செலவு பண்றோம்...இவனுக்கு ஏன் எரியுதுன்னு உங்க மனசுலயே என்னைய திட்டுறீங்க...புரியுது.

எனக்கு எரியலைங்க... அகால மரணத்தால இறந்தவங்க வீடுகள்ல போய்ப் பாருங்க. அந்த குடும்பத்துல அவதிப்படுறவங்க வயிறு எரியுறது தெரியும்.

ஓட்டுனரின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத வேகம், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், சாலை விதிகள் பற்றி அறியாமை அல்லது மதிக்காமை இவைகள் மட்டுமே எண்பது சதவீதம் விபத்துக்களுக்கு காரணமாக அமைகிறது. மற்றவரின் தவறும், வாகனக் குறைபாடும் இருபது சதவீத அளவுக்குதான் இருக்கும்.

சைக்கிளோ, மோட்டார் வாகனமோ இவற்றில் எதை இயக்கினாலும் தொண்ணூறு சதவீத பள்ளி மாணவர்கள், மாணவிகளுக்கு சைகை எதுவும் செய்யாமல் திரும்புவது, யாராவது தெரிந்தவர்களைப் பார்த்தால் அப்படியே நின்று பின்னால் வருபவரை அலறி ஓடச் செய்வது  இதெல்லாம் கை வந்த கலை.( பெரியவர்களும் பல நேரங்களில் இப்படி செய்வது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.)

சாலையைக் கடப்பவர்கள் அல்லது வாகனம்  திடீரென்று எதிர்ப்படுவது போன்ற சிக்கலான சூழ்நிலையில் எப்படி சமயோசிதமாக விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு மிக மிக குறைவு. பல நேரங்களில் அவர்கள், பதட்டத்தில் எதிரில் வருபவரையும் சேர்த்து கீழே தள்ளி விடுவார்கள்.

முறையான பயிற்சி இல்லாமல் அதிக சி.சி வாகனங்களை எடுத்து வந்து விபத்து ஏற்படுத்துவதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

படிக்கும் வயதில் இந்த பிரச்சனை என்றால் வளர்ந்து நன்றாக சம்பாதிக்கும் போது மது அருந்தி வாகனம் ஓட்டுவது மட்டுமின்றி இதை தவறு என்று மனதில் கூட நினைக்க மாட்டேன் என்ற போக்கு எந்த விளைவை ஏற்படுத்தி இருக்கிறது தெரியுமா?

ஒரு மணி நேரத்தில் சாலை விபத்தால் பதிமூன்று பேர் உயிரிழக்கிறார்கள் என்பது பதிவாகும் புள்ளி விபரம் என்றால், உண்மை நிலவரம் என்னவாக இருக்கும். இவற்றில் மதுவின் பங்கு பற்றி அறிய வரும்போது வேதனையாக இருக்கிறது.

இப்போதுள்ள தலைமுறை இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உயிர், பணம் அனைததையும் இழந்துகொண்டிருக்கிறது. இவர்களை மீட்பது இருக்கட்டும். வளரும் மாணவர்களை காக்கும் பொறுப்பு அதைவிட அவசரம், அவசியம்.

மது அருந்துபவருக்குதான் நேரடி பாதிப்பு. ஆனால் அவர் அந்த நிலையில் வாகனம் இயக்கும் போது அப்பாவிகளும் துன்பப்படுகிறார்களே. சாலைவிதிகளை மதிக்காத போதும் ஏறக்குறைய இதே விளைவுதான்.

சாலைவிதிகள் பற்றிய முழு விபரம், இவற்றை மதிக்காததால் ஏற்படும் விபத்துக்கள், விபத்துக்களில் ஒருவர் செய்யும் தவறால் இது எதிலும் சம்மந்தப்படாத நபர் எப்படி பாதிக்கப் படுகிறார், விபத்தில் ஒருவர் மரணமடைந்த பிறகு அல்லது படுகாயமடைந்த பின்பு பொருளாதார ரீதியாகவும் இன்னும் பிற வகைகளிலும் எவ்வளவு தூரம் பாதிப்பு அடைகிறார்கள் - இது போன்ற விஷயங்களை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிப்படியான பொதுப் பாடத்திட்டமாக வைக்க வேண்டும்.

இது தொடர்பான குறும்படங்கள் தயாரித்து பள்ளிகளில் திரையிட்டால் நல்ல பலன் இருக்கும். ஏனெனில், ஒரு விஷயம் சிறு வயதிலேயே தவறு என்று அழுத்தமாக பதிந்து விட்டால் அவன் வளர்ந்த பிறகு மோசமான அளவு பாதை மாற மாட்டான்.

ஆளில்லா சாலையில் ஒரு வாரம் ஓட்டிவிட்டு உரிமம் பெற்று விடுகிறார்கள். பிறகு போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் நாலு சக்கர வாகனத்தை  இயக்குவதால் பொதுவாக எல்லாருக்குமே சிரமமாகத்தான் இருக்கும்.

இப்போது சிமுலேட்டர் விஷயத்துக்கு வருகிறேன்.

கிளிக்கூண்டு போன்ற இந்த இயந்திரத்தில் அமர்ந்து கார் ஓட்ட பயிற்சி எடுத்தால் விரைவில் பதற்றம் நீங்கி விடும்., சென்னை அண்ணாசாலையின் சூழலில் கூட இயந்திரத்தின் உள்ளே இருந்து ஓட்டிப் பார்க்கலாமாம்.

சில மணி நேரப் பயிற்சி போதும் என்று சொல்கிறார்கள். ஒன்பதாம் வகுப்பு முதல் இந்த செய்முறைப்பயிற்சியையும் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்.

யோசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா... அப்படின்னு இழுக்குற சத்தம் எனக்கு கேட்குதே...

எந்த அருமையான யோசனையும் முதல்ல கேலிக்குரிய, சாத்தியமில்லாத விஷயம் மாதிரிதான் தெரியும். சிரமத்துடன் அதை நடைமுறைப்படுத்தின பிறகு கிடைக்கக்கூடிய பலனைப் பார்த்து இன்னும் கொஞ்சம் முன்னாடியே செஞ்சிருக்கலாமோ... அப்படின்னு நினைக்கத் தோணும்.

இதுதாங்க காலம் காலமா இருந்து வர்ற வரலாறு.

முகங்கள் (தினமலர்-வாரமலர்)

முதன் முதலாக எனக்கு பரிசு பெற்றுத்தந்த சிறுகதை 'முகங்கள்'.தினமலர் வாரமலர்  நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. ஆண்டு 2003. 
 வரதட்சணை காரணமாக மருமகள்கள் பற்றவைக்கும் ஸ்டவ் மட்டும் வெடிக்கும் அவலம் இன்னும் நம் நாட்டில் உண்டு. பல ஏழைப்பெண்கள் முதிர்கன்னிகளாகவே இருக்கும் அவலத்துக்கும் வரதட்சணை முக்கிய காரணம்.

ஆனால் வரதட்சணை வேண்டாம் என்று ஒரு ஆண் முன்வந்தால் அவனை சந்தேகத்துடன்தான் பார்க்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள வேண்டிய பெண்களே இப்படிப்பட்ட ஆண்களை வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

அவர்கள் அச்சத்துக்கும் காரணம் இருக்கிறது. நினைவில் வைத்துக் கொள்ள முடியாத எண்ணிக்கையில் திருமணம் செய்து கொள்ளும் நபர்கள் கூட வரதட்சணை வேண்டாம் என்று வலை வீசித்தான் மொத்தமாக சுருட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள்.

சாலை விபத்து அதிகம் என்பதற்காக பயணம் செய்யாமல் இருக்கிறோமா? நல்ல குணத்துடன் ஒருவர் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய வரும்போது சரியான முறையில் அவர் பின்னணியை தெளிவாக விசாரித்து திருமணத்துக்கு சம்மதிக்க பெண்கள் முன் வரவேண்டும்.

அவர்கள் மீது சந்தேகம் இருக்கும்வரை வரதட்சணை பெருக்கத்துக்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்வது தவறு என்பதுதான் என் கருத்து.

வரதட்சணை வேண்டாம் என்று இருக்கும் ஒருவன் சந்திக்கும் பிரச்சனை, அவனுக்கு சாதாரணமாக வரும் நோய் ஒன்று எப்படி திருமணத்தையே நிறுத்துகிறது, பெண்களை மட்டும் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்காமல் அவர்களில் சிலரும் நமக்கு வியப்பூட்டும்படி  இருப்பதும் உண்டு - இந்த விஷயங்கள் அனைத்தையும் சேர்த்து எழுதிய சிறுகதை - 'முகங்கள்'

படத்தை மவுசால அழுத்துங்க...

பாடத்திட்டத்துக்குள் கதைகள் விடலாமா? (சமச்சீர் கல்வி)

ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிக்குற பழக்கம் இருக்கான்னு கேட்டா, நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர் என்ன சொல்லுவாங்கன்னு தெரியுமா?

அதுக்கெல்லாம் எங்க சார் நேரம் இருக்கு. வீட்டுக்கே வர்ற நாளிதழ்களைக்கூட படிக்க முடியலைன்னு ரொம்ப சலிப்பா பேசுவாங்க. இந்த பதிலைக் கேட்டு சார் ரொம்ப பிசி அப்படின்னு  நினைத்தால் நீங்கதான் உ.அ.உ.இ. அர்த்தம் புரியலையா?அதுதான் சார் - உங்களை விட அப்பாவி உலகில் இல்லை.

ஏன் இப்படி சொல்றேன்னா, கால் மணி நேரம் நாளிதழ் படிக்க ஒதுக்க முடியாத நம்ம தலைவர் (நீங்க கட்சித்தலைவர்னு நினைச்சுக்காதீங்க...அவங்களுக்கு படிக்கத்தெரியலைன்னாலும் உதவியாளரை வைத்தாவது நாளிதழ்கள்ல வந்துருக்குற செய்திகளை தெரிஞ்சுக்குவாங்க. ஏன்னா அவர் கட்சியில இருக்காரா இல்லையான்னு அறிவிக்கிற ஆராய்ச்சி மணியே செய்த்திதாள்கள்தான்.) நான் சொன்னது குடும்பத் தலைவரைப் பற்றி. நடு ராத்திரி வரை தொலைக்காட்சியில மூழ்கி இருப்பார்.

அட...பெரியவங்களை விட்டுடுவோங்க. சின்னப் பசங்களை எடுத்துக்குங்க...வீட்டுப்பாடம், பள்ளிப்பாடம் அது இதுன்னு அவங்க தலையில அதிகமான சுமையை ஏற்றி வைக்கிறதால பாடப் புத்தகம் தவிர மற்ற எதையும் வாசிக்க அவங்களை நாம விடுறதே இல்லை.

பாடத்தை அளவுக்கு அதிகமா படிக்க வெச்சு நல்ல வேலைக்கு அனுப்பி வங்கி நிறைய சம்பாதிக்க வைக்கிறதெல்லாம் சரிதான். இப்படி உயர்ந்த நிலையில இருக்குற பலர் சின்ன சின்ன விஷயத்துல கூட ஒரு நேர்மை, அடுத்தவர்களுக்கு துன்பம் தராமை போன்ற குணங்கள் அப்படின்னா என்னன்னே தெரியாம இருக்காங்க.

வாகனங்களை மற்றவர்களுக்கு இடையூறா நிறுத்துறது, அடுத்தவங்க காதைக் கிழிக்கிற அளவுக்கு தடை செய்யப்பட்ட ஒலி அளவுக்கும் அதிகமா ஹாரன் வெச்சுக்குறது, பேராசை காரணமா குறுக்கு வழியில பணம் சம்பாதிக்கும் வழியில ஈடுபடுறது, (லஞ்சமும் இதில் தான் வருகிறது) தனக்கு கீழே அல்லது தன்னிடம் பணிபுரியும் நபர்களுக்கும் குடும்பம் சில பொறுப்புகள் இருக்கும் என்பதை மறந்து பல வகைகளிலும் துன்பம் கொடுப்பது என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம், நமது கல்விமுறை பணம் சம்பாதிக்க உதவும் அளவுக்கு பண்புகளை கற்றுத்தருவதில்லை. கொன்றைவேந்தன், ஆத்திசூடி, உலக நீதி, தெனாலிராமன், மரியாதைராமன், பீர்பால், விக்கிரமாதித்தன் ஆகிய கதைகள் உட்பட பல நூல்கள் சிறு வயதிலேயே அறிமுகம் செய்யப் பட்டால் நிச்சயம் பலன் இருக்கும்.

இவற்றை படிப்பதால் எல்லாரும் மகாத்மாவாகிவிடுவார்கள் என்று சொல்லவில்லை. ஆனால் அவ்வளவு எளிதில் மற்றவர்களை துன்பப்படுத்துபவர்களாக  மாட்டார்கள் என்று கூற முடியும்.

இந்த கதைகளை பாடத்திட்டமாக்குகிறேன் என்று வழக்கம் போல் தெனாலிராமனின் சிறுகதை ஒன்றை வரி மாறாமல் எழுதுக அப்படின்னு கேள்வி கேட்டுட்டா அவ்வளவுதான். நம்ம பசங்களுக்கு இந்த கதைகள் மேல வெறுப்பு வர வேற காரணமே தேவையில்லை.

ஒவ்வொரு வாரமும் ஒரு ஐந்து கதைகளை பற்றி மாணவர்கள் நினைப்பது என்ன என்று சொந்த நடையில் மனதில் தோன்றுவதை எழுத சொல்லி அதற்கு மதிப்பெண் அளிக்கலாம்.

ஆண்டுத்தேர்வுகளின் மார்க்குகளுடன் இவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

பாடத்திட்டத்துக்குள் கதைகள் விடலாமா? (சமச்சீர் கல்வி)

ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிக்குற பழக்கம் இருக்கான்னு கேட்டா, நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர் என்ன சொல்லுவாங்கன்னு தெரியுமா?

அதுக்கெல்லாம் எங்க சார் நேரம் இருக்கு. வீட்டுக்கே வர்ற நாளிதழ்களைக்கூட படிக்க முடியலைன்னு ரொம்ப சலிப்பா பேசுவாங்க. இந்த பதிலைக் கேட்டு சார் ரொம்ப பிசி அப்படின்னு  நினைத்தால் நீங்கதான் உ.அ.உ.இ. அர்த்தம் புரியலையா?அதுதான் சார் - உங்களை விட அப்பாவி உலகில் இல்லை.

ஏன் இப்படி சொல்றேன்னா, கால் மணி நேரம் நாளிதழ் படிக்க ஒதுக்க முடியாத நம்ம தலைவர் (நீங்க கட்சித்தலைவர்னு நினைச்சுக்காதீங்க...அவங்களுக்கு படிக்கத்தெரியலைன்னாலும் உதவியாளரை வைத்தாவது நாளிதழ்கள்ல வந்துருக்குற செய்திகளை தெரிஞ்சுக்குவாங்க. ஏன்னா அவர் கட்சியில இருக்காரா இல்லையான்னு அறிவிக்கிற ஆராய்ச்சி மணியே செய்த்திதாள்கள்தான். நான் சொன்னது குடும்பத் தலைவரைப் பற்றி.)  நடு ராத்திரி வரை தொலைக்காட்சியில மூழ்கி இருப்பார்.

அட...பெரியவங்களை விட்டுடுவோங்க. சின்னப் பசங்களை எடுத்துக்குங்க...வீட்டுப்பாடம், பள்ளிப்பாடம் அது இதுன்னு அவங்க தலையில அதிகமான சுமையை ஏற்றி வைக்கிறதால பாடப் புத்தகம் தவிர மற்ற எதையும் வாசிக்க அவங்களை நாம விடுறதே இல்லை.

பாடத்தை அளவுக்கு அதிகமா படிக்க வெச்சு நல்ல வேலைக்கு அனுப்பி வங்கி நிறைய சம்பாதிக்க வைக்கிறதெல்லாம் சரிதான். இப்படி உயர்ந்த நிலையில இருக்குற பலர் சின்ன சின்ன விஷயத்துல கூட ஒரு நேர்மை, அடுத்தவர்களுக்கு துன்பம் தராமை போன்ற குணங்கள் அப்படின்னா என்னன்னே தெரியாம இருக்காங்க.

வாகனங்களை மற்றவர்களுக்கு இடையூறா நிறுத்துறது, அடுத்தவங்க காதைக் கிழிக்கிற அளவுக்கு தடை செய்யப்பட்ட ஒலி அளவுக்கும் அதிகமா ஹாரன் வெச்சுக்குறது, பேராசை காரணமா குறுக்கு வழியில பணம் சம்பாதிக்கும் வழியில ஈடுபடுறது, (லஞ்சமும் இதில் தான் வருகிறது) தனக்கு கீழே அல்லது தன்னிடம் பணிபுரியும் நபர்களுக்கும் குடும்பம் சில பொறுப்புகள் இருக்கும் என்பதை மறந்து பல வகைகளிலும் துன்பம் கொடுப்பது என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம், நமது கல்விமுறை பணம் சம்பாதிக்க உதவும் அளவுக்கு பண்புகளை கற்றுத்தருவதில்லை. கொன்றைவேந்தன், ஆத்திசூடி, உலக நீதி, தெனாலிராமன், மரியாதைராமன், பீர்பால், விக்கிரமாதித்தன் ஆகிய கதைகள் உட்பட பல நூல்கள் சிறு வயதிலேயே அறிமுகம் செய்யப் பட்டால் நிச்சயம் பலன் இருக்கும்.

இவற்றை படிப்பதால் எல்லாரும் மகாத்மாவாகிவிடுவார்கள் என்று சொல்லவில்லை. ஆனால் அவ்வளவு எளிதில் மற்றவர்களை துன்பப்படுத்துபவர்களாக  மாட்டார்கள் என்று கூற முடியும்.

இந்த கதைகளை பாடத்திட்டமாக்குகிறேன் என்று வழக்கம் போல் தெனாலிராமனின் சிறுகதை ஒன்றை வரி மாறாமல் எழுதுக அப்படின்னு கேள்வி கேட்டுட்டா அவ்வளவுதான். நம்ம பசங்களுக்கு இந்த கதைகள் மேல வெறுப்பு வர வேற காரணமே தேவையில்லை.

ஒவ்வொரு வாரமும் ஒரு ஐந்து கதைகளை பற்றி மாணவர்கள் நினைப்பது என்ன என்று சொந்த நடையில் மனதில் தோன்றுவதை எழுத சொல்லி அதற்கு மதிப்பெண் அளிக்கலாம்.

ஆண்டுத்தேர்வுகளின் மார்க்குகளுடன் இவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

புதன், 25 நவம்பர், 2009

உங்க மொபைல் நம்பரே உங்களுக்கு தெரியலையா? எப்படி சமாளிப்பீங்க?

மொபைல் போன்களில் பெரும்பாலும் நம்முடைய என்னைப் பதிவு செய்து வைப்பதே இல்லை. அதில் பேலன்ஸ் இல்லாத நேரத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் என்ன பண்ணுவீங்க?

என்னுடைய நம்பர் மனப்பாடம் அப்படின்னு சட்டைக்  காலர தூக்கி விட்டுக்குறீங்கிளா? சரி. உங்க திறமைக்கு ஒரு ஓ போடுறேன். மொபைல்ல பேசுறத தவிர வேற எதையும் செய்யத் தெரியாத பெரியவங்க , மருத்துவமனைக்கோ வேறு எங்கோ போய் இருக்கும்போது இந்த அவஸ்தையில மாட்டினா?

கார்டு வாங்கி கடைகாரரையே  சுரண்டி ஏத்திவிட சொல்லிட்டா   போச்சுன்னு சொல்றீங்குளா?

E.C ரீ சார்ஜ் வந்ததுக்கு அப்புறம் கார்டு குறைவாகத்தான் இருக்குது.
இப்ப  அந்த பகுதியிலேயே  கார்டு இல்லை. நம்பர் தெரிஞ்சாதான் பணம் ஏத்த முடியும்னா   அவங்க என்ன செய்யுவாங்க?

"இப்ப என்னதான் செய்யணும்னு சீக்கிரம் சொல்லுயா? "அப்படின்னு யாரோ கத்துறாங்க.

சரி...சொல்லிடுறேன். This Mobile அப்படின்னு எல்லாரும் அந்த மொபைல் நம்பரை பதிவு பண்ணி வெச்சுட்டா தீர்ந்தது சங்கடம்.

ஏன்னா , சில வகை மொபைல்ல ஓன்   நம்பர் அப்படின்னு ஒரு பகுதி இருக்குறதா கேள்வி. ஆனா இலவசமா கிடைத்த ஏழெட்டு நம்பரை பதிவு பண்ற பிரகஸ்பதிங்க இருந்தால் என்ன பண்றது?

 This Number - இதுதான் ஒரே தீர்வு.

காலைக் கதிர் (25.11.2009) சமச்சீர் கல்வி எப்படி இருக்க வேண்டும்?

காலைக் கதிர் நாளிதழில் நான் எழுதி அனுப்பிய கருத்து பிரசுரமானது. மனப்பாடம் செய்யும் நேரத்தை குறைக்கலாம் என்பதுதான் இந்த கட்டுரையின் சாரம்சம்.

சமச்சீர் கல்வி முறையில் தேவைப்படும் முக்கிய மாற்றம் என்னவென்றால், தாய்மொழியிலேயே உயர்கல்வி வரை படிக்க வழி செய்வதுதான். தாய்மொழியிலேயே கல்வி கற்றால் உலக அளவில் போட்டியிட முடியாது என்பது நிரூபிக்கப்படாத வாதம்தான். ஏனெனில் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் தாய்மொழியிலேயேதான் பயில்கின்றனர். அவர்களுடைய முன்னேற்றம் நாம் அறிந்ததே.

பிற மொழியில் பயிலும்போது, அந்த பாடப் புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை மட்டுமே மனப்பாடம் செய்து தேர்ச்சி அடைவதே நமது மாணவர்களுக்கு பெரும்பாடாகிவிடுகிறது. ஆனால், தாய்மொழியில் படித்தால் எந்த நெருக்கடியும் இல்லாமல் பாடத்திட்டத்தில் உள்ளதையும் தாண்டி, சுயமாக சிந்தித்து, அவரவர்க்கு ஆர்வம் உள்ள துறையில் சாதிக்க முடியும்.

அதற்காக ஆங்கிலம் அறவே வேண்டாம் என்று சொல்லவில்லை. கணிதம், அறிவியல் போல ஆங்கிலமும் மற்றொரு பாடமாகவே இருக்க வேண்டும். அதில் உள்ள இலக்கணங்களை முழுமையாக கற்று, எந்த வழியிலும் அந்த மொழியைப் பயன்படுத்தும் திறனை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமைய வேண்டும்.

இதனால் மாணவர்கள் தன் திறன் முழுவதையும் ஆங்கில வழியில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்வதற்கே செலவிடுவது குறையும். தினமும் அதிகாலையில் இருந்து இரவு வரை பாடப்புத்தகங்களையே முதுகிலும் மூளையிலும் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருக்காது.

மது, புகை, ஈவ்டீசிங், சாலைவிபத்து உள்ளிட்ட தீமைகளுக்கு காரணம், அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள், அவற்றைத் தவிர்க்கும் வழிகள் போன்றவற்றை விளக்கும் வகையில் பள்ளிகளில் பொது பாடங்கள் உருவாக்க வழி செய்ய வேண்டும்.

வங்கி, அரசு அலுவலக நடைமுறைகள், சாலை விதிகள் ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் செய்முறைப் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

பாடத்திட்டத்தில் சமன்பாடு, அறிவியல் சூத்திரங்கள், இலக்கண விதிகள் போன்ற, மாற்றாமல் படிக்க வேண்டியவை மட்டும் மனதில் சுலபமாக பதியும் வகையில் எளிமையான பாடத்திட்டம் உருவாக்க வேண்டும். அவற்றிற்கு விளக்கம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று குறுகிய வட்டம் போட்டுவிடாமல், சொந்த நடையில் அவர்கள் பதிலளிக்க தூண்ட வேண்டும்.

மனப்பாடம் செய்யும் திறன் இல்லாத குழந்தைகள்தான் மதிப்பெண்கள் பெற முடியாமல் மக்குப் பிள்ளைகள் என்ற பெயரை சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நிச்சயமாக மற்ற திறன் ஏதோ ஒன்று இருக்கும். அதை வெளிக்கொண்டு வரும் வகையில் பாடத்திட்டம் அமைவது நல்லது.

பள்ளி அளவிலேயே கைத்தொழில், சுயதொழில் என்று ஒருவர் சொந்தக்காலில் நிற்கும் வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் மனப்பாட செய்யுள்கள் பாடத்திட்டத்தில் அவசியமா?(சமச்சீர் கல்வி)

திருக்குறள், நன்னூல், நாலடியார், நெடுநல் வாடை, கலிங்கத்துப் பரணி - ஆகிய பாடல்களின் சில வரிகளையாவது  அடி பிறழாமல் எழுதுமாறு தேர்வுகளில் கேட்கப் படும். அவர்களும் எழுதுவார்கள். ஆனால் பொருள் புரிந்து எழுதுவார்களா? என்ற கேள்விக்கு வேதனையுடன் இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

பாடல்களை படித்து புருந்து கொள்ளும் அளவுக்கு இத்தகைய விஷயங்கள் பாடத்திட்டத்தில் இருந்தால் போதும். அவற்றை அடி பிறழாமல் எழுதும் பயிற்சியை ஆய்வு மாணவர்கள் வேண்டுமானால் விருப்பத்தின் பேரில் செய்யட்டும். பள்ளி மாணவர்களின் தேர்வில் இந்த பாடல்களைக் கொடுத்து புரிந்து கொண்ட விஷயத்தை சொந்த நடையில் எழுத சொல்லுங்கள்.

அப்போதுதான் அந்த செய்யுளின் கருத்து ஒரு மாணவனின் மனதில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அறிய முடியும்.

இதில் வேறொரு நன்மையையும் இருக்கிறது.  இவற்றில் உள்ள பல நல்ல கருத்துக்கள் சிறு வயதிலேயே மனதில் பதிவதால் ஒருவன் வளர்ந்து பெரியவனாகும்போது சிறிதளவாவது தவறு செய்வதற்கு பயப்படுவான். அடுத்தவர்களுக்காக இல்லை என்றாலும் அவன் மனசாட்சி கொஞ்சம் யோசிக்க வைக்கும்.

பாடத்திட்டம் தயாரிப்பவர்களும் கொஞ்சம் யோசிங்க.

செவ்வாய், 24 நவம்பர், 2009

ஒரே பாடத்திட்டம் இருந்தால் மட்டும் சமச்சீர் கல்வியா? (சமச்சீர் கல்வி)

தமிழ் நாட்டில் தற்போதுள்ள நான்கு விதமான பாடத்திட்டங்களை மாற்றி பொதுவாக ஒரே முறை கல்வியாக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. அதற்கான வரைவு பாடத்திட்டத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.  அரசு ஒருபுறம் இந்த முயற்சியில் இருக்க நம் மக்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன?

ஒவ்வொருவரும் சமச்சீர் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்லும் கருத்து கந்தசாமியாகி விட்டார்கள்.  ஏதாவது சொல்ல வேண்டுமே என்று நான்  இந்த முயற்சியில் இறங்க வில்லை. நான் சொல்வது  நிஜமாகவே உருப்படியான யோசனையா என்ற சந்தேகத்துடன்தான் இப்போது எழுதுகிறேன்.

(வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் அரசால் வெளியிடப் பட்டுள்ளது. அதையும் பார்வையிட்டு விடுங்கள்)

நான் கல்லூரியில் பி.காம் முடித்த பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கே 75 வயதில் இருந்த ஒரு கணக்கு பிள்ளை என்னிடம் முதலில் என்ன சொன்னார் தெரியுமா?

பி.காம்., எம்.காம் அப்படின்னு பெருசா சொல்லிக்கிட்டு வர்றீங்க. கடைசியா இங்க எதுவும் செய்யத்தெரியல. எல்லாரும் என்னோட .............. அறுக்க வந்துடுங்க அப்படின்னு சலிப்பா பேசினார்.

அடுத்த நாளே அவர் அப்படி பேசினது தப்புன்னு ஒத்துகிட்டார். முதல் நாள் அவர் அப்படி பேசினதும் தப்பு இல்லை.  பாடத்தை படிச்சு முடிச்சவங்க கையில் சர்க்கரைன்னு எழுதுன பேப்பர்தான் அனுபவமா இருக்கு. அதை தின்னா இனிக்குமா? கழுதைன்னு பட்டம் தான் கிடைக்கும்.

ஒரு இடத்துல போய் வேலை செய்யறதுக்கு உள்ள அனுபவத்தை கல்வி கொடுக்குறது இல்லை. தொழில் கல்வியையும், விதிவிலக்குகளையும் விட்டுடுவோம்.

மனப்பாட கல்வி ஒரு இடத்துல வேலைக்கு போறவங்களை தடுமாற வெச்சுடுத்து.

மனப்பாடம் பண்ற முறையை எடுத்துட்டா எப்படி ஒருத்தனோட அறிவை எடை போடுறது...திறமை சாலிகளை கண்டு பிடிக்கிறதுன்னு  நீங்க கேக்குறது காதுல விழுதுங்க. அதுக்கு வழியை விளக்குறதுக்கு  முன்னால ஒரு செய்தியை சொல்லிடுறேன்.

என்கிட்டே அவர் இப்படி பேசினது தப்புதான்னு சொல்ல காரணம் என்னன்னு தெரியுமா?

எனக்கு கல்லூரியில கிடைத்த பேராசிரியர் புத்தகத்துல உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்யாம ஆறு தங்க விதிகளை மட்டும் வெச்சு எப்படி கணக்கு போடுறதுன்னு சொல்லிக் கொடுத்தார்.

கணக்குப் பதிவியல்ல உள்ள ஆறு தங்க விதிகளை மட்டும் மனப்பாடம் செய்தால் உலகத்துல உள்ள எந்த நிறுவனத்தோட கணக்குகளையும் போட்டு பேலன்ஸ் சீட் தயாரிச்சுடலாங்க. ஆனா அந்த விதிகளை எந்த ஒரு நிறுவனத்தோட அன்றாட கணக்கு நடவடிக்கையில  சரியா பொருத்திப் பார்க்குறதுலதான் வெற்றி அடங்கி இருக்கு.

இதுல அந்த ஆறு விதிகளை புரிஞ்சுகிட்டு  மனப்பாடம் செய்தால் போதும்.  அதை எப்படி பயன்படுத்துறதுன்னு விளையாட்டு போல தெரிஞ்சுக்கலாம். ஆனால் எல்லா நிறுவன கணக்குகளோட மாதிரியை வெச்சுகிட்டு மனப்பாடம் செய்தால் எவ்வளவு நேரம் வீண்.?

அவ்வளவு நேரம் செலவு செய்தாலும் எல்லாமும் மண்டையில ஏறணுமே?

இந்த மாதிரி ஒவ்வொரு பாடத்திலும் மனப்பாடம் செய்ய வேண்டியதும் கத்துக்க வேண்டியதும் தனித்தனியா இருந்தா மாணவர்களோட திறன் மனப்பாடம் செய்வதிலேயே கரைந்து போயிடாம வேறு பல சாதனைகளுக்கும் உதவும்.

அதனால்தான் ஒரே பாடத்திட்டம் மட்டுமே சமச்சீர் கல்வி இல்லை. மாணவர்களின் திறன் வீணடிக்கப் படாமல் முழுவதும் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளும் பாடத்திட்டம்தான் சமச்சீர் கல்வி என்பது என் கருத்து.

இன்னும் புரியலையா?

ஒரு கட்டிடத்தின் முதல் மாடிக்கு செல்ல படிகள் இருக்கும் போது அதன் வழியே செல்லாமல் வெளிப்புற சுவற்றில் பதிக்கப் பட்டிருக்கும் தண்ணீர்க் குழாயைப் பிடித்து மேலே ஏறி வருவதைப் போன்றது முழுவதும் மனப்பாடத்தை மட்டும் நம்பி உள்ள இப்போதைய கல்வி முறை.

மேலும் விஷயங்கள் அடுத்த பதிவில்.