Search This Blog

அப்பவே சொன்னோம்ல? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அப்பவே சொன்னோம்ல? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 டிசம்பர், 2009

அகன்ற கோணம் - நான் முதன் முதலில் வலைப்பூ ஆரம்பித்த போது சூட்டிய பெயர்

இதைப் பற்றிய சந்தேகம் இளைய பாரதம் வாசகர்களுக்கு வந்தது. அதற்கு மின்னஞ்சல் மூலமாக ஒரு வரியில்தான் விளக்கம் சொன்னேன். அப்பாடா...இந்த பதிவுக்கு ஒரு மேட்டர் கிடைச்சிடுச்சு.

தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பது குறுகிய பார்வை. நம்முடைய நலனுக்காக ஒரு செயல் நடைபெறும்போது யாருக்காவது நிச்சயமாக எதாவது ஒரு வழியில் சிறு பாதிப்பாவது இருக்கத்தான் செய்யும்.

அதைப் பற்றியும் யோசிப்பதே அகன்ற கோணம்.

நியாய விலைக் கடையில் எடை குறைவாகத்தான் பொருட்களை வழங்குவார்கள். சரியான எடை இருந்தது என்றால் அந்தப் பணியாளருக்கு மனதளவில் பிரச்சனை எதுவும் இருக்கக்கூடும். அவரிடம் கவனம் தேவை.

அங்கே, விவாதம் செய்து அல்லது சண்டை பிடித்தாவது சரியான அளவில் பொருள்களை வாங்குவது நம் உரிமை. இது சாதாரண பார்வை. நியாய விலைக் கடையில் உள்ள பணியாளர் ஏன் எடை குறைப்பு செய்கிறார்? மொத்தமாக பொருட்கள் கடைகளுக்கு வரும்போதே எடை குறைவாக இருக்கும். கடையிலும் எலி, மழை உள்ளிட்ட சில காரணங்களால் பொருட்கள் வீணாகலாம். அதை மேலதிகாரிகள் ஏற்க மறுக்கலாம்.

அல்லது வேறு சில காரணங்களுக்காக லஞ்சம் கேட்கலாம். இப்படி எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்.

நியாய விலைக்கடையின் பணியாளர் மட்டும் சரியாக இருக்க வேண்டும் என்பது குறுகிய கோணம். அவர் அப்படி நடக்கக் காரணமான அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என நினைப்பது அகன்ற கோணம்.

2010ம் ஆண்டு பொங்கலுக்குள் இது பற்றி விரிவான பதிவு எழுதுகிறேன்.

புதன், 16 டிசம்பர், 2009

விவசாயிகளின் உயிர் நாடியை ஒடுக்க நினைக்கலாமா? - மலரும் வேதனைகள்

(இந்த ஆதங்கம் 2007 ஏப்ரலில்)

சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக அரசு நிலம் கையகப்படுத்துவதில் முறையற்ற போக்கினால், மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் பல ஏழை விவசாயிகள் காவலர்களின் துப்பாக்கி குண்டுக்குப் பலியாகிவிட்டார்கள். இதையடுத்து அரசு தன் முடிவைக் கைவிட்டுள்ளது.

நீரைத் தேக்கி வைக்க அணை, சாலை வசதி போன்ற காரணத்துக்காக நிலம் சேகரிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை, இந்தியாவின் ஒரு பெட்டிக்கடையைக்கூட விடாமல் கசக்கிப் பிழியும் வரி, விதிகள் போன்ற எதுவுமே கட்டுப்படுத்தாது என்ற கொள்கையுடன்(?!) அரசு அமைத்து வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு இவ்வளவு சலுகைகளை வழங்கும்போது தரிசு நிலங்களைக் கையகப்படுத்தி புதிதாக போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளைச் செய்து தராமல், ஏழை விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரத்தைக் கையகப்படுத்தி அவர்களையும் நகர்ப்புறக் கூலிகளாக்க, அரசே முயற்சி செய்தால், அப்பாவி மக்களின் கதி என்ன?

அமெரிக்கா தன் நாட்டில் கோடிக்கணக்கில் விவசாயத்துக்கு மானியம் வழங்கிவிட்டு நம் இந்தியாவின் விவசாயிகளை ஒடுக்க நினைக்கலாமா?

இதெல்லாம் ஒருபுறமிருக்க, தீவிரவாதிகளுக்குக் கூட, மரண தண்டனை கூடாது என்று குரல் எழும் நேரத்தில், தங்களின் வாழ்வாதாரத்தைத் தர மறுத்த இந்தியக் குடிமக்கள் கொடூரப் படுகொலை செய்யப்பட்டது என்ன நியாயம்?

இத்தகைய போராட்டங்களை ஒடுக்க, இனியாவது அரசு மயக்க மருந்துகளைக் கொண்ட தோட்டாக்களைப் பயன்படுத்தி, அப்பாவி மக்களின் உயிர் பலியாகாமல் மிச்சம் வைக்கட்டும்.

ஒருசில கொழுத்த பணக்காரர்களை உலக பணக்காரர் பட்டியலில் மேலும் முன்னேற்ற, நந்திகிராம் மக்கள் பலியாக்கப்பட்ட அவலம், இந்தியா மீண்டும் அடிமையாகப்போகிறதா? என்ற கேள்வியையே கேட்க வைக்கிறது.

(இந்த ஆதங்கம் 2007 ஏப்ரலில்- ஆனால் இப்போதும் நிலைமையில் பெரிய மாற்றம் இல்லை என்பது போலத்தான் தெரியுது. )

செவ்வாய், 15 டிசம்பர், 2009

மாணவர்களின் நலன் காக்கப்படுமா? ( எங்க...கல்லூரி அதிபர்கள் மேலதான் அக்கறை அதிகமா இருக்கு!...ஆதங்கம் ஏப்ரல் 2007ல்)

அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அனுமதியில்லாமல் சுமார் 169 கல்வி நிறுவனங்கள் இருப்பதாகப் பட்டியலிட்டுள்ளார்கள். இவற்றில் படித்தால் கல்வித்தரம், வேலைவாய்ப்பு போன்ற பலவற்றிலும் பிரச்சனை என்று அறிவித்துள்ளனர்.

இணைய தளத்தில் சென்று பார்க்கும்போது இந்தப் பட்டியலைக் கவனிக்க முடிவது எல்லோராலும் இயலாத ஒன்று. எனவே அரசு, அந்த 169 கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஒவ்வொரு பள்ளியிலும் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது உண்மையான தகவல் என்பதால், பள்ளிகளின் நோட்டீஸ் போர்டில் ஒட்டுவதில் பிரச்சனை இருக்கப் போவதில்லை. தேர்வு முடிந்து போதுமான அவகாசம் இருப்பதால் எல்லா பள்ளிகளிலும் பட்டியலை ஒட்டி, மாணவர்களின் கல்வி, எதிர்காலம் என இவர்களின் நலன் காக்குமா?

இனிப்பான விஷம் - (ஒரு தீபாவளியின் போது ஏற்பட்ட தெளிவு)

தீபாவளி நேரத்தில் கடைகளில் இனிப்பு, கார வகைகளுக்கு ஆர்டர் கொடுப்பது கன ஜோராக நடைபெறும். அதிலும் குழந்தைகள் மிக அதிகமாக விரும்புவது டைமன் கேக்குகள் போன்ற சில வகைகளில் பளபளப்பாகத் தெரிய சில்வர் ரேக் எனப்படும் மெல்லிய படிவம் ஒட்டப்பட்டதைதான். அழகு ஆபத்தானது என்பது போல் ஒரு விஷயம் என்னை அதிர்ச்சியடையச் செய்தது.

ஆம்...! சில்வர் ரேக் எனப்படும் அந்த மெல்லிய பளபளப்பான படிமம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் ரசாயனக்கலவை நச்சுத்தன்மை வாய்ந்த ஒன்று என்பதால் அது நமது நரம்பு மண்டலத்தை மெல்ல மெல்ல பாதித்து இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு வியாதிகளை எற்படுத்தும் என்று மருத்துவத்துறையும் சுகாதாரத்துறை ஆய்வகமும் அறிவித்துள்ளது.

ஸ்வீட் கடை உரிமையாளர்கள் வியாபாரமே முக்கியம் என்று கருதுவதால் சில்வர் ரேக் என்ற வெள்ளிப் படிவத்தை ஒட்டுவதை நிறுத்தமாட்டார்கள். எனவே, அரசு - மக்கள் நலன் காக்க ஸ்வீட்டுகளில் இது போன்ற மெல்லிய ரசாயன படிமத்தை ஒட்டுவதைத் தடை செய்ய வேண்டும். அரசு பொது மக்களைக் காப்பாற்றுமா?

ஆபத்துக்கு வழிவகுக்கும் இ-வேஸ்ட் (பழைய மொபைலை குப்பைத்தொட்டியில் போடும்போது சிந்தித்தது)

இ - வேஸ்ட் எனப்படும் எலக்ட்ரானிக் குப்பைகளில் முதலிடம் மொபைல்போன்களுக்குதான். 2015-ம் ஆண்டில் மலைபோல் குவியும் என்றும், மற்ற எலக்ட்ரானிக் பொருள்களைவிட மொபைல் போன்களை மிக விரைவில் மாற்றிக்கொண்டே இருக்கும் கலாச்சாரம், அதிகரித்து வருவதையும் மகாராஷ்டிர மா நில சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரிய நிபுணர்குழு ஆய்வு மூலம் சுட்டிக்காட்டி உள்ளது.

சாதாரண குப்பைகளை முறையாக அள்ளி, மின்சாரம் தயாரிப்பு போன்ற ஆக்கப்பூர்வப் பணிகளுக்குப் பயன்படுத்தாமல், சுற்றுப்புறத்தைப் பற்றி அதிக அக்கறைப்படாமல் இருக்கிறோம். ஆனால் இ-வேஸ்ட் வேறு பல வகையிலும் நமக்கு ஆபத்தை வரவழைக்கலாம். எனவே அரசு முறையான ஆய்வை மேற்கொண்டு இ-வேஸ்ட்டை எப்படி ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்படுத்தலாம் என்று யோசிக்க வேண்டும். சுற்றுச்சூழல் பலவகையிலும் மாசுபட்டு வரும் நிலையில், இ-வேஸ்ட்டும் அதில் சேராமல் பார்த்துக்கொள்ளட்டும்.

மூணு வருஷத்துக்கு முன்னாலேயே ஒரு பத்திரிகையில பிரசுரமானதுங்க.

அப்பவே சொன்னோம்ல? - இப்ப எதுக்கு இந்த தலைப்புல பதிவு?

"அண்ணே...ஒரு விஷயமுமே இல்லாம நானே ப்ளாக் ஓப்பன் பண்ணிட்டேன். நீங்க எவ்வளவு பெரிய எழுத்தாளர்...(நிசமாலுமேங்க...) கண்டிப்பா நீங்களும் இந்த துறையில சாதிக்கணும் அப்படின்னு என்னைய உசுப்பேத்தி வலைப்பூ பற்றி எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்.

2008 நவம்பரில் தொடங்கி ஏகப்பட்ட பூவை வரைஞ்சு வரைஞ்சு அழிச்சுட்டேன். நம்ம புத்திதான் ஒரு இடத்துல ஒழுங்கா நிக்காதே. இப்ப என்ன மாயமோ மந்திரமோ தெரியலை... இளையபாரதம்னுங்குற இந்த பூ குருட்டாம் போக்குல ஒரு மாசமா நிலைச்சு நிக்கிதுங்க. ஒரு வருஷம் நான் வெச்சிருந்த தளத்தை நானும் ஒரு நண்பரும் மட்டும்தான் அப்பப்ப பார்த்துகிட்டு இருந்தோம்.

பூ அட்ரஸ் திருப்தி அளிக்காம (இதுல நியூமராலஜி வேற) அடிக்கடி மாத்துனதுல எனக்கே சில சமயம் மறந்துடுச்சுங்க. அப்படி இப்படின்னு 2009 நவம்பர் கடைசி வாரத்துலதான் இணைய உலகத்துல நானும் இருக்கேன்னு சிலருக்கு தெரிஞ்சுது.

ஆனா கடந்த சில ஆண்டுகளாவே சிறுகதை, துணுக்கு அப்படி இப்படின்னு சமூக அக்கறை உள்ள ஆளாத்தாங்க அலைஞ்சேன்.

பத்திரிகைகள்ல பிரசுரமான இதை எல்லாம் வலைத்தளத்துல பதிக்கணும்னு தோணுச்சு.(நம்மால கல்வெட்டுல எல்லாம் செதுக்க முடியாதுங்க.)

இதுதாங்க இந்தப் பதிவோட வரலாறு.

அப்பவே சொன்னோம்ல? லேபிள்ல இந்த மாதிரி நான் சிந்திச்சதெல்லாம் தொடர்ந்து வரும் .