Search This Blog

தமாசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமாசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 டிசம்பர், 2009

இரண்டடிக்கும் குறைவான இடைவெளியில் இளம்பெண் - நிம்மதியான பயணம்...


வெளிநாடு, வெளிமாநிலம் போறவங்க மட்டும்தான் பயணக்கட்டுரை எழுதணுமான்னு ரொம்ப நாளா யோசிச்சுகிட்டே இருந்தேன். ஏற்கனவே ரொம்ப அதிகமா யோசிச்சு முன் தலையில ஒளி பிரதிபலிக்கிறதெல்லாம் வேற விஷயம்.

வெளியூர் போயிருந்த அம்மாவை மதுரைக்கு வர சொல்லிட்டு 24 டிசம்பர் 2009 காலை 5 மணிக்கு நானும் திருவாரூர்ல பஸ்சுக்குள்ள ஏறிட்டேன். ஏற்கனவே இரண்டரை ஆண்டு, ஒன்னரை ஆண்டு இடைவெளியில அவங்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து ரெண்டு கண்ணுக்கும் ஃபோல்டிங் லென்ஸ் வெச்சாச்சு.

இப்ப ஒரு கண்ணுல சின்ன பிராப்ளம். அதுக்காகதான் இந்த மதுரை பயணம். திருவாரூர்ல இருந்து போகும்போது தஞ்சை ரயில் நிலையத்து முகப்புல வெச்சிருந்த ஒரு விளம்பரப் பலகை "கரெக்ட்...விளம்பரம்னா இப்படித்தான் இருக்கணும்." அப்படின்னு வாய்விட்டு சொல்ல வெச்சுதுங்க.

நொடிக்கணக்குல செல்போன் கட்டணப் போட்டி ஆரம்பமானதும் ஒரு நிறுவனம்

"இப்ப எங்க இருக்க?"

"கிளாஸ்ல"

இப்படி சின்ன சின்ன விஷயத்துல சந்தோஷமா பேசுங்கன்னு தொலைக்காட்சிகள்ல கூவுனுச்சு. படிக்கிற புள்ளைங்க வகுப்புல இப்படி பேசுறதை ஊக்குவிக்கும் விதமா இந்த விளம்பரம் இருந்ததால எனக்குப் புடிக்கலை.(உனக்கு பிடிக்கணும்னு எவன் சொன்னான்.)

அதே நிறுவனம்,
***********

"எங்க வரணும்.?"

"ரெண்டாவது பிளாட்பாரத்துக்கு."

**********


"எங்க நிக்கிற?"

"புக் ஸ்டால்ல."

***********

"டிக்கட் கன்ஃபர்ம் ஆயிடுச்சா?"

"இல்ல...வெயிட்டிங் லிஸ்ட்டுதான்."

**********

"எந்த கோச்?"

"S 10"

**********

இப்படி சின்ன சின்ன விஷயத்தை கட்டணம் பற்றி  கவலைப்படாம பேசுங்க...ஏன்னா, இப்ப நீங்க பேசுற நொடிகளுக்கு மட்டுமே கட்டணம். அப்படின்னு விளம்பரம் விளம்பரம் வெச்சிருந்தாங்க.

ஒரு நிறுவனத்தை வளர்க்க விளம்பரங்கள் அவசியமே. அந்த விளம்பரங்கள் மக்களுக்கும் நல்ல திசையைக் காட்டுறதா இருக்கணும்.

நிறுவனத்தோட பேர் என்னன்னுதானே கேட்டீங்க?...நான் எழுதுற பிளாக்குல காசு வாங்காம ஏன் அவங்க விளம்பரத்தைப் போடணும்?

******************

அடுத்து என் கவனத்துல அதிகமா பதிஞ்ச விஷயம் மேலூர் புறவழிச்சாலை. மதுரை - திருச்சி சாலை நான்கு வழிப்பாதையாக்குற வேலை முடியுற நிலையில இருக்கு. ஆனா அதுக்குள்ள சுங்கம் வசூலிக்கிற டோல்கேட் அமைக்கும் பணி நிறைவடைஞ்சு கல்லாப்பெட்டியைத் திறந்து வெச்சுடுவாங்க போலிருக்கு.

அது சரி...இது எந்த நாடு...இந்தியா. ஒருத்தர் பணம் கட்டலைன்னா அடுத்த நாளே ஒரு சேவையை நிறுத்திடுவாங்க. ஆனா நீங்க அதன் பிறகு பணம் கட்டினா கூட ஒரு வாரமோ, ஒரு மாசமோ ஏன் ஒரு வருஷம் கழிச்சு...இல்லன்னா அந்த சேவை கிடைக்காமலேயே கூட போகலாம்.

விட்டது தொல்லை. அந்த நாட்களுக்கு செலவாவது மிச்சம் அப்படின்னு உங்களை நிம்மதியா இருக்க விட்டுடுவோமா?... பணம் கட்ட சொல்லி மாசம் மாசம் ரொம்ப சரியான தேதிக்கு பில்லை மட்டும் அனுப்பிகிட்டே இருப்போம். நாங்க சுறுசுறுப்பா வேலை செய்யலைன்னு நீங்க சொல்லிடக்கூடாதுல்ல.

இந்த சேவை எனக்கு வழங்கப்படுறதை நிறுத்தி நாற்பது வருஷமாச்சே...அப்படின்னு நீங்க பாட்டுக்கு நம்ம முதல்வர் மாதிரி கடிதம் எழுதிகிட்டே இருக்க வேண்டியதுதான். அதுக்கு மட்டும் எங்களை பதில் போட வெச்சிடுங்க...சவாலுக்கு சவால்...இதுதான் இன்றைக்கு பல அரசு, தனியார் சேவை நிறுவன குளறுபடிகள் செய்வதன் உச்ச கட்டம்.

அநியாயமா பணம் கட்ட சொல்லி பில் வந்தா அதைக் கட்டாம இருக்க முடியாதா?

ஏன் முடியாது... அநியாயத் தொகையை மட்டுமில்லை. நியாயமான தொகையையும் முழுசாவே ஏப்பம் விட்டுடலாம். எல்லாம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துதான்.

விலை வாசி ஏறிப்போச்சே...நீங்க கொடுக்குற ஐநூறு  ஆயிரத்தை வெச்சு அதிகாரிகள் எல்லாம் கோடிக்கணக்குல சொத்து வாங்குறதுக்கு எத்தனை பிறவி எடுக்குறது...

அவங்களுக்கே நீங்க லட்சக்கணக்குல லஞ்சம் கொடுக்கணும்னா, குறைந்தபட்சம் கோடிக்கணக்குல ஏமாத்துனாதான் முடியும். வியாபாரம் கட்டுபடியாகனுமில்ல?...

ஆயிரம் கட்டாதவனுக்கு ஆப்பு வெக்கிறதும், ஆயிரக்கணக்கான கோடி கட்டாதவனுக்கு மாலை மரியாதை பண்ணி அடுத்த கடன் அல்லது சேவைக்கு ஏற்பாடு செய்யுறது ஏன்னு இப்பவாச்சும் புரியுதா?...ஊழலுக்கும் வரி ஏய்ப்புக்கும் ஒரு மரியாதை இருக்கு. அதை புரிஞ்சுக்குங்கப்பா...

ஆமா... நான் எங்க இருக்கேன்...(மதுரை போற பஸ்சுலதான்...பத்து ரூபா அரசாங்கத்தை ஏமாத்த தெரியலை... உன்னை எல்லாம் மதுகோடா மாதிரி

ஆஸ்பத்திரியிலயா வெக்க முடியும்?)

எதுக்கு சொல்ல வந்தேன்னா...இன்னும் கொஞ்ச நாள்ல உங்க வீட்டை விட்டு வெளில வந்தாலே இது தனியார் காண்ட்ராக்ட் மூலமா போட்டது. நடக்கணும்னா அம்பது ரூபா கொடுன்னு கேட்கதான் போறாங்க.

அதுக்கு முன்னோட்டம்தான் ரோட்டுக்கு ரோடு இந்த சுங்கம் வசூல். முப்பதாயிரம் டன் நாற்பதாயிரம் டன் வரை லாரியில சுமை ஏற்றிகிட்டுப் போய் சாலையை வீணடிச்சுட்டா பிறகு மறுபடி முதல்லேர்ந்து ஆரம்பிக்க எங்க போறதுன்னு நீங்க கேட்குறது புரியுது.

இதுல அமைச்சர்லேர்ந்து வட்டம் மாவட்டம் வரை பெரிய ஆளுங்க கோடீஸ்வரனாயிட்டே இருக்காங்க.

அப்ப என்ற கதி? இப்படியெல்லாம் கேள்வி கேட்கப் பிடாது...திருவோடுதான்...அதையும் அவங்க புடுங்கிட்டா ஏன்னு கேட்க கூடாது. இதை எல்லாம் பார்த்துட்டு அங்க எதாவது நான் வாயைத் திறந்தேனா?...நான் பாட்டுக்கு வீட்டுல வந்து உட்கார்ந்து பிளாக்ல எண்ட்ரி போட்டுகிட்டு இருக்கேன்ல...இப்படித்தான் பொழைக்கிற வழியைக் கத்துக்கணும்.

அரசுப் பணத்துல போட்ட சாலையில கூட சுங்கம் வசூல் செய்ய தனியார் குத்தகைக்கு விட்டுடுறாங்க. இதுல எவ்வளவு வசூல், எவ்வளவு ஒப்பந்தத் தொகை அப்படின்னு எதுவுமே வெளிப்படை இல்லை.

இது தவிர, இரவு நேரங்கள்ல கார், வேன் இது மாதிரி வாகனங்கள்ல பயணம் செய்யுற பெண்கள் கிட்ட டோல்கேட் ஆளுங்க பாலியல் தொந்தரவு கொடுக்குறதாவும் புகார் இருக்கு.

நான் என்ன சொல்றேன்னா...எவ்வளவு பணம் வசூலாகுதுன்னு வெளிப்படையா எல்லாரும் தெரிஞ்சுக்குறபடி செய்துட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்துடும்.

 உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை?ன்னு யாருப்பா சவுண்ட் விடுறது?

ஒரு நாடு நல்லா இருக்கணும்னா ஒரு ஊர் மட்டும் துன்பம் அனுபவிக்கிறதோ, அழியிறதோ தப்பில்லைன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. நம்ம அரசியல் வியாதிங்க அதுல சின்ன திருத்தம் பண்ணிட்டாங்க. நாலு குடும்பம் நல்லா இருக்கணும்னா நாடு அழிஞ்சா தப்பே இல்லை...- இதைக் கேட்கும்போதே எவ்வளவு கொடூரமா இருக்கு?

இப்ப இந்தியாவோட பயணம் இந்தப் பாதையிலதான் போய்கிட்டு இருக்கு.

நீங்க உடனே சாதனைகளோட பட்டியலைப் படிக்காதீங்க. பால்ல தண்ணீரைக் கலக்கலாம். பெரிய  பாதிப்பு வெளியில தெரியாது. ஆனா சிலர் தண்ணியில பாலைக் கலந்தாக் கூட பரவாயில்லைங்க...விஷத்தல்ல கலக்குறாங்க. நினைச்சுப் பார்க்கும்போதே பகீர்னுங்குது.

@@@@@@@@@@@@

தெலுங்கானா கோரிக்கையால ஆந்திராவே அவதிப்பட்டுகிட்டு இருக்கு. நாணயம் மாதிரி இந்தப் பிரச்சனைக்கும் ரெண்டு பக்கம் உண்டு. அதாவது நன்மை - தீமை. அதனால அவங்க கோரிக்கை நியாயமா இல்லையான்னு இப்ப நான் கருத்து சொல்லப் போறது இல்லை.

ஆனா வன்முறை நிரந்தரத் தீர்வு இல்லைன்னு மட்டும் புரியுது.

எதாவது ஒரு பிரச்சனைன்னா பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கிற போக்கு இப்ப மறுபடி அதிகமாயிருக்கு. இதுக்கு முக்கிய காரணம், கூட்டம்தான். ஒருத்தனோட அடிமனசுல இருக்குற வன்முறை எண்ணம் இந்த மாதிரி கலவரங்களின் போது ரொம்ப சுலபமா வெளிவந்துடுது.


நேற்றும் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நாங்க வந்துகிட்டிருந்த பேருந்துக்கு பக்கத்துல வந்த மற்றொரு பேருந்தை பெரிய கும்பலே சூழ்ந்துடுச்சு. பஸ்சுக்குள்ள ஏறி டிரைவர், கண்டக்டரை அடிச்சா கேஸ் ஸ்ட்ராங்கா ஆயிடும்னு பயந்த கும்பல், யடேய்... கீழ இறங்குடான்னு கத்தினாங்க. ஆனா அவங்க ரெண்டு பேரும் இறங்கவே இல்லை.

அந்த அரசுப்பேருந்து எந்த வண்டியிலயாவது மோதிட்டுதா இல்ல வேற எதுவும் பிரச்சனையான்னு  எனக்கு தெரியலை. ஆனா இந்தப் போக்கு மிகவும் தவறானதுன்னு மட்டும் புரியுது.


அவங்க செய்தது மட்டும் சரியான்னு நீங்க கேட்கலாம். எந்த ஓட்டுநரும் அலட்சியமாக இருந்திருக்கலாமே தவிர விபத்தை ஏற்படுத்தி உயிர்களைப் பலியாக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் என்பது பொதுவான கருத்து.

அந்த அலட்சியத்தைப் போக்கும் விதமாகத்தான் தண்டனை இருக்க வேண்டுமே தவிர மேலும் சில உயிர்களை பலியாக்கும் வகையில் நாம் நடந்து கொள்ளக் கூடாது.

சட்டத்தின் கையிலிருந்து எப்படியும் தப்பிவிடலாம். ஆனால் இந்த மக்களின் கையில் சிக்கினால் மரணம்தான் என்ற அச்சமே அவர்கள் இருவரையும் அங்கிருந்து ஓடச் செய்திருக்கிறது. இல்லை என்றால் மேலும் நாலு குழந்தைகளையாவது காப்பாற்றி இருக்கலாம் என்பது நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்ளும் உண்மை.

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலும் பேருந்தையும், அந்த ஓட்டுநர், நடத்துனரையும் அடித்து நொறுக்கும் ஆவேசத்துடன் நெருங்கினார்கள். அப்போது அங்கே வந்த போலீசார் கூட்டத்தை வீடியோ, புகைப்படம் எடுக்கத் தொடங்கியதும் பாதிப்பேர் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

நாங்கள் பயணம் செய்த பேருந்து கிளம்பி விட்டதால்  என்ன பிரச்சனை, என்ன ஆனது என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. துணிச்சலாக குற்றத்தை ஒப்புக்கொண்ட வரலாறெல்லாம் சுதந்திரப்போராட்டத்தில்தான். ஏனென்றால் அந்த நோக்கத்தில் ஒரு நியாயம் இருந்தது. அப்படியும் வன்முறையை யாரும் விரும்பவில்லை. ஆனால் இப்போது நிகழும் கலவரங்களில் ஈடுபடுபவரெல்லாம்  நானும் தப்பு செஞ்சேன்னு யாருக்கு தெரியப்போகுது...என்ற தப்பித்தல் மனோபாவத்தில் மட்டுமே இப்படி குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். கூகிள் எர்த் மூலமா கலவரத்துல ஈடுபடுற ஆளுங்களை அடையாளம் கண்டு கடுமையா தண்டிக்கிற தொழில்நுட்பம் இருந்தா ரொம்பவே நல்லதுன்னுதான் தோணுது.

மக்களின் பிரச்சனைக்கு காரணமான சில  அரசியல் வியாதிங்களோட  சொத்துக்களை சேதப்படுத்துறவங்களைப் பற்றிய விவரங்களை மறைக்கிற அறிவு அந்த தொழில் நுட்பத்துக்கு இருந்தா அதுதாங்க எனக்கு கடவுள். அரசியல்வாதிகளோட ஊழல் சொத்துக்கள் நொறுங்கி நாசமாயிடும்னா யாருங்க வன்முறையைத் தூண்டுவாங்க?
********************

ரொம்பவே சீரியசா பேசிட்டேனா...பயணத்தை எனக்கு இனிமையாக்குன விஷயம் பற்றி சொல்லிடுறேன்.

நான் இன்னும் சின்ன புள்ளைதாங்க. (ஆரம்பிச்சுட்டான்யா...)காலை நேரத்துல பேருந்துப் பயணம் எனக்கு வாந்தியை வரவழைச்சுடும். திருவாரூர்ல இருந்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் 65 கி.மீ. தூரம். ஆனா முப்பது கிலோ மீட்டர் தூரம் போறதுக்குள்ள வாந்தி கியாரண்டியாத்தான் இருந்துச்சு. இப்ப நிலைமை கொஞ்சம் தேவலாம். ஆனா ரொம்ப அசதியா இருக்கும்.

இரவு நேரப் பயணம் இந்த மாதிரி தொந்தரவு தந்ததில்லை. அது ஏங்க? அது மட்டுமில்லை. சில சமயம், பரமக்குடியிலேர்ந்து அதிகாலை நாலுமணிக்கு திருச்சி போற பஸ்சுல ஏறி சிவகங்கை, திருப்பத்தூர், புதுக்கோட்டை (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்) தஞ்சாவூர் வழியா திருவாரூர் ஆறே மணி நேரத்துல வந்துடுவேன். அப்பவும் வாந்தி தொந்தரவு இருந்ததில்லை.

இதுக்கு என்ன காரணம்னுதானே கேட்டீங்க?...

தெரியலையேப்பா...தெரியலையே....

எதுக்கு இந்த விஷயங்களை சொல்றேன்னா, பேருந்துப் பயணம் ஒத்துக்கொள்ளாத ஆசாமிங்களுக்கு ஒரு இருக்கையில இருந்து இன்னொரு இருக்கைக்கு மாறுற விஷயம் இருக்கே...அது கூட இமயமலையில இருந்து தலைகீழா(?!) இறங்குற மாதிரி.

யோவ்... நீ என்ன .................................................கட்சித் தலைவரா.ஒரு ஊர்ல இருந்து இன்னொரு இடத்துக்குப் போறதுக்குள்ள நாலு இருக்கைக்கு மாறினாதான் மரியாதைன்னு நினைப்பு அப்படின்னு  திட்டாதீங்க.

உடம்பு இந்த கண்டிஷன்ல இருக்கும்போது பஸ்சுல இருக்குற ஐம்பத்தேழு இருக்கையிலயும் மாறி உட்காரணும்னு வேண்டுதலா என்ன? நம்ம நாட்டுக் கலாச்சாரம் செய்யுற அக்கப்போர்தான் இது. "சார்...கொஞ்சம் மாறி உட்காருங்களேன்..." அப்படின்னு ஒரு அழகான பொண்ணோ மரியாதைக்குரிய தாய்க்குலமோ யார் சொன்னாலும் மாறி உட்கார்ந்துக்க வேண்டியதுதான். இல்லன்னா நடத்துனர் வந்து சாவுகிராக்கின்னு ஒரு புது விருது கொடுத்து நம்மளை இருக்கையை விட்டு (முரண்டு பிடிச்சா பேருந்தை விட்டே) நகர்த்திட்டுதான் மறுவேலை பார்ப்பார். ஏன் இந்த வம்பு...( சுனாமி இந்தோனேஷியாவுல பஸ்...ச்சை..கப்பல் ஏறின உடனேயே சென்னை எல்.ஐ.சி பில்டிங் மொட்டை மாடிக்கு போயிடுற அளவுக்கு நாங்க எல்லாம் அப்பாவி.)

திருமலை படத்துல விஜய் கூட இண்டர்வியூவுக்கு கிளம்புற விவேக்கை, டேக் டைவர்ஷன் அப்படின்னு சொல்லியே திருப்பதியில கொண்டுபோய் விட்டுடுவாங்க. ஆறு மாசத்துக்கு முன்னால இப்படித்தான் தஞ்சாவூர்ல இருந்து திருவாரூர் வர்றதுக்குள்ள (65 கி.மீ தூரம்தான்) டிரைவருக்கு பின் சீட்டுல உட்கார்ந்து இருந்த நான் இப்படி இடம் மாறி மாறி கடைசி வரிசைக்கு வந்துட்டேன். ஏற்கனவே நான்கு மணி நேரம் பயணம் பண்ணி வந்த எனக்கு இந்த அனுபவம் எப்படி இருந்திருக்கும்?(இதுல லக்கேஜ் வேற)

கடைசி வரிசைக்கு போகும்போது "இனிமேலும் பின்னால போகச் சொன்னா கண்ணாடியை உடைச்சுட்டு கீழ குதிக்க வேண்டியதுதான்" அப்படின்னு சொன்னேன். அதுக்கு அந்த யுவதி (சரித்திர நாவல்கள் அதிகமா படிச்சதோட பாதிப்பு) லேசா சிரிச்சதோட சரி...

ஆறு மாசத்துக்கு முன்னால நடந்தது இருக்கட்டும்... நேத்து என்ன ஆச்சுன்னுதானே உங்க கேள்வி?

போகும்போது ரெண்டு பேர் உட்காருற இருக்கையில மதுரை வரை ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் உட்கார்ந்து வந்ததால பிரச்சனை இல்லை.

திரும்பி வரும்போது அம்மா வெளியூர்ல இருந்து எடுத்துவந்த பைகள் இருந்ததால மூணு பேர் சீட்டுல உட்காரவேண்டியதாயிடுச்சு. என்ன ஆகப் போகுதோன்னு பயந்தேன். (காலை நாலு மணியிலேர்ந்து தூக்கம் இல்லை. மருத்துவமனை பகுதியில சரியான சாப்பாடும் இல்லை. வயிறை நிறைக்க நினைச்சு சாப்பாடு ஒத்துக்காம வயிறு காலியாக ஆரம்பிச்சுட்டா என்ன பண்றதுன்னு ஒரு குழப்பம். அதனால வயிறு காலி. டெஸ்ட் கிரிக்கெட்ல நாலு நாளா தொடர்ந்து பீல்டிங் பண்ணின மாதிரி ஆயிட்டேன்.

ஜன்னல் ஓரத்துல வாந்தி எடுக்க வசதியா(?!) நான் உட்கார்ந்துட்டேன். பக்கத்துல அம்மா. அடுத்ததா ஒரு இளம்பெண் (கல்லூரி மாணவியாத்தான் இருக்கும்.) ரெண்டு பெரிய பைகளோட வந்து உட்கார்ந்து புதுக்கோட்டைக்கு பயணச்சீட்டு வாங்கியதும் அப்பாடா...மூணு மணி நேரத்துக்கு கவலை இல்லைன்னு நிம்மதியாச்சு.

அந்தப் பொண்ணோட புண்ணியத்தால சீட் டைவர்ஷன் அப்படின்னு யாரும் அக்கப்போர் பண்ணலை. நானும் நிம்மதியா தூங்கினேங்க.(அம்மா பக்கத்துல இருக்கும்போது வேற என்ன பண்றது.)

அந்தப் பொண்ணு புதுக்கோட்டையில இறங்கினதும் சுப்பிரமணியபுரம் சுவாதி மாதிரியெல்லாம் திரும்பிப் பார்க்கலைங்க. (உன்னைய மூணு மணி நேரம் ஒரே இடத்துல உட்காரவிட்டதே பெரிசு. இதுல என்ன லுக்கு?)

நான் அடுத்த ஷெட்யூல் தூக்கத்தைக் கண்டினியூ பண்ண ஆரம்பிச்சேன்.

கல்லூரியில படிச்சப்ப முதல் சில வாரங்கள்தான் நான் மாணவிகள் யார்கிட்டயும் பேசலை. அப்புறம் சக மாணவிகள்கிட்ட பேச தயக்கமே இல்லைங்க. ஆனா பஸ்சுல பழக்கமில்லாத ஒரு பொண்ணு ஒரு ஆள் இடைவெளியில வந்து உட்கார்ந்ததும் நம்ம இதயத்துடிப்போட வேகம் கொஞ்சம் அதிகமாத்தான் இருந்துது. இந்த லட்சணத்துல  வெளிநாடு மாதிரி ஆணும் பெண்ணும் பக்கத்துல உட்கார்ந்து போற அளவுக்கு பக்குவப்பட நாளாகும்னுதான் தோணுது. (நன்கு பழகியவர்களையும் சில நகரங்களின் பழக்கத்தையும்  சொல்லவில்லை. அறிமுகம் இல்லாத ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் விஷயத்தில் எல்லாருடைய மனதிலும் ஒரு குறுகிய வட்டம் இருந்து கொண்டு தடை செய்வதைத் தவிர்க்க முடியாது.

அப்போ என்னை மாதிரி மயக்கம் வர்ற பார்ட்டிங்களுக்கு என்னதான் வழி?

ரெண்டு பேரா போனா, இடப்பக்க இருக்கையில யாரும் இடம் மாற சொல்ல மாட்டாங்க.

தனியா போனா?

வேற வழி...சீட் டைவர்ஷன்தான்.

புதன், 23 டிசம்பர், 2009

ச்சே...இப்படித்தானா போய் அசிங்கப்படுறது?...(எல்லாம் வேட்டைக்காரன் மேட்டருதான்...)


விஜய்க்கு முதன்முதலா மெகா ஹிட் படம்னா அது பூவே உனக்காகதான். ஆனா நான் அதுக்கு முன்னாலயே அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கேன். செந்தூரபாண்டி படத்தை கேபிள் டி.வி யில பார்த்ததுக்கு அப்புறமும் தியேட்டர்ல போய் ரசிச்சுருக்கேன்.(?!)

அப்புறம் ரசிகன்,தேவா - இந்தப் படங்களை எல்லாம் முதல் நாளே போய் பார்க்குறதுல ஒரு ஆர்வம். தியேட்டர் உரிமையாளர் குடும்பத்துடனே நட்பு என்பதால் அப்போதெல்லாம் சில சமயம் பணம் கொடுப்பேன். பல நேரங்களில் பெயரளவு கணக்குதான்.(காந்தி கணக்குன்னு சொல்லி அவரை அவமரியாதை செய்ய எனக்கு விருப்பம் இல்லை.)



ஆனா வரிசையில நின்னு அனுமதிச்சீட்டு வாங்கி, கவுண்டர் வழியா போனதே இல்லை. திரையரங்க உரிமையாளர், ஊழியர்கள் போற வழிதான். சின்ன வயசுல இதனால ஒரு சந்தோஷம் இருந்துச்சுங்க.


ஆனா கடந்த பத்து ஆண்டுகள்ல திரையரங்கத்துல போய் படம் பார்த்தது ரொம்பவே குறைவு. தியேட்டர்காரங்க படத்தை திரையிட பெரிய தொகை கொடுக்குறதால இலவசமா நம்மளை உள்ளே விட்டா கட்டுபடியாகாது. அவங்களை தர்மசங்கட நிலையில நிறுத்திடக்கூடாது.

சின்ன ஊர்லேயே சாதாரண நாட்கள்ல டிக்கட் ஐம்பது ரூபாய்னு சொல்லுவாங்க. இப்பவும் என்னால ஒரு நாளைக்கே ஐம்பது ரூபாய் சம்பாதிக்க முடியலை.அவ்வளவு பணம் கொடுத்து பார்க்குற அளவுக்கு படங்களும் வர்றது இல்லை. அப்புறம் ஏன் கடன் வாங்கி தலைவலியை பர்சேஸ் பண்ணணும்ன்னு என் மனசாட்சி ஒரு கேள்வி கேட்டுச்சு. அதனால அதிகமாவே அவாய்ட் பண்ணிட்டேன்.



இப்ப வேட்டைக்காரன் விஷயத்துக்கு வர்றேன். எங்க ஊர்ல உள்ள பத்திரிகை செய்தியாளர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு நண்பர்கள்தான். அதுல ஒருத்தர்கிட்ட இன்னைக்கு காலையில பேசிகிட்டு இருந்தேன்.

அவருதான் தமிழகத்தின் வட மாவட்டத்துல வேட்டைக்காரன் பார்க்கப் போன ஒரு ஆள் அசிங்கப்பட்டு காமெடி பீசானது பத்தி சொன்னார்.

அவரு எதோ ஒரு தொண்டு நிறுவன பொறுப்பாளரா இருக்காராம். அந்த பழக்கத்துல ஒரு தியேட்டர்ல இலவச அனுமதியிலதான் எப்பவுமே படம் பார்ப்பாராம். வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன அன்னைக்கும் அப்படியே போயிருக்காரு. போட்ட பதினஞ்சு லட்சம் பாயாசமாயிடுமோன்னு கவலையில இருந்த உரிமையாளர், இலவசமா உள்ளே நுழைய முயன்ற ஆள்கிட்ட,"யோவ்...நூறு ரூபா காசைக் கொடுத்துட்டு உள்ள போய்யா."ன்னுருக்கார். இப்படி சிக்கிடும்போது அவரைச் சுத்தி நின்னவங்க என்ன நினைச்சுருப்பாங்கன்னு யோசிச்சேன். நீங்க சொல்லுங்க...காமெடி பீசுன்னுதானே சொல்லுவாங்க?

ஒருத்தர் என்ன மனநிலையில இருப்பாங்கன்னு ரொம்ப சுலபமா கண்டுபிடிச்சுடலாங்க. நீங்க செய்யப்போற காரியத்தை அவரு செய்தா நாம என்ன மனநிலையில இருப்போம்னு யோசிச்சா போதும். அந்த காரியத்தை செய்யலாமா வேணாமான்னு நம்ம மனசாட்சி சொல்லிடும்.

அது பேச்சைக் கேட்டு நடந்தா நேரங்காலம் தெரியாம யார்கிட்டயாவது சிக்கி மொக்கையாகுறதுலேர்ந்து தப்பிச்சுடலாம். ஒரு திரையரங்கத்துல எனக்கு இலவச பாஸ் எழுதியே கொடுத்திருந்தாங்க. அதை வெச்சு 1999ம் ஆண்டு ஐந்து அல்லது ஆறு படங்கள் பார்த்திருப்பேன். பிறகு அதை நான் பயன்படுத்தியதே இல்லை. இது வேண்டாமேன்னு மனசுதான் சொல்லுச்சு. அதனால அடுத்தவங்க சொல்லி மொக்கையாக்க வேலையில்லை.

மற்றவங்க அனுபவத்துல இருந்தும் பாடம் கத்துகிட்டா ரொம்ப நல்லது. ஏன்னா, நம்ம அனுபவத்துல இருந்து பாடம் கத்துக்கணும்னா எத்தனை பிறவி எடுத்தாலும் வாய்ப்பே இல்லைன்னு ஒரு பழமொழி இருக்கு. நான் அதன்படி நடக்குற ஆள்.

அப்ப நீ எதுலயுமே சிக்கலையான்னுதானே கேட்குறீங்க...இதைவிட பெரிய மொக்கையாகியிருக்கேங்க. அந்த அனுபவத்தை அடுத்த வருஷம் எழுதுறேன்.

உங்கள் சிந்தனைக்கு ஒரு சின்ன உதாரணம். கல்லூரியில படிக்கும்போது (ஆஹா...ஆரம்பிச்சுட்டான்யா...ஆரம்பிச்சுட்டான்யா...) ஐந்தாவது செமஸ்டர்ல ஒரு குறிப்பிட்ட அக்கவுண்ட் பேப்பர்ல ஒரு சில மாணவிகள் நூற்றுக்கு நூறு எடுத்திருந்தாங்க. நிறைய பேர் எண்பது, தொண்ணூறுன்னு எல்லாம் எடுத்திருந்தாங்க. ஆனா நான்

ஐம்பத்தொன்னுதான் எடுத்தேன். (கல்யாண மண்டபத்துல மொய் எழுதுன பேனாவால பரிட்சை எழுதுனியா)

ஆனா ஷேர் மார்க்கெட் தொடர்பான பாடத்துல எல்லாரும் ரொம்பவே திணறுனாங்க.

நான், எண்பத்தி ரெண்டு மார்க் எடுத்தேன். (என் வழி தனி வழி...குறைவான மார்க் எடுத்தாலும்  தனியா...அதிகமா மார்க் எடுத்து பேராசிரியர்கள் கிட்ட பாராட்டும், சக மாணவர்கள், மாணவிகள்கிட்ட வயிற்றெரிச்சல் வாங்கினாலும் தனியாதான்.)

அதெல்லாம் சரி...வேட்டைக்காரன் பார்த்தியா இல்லையான்னுதானே கேட்டீங்க...நான் சிக்க மாட்டேனே...

செவ்வாய், 22 டிசம்பர், 2009

சாரி அங்கிள்...அய்யய்யோ...வயசாகிப்போச்சா? (இது ஒரு மழைக்காலம்)

போனவாரத்துல யாராவது புயல் மையம் கொண்டிருக்குன்னு சொன்னா எங்க உங்க வீட்டு வாட்டர் டேங்க்லயான்னு நக்கலா கேட்டேன். திருவாரூர்ல அப்போ விடாம மழை பெய்தாலும் காத்து இல்லீங்க...ஒரு வழியா வார்டு எபிசோடு முடிஞ்சுது.

இப்ப ரெண்டு நாளைக்கு மழைதான் இருக்குன்னு சொன்னாங்க. ஆனா இன்னைக்கு மதியம் நம்மளையே தூக்கிட்டுப் போய் செல்போன் டவர் உச்சியில மாட்டி வெச்சுடுற அளவுக்கு காத்து அடிச்சுதுங்க. நான் கொஞ்சம் எடை குறைவுதான். பர்ஸ், செல்போன் மாதிரியான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எதையும் சேர்க்காம 65 கிலோ மட்டுமே.

என்னையே அவ்வளவு உயரத்துக்கு லிப்ட் உதவி இல்லாம தூக்குற வேகத்துக்கு காத்து அடிச்சுது. இதுல டயட் கண்ட்ரோல்ல இருக்குறதா சொல்லிட்டு ஒரு வேளைக்கு ஒண்ணேமுக்கால் இட்லி மட்டுமே தின்னுட்டு முப்பது கிலோ மட்டுமே(தூக்கில்லாம் பார்க்கலைங்கோ.) இருக்குறவங்க நிலமை என்ன ஆகும்னு ஒரே கவலையாப் போச்சுங்க.(உன்னை மாதிரி யூத்து எல்லாம் இப்படி கவலைப்பட்டா நாடு எந்த காலத்துலப்பா வல்லரசாகுறது.)

ஆனா அடிக்கிற காத்துக்கு அஞ்சாம கோயிலுக்கு போறதுன்னு கிளம்பிட்டேன். 2009 மார்ச் மாசம் நாலாவது செவ்வாய்க்கிழமையில இருந்து அம்மாவோட விருப்பத்துக்காக ஒரு காளி கோயிலுக்குப் போறதை வழக்கமா
வெச்சிருக்கேன்.

மதியம் 3.00 மணியிலேர்ந்து 4.30 மணிவரை ராகுகாலத்துல சிறப்பு பூஜை நடக்கும். பானகம், ஏலக்காய் - சர்க்கரை போட்டு நைவேத்யம் செய்த பால்,(ரெண்டு ஸ்பூன்தாங்க) வெண்பொங்கல் அல்லது புளிசாதம் இதுல ரெண்டு உறுதியா கிடைக்கும்.

ஆனா அதுக்காக போகலைங்க.(எப்படியும் நம்பப்போறது இல்லை)

38 வாரம் இந்த நேரத்துல தொடர்ந்து கோயிலுக்குப் போனது நமக்குத் தேவையில்லை. நான் இந்தப் பதிவை எழுதக் காரணம் - இன்னைக்கு நான் கோயிலுக்குப் போய் வந்தபோது ஒரு எதிர்பாராத தாக்குதல்ல சிக்கிட்டேங்க.

மதியம் மூணு மணிக்குதான் பூஜைக்குரிய பொருட்களை எல்லாம் வாங்கிட்டு சைக்கிள்ல கிளம்பினேன்.(வண்டி வாங்குற அளவுக்கு வசதி இல்லைங்க.) அந்த நேரத்துல மழை ரொம்ப அதிகமா பெய்ததால பாதை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுது.(ஆத்துல தண்ணி இல்லைன்னுதானே வருத்தப்படுறீங்க...இப்ப ரோட்டுலயே ஓடுறேன் பாருன்னு மழையோட குரல்.)

ரோட்டோட இந்த நிலமையைப் பார்த்ததும் பேசாம தனிப்படை அமைச்சு அவங்க துணையோட கோயிலுக்கு கிளம்பியிருக்கலா............மோன்னு மனசுக்குள்ள ஒரு சிந்தனை.(இது உனக்கே அதிகமா தெரியலை...)

நீங்க தப்பா நினைச்சுடாதீங்கப்பா. திருவாரூர்ல புதை சாக்கடை அமைக்கும் வேலை துவங்கி ரெண்டு வருஷம் ஒரு மாதம் ஆகிடுச்சு. எப்ப பணிகள் பூர்த்தி ஆகும்னுதான் தெரியலை. (வேலையின் மதிப்பு, பணி முடியும் காலம் இதெல்லாம் அறிவிப்பு பலகையில எழுதி வெச்சுருப்பாங்களேன்னுதானே கேட்குறீங்க?...அதுல போட்டுருக்குற காலக்கெடு முடிஞ்சு ஏழு மாசமாகுது. வேலை முடிஞ்சுருக்குற நிலவரப்படி பார்த்தா இன்னும் எத்தனை வருஷம் ஆகும்னு தெரியலை.

அதுக்கும் நீ கோயிலுக்குப் போறதுக்கும் என்னய்யா சம்மந்தம்....

இருக்கே...சம்மந்தம் இருக்கே...

நிறைய வீதிகள்ல குழாய் பதிச்சுட்டு அரைகுறையா மூடிட்டுப் போயிட்டாங்க.(சில நடிகைங்களுக்குப் போட்டி?) அதுல மழை தண்ணி வேற நிறைய ஓடுறதால ரோடு எங்க...குழி எங்கன்னு கண்டுபிடிக்கவே தனிப்படைதான் தேவைப்படும்னு தோணுச்சு.

அப்புறம் ஒரு வழியா நகர எல்லையைத் தாண்டினதுக்கப்புறம் குழித்தொல்லை இல்லை. ஆனா மயிலாடுதுறை செல்லும் பாதையில் மூணு கிலோ மீட்டர் தூரம் போறப்ப வேற ஒரு பிரச்சனை. அதிகமாவே திறந்தவெளி ஏரியாவா இருந்ததால குடையைக் காப்பாத்துறதுக்கு ரொம்பவே போராட வேண்டியதாயிடுச்சு.

திடீர்னு லாரி, பஸ் கிராஸ் ஆகிப் போகும்போது குடை கையை விட்டு ஏழெட்டு கிலோமீட்டர் தூரம் போயிடுமோன்னு ஒரு பயம் விலகவே இல்லைங்க.

இதெல்லாம் எனக்கு சிரமமா தெரியலை. வழிபாட்டை முடிச்சுட்டு திரும்பவும்
ஊருக்குள்ள வரும்போது மறுபடி அதே குழி, அதே ரோடு...அதே பயணம்.

சாலையின் குறுக்கே மிருகங்கள் போகும்போது நாம அதோட பின்பக்கமா விலகிப் போகணும்னு விதி இருக்கு. ஏன்னா அதுங்களுக்கு ரிவர்ஸ் கியர்னா என்னன்னே தெரியாது. இந்த விஷயம் நமக்குத் தெரியும் அதனால பிரச்சனை இல்லை.

ஆனா மனுஷன் பூனையை விட மோசம்னு நினைக்கிறேன். ஏன்னு கேட்குறீங்கிளா?

தேரோடும் வீதியைக் கடந்து ஒரு தெருவுக்குள்ள ரோட்டைக் கண்டுபிடிச்சு குடையையும் காப்பாத்தி வீட்டுக்குப் போய்கிட்டு இருக்கேன்.

மூணு பள்ளி மாணவிகள் ஒரு ஓரமாத்தான் போய்கிட்டு இருந்தாங்க. அவங்களும் குழிகளுக்கு நடுவுல இருந்த ரோட்டைக் கண்டுபிடிச்சுட்டாங்க போலிருக்கு. திடீர்னு சைக்கிளுக்கு குறுக்க வந்துட்டாங்க. ஒரு கையில குடை இருந்ததால பெல் அடிக்க முடியாத நிலை. "ஏய்..."அப்படின்னு கத்திட்டேன்.

சட்டுன்னு மூணு மாணவிகளும் ஓரமா விலகிட்டாங்க. அதுல ஒரு மாணவி சொன்ன வார்த்தைகளை சுத்தமா எதிர்பார்க்கலைங்க.

காலேஜ் முடிச்சு ஆறரை வருஷம்தான் ஆகுது... அதுக்குள்ள இப்படி ஒரு மரியாதை கிடைச்சது பெரிய அதிர்ச்சிதான்.

அப்படி என்னதான் சொன்னுச்சுன்னுதானே கேட்டீங்க? பதினோராம் வகுப்பு இல்லைன்னா பனிரெண்டாம் வகுப்பு படிக்கிற அந்த மாணவி என்னைப் பார்த்து "சாரி அங்கிள்" அப்படின்னு சொல்றதை தாங்கிக்கவே முடியலங்க.

வயசு ஏறிகிட்டு இருக்கு...கல்யாணம் பண்ணுடான்னு அம்மா சொன்னப்ப காதுல விழலை. இப்படி யாராச்சும் பேச்சுலேயே வெடி வெச்சாதான் நாம முழிச்சுக்குவோமோ?

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

நானும் என் எழுத்தும் - சும்மா ஒரு விளம்பரந்தான்...


இந்த தலைப்புல எழுதுற அளவுக்கு நீ பெரிய ஆளாயிட்டியான்னு நிறைய பேர் கேட்குறது என் காதுலயும் விழுதுங்க. என்ன பண்றது? சூழ்நிலை அப்படி.

 அய்யா, அம்மா, அக்கா, அண்ணே...எல்லாரும் கேளுங்களேன்...ஒருத்தனை முன்னேற விடாம தடுக்கணும்னா என்ன செய்யணும்?

காலை வாரி விடணுமா?...அடப்போங்க நீங்க.அந்த அளவுக்கெல்லாம் போய் உங்க எனர்ஜியை ஏன் வீணடிக்கணும்?...வேற என்ன செஞ்சு கவுக்கலாம்னு யோசிக்காதீங்க. ரொம்ப சிம்பிள். அவன் திறமைகளை ஓஹோன்னு புகழுங்க...அது போதும். சம்மந்தப்பட்ட ஆசாமி அவன் செலவுல அவனுக்கே சூனியம் வெச்சுக்குவான்.

இதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகளான்னுதானே கேட்டீங்க... நான் ஒருத்தன் இருக்கும்போது இன்னுமா அந்த சந்தேகம்?

நம்மவர் படத்துல ஒரு காட்சி. மதன்பாப் பேச எழுந்திரிக்கும் போது எல்லா மாணவர்களும் அவர் பேசத் தொடங்கும் முன்பே கை தட்டி அவரை உட்கார வைத்துவிடுவார்கள். நான் அந்த அளவுக்கு காமெடி பீஸ் இல்லன்னுதான் தோணுது.

ரொம்ப குழம்பாதீங்க.நானே எல்லாத்தையும் சொல்றேன். எந்த ஒரு விஷயத்திலும் 

தோல்வி அடைந்தவனோட புத்தி அடுத்த முறை அதுல எப்படி வெற்றி அடையுறதுன்னுதான் யோசிக்கும். ஆனா வெற்றி அடைந்தவனுக்குதான் பல பிரச்சனை.

முதலாவதா அந்த வெற்றியோட களிப்புல மூழ்கியாச்சுன்னா அடுத்த இலக்கை தீர்மானிக்கிறதுலேயே ரொம்ப நாள் ஓடிடும். டீசண்ட்டா சொன்னா சோம்பேறித்தனம். முடிஞ்சுதா.


தொடக்கத்துல ரெண்டு வருஷம் நான் எழுதி அனுப்புன கதைகள் எல்லாம் நான் வீட்டுக்கு திரும்புறதுக்குள்ள சமத்தா அட்ரஸ் கண்டுபிடிச்சு வந்து சேர்ந்துடும். அத்தனை நாள் எங்க ஊர் சுத்திகிட்டு இருந்தன்னு திட்டாதீங்க.

ஒரு சாயந்திர பேப்பரோட பொங்கல் மலர்ல நம்மளோட


கதை வந்து மகிழ்ச்சி பொங்குனுச்சுங்க. (அதுவரைக்கும் நான் படிச்ச கல்லூரியில ரெண்டு கதையைப் போட்டுட்டாங்கன்னா வேற யாரும் கதை எழுதலைன்னு உண்மையை சொல்லிடுவோமா என்ன?)

அவங்களே அடுத்தடுத்து அஞ்சு கதையைத் தெரியாத்தனமா போட்டுட்டாங்க. பைசாதான் எதுவும் தேறலை. அடப்பாவி...உன் எழுத்தைப் படிச்சுட்டு ஆஸ்பத்திரியில கிடக்குறவங்க குடும்பத்துலேர்ந்து நஷ்டஈடு கேட்காததை நினைச்சு சந்தோஷப்படுவியான்னுதானே சொல்றீங்க... அதுவும் வாஸ்தவந்தேன்.

திடீர்னு 2003ம் ஆண்டு செப்டம்பருல தினமலர் வாரமலரோட டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப்போட்டியில்
நீங்களும் ஒரு வெற்றியாளர்னு கடிதம். வச்சிட்டாங்களா ஆப்பு... அந்தக் கதையை எழுதுறதுக்கு முன்னாலயே அனுப்பின குறுநாவல் மாலைமதியிலயும், தேவி வார இதழ்ல ஒரு பக்க கதையும் வந்துச்சு.அத்தோட சரி. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் இந்த மிதப்புலயே நாள் காலி.

மறுபடி 2005ல சில கோவில்களோட வரலாறுகளை எழுதுற முயற்சின்னு நாளைக் கடத்தியாச்சு.



அப்புறம் துணுக்கு, கடிதம்னு பேருக்கு எழுதிகிட்டு இருந்தேன். மறுபடியும் தீவிரமா எழுத முயற்சி செய்தபோது அமுதசுரபியில முத்திரைக் கதை, இலக்கியச் சிந்தனை பரிசு, தமிழ்நாடு அரசு குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மையமும் ராணிவார இதழும் இணைந்து நடத்துன சிறுகதைப் போட்டியில முதல்பரிசு, அப்பப்ப ஒண்ணு ரெண்டு சிறுகதைகள் பிரசுரம்னு 2006ம் வருஷம் குஷியாவே போச்சுங்க.
அதே எஃபெக்டோட 2007ல டி.வி.ஆர்.நினைவு சிறுகதைப் போட்டியில ஆறுதல் பரிசு.

அப்புறம் என்ன?... லஞ்சம் வாங்கி அதிகாரிகள்கிட்ட சிக்கினவன் மறுபடி வேலையில சேர்ந்ததும் அடுத்த நொடியே கையை நீட்டுன கதைதான்.

மறுபடியும் லாங் அலட்சிய இடைவேளை.ஒட்டகம்தான் ஒரு தடவை குடிக்கிற தண்ணீரை பல மாசங்களுக்கு வெச்சு சமாளிக்கும்னு சொல்லுவாங்க. நம்ம புத்தி ஏன் ஒரு தடவை எழுத்தை அச்சுல பார்த்தா ஒரு வருஷத்துக்கு மறுபடி எழுதுறதைப் பற்றி யோசிக்கவே மாட்டெங்குது.


அட தூங்குமூஞ்சி வெளக்கெண்ண...உன்
சோம்பேறித்தனத்தை இவ்வளவு பெரிய கட்டுரையா எழுதி எங்களையும் படுத்தணுமான்னு திட்டாதீங்க. மனுஷன் தோல்வியை விட வெற்றிகிட்டதான் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்னு சொல்றதுக்குதாங்க இந்த சுய புராணம்.

ஸ்வீட் சாப்பிட நல்லாத்தான் இருக்கும். அந்த நினைப்புலயே இருந்தா பொழப்பு கெட்டுடுங்க.

புத்தி மதியெல்லாம் போதும். இப்ப என்ன செய்யுறன்னு நீங்க கேட்குறதுக்கு முன்னால நானே சொல்லிடுறேன். புதுசா எழுத முயற்சி செய்யலாம்னு நினைச்சேன். ஒரு பதிப்பகத்துல இருந்து என்கிட்ட வந்து "உங்க எழுத்து தொடர்பான அனுபவங்களை எழுதிக் கொடுங்க... நிறைய எழுத்தாளர்கள்கிட்ட இருந்து இந்த மாதிரி கட்டுரை வாங்கி தொகுப்பு நூல் போடப் போறோம்"ன்னு கேட்டாங்க.

அய்யய்யோ...யாருப்பா அது கல்லு வீசுறது... இந்த விஷயத்துல எல்லாம் நான் பொய்யே சொல்ல மாட்டேங்க...இது நெசமாலுமே நடந்ததுதான்.

கட்டுரையை கொடுத்தது சரி. இங்க எதுக்கு அதை எழுதியிருக்கன்னுதானே கேட்டீங்க...

கரகாட்டக்காரன் படத்துல செந்தில் ஒருத்தருக்கு பத்து ரூபாய் கொடுத்து பாராட்டச்சொல்லுவார். கவுண்டமணி காரணம் கேட்கும்போது "எல்லாம் ஒரு விளம்பரத்துக்காகதான்"ன்னு சொல்லுவார். அந்த மாதிரிதாங்க...இதுவும் ஒரு விளம்பரத்துக்காகதான். அந்த கட்டுரை நூல் வந்ததும் உங்கள்ல எவ்வளவு பேருக்கு படிக்கிற பெரும்பாக்கியம் கிடைக்கும்னு தெரியலையே.அப்பாடா...கரகாட்டக்காரன் படத்து ஸ்டில்லை வெச்சதுக்கு காரணம் சொல்லியாச்சு.

பின் குறிப்பு : என்னுடைய கதைகளை எல்லாம் தொகுப்பாக வெளியிடலாம் என்று அந்த பதிப்பகத்திலேயே கேட்டுருக்காங்க. அட... யாருப்பா அது...அடுத்த கல்லு வர்றதுக்கு முன்னால எஸ்கேப்...

சீரியசா ஒரு விஷயம் : இந்த எழுத்து நடை நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. பதிப்பகத்தை கிண்டல் செய்ய அல்ல...ஏதோ விஷயம் இருப்பதால்தான் புத்தகமாக வெளியிட முன்வந்திருக்கிறார்கள். என்னுடைய எழுத்தை நானே கிண்டல் செய்தால் அது அவர்களின் ரசனையை கேலிகூத்தாக்குவது என்று உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

நானும் என் எழுத்தும் 1
நானும் என் எழுத்தும் 2
நானும் என் எழுத்தும் 3
நானும் என் எழுத்தும் 4
நானும் என் எழுத்தும் 5

வெள்ளி, 11 டிசம்பர், 2009

ச்சும்மா...கொஞ்சம் சிரிக்கலாமா?


ஒரு சில வருடங்களுக்கு முன்னால கல்கி பத்திரிகை நகைச்சுவைத்துணுக்கு போட்டி நடத்துனாங்க. ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு. அப்பதான் நானும் தமாசு எழுத முயற்சி செஞ்சேன். நாலு வரியில சிரிக்க வைக்கணும்...இதெல்லாம் பெரிய விஷயமான்னு இறங்கிப் பார்த்தா அப்புறம்தான் வில்லங்கமே புரியுது...

நம்மளோட நடவடிக்கையைப் பார்த்துட்டு வேணுன்னா முதுகுக்குப் பின்னால சிரிப்பாங்களே தவிர ஜோக் சொன்னா ஏண்டா கழுத்தறுக்குறன்னுதான் கேட்பாங்கன்னு புரிய பல மாசங்கள் ஆயிடுச்சு.

அப்படியும் தட்டுத் தடுமாறி ஆறு துணுக்கு பிரசுரமாயிடுச்சு. அதோட இந்த முயற்சியை விட்டுட்டேன்.(தமாசு தேர்வு செய்யுறதுல ஏதோ உள்குத்து இருக்குங்க...நமக்கு எழுத தெரியலன்னு அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்குவோமா என்ன?)

1.சென்னை மாநகரத்தையே சைக்கோ கொலைகாரன் அலற விட்ட சமயத்துல எழுதுனது. ஆனந்த விகடனோட ஆதரவு.

2.எங்க அம்மாவுக்கும் எனக்கும் சண்டை வர்றதே தொலைக்காட்சித் தொடர்களால்தான். அந்த ஆத்திரத்தை இப்படி ஜோக் எழுதி தீர்த்துகிட்டேன். வேற வழி?.இது குமுதத்துல பிரசுரமானுச்சு.

3.போன வருஷம் எங்க பார்த்தாலும் மழை வெள்ளம் சூழ்ந்துச்சே...அப்ப தோணின துணுக்குதான் இது. இதுக்கும் ஆபத்பாந்தவன் ஆனந்த விகடன்தான்.

4,5,6. இது மூணுமே தேவி வார இதழ்ல வெளிவந்ததுதான். எழுத்துல சன்மானமா முதன் முதல்ல தேவி பத்திரிகையில இருந்துதான் நூறு ரூபாய் வாங்கினேன். அந்த வகையில நான் மறக்க முடியாத பத்திரிகைங்க.

இதை எல்லாம் படிச்சுட்டு அதெல்லாம் சரி...ஜோக் இருக்குன்னு சொன்னியே...அது எங்கன்னு மட்டும் கேட்டு மானத்தை வாங்கிடாதீங்க. இதுல மூணு ஜோக் இருநூத்தம்பது ரூபா பரிசு வாங்கி குடுத்துருக்குங்க...அதுக்க்காகவாச்சும் கொஞ்சம் சிரிச்சுடுங்கப்பா.

அப்புறம் ஒரு விஷயம். எல்லாம் வழக்கம் போலதான். தமாசுகளைப் படிக்க மேல இருக்குற படத்தை க்ளிக்குங்க...

வியாழன், 10 டிசம்பர், 2009

நீ சிங்கமா? - ஆனந்த விகடன் - யூத்து - கூத்துல டபுள் என்ட்ரி


16.12.2009 தேதியிட்ட ஆனந்த விகடன் 'யூத்து கூத்து' பகுதியில நாம ஃபார்வேர்ட் பண்ணின ரெண்டு எஸ்.எம்.எஸ் பிரசுரமாயிருக்குதுங்கோ...

நட்பூ!

விட்டுக்கொடுப்பது மட்டும் நட்பல்ல; பரீட்சை ஹாலில்
பிட்டு கொடுப்பதும் மாட்டிக்கொண்டாலோ...ஃபெயில் ஆனாலோ...தட்டிக்கொடுப்பதும்தான் நட்பு!

நீ சிங்கமா?

'எஸ்.எம்.எஸ்' வார்த்தைக்கு ஒரிஜினல் அர்த்தம் தெரியுமா?

S - Singam அனுப்ப
M - Monkey படிக்கும்
S - Small ஸ்டோரி

என்ன மொறப்பு...யாருக்காவது அனுப்பி நீயும் சிங்கமாயிடு!

கடவுளே... எனக்கு காதல் வந்துடுச்சா?


"அங்க இலவச வேட்டி கொடுக்குறாங்களா?..."

"யோவ்...இருக்குற வேட்டிய உருவாம விட்டா போதாதா..."

முதல்வன் படத்தில் திருவாளர் பொதுஜனத்துக்கும் மணிவண்ணனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்தான் மேலே இருக்கிறது.

பத்து ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு குனிந்த விவேக் மீண்டும் மீண்டும் 'அங்கே' காயமடைவார்.(படம் : பெண்ணின் மனதைத் தொட்டு)

ரயிலில் மயக்க பிஸ்கட், நிதி நிறுவனம்னு நம்ம ஆளுங்க ஏமாறுற இடத்தோட பட்டியல் ரொம்பவே நீளம். அதை விட்டுட்டு அப்படியே வந்தா ஒரு விஷயத்தை மட்டும் தெளிவா புரிஞ்சுக்கலாம்.

அன்றைய சூழ்நிலையை மறந்துட்டு வேற ஏதேதோ கற்பனையில மூழ்குறதுனாலதான் இது மாதிரி சிக்கல்கள் எல்லாமே வருது.

நம்ம அப்துல்கலாம் ஐயா கனவு காணுங்கன்னு சொன்னது இப்படி இல்லைங்க.

இப்படித்தான் ஒரு கல்லூரி மாணவன் கோயிலுக்குப் போய் "கடவுளே...எனக்கு சாப்பிடப்பிடிக்கலை...தூக்கம் வரலை...புத்தகத்தை எடுத்தா என்னென்னவோ யோசனை எல்லாம் தோணுது...எனக்கு காதல் வந்துடுச்சோ? " அப்படின்னு கேட்டான்.

உடனே கடவுள் இவனைப் பார்த்து முறைச்சாரு...

சில நொடிகள் கழித்து, "அட வெண்ணை...செமஸ்டர் வந்துடுச்சுடா... போ...போய் ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு...இது வரைக்கும் எழுதுன ஒரு செமஸ்டர்ல கூட மார்க் வரலை...காதல் வருதாமோ?... பிச்சுபுடுவேன் பிச்சு...." அப்படின்னார்.

புதன், 9 டிசம்பர், 2009

ஹாய், நான் பாப்புக்குட்டி ஃப்ரம் டுபாக்கூர் ஸ்கூல்



இருவத்தஞ்சு வயசு ஆகுற வரைக்கும் செல்போன்ல எனக்கு கால் பண்ணக் கூடத் தெரியாது...'அப்ப அரை, முக்கால், முழுசு எல்லாம் தெரியுமா' ன்னு அங்க என்னப்பா சவுண்டு?

இப்ப எல்லாம் பயபுள்ளைங்க பிறக்கும்போதே மொபைல் போன் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செஞ்சுகிட்டு வருதுங்க...எனக்கு ஒரு குட்டிச் சாத்தான் அனுப்புன எஸ்.எம்.எஸ் ல எவ்வளவு அலப்பறைன்னு பாருங்களேன்.

ஹாய், என் பேரு பாப்புக்குட்டி...டுபாக்கூர் ஸ்கூல்ல எல்.கே.ஜி படிக்கிறேன்...என்னோட ரப்பர் வெச்ச பென்சில் தொலைஞ்சு போச்சு. அதோட விலை மூணு ரூபா.

உங்களை எனக்கு தெரியாது...ஆனா இந்த இந்த செய்தியை உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணினா எனக்கு வேல்டு பாங்க்லேர்ந்து அஞ்சு பைசா கிடைக்கும்.

நான் பாவம்.. உங்க  கண்ணு...செல்லம்...ஹார்ட்டு...கிட்னி...சட்னி...தயவுசெய்து இந்த செய்தியை பத்து டுபாக்கூர் ஆளுங்களுக்கு பார்வேர்ட் பண்ணிடுங்க...


படிச்சீங்கிளா? போற போக்குல நாம எல்லாம் அதுங்களோட வேகத்துல காணாமப் போயிடுவோம் போல தெரியுதா?

(திருப்பாச்சி படத்து ஸ்டில் எதுக்குன்னு யோசனையா?...மல்லிகா வயித்துக்குள்ள இருக்குற பிள்ளைகிட்ட மாமன் தொலை பேசுவாருல்ல... அதுக்குத்தேன்.)

ஹாய், நான் பாப்புக்குட்டி ஃப்ரம் டுபாக்கூர் ஸ்கூல்



இருவத்தஞ்சு வயசு ஆகுற வரைக்கும் செல்போன்ல எனக்கு கால் பண்ணக் கூடத் தெரியாது...'அப்ப அரை, முக்கால், முழுசு எல்லாம் தெரியுமா' ன்னு அங்க என்னப்பா சவுண்டு?

இப்ப எல்லாம் பயபுள்ளைங்க பிறக்கும்போதே மொபைல் போன் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செஞ்சுகிட்டு வருதுங்க...எனக்கு ஒரு குட்டிச் சாத்தான் அனுப்புன எஸ்.எம்.எஸ் ல எவ்வளவு அலப்பறைன்னு பாருங்களேன்.

ஹாய், என் பேரு பாப்புக்குட்டி...டுபாக்கூர் ஸ்கூல்ல எல்.கே.ஜி படிக்கிறேன்...என்னோட ரப்பர் வெச்ச பென்சில் தொலைஞ்சு போச்சு. அதோட விலை மூணு ரூபா.

உங்களை எனக்கு தெரியாது...ஆனா இந்த இந்த செய்தியை உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணினா எனக்கு வேல்டு பாங்க்லேர்ந்து அஞ்சு பைசா கிடைக்கும்.

நான் பாவம்.. உங்க  கண்ணு...செல்லம்...ஹார்ட்டு...கிட்னி...சட்னி...தயவுசெய்து இந்த செய்தியை பத்து டுபாக்கூர் ஆளுங்களுக்கு பார்வேர்ட் பண்ணிடுங்க...


படிச்சீங்கிளா? போற போக்குல நாம எல்லாம் அதுங்களோட வேகத்துல காணாமப் போயிடுவோம் போல தெரியுதா?

(திருப்பாச்சி படத்து ஸ்டில் எதுக்குன்னு யோசனையா?...மல்லிகா வயித்துக்குள்ள இருக்குற பிள்ளைகிட்ட மாமன் தொலை பேசுவாருல்ல... அதுக்குத்தேன்.)

திங்கள், 7 டிசம்பர், 2009

எவ்வளவோ செஞ்சிட்டோம்...இதைப் பண்ண மாட்டோமா?...


தொடர்ந்து சீரியசாவே எழுதிட்டு இருந்துட்டேன். அப்புறம் நீங்க அய்யய்யோ...கருத்து கந்தசாமி வந்துட்டான்னு எஸ்கேப் ஆயிடக்கூடாதுல்ல...அதான்...எஸ்.எம்.எஸ் ஜோக் ஒண்ணை தட்டி விட்டுருக்கேன். இளைய பாரதத்தில் சிரிப்பு தேசம் தலைப்புக்கு கீழ இருக்குறது எல்லாம் இந்த எஸ்.எம்.எஸ் சரக்குதான்.

Prove that 2/10 = 0.2 is wrongly printed as "Prove that 2/10 = 2"

பொறியியல் கல்லூரி வினாத்தாளில் அச்சுப்பிழை .

மாணவர்கள் : எவ்வளவோ செஞ்சிட்டோம்...இதைப் பண்ண மாட்டோமா?...

2:- Two
10:- Ten
2/10 = two/ten

wo/en

W - 23
O - 15

E - 5
N - 14

w + o = 23+15 = 38
e + n = 5+14 = 19

So 38/19 = 2...

எப்பூடி?

Thanks: B.Anand (Aeronatical Engg. student)