Search This Blog

வியாழன், 17 டிசம்பர், 2009

வேன் ஓடும்போது இடம் மாறிய ஓட்டுநரும் உதவியாளரும்...அலற வைத்த அரைவேக்காடுகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ கேமராமேனாக இருந்தேன். ஒரு திருமணவிழாவை படம் பிடிக்க வழக்கம்போல் முதல் நாளே சென்றுவிட்டேன். திருவாரூரிலிருந்து கும்பகோணத்தில் மணமகளை அழைக்க மாப்பிள்ளை வீட்டாருடன் வழக்கம்போல்(?) இணைந்துகொள்ள வேண்டியதாயிற்று.

இது வரைக்கும் மட்டுமில்ல...பெண்ணை அழைத்துக் கொண்டு திரும்பி பாதி தூரம் வர்ற வரை எல்லாம் சரியாத்தாங்க இருந்துச்சு. பஞ்சு மூட்டை போல பிதுங்கிக்கொண்டிருந்த வேனில் பாதி பேருக்குமேல் இளம்பெண்கள்தான். வாகன ஓட்டுநரும் உதவியாளரும் இருபத்தைந்து வயதை எட்டியிருப்பது சந்தேகமே. அவனுங்க மனசுக்குள்ள கொசு பறக்குறதுக்கு கேட்கவா வேணும்? (பட்டாம் பூச்சி பறந்ததுன்னு சொல்லலாம்...அந்த ரெண்டு பேரும் பண்ணின வேலைக்கு கொசுன்னு சொல்றதே அதிகம்)

வேனுக்குள்ள இருந்த நீயும் யூத்துதானே... உன் நெஞ்சுக்குள்ள எதுவும் பறக்கலையான்னு நீங்க கேட்குறது புரியுது. நான் அப்ப கேமரா மேல மட்டும்தாங்க கவனம் வெச்சேன்.(நம்புங்கப்பா)

அந்த ஓட்டுநரும் உதவியாளரும் வேன் ஓடிக்கொண்டிருக்கும்போதே இருவரும் இடம் மாறி அமர்ந்து வாகனத்தை இயக்கினார்கள். அதைக் கண்டதும் எனக்கு ஆத்திரமாக வந்தது.(உண்மையை சொல்லப்போனால் உதறல்னுதான் சொல்லணும்.)

ஆனால் மணமகளின் தோழிகளில் சிலர்,"சூப்பர், சூப்பர்" என்று கத்தி ஓட்டுநரையும் உதவியாளரையும் போற்றிப் புகழ்ந்தார்கள். இதைக் கண்டித்த ஒன்றிரண்டு வயதான பெண்களின் குரல் இளம்பெண்களின் இரைச்சலில் காணாமல் போய் விட்டது.

உடனே அந்த உதவியாளர்," இது சாதாரண சாலையாக இருந்ததால்தான் முப்பது கி.மீ. வேகத்தில் மாறி உட்கார்ந்தோம். அதே சமயம் இது மட்டும் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தால், எண்பது கி.மீ. வேகத்தில் கூட இடம் மாறி உட்கார்ந்து ஓட்டுவோம்." என்று பெருமை பொங்க பேசினான்.

என்னுடைய கோபத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தேன்.உன் கோபம் அவங்க செய்த தப்பை நினைச்சா இல்லன்னா அந்தப் பொண்ணுங்க அவங்களை புகழ்ந்ததுக்கான்னு சந்தேகப்படாதீங்க. மெய்யாலுமே வண்டி

ஓடும்போதே இடம் மாறின அவங்க முட்டாள்தனத்துக்காகதாங்க கோபப்பட்டேன்.

இது போல பல சம்பவங்கள் உண்டு. பஸ்சில் பயணிக்கிறபோது மற்ற பேருந்துகளை முந்திச் செல்ல ஓட்டுநரை ஊக்கப்படுத்தும் பயணிகளைப் பார்த்திருக்கிறேன். சிறிது கவனம் தவறினாலும் மரணம் என்பதையும், வேகம் விவேகமல்ல என்பதையும் உணராமல் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்துவது எவ்வளவு பெரிய விபரீதத்தை விளைவிக்கும் என்பதை ஆர்வக்கோளாறான சிலர் புரிந்துகொள்வது எப்போது?

இதெல்லாம் சரிதான். அந்த அரைவேக்காட்டுக்காரங்களை நீ கண்டிக்க வேண்டியதுதானேன்னுதானே கேட்டீங்க?...வேன்ல நான் ஒரு ஆள் சொன்னா யாருங்க கேட்பா? அதனால மண்டபத்துக்கு வந்ததும் மாப்பிள்ளையோட அப்பாகிட்ட சொல்லி வேன் உரிமையாளரை வேறு ஓட்டுநரை வரவழைத்தோம். அந்த வேன் உரிமையாளர் என்னை விட அதிகமாகவே கொதிப்படைந்து விட்டார்.

ஆனால் எல்லா உரிமையாளர்களும் இப்படி நடந்துகொள்வது சிரமம்தான். பல நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. ஆனால் அந்த சிக்கல்களை எதிர்கொள்ள இரண்டு விஷயங்கள் முக்கியமாக தேவை. முதலாவதாக ஆள் உயிருடன் இருக்க வேண்டும். இரண்டாவதாக வாகனம் முழுதாக இருக்க வேண்டும்.

நாம் புரிந்து கொண்டால் சரி.

இதெல்லாம் நடந்தது 2005ல்

4 கருத்துகள்:

  1. //நான் அப்ப கேமரா மேல மட்டும்தாங்க கவனம் வெச்சேன்.(நம்புங்கப்பா) //

    அதாவது, எல்லாரையும் காமிராவுல பதிவு பண்ணிக்கிட்டிருந்தீங்க

    பதிலளிநீக்கு
  2. .//நான் அப்ப கேமரா மேல மட்டும்தாங்க கவனம் வெச்சேன்.(நம்புங்கப்பா) //

    அதாவது, எல்லாரையும் காமிராவுல பதிவு பண்ணிக்கிட்டிருந்தீங்க
    @ சங்கர்

    ஆஹா...சிக்கிட்டேனா...

    நீங்க நினைக்கிற மாதிரி ஒண்ணும் இல்ல தல...கேமராவையும் லைட்டுக்கு உள்ள ஒரு காயில் ஒயரையும் கையில எடுத்துகிட்டுதான் வேன்ல ஏறினேன். இருந்த கூட்டம் அதிகமா இருந்ததால சீட்டுக்கு பதில் கேமராமேல உட்கார்ந்துடுவாங்களோன்னு ஒரு முன்ஜாக்கிரதைதான். சென்னையில்தான் ஒரு திருமணத்துக்கு டேக்கிங் சார்ஜ் செக்ஷனுக்கு நூத்தம்பதுன்னு முன்னூறு ரூபா. திருவாரூர்ல எல்லாம் ரெண்டு செக்ஷனுக்குமே சேர்த்து நூத்தம்பதுக்கு அழுவாங்க. கேமரா விலை நாற்பதாயிரம். அதுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா அப்படிங்குற பயம்தாங்க இருக்கும்.

    வேன்ல போகும்போது எனக்கு பக்கத்துல ஆம்பளைங்கதான் உட்கார்ந்து இருந்தாங்க. இதையாச்சும் நம்புங்கப்பா.

    (பேசாம இதையும் விளக்கமா பதிவுலையே எழுதியிருக்கலாமோ?)

    பதிலளிநீக்கு
  3. //வேன்ல போகும்போது எனக்கு பக்கத்துல ஆம்பளைங்கதான் உட்கார்ந்து இருந்தாங்க. இதையாச்சும் நம்புங்கப்பா//

    அப்பா எதுத்தாப்புல அல்லது முன்னாடி ?? விடுங்க தல இதுக்கெல்லாம் பயந்தா நம்ம தொழில் பண்ண முடியுமா? :-)

    ஆத்தாடி அந்த டிரைவர் பயபுள்ளக இப்படி டரியல கிளப்பி விட்டாய்ங்களா??

    பதிலளிநீக்கு
  4. @ ரோஸ்விக்

    //ஆத்தாடி அந்த டிரைவர் பயபுள்ளக இப்படி டரியல கிளப்பி விட்டாய்ங்களா??//

    பின்னூட்டம் போட்டதுக்கு நன்றிங்னா...அப்பப்ப வந்துட்டுப் போங்க...

    பதிலளிநீக்கு