Search This Blog

புதன், 16 பிப்ரவரி, 2011

என்னதான்யா நடக்குது இங்க?...

சமீப காலமாக நடிகர் விஜய் படங்களில் பேசும் பஞ்ச் டயலாக்குகள் அவரையே பஞ்சராக்கும் அளவுக்கு படங்களை கவிழ்த்து விட்டாலும் அவரது  பல படங்களில் பஞ்ச் டயலாக் ரசிகர்களின் ரத்த ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்தது உண்மைதான்.

வாழ்க்கை ஒரு வட்டம். இதன் சுழற்சியில் கீழே இருப்பவன் மேலே போவதும் மேலே இருப்பவன் கீழே போவதும் தவிர்க்க முடியாது. (ஜெயிக்கிறவன் தோற்பான், தோற்குறவன் ஜெயிப்பான்- இது பல தோல்விகளுப்பின்பு விஜய்க்கு பெரிய ஹிட் கொடுத்த திருமலை படத்தில் வரும் வசனம்.)

இந்த டயலாக்குல இருக்குற உண்மை எனக்கு ரொம்ப பிடிக்கும். கிரிக்கெட்ல அத்தனை பேருக்கும் ஆப்பு வெச்சுகிட்டு இருந்த ஆஸ்திரேலியாவுக்கு இப்போ கஷ்ட காலம் அடிக்கடி எட்டிப் பார்க்குது. உலககோப்பை பயிற்சியின் முதல் ஆட்டத்துல இந்திய அணி முதல் ஆப்பை ஆஸ்திரேலியாவுக்கு வெச்சாச்சு. (உபயம்:ஸ்பின்னர்கள்.) அதே வேகத்துல தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த அடி கொடுத்துட்டாங்க.

ஊரையே அடக்கி ஆள்ற தாதா படத்தின் இறுதி காட்சியில ஹீரோகிட்ட அடி வாங்கும்போது ஊர் மக்கள் கூடி நின்னு சந்தோஷமா வேடிக்கை பார்ப்பாங்க. இப்போ ஆஸ்திரேலியா அடி வாங்கும்போதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மன நிலையிலதான் இருக்காங்கன்னு தோணுது. (ஆஸ்திரேலியா தோற்கணும்னு பயபுள்ளைக யாகம் வளர்க்குறாங்களாம்.)

இரண்டாவது பயிற்சி ஆட்டத்துல இந்தியா நியூசிலாந்துக்கு எதிரா படபடன்னு 360ரன் அடிச்சுட்டாங்க. முன்னால எல்லாம் நியூசிலாந்துக்கு ஒரு கெட்ட பழக்கம். 150ரன்னுக்கு 5 விக்கெட் விழுந்தாலும் அதுக்கப்புறம் விக்கெட்டே விழாம 320 ரன் அடிப்பாங்க. அப்படி எதாவது நடக்குமான்னு பார்த்தேன். ஒண்ணும் நடக்கலை.

நம்ம பசங்களோட ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பினிஷிங் எப்படியோ?


ஆட்டம் 50 ஓவரும் பரபரப்பா இருந்தாதான் பவுலர் பந்துல எச்சி தடவுறதுக்குள்ள எட்டு  விளம்பரம் போட முடியும்னு ரன் குவிக்கிறது மாதிரி பிட்ச் தயார் பண்ணியிருக்காங்களாம்.

அதனால டாஸ் விண் பண்ணின உடனே பனி வரும், புயல் வரும்னு யோசிச்சு முதல் பேட்டிங் எடுக்குறது பெருசு இல்லை.அதுல ஏழு ரன்ரேட்ல அடிச்சு சாத்துனாதான் பொழைக்க முடியும். பார்ப்போம் திரும்பப்போறது 1983 வரலாறா? 2003ம் வருஷம் ஆஸ்திரேலியா நமக்கு வெச்ச ஆப்பான்னு.

பட உதவி:தினமலர் இணையதளம்

1 கருத்து:

  1. இந்த பதிவில் இருக்கும் துள்ளல் எழுத்து நடையை, மிகவும் ரசித்தேன்.... தொடர்ந்து எழுதுங்க....

    பதிலளிநீக்கு