Search This Blog

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

தமிழ் திரைப்படத்துறையை லாபம் பெற வைப்பது எப்படி? பகுதி 2



முதலில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் ஆதிக்கம் பெருகாத காலகட்டத்தில் திரையரங்குகளில் படம் பார்ப்பது தொடர்பான எனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பார்ப்போம்.









1999 வரை திருவாரூரில் 5 தியேட்டர்கள் இருந்தன. மற்ற திரையங்கங்களை விட எனக்கு சோழாவில் படம் பார்ப்பதுதான் ரொம்ப பிடிக்கும். மொக்க படமாக இருந்தாலும் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் வெல்வட் துணியாலான திரை மேலெழும்பும்போது ஒரு மியூசிக் போடுவார்கள். பாடல் நிறுத்தப்பட்டு அந்த மியூசிக் கேசட் போட்டவுடன் தியேட்டர் பணியாளர்கள் பக்கவட்டுக்கதவுகளுக்கு முன்னால் இருக்கும் ஸ்கிரீனை இழுத்துவிட்டு அரங்கத்தின் கதவுகளை மூடுவார்கள். அப்போது ஸ்கிரினில் மாட்டியிருக்கும் வளையம் கதவுகளுக்கு மேலே இருக்கும் இரும்பு குழாயில் உரசும் சத்தம் கூட கேட்பதற்கு ஆசையாக இருக்கும்.



 வெண்திரைக்கு முன்னால் உள்ள வெல்வெட் ஸ்கிரீன் 5 அடி உயரம் மேலெழும்புவதற்குள் தியேட்டர் சோழா உங்களை வரவேற்கிறது என்று சிலைடு போடப்படும். திருவாரூர் புகழாக சொல்லப்படும் மனுநீதி சோழனை மனதில் கொண்டு, மாடு ஆராய்ச்சி மணி அடித்து நீதிகேட்பதை ஸ்டில்லாக வைத்திருப்பார்கள். முழுவதும் படிக்க...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக