Search This Blog

வியாழன், 12 ஏப்ரல், 2012

ஏனுங்க...இது உண்மையா?

............................போற இடத்துக்கு கூட ஏ/சி பண்ணி வெச்சிருக்குற பகாசுர கம்பெனிகளுக்கும், அரசியல் வியாதிகளையும் அதிகாரிகளையும் கைக்குள்ள போட்டுக்கிட்டு மக்களை மொட்டை அடிக்கிற கோடீஸ்வர கம்பெனிகளுக்கும் தடையில்லா மின்சாரம் கொடுக்குறதுக்கு பல காரணம் இருந்தாலும் முக்கியமா ஒரு காரணம் சொல்றாரு நண்பர் ஒருத்தரு. சில கோடீஸ்வர கம்பெனிகளும் முதலாளிகளும் மட்டும்தான் தேர்தல் நிதி தர்றாங்க. சாதாரண பொது ஜனங்க நம்மகிட்ட நிதி வாங்கிட்டுதான் ஓட்டு போடுறாங்க. அதனால நம்ம மின்சார ஓட்டு சில பணக்கார முதலைகளுக்கே அப்படின்னு எல்லா கட்சியிலயும் தீர்மானம் போட்டுட்டாங்களாமே?

கணிசமான மக்கள் சிறுதொழில் தொடங்கியும், வேறு பலர் கிடைக்குற வேலையை பார்த்துகிட்டும் ஓரளவு உசுரோட இருக்காங்க. இவங்க எல்லாம் இலவசம் எதுவும் தேவையில்லை, ஒழுங்கா நம்மளோட  பிழைப்பை நடத்த விட்டா போதும் அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். இந்த எண்ணிக்கை இப்போ ரொம்ப ரொம்ப குறைச்சலா இருந்தாலும் நாளடைவில் அதிகரிச்சா அரசியல் வியாதிகளுக்கு (கவனிக்கவும்: அரசியல் வாதிகளுக்கு பிரச்சனை இல்லை) பெரிய வில்லங்கம் வந்துடும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் பன்னண்டு மணி நேரத்துல ஆறு மணி நேரம்தான் இப்போ மின்சாரம் இருக்குது. மீதி 12 மணி நேரம் அதாவது மாலை 6 முதல் காலை 6 மணி வரை மின்சாரத்தை நிறுத்தாம கொடுத்துட்டா பலபேரு நிம்மதியா தூங்குவாங்க. கடுமையான உழைப்பாளிகள் இரவிலும் தங்கள் தொழில் பட்டறைகளை திறந்து வேலை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. இந்த ரெண்டும் நடந்துட்டா அரசியல் வியாதிகளைப் பத்தி யாரும் நினைக்க மாட்டங்க. அதனால எவனும் தூங்கவும் கூடாது. வேலை பார்க்கவும் கூடாது. தூக்கம் கெட்டா புத்தி மழுங்கிடும். டாஸ்மாக் சரக்கு அடிக்கிற பழக்கம் இல்லாதவங்களுக்கு இந்த தண்டனை. சுயசம்பாத்தியம் காரணமா இலவசம் தேவையில்லைன்னு பேச நினைக்கிற ஆளுங்களுக்கு பிழைப்பை முடக்கி போட்டு தண்டனை. (டாஸ்மாக்ல சரக்கு அடிக்கிறவன் கம்பெனிக்கு மட்டும் ஸ்பெஷல் கரண்ட் வருதான்னு கேட்க கூடாது)

எப்படியோ, பிரைவேட் கம்பெனியில ஒரு யூனிட் 15 ரூபாய்க்கு வாங்கி ஐ.டி, சர்க்கரை ஆலை மாதிரி பணக்கார முதலாளிகளுக்கு 3 ரூபாய்க்கு கரண்ட் கொடுத்தாச்சு.(கிட்டத்தட்ட 40 சதவீதம் அப்படின்னு சொல்றாங்க) ஆனா வயிறு வளர்க்குற வேளாண்மைக்கு சுமாரா 20 சதவீதமோ என்னவோன்னுதான் சொல்றாங்க. இந்த புள்ளி விபரத்தை நான் சரியா பதிவுல எழுதலை. .................க்கு கூட ஏசி வெச்சிருக்குற ஆளுங்களும், பகாசுர கம்பெனிகளும், சுரண்டுற மின்சாரத்துல மூணுல ஒரு பங்கு அப்படின்னு ங்குற அளவுலதன் விவசாயத்துக்கு மின்சாரம் செலவாகுது. ஆனா விவசாய இலவச மின்சாரத்தாலதான் மின்சாரவாரியம் திவாலான மாதிரி நம்பவெச்சுட்டாங்க.

இப்படி சராமாரியான கொடூர மின்வெட்டை அமல் படுத்திட்டு யுபிஎஸ் வெச்சிருக்குறவங்களுக்கு எக்ஸ்ட்ரா வரியாம். ஜெனரேட்டர் வெச்சிருந்தா வரியாம். அது சரி, ரோடு டேக்ஸ் வசூல் பண்ணிட்டு அங்கங்க டோல்கேட் போட்டு சுங்க வரி புடுங்குறதையே சகிச்சுகிட்டோம். இந்த மாதிரி சுங்கம் வசூலிக்கிறதை தப்புன்னு சொல்லலை. எத்தனை வருஷத்துக்கு அந்த காண்ட்ராக்ட்,  ஒரு நாள்ல எவ்வளவு வசூல், அரசியல் வியாதிகளுக்கு எத்தனை லட்சம் கோடி அப்படின்னு செய்தி தெரியவே மாட்டெங்குது. ஆனா ராணுவ ரகசியம் கூட வெளில வந்துடுதுப்பா.

அடுத்து ஆக்சிஜனை கெக்கரான் மெக்கரான் கம்பெனிக்கு காண்ட்ராக்ட் விட்டாச்சு. நீங்க மூச்சு விடுறதுக்கு பணத்தை கட்டு. இல்லன்னா செத்துப்போன்னு சொல்றப்பதான் நம்ம நாட்டுல புரட்சி வெடிக்கும்னு நான் சொன்னேன். ஆனா அவரு சொல்றாரு, ''நம்ம மக்கள் பணம் கொடுக்க முடியலையேன்னு சாவாங்களே தவிர இயற்கை வளத்துக்கு எங்கிட்ட ஏன் காசு கேட்குறன்னு பொங்கவும் மாட்டாங்க. சும்மா கிடைக்கிற இயற்கை வளத்தை மாசுபடாம சிக்கனமா பயன்படுத்தவும் மாட்டாங்க. இலவசத்தை வேணாம்னு சொல்லவும் மாட்டாங்க. அப்படின்னு சொன்னார். அது உண்மையாங்க?

திங்கள், 9 ஏப்ரல், 2012

என்ன கொடுமை சரவணன் ?-7


எனக்கு மட்டும் ஏன்இப்படி? - இந்த கேள்வி உங்களில்பலருக்கும் வெவ்வேறுசூழ்நிலைகளில் உங்கள்மனதில் எழுந்திருக்கும்.

ஆயிரம் மர்பி விதிகள்இருக்கின்றன. இதில்600வது தேறும். அந்த விதிகளைபடித்தால் இதைஎல்லாம் டேக்இட் ஈஸிஎன்று எடுத்துக்கொண்டு நம் பி.பி. ஏறாமல் ஆரோக்கியம்கெடாமல் இருக்கபழகிக்கொள்ளலாம்.

இதை படிச்சுட்டு இதான்எனக்கு தெரியுமே. புதுசா சொல்லவந்துட்டியாக்கும் அப்படின்னுசண்டை போடப்பிடாது. இந்த விதிகள்எல்லாம் நெட்டுலஇருந்து ஒருபுண்ணியவான் எனக்குஅனுப்பினது. உண்மையைசொல்லி நான்முதல்லேயே சரண்டர்ஆயிட்டேன்.
 
மர்பி விதிகள்

36. நமது நண்பர்கள் ஏதேனும் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்த உடன் நமது நண்பர்கள் என்னும் பதவியில் இருந்து இறங்கி விடுவார்கள்.
37. காரின் விலையும், ஓட்டுநரின் நிதானமின்மையும் நேர்விகிதத்திலேயே இருக்கும்.
38. நம்மை விட குறைவான வேகத்தில் ஓட்டும் அனைவரையும் முட்டாள்கள் என நினைப்போம்.
39. நம்மை விட அதிகமான வேகத்தில் ஓட்டும் அனைவரும் நிதானம் தெரியாதவர்கள் என நினைப்போம்.
40. உங்களுக்கு பிடித்த திரைப்பாடல் பேருந்து வானொலியில் பாட ஆரம்பிக்கும்போது நீங்கள் போய்ச் சேர வேண்டிய இடம் வந்து விடும்.
-விதிகள் தொடரும்...

சனி, 24 மார்ச், 2012

என்ன கொடுமை சரவணன் ?-6

எனக்கு மட்டும் ஏன் இப்படி? - இந்த கேள்வி உங்களில் பலருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் உங்கள் மனதில் எழுந்திருக்கும்,

ஆயிரம் மர்பி விதிகள் இருக்கின்றன. இதில் 600வது தேறும். அந்த விதிகளை படித்தால் இதை எல்லாம் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொண்டு நம் பி.பி. ஏறாமல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க பழகிக்கொள்ளலாம்.

இதை படிச்சுட்டு இதான் எனக்கு தெரியுமே. புதுசா சொல்ல வந்துட்டியாக்கும் அப்படின்னு சண்டை போடப்பிடாது. இந்த விதிகள் எல்லாம் நெட்டுல இருந்து ஒரு புண்ணியவான் எனக்கு அனுப்பினது. உண்மையை சொல்லி நான் முதல்லேயே சரண்டர் ஆயிட்டேன்.


மர்பி விதிகள்

26. யார் தயங்குகிறார்களா அவர்கள கடைசி.
27. பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி அதை இழக்காமல் இருப்பதில் இருக்கிறது.
28. ஆலோசகர் என்பவர் உங்களிடமே தகவல்கள வாங்கி உங்களுக்கே திருப்பித் தருபவர் ஆவார்.
29.பணம் சாணத்தைப் போன்றது. அதை கலந்து தெளித்துவிட்டால் நல்ல மருந்தாகும். ஆனால் ஒரே இடத்தில் தேக்கி வைத்துவிட்டால் இடமே நாசமாகி விடும்.
30. ஒன்று சிகரத்தில் இருக்க வேண்டும். அல்லது அதல பாதாளத்தில் இருக்க வேண்டும். பாதியில் இருந்தால் கஷ்டம்தான் எப்போதும்.

-விதிகள் தொடரும்...