Search This Blog

வெள்ளி, 26 மார்ச், 2010

ஆறு வருஷமா என் கேள்விக்கு பதிலே தெரியலையே...இப்பவாச்சும் யாராவது சொல்லுங்களேன்.

"பெண்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் அந்த மூன்று நாட்களில் அவள் எதைத் தொட்டாலும் தீட்டு என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறீர்களே...நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் வளர்ந்து வந்த பத்து மாதங்களும் அந்தக் கழிவு வெளியேறுவதில்லை. அப்படியென்றால் அவ்வளவு கழிவுகளும் சேர்ந்த மொத்த உருவம்தானே ஒவ்வொரு மனிதனும்?..."என்று விளக்கம் கொடுத்திருந்தார் ஒரு குருநாதர்.
அப்போது எனக்குத் தோன்றிய சந்தேகமே வேறு. ஒரு செடியில் அல்லது மரத்தில் பூத்த பூ வாடி வதங்கி உதிர்ந்து விட்டால் அது கழிவாகிறது. ஆனால் அதே பூ காயாகி கனியாகிவிட்டால் எப்படி அது கழிவாகும்? அதாவது பெண்ணின் வயிற்றில் உருவாகும் கருமுட்டை விந்தணு சேராததால் கழிவாகிறது. அது கருவாகி குழந்தையாக உருமாறியதால்தான் கர்ப்ப காலத்தில் வேறு கருமுட்டைகள் தோன்றுவதில்லை என்பது அறிவியல். பிறகு எப்படி குழந்தை பத்துமாத காலத்தில் தாயின் உதிரப்போக்கு வெளியேறாததால் சேர்ந்த கழிவின் மொத்த உருவமாகும்?

எனக்கு புரியவில்லையே என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். யாருக்கு என்றுதானே கேட்குறீங்க? மாதமும் தேதியும் நினைவில் இல்லை. 2004ம் ஆண்டு ஆனந்த விகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய கட்டுரைத் தொடரில் இருந்த வாக்கியங்கள்தான் இந்தப் பதிவின் முதல் பாராவில் உள்ளன.

இதைப் படிச்சுட்டு எத்தனை பேர் என் கூட சண்டைக்கு வர்றாங்க, விகடன், சத்குருவுக்கு ஆதரவா பேசுறாங்க, இவனே ஒரு காமெடி பீஸ். இதுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கணுமான்னு ஒதுங்கிப் போறாங்கன்னு பார்ப்போம்.

அப்பவே விகடன்ல இந்த சந்தேகத்தை தீர்த்து வெச்சிருந்தா நான் இந்த பதிவை எழுதியிருக்கப்போறதே இல்லை.ஆனா இப்பவும் அவரோட கருத்துக்களை பெரிய வேதம் மாதிரி சில பிரபலங்களே விளம்பரம் செய்ய ஆரம்பிச்சிருக்குறதுதான் எனக்கு நெருடலா இருக்கு.

அவரோட தியான முறைகள் நிறைய பேருக்கு நல்லது பண்ணியிருக்கலாம். அது வரைக்கும் சந்தோஷம். ஆனா அவரோட பல கட்டுரைகள் சராசரி மனிதனை விட்டுட்டு ரொம்ப மேதாவித்தனமா சிந்திக்கிறவங்களுக்குத் தகுந்த மாதிரிதான் இருக்கு.

அதையெல்லாம் அப்புறம் விவாதிக்கலாம்.

என்னோட ஆறு வருஷ சந்தேகத்துக்கு ஒரு விளக்கம் சொல்லுங்களேன்.

மீண்டும் அந்த வாக்கியங்கள்.

"பெண்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் அந்த மூன்று நாட்களில் அவள் எதைத் தொட்டாலும் தீட்டு என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறீர்களே...நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் வளர்ந்து வந்த பத்து மாதங்களும் அந்தக் கழிவு வெளியேறுவதில்லை. அப்படியென்றால் அவ்வளவு கழிவுகளும் சேர்ந்த மொத்த உருவம்தானே ஒவ்வொரு மனிதனும்?..."என்று விளக்கம் கொடுத்திருந்தார் ஒரு குருநாதர்.

இதில் சொல்லியிருப்பது சரியா?

அப்போது எனக்குத் தோன்றிய சந்தேகமே வேறு. ஒரு செடியில் அல்லது மரத்தில் பூத்த பூ வாடி வதங்கி உதிர்ந்து விட்டால் அது கழிவாகிறது. ஆனால் அதே பூ காயாகி கனியாகிவிட்டால் எப்படி அது கழிவாகும்? அதாவது பெண்ணின் வயிற்றில் உருவாகும் கருமுட்டை விந்தணு சேராததால் கழிவாகிறது. அது கருவாகி குழந்தையாக உருமாறியதால்தான் கர்ப்ப காலத்தில் வேறு கருமுட்டைகள் தோன்றுவதில்லை என்பது அறிவியல். பிறகு எப்படி குழந்தை பத்துமாத காலத்தில் தாயின் உதிரப்போக்கு வெளியேறாததால் சேர்ந்த கழிவின் மொத்த உருவமாகும்?

இது என் மனதில் தோன்றிய சந்தேகம். பதிலை நீங்க சொல்லுங்க.