Search This Blog

செவ்வாய், 9 மார்ச், 2010

மகளிர் மசோதாவும் நாட்டின் அழிவும்...

"எலி அம்மணமா ஓடுதேன்னு பார்த்தேன். அது இதுக்குதானா" என்று தமிழில் பழமொழி சொல்லுவார்கள்.இவ்வளவு நாட்களாக மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யாமலேயே தள்ளிப்போட்டார்கள். இந்த ஆண்டு அப்படி என்ன திடீரென்று பெண்கள் மீது கரிசனம் என்று தெரியவில்லையே என்பது என் மனதில் இருந்த சந்தேகம்.
தினமணி நாளிதழில் வெளிவந்த சில கட்டுரைகள்  மூலமாக என் சந்தேகம் தீர்ந்து விட்டது.என்ன...நம் நாட்டு மக்களுக்கு சங்கு ஊதும் நாள் என்று என்பதுதான் சரியாகத் தெரியவில்லை.

அதோ பூனை போகுது பார் அப்படின்னு சொல்லி யானையைக் கடத்துறவங்களாச்சே நம்ம அரசியல் வியாதிகள். மகளிர் மசோதாவை நிறைவேற்ற முனைந்ததுக்குப் பின்னாலயும் மக்களுக்கு எதிரான சதி இருக்கு. ஆனா நம்மளை இதுல இருந்து யார் காப்பாத்துவாங்கன்னுதான் தெரியலை.

எதனால செத்தோம், ஏன் இந்த வியாதி வந்துச்சுன்னு தெரியாம அவஸ்தைப்படுறதோ, போய்ச்சேர்றதோ ரொம்ப கொடுமை.அணு சக்தி ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு எப்படி ஆப்பு வெக்கிதுன்னு தெரிஞ்சுக்க இந்த பதிவை முழுசா படிங்க.

ஆனா ஒண்ணு மட்டும் உறுதி.இந்தியா விரைவில் ஜப்பான் மாதிரி ஆகப்போகுது. உடனே 'ஆ'ன்னு சந்தோஷமா வாயைப்பிளக்காதீங்க. நான் சொன்னது, ஹிரோஷிமா, நாகசாகி மாதிரி அழியப்போகுது. ஆனா ஒரே நாள்ல ஆகாது.கொஞ்சம் கொஞ்சமா உங்களை மயங்க வெச்சு மொத்தமா ஒழிக்கப்போறாங்க.
***************
கட்டுரை 1

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. 
 அதற்கு என்ன காரணமாம்?அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை  கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்? நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு  உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?
***************
கட்டுரை 2

அ​ணு​சக்​தித் துறை​யில் ஒத்​து​ழைப்​புக்​கான உடன்​பாட்டை அமெ​ரிக்​கா​வு​டன் செய்​து​கொள்ள,​​ அனைத்​துத் தரப்பு எதிர்ப்​பு​க​ளை​யும் மீறி,​​ பிடி​வா​தம் காட்டி அதைச் சாதித்​துக் காட்​டி​ய​வர் பிர​த​மர் மன்​மோ​கன் சிங்.​

இந்த உடன்​பாடு இந்​தி​யா​வின் மின்​சா​ரத் தேவை​களை முற்​றி​லு​மாக நிறை​வேற்ற உத​வும் அமு​த​சு​ரபி என்று இந்​திய ஆட்​சி​யா​ளர்​க​ளால் வர்​ணிக்​கப்​பட்​டது.​ இதன் இணைப்​பாக சர்​வ​தேச அணு​சக்​திக் குழு​மத்​து​டன் ஓர் உடன்​பாடு,​​ அணு​சக்தி வர்த்​தக நாடு​கள் குழு​வு​டன் மற்​றோர் உடன்​பாடு என்​றும் மத்​திய அர​சால் மேற்​கொள்​ளப்​பட்​டன.​ ஆனால்,​​ இந்த அணு​சக்தி விவ​கா​ரம் தொடர்​பான பேச்​சு​வார்த்​தை​க​ளும்,​​ நட​வ​டிக்​கை​க​ளும் முடி​வில்​லா​மல் தொட​ரு​வ​தன் விளை​வா​கப் புதிய விவா​தங்​கள் எழுந்​துள்​ளன.​

இந்​தி​யா​வு​ட​னான அணு​சக்​தித் துறை ஒத்​து​ழைப்​புக்கு அமெ​ரிக்க நாடா​ளு​மன்​றம் "ஹைட் சட்​டம்' என்ற ஒன்றை ஏற்​கெ​னவே நிறை​வேற்​றி​யி​ருந்​தது.​ இப்​போது அணு​சக்தி தொடர்​பாக இந்​திய நாடா​ளு​மன்​றத்​தி​லும் ஒரு புதிய சட்​டம் நிறை​வேற்​றப்​பட வேண்​டும் என்ற கோரிக்கை அமெ​ரிக்கா தரப்பி​லி​ருந்து முன்​வைக்​கப்​பட்டு,​​ அதை​யும் மன்​மோ​கன் சிங் அரசு சிர​மேற்​கொண்டு செயல்​ப​டுத்த மத்​திய அமைச்​ச​ர​வைக் கூட்​டத்​தில் முடிவு எடுக்​கப்​பட்டு விட்​ட​தா​கச் செய்​தி​கள் வெளி​யாகி உள்​ளன.​

இ ​தன் பின்​ன​ணி​தான் என்ன?​ அணு​மின் உற்​பத்​திக் கூடங்​களை நிறுவி,​​ மின்​சார உற்​பத்​தி​யில் ஈடு​ப​டு​கை​யில்,​​ விபத்​துக்​கான சாத்​தி​யக்​கூ​று​கள் இருப்​பது இயல்பே.​ அனல்-​புனல் மின் நிலை​யங்​க​ளில்​கூட விபத்​து​கள் நிகழ வாய்ப்பு உண்டு என்​றா​லும்,​​ அணு​மின் நிலைய விபத்து மிகு​தி​யான அபா​யங்​களை உள்​ள​டக்​கி​ய​தாக இருக்​கும்.​ அமெ​ரிக்​கா​வின் "மூன்று மைல் தீவு' அணு​மின் நிலைய விபத்து 1979-ல் நிகழ்ந்​த​தும்,​​ ரஷி​யா​வின் "செர்​னோ​பில்' அணு​மின் நிலைய விபத்து 1986-ல் நேரிட்​ட​தும்,​​ இத்​த​கைய விபத்​து​க​ளின் அபாய விளை​வு​கள் எந்த அள​வுக்​குக் கடு​மை​யாக இருக்​கும் என்​ப​தற்​கான அனு​ப​வப் பாடங்​க​ளா​கும்.​

இந்த அபா​யத்​தைத் தவிர்க்​கும் வகை​யில் கூடு​தல் எச்​ச​ரிக்​கை​யோ​டும்,​​ பாது​காப்பு ஏற்​பா​டு​க​ளோ​டும் அணு​மின் உற்​பத்​தி​யில் ஈடு​பட வேண்​டி​யது அவ​சி​யம்;​ அது சாத்​தி​ய​மா​ன​தும்​கூட.​ ஆனால் இவை எல்​லா​வற்​றை​யும் கடந்து ஒரு விபத்து நேரிட்டு விடு​மா​னால்,​​ அதன் பாதிப்​பு​களை எதிர்​கொள்​வ​தும்,​​ பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு உரிய இழப்​பீ​டு​களை வழங்​கு​வ​தும் தவிர்க்க முடி​யாத கட​மை​கள்.​

÷எ​திர்​பா​ராத அபா​யங்​க​ளுக்​குப் பாது​காப்பு ஏற்​பா​டாக வந்​த​வை​தான் காப்​பீட்​டுத் திட்​டங்​கள்.​ இதற்​காக சர்​வ​தேச அள​வில் சில கோட்​பா​டு​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன;​ உலக நாடு​கள் பல​வற்​றில் சட்​டங்​க​ளும் இயற்​றப்​பட்​டுள்​ளன.​ சர்​வ​தேச அணு​சக்​திக் கழ​கத்​தின் முயற்​சி​யின் விளை​வாக 1963-ல் அணு​சக்தி பாதிப்பு குறித்த வியன்னா கோட்​பாடு ஒன்று உரு​வாக்​கப்​பட்டு அது 1997 முதல் அம​லாக்​கத்​துக்கு வந்​தது.​

÷வ​ ளர்ச்​சி​ய​டைந்த மேற்​கத்​திய நாடு​க​ளின் கூட்​ட​மைப்​பான,​​ பொரு​ளா​தார ஒத்​து​ழைப்பு மற்​றும் வளர்ச்​சிக்​கான ஸ்தா​ப​னத்​தின் முயற்​சி​யில் அணு​மின் சக்​தித் துறை​யில் மூன்​றா​வது நபர் கடப்​பா​டுக்​கான பாரிஸ் கோட்​பாடு 1960-ல் உரு​வாக்​கப்​பட்டு,​​ 1963-ல் புரூ​செல்ஸ் நக​ரில் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் செழு​மைப்​ப​டுத்​தப்​பட்டு,​​ 1968 முதல் அம​லுக்கு வந்​தது.​ இந்த வியன்னா மற்​றும் பாரிஸ் கோட்​பா​டு​கள் இரண்​டை​யும் ஒருங்​கி​ணைத்து ஒரு முழு​மை​யான வரை​ய​றையை ஏற்​ப​டுத்த 1988-ல் செர்​னோ​பில் விபத்​துக்​குப் பிறகு ஒரு முயற்​சி​யும் மேற்​கொள்​ளப்​பட்​டது.​ 1997-ல்,​​ சர்​வ​தேச அணு​சக்​திக் கழக உறுப்பு நாடு​கள் அணு​சக்தி பாதிப்​புக்​கான கூடு​தல் இழப்​பீட்​டுக்​கான கோட்​பாடு ஒன்​றை​யும் நிறை​வேற்​றி​யுள்​ளன.​ இது இன்​ன​மும் அம​லாக்​கத்​துக்கு வர​வில்லை என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​
÷இந்த சர்​வ​தே​சக் கோட்​பா​டு​களை ஏற்​றுக்​கொண்ட நாடு​கள் சில,​​ தத்​தம் நாட்​டுக்​குப் பொருத்​த​மான சட்​டங்​களை இது தொடர்​பாக நிறை​வேற்​றி​யுள்​ளன.​ பிரிட்​டன்,​​ ஜெர்​மனி,​​ பிரான்ஸ்,​​ ரஷியா போன்​றவை பாரிஸ் அல்​லது வியன்னா கோட்​பா​டு​களை ஏற்​றுச் சட்​ட​மி​யற்​றிய நாடு​க​ளில் சில.​ சர்​வ​தே​சக் கோட்​பாடு எத​னை​யும் அங்​கீ​க​ரிக்​கா​ம​லும்,​​ சொந்த நாட்​டில் சட்​ட​மி​யற்​றா​ம​லும் அணு​சக்​தித் துறை​யில் ஈடு​பட்டு வரும் நாடாக சீனா உள்​ளது.​

÷ர​ஷியா,​​ சீனா போன்ற நாடு​கள் அணு​மின் துறை​யில் உற்​பத்தி மற்​றும் வர்த்​த​கத்தை அர​சுத் துறை​யில் மட்​டுமே மேற்​கொள்​கின்​றன.​ அமெ​ரிக்கா உள்​ளிட்ட இதர நாடு​க​ளில் பிர​தா​ன​மாக அணு​மின்​துறை உற்​பத்தி -​ வர்த்​த​கத்​தில் தனி​யார் துறையே ஈடு​பட்டு வரு​கி​றது.​ அணு​மின் விபத்து கார​ண​மான பாதிப்​பு​க​ளுக்​கும் முழு​மை​யான நிவா​ர​ணம் அல்​லது இழப்​பீடு வழங்க வேண்​டிய பொறுப்பு அர​சாங்​கத்​தையே சாரும் என்​பது பொது​வான ஒன்று.​ எனி​னும்,​​ காப்​பீட்​டுத் திட்​டங்​க​ளின் கீழ்,​​ இந்த அணு​மின் பாதிப்பு தொடர்​பான கடப்​பா​டு​க​ளுக்கு வழி​வகை செய்ய வேண்​டும் என்​பதே,​​ இது குறித்​துச் சட்​ட​மி​யற்​றிய நாடு​க​ளின் நோக்​க​மாக அமைந்​தது.​

÷அ​ணு​மின் உற்​பத்​தித் துறை​யில் ஈடு​ப​டு​கிற நிறு​வ​னங்​கள் இரு​வ​கைப்​ப​டும்.​ அணு உலை​கள்,​​ இதர சாத​னங்​கள்,​​ எரி​பொ​ருள்,​​ எரி​பொ​ருள் பயன்​பாடு தொடர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​கள் போன்​ற​வற்​றில் ஈடு​ப​டும் நிறு​வ​னங்​கள் ஒரு​வகை;​ இவற்​றைப் பயன்​ப​டுத்தி அணு​மின் நிலை​யத்தை நிறுவி இயக்​கு​கிற,​​ அதைப் பரா​ம​ரிக்​கிற,​​ உற்​பத்​தி​யா​கும் மின்​சா​ரத்தை விற்று விநி​யோ​கிக்​கிற பணி​க​ளில் ஈடு​ப​டும் நிறு​வ​னங்​கள் இரண்​டா​வது வகை.​ அணு​மின் விபத்து பாதிப்பு குறித்த குடி​மைக் கடப்​பா​டு​கள் முதல் வகை நிறு​வ​னங்​கள் மீது சுமத்​தப்​ப​டக்​கூ​டாது என்​ப​து​தான்,​​ இது​தொ​டர்​பாக 1957-ம் ஆண்​டி​லேயே சட்​ட​மி​யற்​றிய அமெ​ரிக்க நாடு எடுத்த முடிவு.​  அ​ணு​மின் உலை மற்​றும் இதர சாத​னங்​களை உற்​பத்தி செய்​யும் நிறு​வ​னங்​கள்,​​ உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து நிகழ்ந்​தா​லும்,​​ அதன் பாதிப்​புக்கு எந்த வகை​யி​லும் கடன்​பட்​டவை ஆகாது என்று அவற்​றுக்கு முழு விலக்கு அளித்​து​விட்​டது அமெ​ரிக்க அர​சாங்​கம்.​ மாறாக,​​ விபத்து கார​ண​மான பாதிப்​பு​க​ளுக்கு,​​ அணு​மின் நிலை​யத்​தைச் செயல்​ப​டுத்​து​கிற நிறு​வ​னமே பொறுப்​பேற்க வேண்​டும் என்​றும்,​​ அதற்​காக அந்த நிறு​வ​னம் காப்​பீட்​டுத் திட்​டத்தை மேற்​கொள்ள வேண்​டும் என்​றும் சட்​ட​மி​யற்​றப்​பட்​டது.​

÷அ​ணு​சக்தி ஒழுங்​கு​முறை ஆணை​யம் ஒன்​றும் ஏற்​ப​டுத்​தப்​பட்டு,​​ அது சட்​டத்​தின் கீழான காப்​பீட்டை அமெ​ரிக்க அணு​மின் கூடங்​கள் பெற்​றுள்​ள​னவா என்று கண்​கா​ணிக்​கி​றது.​ இந்த அணு​மின் கூடங்​கள் தொடர்​பான காப்​பீட்டு உத்​த​ர​வா​தத்தை "அமெ​ரிக்க அணு​சக்​திக் காப்​பீட்​டா​ளர்​கள்' என்ற ஒரு கூட்​ட​மைப்பு நல்கி வரு​கி​றது.​ இந்​தக் காப்​பீட்​டைப் பெறச் செலுத்த வேண்​டிய வரு​டாந்​திர "பிரீ​மி​யம்' தொகை,​​ ஒரே ஓர் அணு​உ​லை​யைக் கொண்ட மின்​கூ​டத்​துக்கு 4 லட்​சம் டாலர் என்று சரா​ச​ரி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்டு செயல்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ மொத்​தத்​தில் அமெ​ரிக்​கா​வில் அணு​சக்தி சாதன உற்​பத்தி -​ வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டும் தனி​யார் துறை நிறு​வ​னங்​க​ளுக்கு,​​ விபத்து நிவா​ரண இழப்​பீட்டி​லி​ருந்து விலக்கு அளித்து மானிய உதவி நல்​கும் வித​மா​கவே அந்​நாட்​டுச் சட்​டம் அமைந்​துள்​ளது.​

÷இப்​போது அமெ​ரிக்​கா​வில் தனி​யார் துறை அணு​மின் உற்​பத்தி நிறு​வ​னங்​க​ளாக உள்ள ஜென​ரல் எலெக்ட்​ரிக்,​​ அரேவா,​​ வெஸ்​டிங் ஹவுஸ்,​​ ரோசா​டோம் போன்ற பன்​னாட்டு நிறு​வ​னங்​கள்,​​ இந்​தி​யா​வில் புதிய அணு​மின் கூடங்​க​ளுக்​கான அணு உலை​கள் உள்​ளிட்ட சாத​னங்​களை விற்​பனை செய்ய மும்​மு​ர​மாக முயற்​சி​கள் மேற்​கொண்டு வரு​கின்​றன.​ இவை அமெ​ரிக்​கா​வில் உள்​ள​து​போ​லத் தங்​க​ளுக்​குப் பாது​காப்​பான சட்ட ஏற்​பா​டு​கள் இந்​தி​யா​வி​லும் செய்து தரப்​பட வேண்​டும் என்று கோரு​கின்​றன.​ இந்​தக் கோரிக்​கையை அமெ​ரிக்க அர​சாங்​க​மும் வலி​யு​றுத்​து​கி​றது.​ அண்​மை​யில் அமெ​ரிக்க நாட்​டுக்​குப் பய​ணம் மேற்​கொண்ட பிர​த​மர் மன்​மோ​கன் சிங்​கி​டம்,​​ அதி​பர் ஒபா​மாவே இதற்​கான சட்​டத்தை விரை​வில் இந்​திய நாடா​ளு​மன்​றத்​தில் நிறை​வேற்ற நெருக்​கு​தல் கொடுத்​துள்​ளார் என்​பது வெளிப்​ப​டை​யா​கவே தெரிய வந்​தது.​

÷இந்​தப் பின்​ன​ணி​யில் தான் மத்​திய அரசு அணு​சக்தி குடி​மைக் கடப்​பாடு மசோதா ஒன்றை நாடா​ளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய முடி​வெ​டுத்​துள்​ளது.​ இந்த மசோ​தா​வில்,​​ இந்​தி​யா​வில் அமை​ய​வுள்ள அணு​மின் கூடங்​க​ளில் விபத்து ஏதே​னும் நேரிட்​டால்,​​ அது தொடர்​பான நிவா​ர​ணம்,​​ இழப்​பீடு அனைத்​தை​யும் ஏற்​றுக்​கொள்ள வேண்​டிய கடப்​பாடு,​​ மத்​திய அர​சின் அணு​மின் துறை​யின் கீழ் இயங்​கும்,​​ இந்​திய அணு​மின் வாரி​யத்​துக்கு மட்​டுமே என்று விதிக்​கப்​ப​டும்.​ அணு​உ​லை​க​ளையோ,​​ இதர சாத​னங்​க​ளையோ,​​ அணு​எ​ரி​பொ​ரு​ளையோ,​​ அது​தொ​டர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​க​ளையோ,​​ விற்​பனை செய்​யும் அமெ​ரிக்க நிறு​வ​னங்​க​ளுக்கு எந்​த​வி​தக் கடப்​பா​டும் இருக்​காது என்​ப​து​தான் இதன் சாராம்​சம்.​ அணு உலை​க​ளின் உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து ஏற்​பட்​டா​லும்,​​ அவற்றை விற்​பனை செய்த வெளி​நாட்டு நிறு​வ​னத்​துக்கு எந்​தப் பொறுப்​பும் கிடை​யாது.​

÷அது மட்​டு​மல்ல,​​ அணு​மின் விபத்து நேரிட்​டால்,​​ அந்த விபத்து தொடர்​பான இழப்​பீட்​டுத் தொகைக்கு 45 கோடி டாலர் ​(ரூ.​ 2,300 கோடி)​ உச்​ச​வ​ரம்​பாக விதிக்​கப்​ப​டும் என்று இந்த மசோ​தா​வைப் பற்​றிய விவ​ரங்​கள் தெளி​வு​ப​டுத்​து​கின்​றன.​ அணு​மின் கூட விபத்து,​​ லட்​சக்​க​ணக்​கான மக்​க​ளைக்​கூட பாதிப்​புக்கு இலக்​காக்​கும் பரி​மா​ணம் கொண்​ட​தாக அமை​யக்​கூ​டும்.​ அப்​ப​டிப்​பட்ட நிலை​யில் இந்த 45 கோடி டாலர் என்​பது வெறும் கண்​து​டைப்​பாக மட்​டுமே நின்​று​வி​டும் ஆபத்து எழும்.​ இந்த உச்​ச​வ​ரம்பு நிர்​ண​யிக்​கப்​பட்​டால் மட்​டுமே அதற்கு உள்​ளிட்​டுக் காப்​பீட்​டுத் திட்​டத்​தைப் பெற முடி​யும் என்​பது இந்​தச் சட்​டத்​தைக் கொண்டு வரு​வ​தற்​கான கார​ண​மா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ போபால் விஷ​வா​யுக் கசிவு விபத்து நடந்து முடிந்து 25 ஆண்​டு​க​ளா​கி​யும்,​​ அதில் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உரிய நிவா​ர​ணம் பெற இய​லாது அல்​லா​டு​கிற நேர்வை நினை​வில் வைத்​துப் பார்த்​தால்,​​ மத்​திய அர​சின் புதிய சட்​டம் எவ்​வ​ளவு பாத​க​மான நிலை​மைக்கு இட்​டுச் செல்​லக் கூடும் என்​பதை ஊகிப்​பது கடி​னம் அல்​லவே!​

÷"லாபங்​கள் அனைத்​தும் தனி​யா​ருக்கு;​ பாதிப்​பு​க​ளும்,​​ இழப்​பும் அர​சாங்​கத்​துக்கு' என்​ப​து​தானே நவீன தாரா​ள​ம​யத்​தின் தாரக மந்​தி​ரம்.​ அதன்​படி அமெ​ரிக்க நாட்​டின் அணு​மின் உற்​பத்தி -​ ​ வர்த்​த​கத் தனி​யார் நிறு​வ​னங்​க​ளுக்கு ரூ.​ 60,000 கோடி வரை விற்று,​​ லாபம் ஈட்​டு​வ​தற்கு வழி​தி​றந்​து​விட முற்​ப​டு​கிற,​​ இந்​திய ஆட்​சி​யா​ளர்​கள்,​​ அவற்​றின் மீது எந்​தக் கட்​டத்​தி​லும் மயி​லி​றகு அள​வு​கூட சுமை விழுந்து விடக் கூடாது என்று சட்​டம் போட்​டுப் பாது​காப்பு நல்க முற்​ப​டு​கின்​ற​னர்.​

÷"என்ன விலை அமெ​ரிக்க அணு உலையே?​ எம் மக்​க​ளின் உயி​ரைக் கூடத் தரு​வேன்' என்று இந்​திய மக்​க​ளின் வாழ்​வு​ரி​மைக்கே எதி​ரான சட்​டத்தை மன்​மோ​கன் சிங் அரசு நிறை​வேற்ற அனு​ம​திக்​கப் போகி​றதா நம் ஜன​நா​யக நாட்​டின் நாடா​ளு​மன்​றம்?

 **************
கட்டுரை 3
அது மன்​ன​ராட்சி ஆனா​லும்,​​ மக்​க​ளாட்சி ஆனா​லும்,​​ ஏன் சர்​வா​தி​கார ஆட்​சியே ஆனா​லும் அந்த நாட்​டை​யும்,​​ மக்​க​ளை​யும்,​​ அவர்​க​ளது நல​னை​யும் பாது​காப்​ப​து​தான் அடிப்​ப​டைக் கடமை.​ நல்ல பல திட்​டங்​க​ளின் மூலம் மக்​க​ளது நல்​வாழ்​வுக்கு ஓர் அரசு உத்​த​ரவு தரு​கி​றதோ இல்​லையோ,​​ அன்​னி​யர்​கள் தேசத்தை ஆக்​கி​ர​மிக்​கா​மல் பாது​காப்​ப​தும்,​​ சுரண்​டா​மல் பார்த்​துக் கொள்​வ​தும் எந்த ஓர் அர​சுக்​கும் அடிப்​ப​டைக் கடமை.​ இந்த அடிப்​ப​டைக் கட​மை​யைக்​கூட மத்​திய ஆட்​சி​யில் இருக்​கும் ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி செய்​யத் தவ​று​கி​றதோ என்​கிற ஐயப்​பாடு சமீ​ப​கா​ல​மா​கத் தோன்​றி​யி​ருக்​கி​றது.​

இந்​தியா மிகப்​பெ​ரிய மின் பற்​றாக்​கு​றை​யைச் சந்​திக்க இருக்​கி​றது என்​பதை யாரும் மறுக்​க​வில்லை.​ இந்​தி​யா​வின் எரி​சக்​தித் தேவையை எப்​படி எதிர்​கொள்​வது என்​ப​தில் அனை​வ​ரும் கைகோர்த்து,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நல​னை​யும் கருத்​தில்​கொண்டு செயல்​பட வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்து இருக்க முடி​யாது.​ இந்​தப் பிரச்​னை​யில் மக்​கள் கருத்தை முறை​யா​கக் கணிக்​கா​ம​லும்,​​ பொது​வான அணு​கு​மு​றை​யைக் கடைப்​பி​டிக்​கா​ம​லும் அமெ​ரிக்​கா​வு​டன் பல்​வேறு சம​ர​சங்​க​ளைச் செய்​து​கொண்டு அணு​சக்தி ஒப்​பந்​தம் செய்து கொண்​டது இந்​திய அரசு.​

அது​வும் போதா​தென்று,​​ இந்​தி​யா​வின் உரி​மை​களை அடகு வைக்​கும்,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நியா​ய​மான பாது​காப்பை நிர்​மூ​ல​மாக்​கும் ஒரு நட​வ​டிக்​கை​யி​லும் இப்​போது மன்​மோ​கன் சிங் தலை​மை​யி​லான அரசு இறங்கி இருப்​பது அதிர்ச்சி அளிக்​கி​றது.​
அது இந்​திய நிறு​வ​னமோ,​​ பன்​னாட்டு நிறு​வ​னமோ எது​வாக இருந்​தா​லும்,​​ தாங்​கள் தொழில் செய்து லாபம் சம்​பா​திப்​ப​தற்​கா​கச் சுற்​றுச்​சூ​ழ​லைப் பாதிப்​ப​தும்,​​ தொழி​லா​ளர்​கள் மற்​றும் அந்​தத் தொழிற்​சா​லை​யைச் சுற்றி வாழும் மக்​க​ளின் நல்​வாழ்​வுக்​கும்,​​ ஆரோக்​கி​யத்​துக்​கும் பாதிப்பு ஏற்​ப​டுத்​து​வ​தும் ஏற்​பு​டை​ய​தல்ல.​ நமது அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் 21-வது பிரி​வின்​படி வாழ்​வு​ரிமை என்​பது ஒவ்​வோர் இந்​தி​யக் குடி​ம​க​னுக்​கும் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.​

நமது உச்ச நீதி​மன்​றம் இந்​தப் பிரச்​னை​யில் மேலும் ஒரு​படி சென்று,​​ வாழும் உரிமை என்​பது உயி​ரு​டன் வாழ்​வது என்​பது மட்​டு​மல்ல,​​ சுய​ம​ரி​யா​தை​யு​டன் வாழ்​வது என்​ப​தும் அடிப்​ப​டைத் தேவை​க​ளான உண்ண உணவு,​​ உடுக்க உடை,​​ இருக்க வீடு இவை​க​ளு​டன் வாழ்​வது என்​ப​தும்​தான் என்று பல தீர்ப்​பு​க​ளின் மூலம் உறுதி செய்​தி​ருக்​கி​றது.​ அதை மேலும் விரி​வு​ப​டுத்தி,​​ மனித உரி​மை​யு​ட​னும்,​​ கௌ​ர​வத்​து​ட​னும் வாழ்​வது என்​பது,​​ பாது​காக்​கப்​பட்ட சுற்​றுச்​சூ​ழ​லு​ட​னும்,​​ நச்​சுக் கலப்​பில்​லாத காற்று மற்​றும் தண்​ணீ​ரு​ட​னும் வாழ்​வது என்​று​கூ​டத் தீர்ப்பு வழங்கி இருக்​கி​றது.​

உல​கி​லுள்ள ஏனைய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டங்​களை எல்​லாம்​விட,​​ இந்​திய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் சுற்​றுச்​சூ​ழ​லுக்கு மிக அதி​க​மான முன்​னு​ரி​மை​யும் முக்​கி​யத்​து​வ​மும் அளித்​தி​ருக்​கி​றது.​ இயற்​கைச் சூழ​லைப் பேணு​வது மற்​றும் அதி​க​ரிப்​பது என்​பதை அர​சி​யல் சட்​டப்​பி​ரிவு 51-அ,​​ அடிப்​படை உரி​மை​யா​கவே நமக்கு அளித்​தி​ருக்​கி​றது.​

உச்ச நீதி​மன்ற பல்​வேறு தீர்ப்​பு​கள் வலி​யு​றுத்​தும் கருத்து,​​ எந்த ஒரு தொழில் நிறு​வ​ன​மும் அத​னால் ஏற்​ப​டும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​க​ளுக்கு முழுப் பொறுப்​பும் ஏற்​றாக வேண்​டும் என்​ப​தைத்​தான்.​ தங்​க​ளது ஊழி​யர்​க​ளுக்கு மட்​டு​மல்ல,​​ அந்த நிறு​வ​னத்​தின் கழி​வு​கள்,​​ வாயுக் கசி​வு​கள் மற்​றும் நச்​சுத்​தன்மை போன்​ற​வற்​றால் சுற்​றி​லும் வாழும் பொது​மக்​க​ளுக்​கும்,​​ உயி​ரி​னங்​க​ளுக்​கும் ஏற்​ப​டும் பாதிப்​பு​கள் அனைத்​துக்​கும்​கூட நிறு​வ​னம் பொறுப்​பேற்​றாக வேண்​டும்.​

சட்​ட​மும் அர​சி​யல் சட்​ட​மும் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ தார்​மிக ரீதி​யா​கப் பார்த்​தா​லும்,​​ தாங்​கள் லாபம் கரு​திச் செய்​யும் தொழில் அடுத்​த​வ​ரைப் பாதிக்​கக்​கூ​டாது என்​ப​தும் அப்​ப​டிப் பாதிப்பு ஏற்​பட்​டால் அதற்​கான நஷ்ட ஈடும் பரி​கா​ர​மும் செய்ய வேண்​டும் என்​ப​தும் சட்​டம் இருந்​தா​லும் இல்​லா​விட்​டா​லும் மனித நாக​ரி​கம் ஏற்​றுக்​கொள்​ளும் கட​மை​யும்​கூட.​ நிலைமை இப்​படி இருக்​கும்​போது,​​ நமது மத்​திய அரசு விசித்​தி​ர​மான ஒரு சட்​டத்​தின் மூலம்,​​ அன்​னி​யப் பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் நஷ்ட ஈட்​டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்​க​ளுக்​குப் பாது​காப்பு அளிக்​கத் தயா​ராகி இருப்​ப​து​தான் வெட்​கக் கேடாக இருக்​கி​றது.​

அமெ​ரிக்​கா​வில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடு​க​ளு​டன் இந்​தியா கையெ​ழுத்​திட்ட அணு எரி​சக்தி ஒப்​பந்​தங்​க​ளுக்​குப் பிற​கும் அந்த நாட்டு நிறு​வ​னங்​கள் இன்​னும் அணு மின் நிலை​யங்​க​ளைத் தொடங்க ஆர்​வத்​து​டன் முன்​வ​ரா​தது ஏனாம் தெரி​யுமா?​ அந்த அணு மின் நிலை​யங்​க​ளில் ஒரு​வேளை கசிவு ஏற்​பட்டு அத​னால் பாதிப்பு ஏற்​பட்​டால்,​​ அதற்கு அந்​தப் பன்​னாட்டு நிறு​வ​னங்​கள் முழுப் பொறுப்பு ஏற்​றாக வேண்​டுமே என்​ப​தால் அவர்​கள் தயங்​கு​கி​றார்​க​ளாம்.​ எப்​படி இருக்​கி​றது கதை.​ அணு மின் நிலை​யங்​க​ளில் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து லாபம் அடைய மட்​டும்​தான் தயா​ராம்!​ ​

நமது இந்​திய அரசு உடனே என்ன செய்ய இருக்​கி​றது தெரி​யுமா?​ அணு​மின் எரி​சக்தி பாதிப்​புச் சட்​டம் ​(சிவில் நியூக்​ளி​யர் லயபி​லிட்டி பில்)​ என்​றொரு சட்​டம் இயற்றி,​​ இந்த அணு​மின் நிலை​யங்​க​ளால் பாதிப்பு ஏற்​பட்​டால் அந்த நிறு​வ​னங்​க​ளின் அதி​க​பட்ச நஷ்ட ஈட்​டுத் தொகை 450 மில்​லி​யன் டாலர் என்று பாது​காப்​புத் தர முன்​வந்​தி​ருக்​கி​றது.​ அதற்கு மேலான பாதிப்​பு​க​ளுக்கு இந்​திய அரசே பொறுப்பு ஏற்​றுக் கொள்​ளு​மாம்.​

என்ன அயோக்​கி​யத்​த​னம் என்று யாரும் கேட்​டு​வி​டக் கூடாது.​ தேசப்​பற்​று​மிக்க ஓர் அரசு,​​ இந்​தி​யாவை ஓர் அமெ​ரிக்​கா​வாக மாற்​ற​வும்,​​ பன்​னாட்டு முத​லீ​டு​க​ளைப் பெறு​வ​தற்​கா​க​வும் இப்​படி ஒரு "சலுகை' அளிக்க இருக்​கி​றது.​ நாளைய தலை​மு​றை​யின் நல்​வாழ்வு முக்​கி​யமா,​​ இந்​திய மக்​க​ளின் பாது​காப்பு முக்​கி​யமா இல்லை பன்​னாட்டு முத​லீ​டும்,​​ ஆபத்​தான அணு மின்​சக்​தி​யும் முக்​கி​யமா?​

தேச​ந​லன் விலை​போ​கி​றது -​ ​ வியா​பா​ரி​க​ளால் அல்ல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளால்!​ வந்தே மாத​ரம்!
******
தினமலர் இணைய தளத்தில் வெளிவந்த ஒளிப்படம்.

திங்கள், 8 மார்ச், 2010

அவதார் - ஆஸ்கர் - தி ஹர்ட் லாக்கர் - மகளிர் தினத்தில் மகளிருக்கு பெருமை

ஷங்கர் என்னதான் பிரமாண்டத்தில் மிரட்டியிருந்தாலும் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தின் முடிவைக்காட்டிலும் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்த காதல் படத்தின் கிளைமேக்ஸ் அதிகமாகவே என்னை பாதித்தது.

இது போல் பல உதாரணங்களை சொல்லலாம்.ரஜினியின் பாட்ஷா, தளபதியைக்காட்டிலும் ஆறிலிருந்து அறுபது வரை படம் அதிக நாட்களுக்கு மனதை விட்டு அகன்றிருக்காது.

விஜய் படங்களில் கில்லி, மதுர இவை அதிரடி என்றால் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்றவற்றின் மென்மையும் படங்களுக்கு வெற்றி தேடித்தருவதில் சளைத்தவை அல்ல.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால் அதிரடி கதையம்சம் கொண்ட படங்கள் நம்மை பிரமிப்புடன் பார்க்க வைக்கலாம். ஆனால் மனதைத் தொடுபவை எந்த மாதிரியான படங்கள் என்றால் மனதின் வலிகளையும் உணர்வுகளையும் பேசும் படங்கள்தான்.

சமீபத்தில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு சக்கைபோடு போட்டு வசூலைக்குவித்த அவதார் படம் போலவே தி ஹர்ட் லாக்கர் படமும் ஒன்பது பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.இன்று அவதார் மூன்று ஆஸ்கர் விருதுகளையும் தி ஹர்ட் லாக்கர் ஆறு விருதுகளையும் வென்றிருக்கின்றன.

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் 82 ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த இயக்குனர் பிரிவில் முதல் முறையாக பெண் இயக்குனர் விருது பெற்றிருக்கிறார்.மகளிர் தினத்தில் இந்த சிறப்பு நிகழ்ந்திருப்பது இன்னும் மகிழ்ச்சியைத் தருகிறது.(அமெரிக்காவில் 7ந் தேதிதானே என்று எதிர்வாதம் புரியக்கூடாது.)
தி ஹர்ட் லாக்கர் படத்தின் கதை தெரியாதவர்களுக்காக சிறு அறிமுகம்:

போர் என்பது போதை தருவது என்ற மெசேஜை நிகரில்லாத த்ரில்லராக தருகிறது இந்தப்படம்.வில்லியம் ஜேம்ஸ் என்ற வெடிகுண்டு நிபுணர்தான் கதையின் ஹீரோ. கவச உடை அணியாமலே, அலட்சியமாகச் சென்று கார்களிலும், சாலைகளிலும் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் குண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் வித்தியாசமான ஹீரோ. ராணுவ முகாமிலும் ஜாலி; போர்முனையிலும் ஜாலியாக வேலை பார்ப்பவன்.அலட்சியம் ஆகாது என்று சக வீரர்கள் சொல்வதை அசட்டை செய்து, ஒவ்வொரு முறையும் உயிரைப் பணயம் வைத்து ஜெயிக்கிறான்.
கிட்டத்தட்ட ஒரு வருட காண்ட்ராக்ட் முடியும் நேரத்தில் தன் பணியில் முதல் தோல்வியைச் சந்திக்கிறான். சோதனைச் சாவடி ஒன்றை நோக்கி வருகிறார் அந்த இராக்கியர். அவர் உடலில் குண்டை கட்டி வைத்து, தற்கொலைப் படை தாக்குதல் நடத்தச் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு உயிர் வாழ ஆசை. காப்பாற்றும்படி கெஞ்சுகிறார். ஆனால் ஒரு இரும்புப்பட்டையால் பிணைக்கப்பட்ட குண்டை ஜேம்சால் அகற்றவே முடியவில்லை. வெடிக்கப்போகும் நொடியில் அந்த மனிதரை நிராதரவாக விட்டுவிட்டு ஓடிவருகிறான். அவனால் அதன் பிறகு தூங்கவே முடியவில்லை. அமெரிக்கா திரும்பியும் மனைவி,குழந்தைகளுடன் அவனால் இயல்பாக இருக்கமுடியவில்லை. எனக்கு ரொம்ப பிடிச்ச இடத்துக்குப் போறேன்.என்று சொல்லிவிட்டு திரும்ப இராக் வருகிறான். போர் என்ற போதை அவனை களத்துக்கு இழுக்கிறது.

உலகசினிமா வரலாற்றிலேயே மிக அதிகமாக வசூலைக் குவித்த படம் அவதார்.இதுவரை கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்கள்.வெறும் 11 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு, 16 மில்லியன் டாலர் ஈட்டியது தி ஹர்ட் லாக்கர்.ஆஸ்கர் வரலாற்றில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறந்த படங்களில் மிகக்குறைந்த வசூல் செய்தது என்ற வித்தியாசமான பெருமையைப் பெறுகிறது இந்தப்படம்.
அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவிதான் தி ஹர்ட் லாக்கர் பட இயக்குனர் கேத்ரின் பிகெலோ. 3 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து, பிரிந்தவர்கள்தான் இருவரும்.ஆஸ்கர் வரலாற்றில் விருதுக்கான தகுதிப்பட்டியலில் இடம் பிடிப்பதே பெரும்பாடு. அப்படி பரிந்துரை பெற்ற நான்காவது பெண் டைரக்டர் கேத்ரின்.

பிரிந்த ஜோடி என்றாலும் கேமரூனுக்கும் கேத்ரினுக்குமிடையே வெறுப்பு வளையம் இல்லை.கோல்டன் குளோப் விருதை வாங்கும்போது, உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கேத்ரின்தான் இதை வாங்கப்போகிறார் என்று நினைத்தேன். இதை வாங்கப்போகிறார் என்று நினைத்தேன். அவர் இதற்கு எல்லா வகையிலும் தகுதியானவர். என்று மனம் திறந்து சொன்னார் கேமரூன்.

இந்த இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தாலும் அற்புதமான படைப்புகளை கொடுத்து கலை சேவை புரிகிறார்கள்.

ஆனால் குடும்ப சண்டையில் அடிமை சிலரை சாகடிச்சுட்டு மறுபடி குடும்பமே ஒண்ணு கூடி அந்த அடிமைங்க ஏன் செத்தாங்கன்னே யாருக்கும் புரிய விடாம செஞ்ச கொடுமையையும் நாம பார்த்துகிட்டுதான் இருக்கோம். என்ன செய்ய முடியுது?

தொலைக்காட்சியில் ஆஸ்கர் விருது பற்றிய செய்தியைப் பார்த்ததும் வீட்டில் தி ஹர்ட் லாக்கர் படம் பற்றி வெளிவந்திருந்த தகவலை புத்தக குவியலில் தேடி எடுத்தேன். குங்குமம் - 15.2.2010 இதழ்.

ஞாயிறு, 7 மார்ச், 2010

நித்திய கேடிகள் - என்னுடைய பார்வை...

தமிழ் சினிமாவின் பிரபல கவிஞரும் மது, மாது என்று வாழ்ந்தவர்தான்.அதை விமர்சிப்பதில்லை.அவர் படைப்புகளை நாம் தலையில் வைத்துக்கொண்டாடுகிறோம்.இப்போது பெரிய பதவியில் இருப்பவர்களில் பலரும் மனைவி, துணைவியுடன்தான் இருக்கிறார்கள்.மக்கள் பணத்தில் அவர்கள் இப்போது சுகவாசியாக இருக்கிறார்களே என்று நம்மால் ஆதங்கப்படத்தான் முடிகிறது.அதிகாரத்தை மீறி எதுவும் பேசக்கூட முடிவதில்லை.
ஆனால் சாமியார்கள் விஷயம் அப்படி இல்லை.மெத்தப்படித்தவர்களும் பணக்காரர்களும் லட்சக்கணக்கில் பணத்தைக்கொடுத்துவிட்டு அவர் காலைப்பிடித்து தொழுகிறார்கள்.இதை தவிர்ப்பது முழுவதும் நம் கையில்தான் உள்ளது.இல்லறத்துக்குப்பிறகு துறவறம் என்ற கோட்பாடுதான் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு இஷ்டத்துக்கு ஆட்டம் போடுபவர்களை நம்பி மோசம் போனோம் என்று மக்கள் புலம்பும் நிலைக்கு வருவதற்கு சில ஊடகங்கள் துணைபோகின்றன.

பிரகாஷ்ராஜ் சொல்லாததும் உண்மை என்ற தலைப்பில் விகடனில் ஒரு தொடர் எழுதியதை உங்களில் பலர் படித்திருக்கக்கூடும்.அவர் இப்போது மனைவியை ஒதுக்கிவிட்டார், நடன இயக்குனருடன் இருக்கிறார் என்பதெல்லாம் என்னை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை.
அவர் எழுதிய கட்டுரையில்  பல விஷயங்கள் என்னை சிந்திக்கச் செய்தன.அதில் ஒன்று,ஒரு சிறுகதையைப்பற்றிய அவரது கருத்து.

கதாசிரியரான நாயகன், அவள் தோழி உடம்பை விற்று பிழைப்பதைப்பார்த்து ஏன் இப்படி என்று கேட்டு அவள் தவறை உணரச்செய்வான்.அவளும் அந்த தொழிலை விட்டுவிடுவாள்.ஆனால் சில தினங்களிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்ததும் கதாசிரியருக்கு வருத்தம் வாட்டும். செய்யும் தவறை உணர வைத்த நான் அவளுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை உணர வைக்கவில்லையே என்று புலம்புவதாக கதை முடியும்.

அதாவது சிலரின் இறை நம்பிக்கையை தவறு என்று சொல்வதையே பிழைப்பாக வைத்திருப்பார்கள்.இதில் என்ன தவறு என்பது அந்த கட்டுரை ஆசிரியருடையது மட்டுமல்ல...என்னுடைய கேள்வியும் கூட.

தன்னம்பிக்கை இருந்தால் ஓ.கே. இல்லையென்றால் இறை நம்பிக்கை.வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் வெளியூர் சென்றிருக்கும்போது தனியாக இருப்பவர்கள் எதையோ இழந்தது போல் உணரவே இல்லை என்று சொல்லமுடியுமா?

இந்த மாதிரியான சூழ்நிலையில் இறைநம்பிக்கை என்பது ஒருவனுக்கு தன்னம்பிக்கை தரும் என்று உறுதியாக சொல்ல முடியும்.

ஒரு இடத்திற்கு வாகனத்தில் செல்கிறோம்.சிறு விபத்து. வாகனத்தையும் நம்மையும் தூக்கிவிடுபவர்கள் அருகில் எதாவது நிழல் இருந்தால் அங்கே உட்கார வைக்கிறார்கள்.பிறகு பக்கத்து வீட்டில் தண்ணீர் வாங்கி கொடுப்பார்கள். நாம் அதைக் குடித்துவிட்டு, லேசாக முகம் கழுவிக்கொண்டு பயணத்தை தொடர வேண்டியதுதான்.இத்தகைய இளைப்பாறும் இடம்தான் ஆலயம் என்பது என்னுடைய கருத்து.

அதை விட்டுவிட்டு, நான் இங்கேயேதான் இருப்பேன்.கடவுள் வந்து நான் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்வார் என்று காத்திருப்பதும், அப்படி அவர் அழைத்துச் செல்வாரா என்று கேட்பதும் அறிவுடமை ஆகாது.

இந்து மதத்தில் இருக்கும் பல பழக்கங்கள், சடங்குகள் அடிப்படையில் ஏதாவது ஒரே ஒரு அறிவியல் உண்மையை நம் நன்மையை உத்தேசித்துதான் உருவாக்கப்பட்டிருக்கின்றன.இப்போது கல்வியறிவால் சில தெளிவு இருந்தாலும் நமக்கு நலம் தரும் விஷயங்கள் சிலவற்றை நாம் சோம்பேறித்தனத்தாலோ விதண்டாவாதத்தாலோ செய்வதில்லை.அந்தக்காலத்தில் கல்வியறிவு மிகவும் குறைவாக கொண்ட மக்கள் இருந்ததால் இறைவனின் பெயரால் கட்டாயம் என்று சொன்னதில் ஒரு தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ஒரு சில விஷயங்கள் வேண்டுமானால் இப்போது பொருந்தாமல் இருக்கலாம்.இப்போது பிரச்சனை அந்த சடங்குகளில் இல்லை.அவற்றை ஏன் செய்கிறோம் என்பதற்கான விளக்கம் தெரியாததால்தான் இவ்வளவு குழப்பமும், வில்லங்க கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையும்.

உடல் பசியைப்பற்றி நன்றாக தெரிந்து கொள்வதை தவறு என்று இந்துமதம் சொல்லவில்லை.நன்றாக அனுபவித்து பிறகு 'ச்சீ...இந்தப்பழம் புளிக்கும் என்று சொல்வதுதான் நிரந்தரமே தவிர, தொடக்கம் முதலே ஒரு விஷயத்தை தள்ளி வைத்து அதன் மீதான ஆர்வத்தை அதிகரிப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பது நிதர்சனம்.

சிவாலயங்களில் திருமணம் ஆனவர்தான் பூஜை செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் சொல்லப்பட்டுள்ளது.இதை சிதம்பரம் தீட்சிதர்கள் மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள்.அதனால்தான் அங்கே பதினாறு வயது பையனுக்கு பதினான்கு வயது பெண்ணை மணமுடிக்கும் வழக்கம் இப்போது கூட இருக்கிறது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இதை பல இடங்களில் யாரும் கடைப்பிடிப்பதில்லை.

வயிற்றுப்பசி போலவே உடல்பசியும் இயற்கையே.ஆனால் அதை முறையான வழியில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.இதை சரிவர செய்யாமல் போவதின் விளைவுதான் சாமியார்களின் லீலைகள். இப்படி ஒருவர் புத்திமதி சொல்லி கட்டுரை எழுதுகிறாரா...அதில் நல்ல விஷயங்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.இவ்வளவுதான் நாம் செய்ய வேண்டியது.

இதை விட்டுவிட்டு சாமி தரிசனம் தருகிறார் என்று அவரிடம் காசைக்கொடுத்துவிட்டு நிம்மதியைத் தேடிப்போகாதீர்கள். அந்த நிம்மதி, உங்கள் நகரத்திற்கு அருகாமையில் ஒரு கிராமத்துக்கு சென்றால் பாழடைந்த ஆலயத்திலோ, ஆற்றங்கரை ஓரத்திலோ கூட கிடைக்கலாம். நான் செய்வது இதுதான்.சில ஆண்டுகளுக்கு முன்பு சுகி.சிவம் அவர்கள் பெயரைக்குறிப்பிடாமல் ஒன்றுமில்லாதவரைப்பற்றி ஒரு வாரப்பத்திரிகையில் புகழ்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இது தவறு என்று சன் தொலைக்காட்சியில் பேசினார். எனக்கு அப்போதே அது நித்தியானந்தா என்று புரிந்து விட்டது.

அவ்வப்போது ஓரிருவர்கள்தான் மாட்டுகிறார்கள்.மாட்டிக்கொள்ளாதவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.

தூய்மையான அரசியல் வாதி என்று இப்போது இருக்கும் அரசியல் புள்ளிகள் கூட அண்ணா, காமராஜர், காந்தி என்றுதான் சொல்கிறார்கள்.ஆக மொத்தத்தில் இப்போது ஒருவரும்......................................... என்பது இவர்களே ஒப்புக்கொண்ட ஸ்டேட்மெண்ட்.அது போல், நம் முன்னோர்கள் உருவாக்கிய கோவில்களை மேம்படுத்தி வழிபடுவதுதான் நல்லது. நான் தான் சாமி என்று சொல்பவனை கண்டுகொள்ளாதீர்கள். ஆளில்லா கடையில் அவன் எவ்வளவு நாள் டீ ஆத்த முடியும்?

நாயன்மார்கள் என்று போற்றப்படுபவர்கள் கூட சிவனை வழிபடும் பக்தர்களுக்கு தொண்டு செய்யும் அடியேன்.இன்னும் கடவுளின் பக்தன் என்று சொல்லும் அளவுக்கு கூட எனக்கு தகுதியில்லை என்று சொன்னார்கள். ஆனால் இன்று நான் தான் கடவுள் என்று சொல்பவன் எவ்வளவு மோசக்காரனாக இருக்கவேண்டும் என்று உணர வேண்டியது நம் கடமை.

கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் உருவானதற்கு காரணம் ரொம்ப சிம்பிள். இவை எல்லாம் இருப்பதால்தான் வீட்டை சுத்தம் செய்வதில் இருந்து புது ஆடை வாங்குவது என்று பல விஷயங்களிலும் நாம் நம்மை புதுப்பித்துக்கொள்ள முடிகிறது.(தினமும் ஜவுளிக்கடைக்கு செல்பவர்களுக்கு இது அபத்தமாக தெரியலாம்.ஆனால் மூன்று வேளை சாப்பாட்டுக்கு கூட சம்பாதிக்க முடியாத பல கோடிக்கணக்கான மக்களுக்கு பண்டிகை தினம்தான் நல்ல உணவு, உடை கடன் வாங்கியாவது கிடைக்கிறது என்பதை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்.)

அவ்வளவு ஏன்? ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவி செய்பவர்கள் கூட பிறந்த நாள், திருமண நாள் என்று எதாவது ஒரு நாளில்தான் செல்கிறார்கள். சாதாரண நாட்களில் அந்த குழந்தைகளுக்கு அரை வயிற்று உணவாவது ஏற்பாடு செய்ய சில இல்லங்களின் நிர்வாகிகள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

மூன்று மணி நேரத்தில் தேர்வு எழுத வேண்டும் என்றால்தான் ஒரு ஒழுங்கு இருக்கும்.படிப்பு என்று இல்லை...எந்த விஷயத்திலும் ஒழுங்கு இல்லை என்றால் சிக்கல்தான். வரிசை முறை கடைப்பிடிக்கப்படாததால் பேருந்தில் ஏறுவது முதல் பல காரியங்களிலும் எவ்வளவு இன்னல்கள்?

இப்போது உத்திரப்பிரதேசத்தில் கூட இலவசங்களைப் பெற கூடிய கூட்டத்தில் அறுபது பேருக்கு மேல்  பலியான இடத்தில் வரிசை முறை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்காதே.

நமக்கு நன்மை தரும் விஷயமாக இருந்தாலும் அதற்கு என்று ஒரு ஒழுங்கு இருந்தால் மட்டுமே நம்மால் கடைப்பிடிக்க முடியும்.

நான் பதினைந்து வயதிலேயே திரையரங்கத்தில் வேலைக்குச் சென்றவன்.திரைப்படம் திரையிடும் கருவியை அப்போதே இயக்கியதால் பிறகு வேறு திரையரங்கத்தில் படம் பார்க்கச் சென்றால், திரையில் வரும் காட்சிகள் பற்றிய எதிர்பார்ப்பை விட அந்த நேரத்தில் ஆப்ரேட்டர் எப்படி மெஷினை இயக்குவார், ஒரு புரொஜக்டரில் இருந்து மற்றொரு புரொஜக்டரில் எப்படி சட்டென்று காட்சி மாறும் என்பது போன்ற ஆராய்ச்சியில்தான் இருப்பேன்.இப்போதெல்லாம் படம் பார்ப்பது என்பது எரிச்சல் தரும் விஷயமாகிவிட்டது.

இவ்வளவுக்கும் நான், சிறுவயதில் சில படங்களுக்கு அழைத்துச்செல்லாததால் அம்மாவிடம் கோபித்துக்கொண்டு பல நாட்கள் சரியாக சாப்பிடாமல் இருந்திருக்கிறேன்.(அப்போது எனக்கு ஒரு திரையரங்கத்தில்தான் இலவசமாக படம் பார்க்கும் வாய்ப்பு இருந்தது.)

எனக்கு இருபத்தி ஒரு வயது ஆகும் வரை (கல்லூரியில் மூன்றாம் ஆண்டு) எங்கள் வீட்டில் தொலைக்காட்சி மட்டுமல்ல, வானொலி கூட கிடையாது.எல்லாம் அக்கம்பக்கத்து வீடுகளில்தான்.

பி.காம் முதல்வருடம் படிக்கும்போது உள்ளூர் கேபிள் டி.வி ஆப்ரேட்டராக ஒரு ஆண்டு இரவு நேரப்பணி செய்தேன்.அந்தப்பணியில் இருந்து விலகிய பின்பும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது.பிறகு அம்மாவுக்காக ஒரு கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிதான் வாங்கினோம்.அதிலும் பதினைந்து நாட்கள் கழித்துதான் படம் பார்க்க முடிந்தது.கேபிள் வயர் பொருத்தும் இடத்தில் ஒரு வயர் சரியாக பற்ற வைக்காததுதான் பிரச்சனை.

கேபிளில் வேலை செய்தபோது தொலைக்காட்சியின் மீதான மோகம் சுத்தமாக போய்விட்டது.(அப்போதும் இப்போதும் கதைப்புத்தகங்கள் மீதான காதல்தான் எனக்கு அதிகரித்து வந்துள்ளது என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.)

டூவீலரில் ஹாரன் அடிப்பதில் இருந்த ஆர்வம் நான் வண்டி ஓட்டத்தொடங்கியது காணாமல் போனது. கேமராக்களின் மீதான பிரமிப்பு, பல திருமணங்களையும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் படம் பிடித்ததும் குறைந்து விட்டது. நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன் என்று சொல்லவில்லை.ஒரு பொருளை விட்டு விலகி இருக்கும்போது அதன் மீதான ஆர்வம், பக்குவப்பட்ட மனமில்லாதவர்களிடம் வெறியாகத்தான் வெளிப்படும் என்று சொல்கிறேன்.பூவை ரசிப்பதற்கும், அதைக் கசக்கிப்போடுபவர்களுக்கு வித்தியாசம் உண்டுதானே.

உணவு, தூக்கம் இவை சரியாக இல்லை என்றால் ஒரு மனிதனால் ஒழுங்காக இருக்க முடியாது.இதன் மோசமான விளைவு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெவ்வேறு விகிதத்தில் வெளிப்படும் என்பது எனது அனுபவம்.உடலில் ஏற்படும் உணர்ச்சியும் இது போன்ற ஒன்றுதான். சாமியார்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்பது என் மனம் ஏற்றுக்கொண்டு விட்டதால் இந்த செய்தி தெரிந்ததும் என் மனதில் எந்த மாற்றமும் இல்லை. கவலைப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சில போலிகளிடம் பணத்தையும் அறிவையும் கொடுத்து ஏமாந்தவர்களாகவே இருப்பார்கள்.

புலம்பும் நண்பர்களுக்கு நான் சொல்லும் ஒரே வார்த்தை பதில், "புறக்கணிப்பு." இதை விட பெரிய தண்டனை ஒன்று இருக்கவே முடியாது.இந்த தண்டனை தவறு செய்த பின்பு அல்ல.இது போன்ற சாமியார்கள் வெளிவரும்போதே ஒதுக்கிவிடுங்கள். அவர்கள் ஆளில்லா கடையில் யாருக்கு இட்லி அவிப்பார்கள் என்று பார்த்துவிடுவோம்.

ஆசிரியர், காவல்துறை, அரசியல் என்று எந்த துறையில் இருப்பவர்களாக இருந்தாலும் காமத்தை அடக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.பசியைப்போக்குவது போல் இந்த உணர்வைத் தணிக்கவும் ஒரு வரையறை உள்ளது. குப்பைத்தொட்டியில் உள்ள எச்சில் இலைகளில் போய் உணவு உண்ணுவது போன்றது இத்தகைய முறையற்ற உறவு. இனி முடிவெடுக்கவேண்டியது நீங்கள்தான்.