Search This Blog

வெள்ளி, 1 ஜனவரி, 2010

புதிய தலைமுறை 07.01.2010 தேதியிட்டு இன்று 01.01.2010 வெளிவந்த இதழில் என்னுடைய வாசகர் கடிதம்.

வெறும் உணர்ச்சிவசப்பட்ட வாதமாக, நடைமுறைச் சிக்கல்களை மூடிமறைக்கும்விதமாக இல்லாமல், உண்மை பேசியது ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் விவாதம். விதிகள் நிர்ணயித்த அளவில் மட்டுமே பிள்ளைகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்றால் ஒரு குழந்தைக்கு குறைந்தபட்சமே எழுநூற்று ஐம்பது ரூபாய் ஆகும் என்ற நிஜம் வெற்று வாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்விதமாகத்தான் இருக்கும்.


இந்தக் கருத்து இருதரப்பு வாதங்களிலும் இடம்பெற்றதை வைத்தே பிரச்சினையின் ஆணிவேரை நேருக்கு நேர் சந்திக்க அனைவரும் அஞ்சுவதை உணரமுடிகிறது. இந்தச் சிக்கல்களைத் தீர்க்க, நகரங்களில் பத்து நிமிடங்களுக்குள் நடந்து செல்லும் தொலைவிலும், கிராமங்களில் அதிகபட்சம் இரண்டு கிலோமீட்டர்  தொலைவிலும் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கவேண்டும். இதன்மூலம் குழந்தைகளுக்கு பயண நேரம் மீதமானால் அவர்கள் திறன் கூடுதலாகும்.விளையாட நேரம் கிடைத்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

******

மேலே உள்ள கடிதம்தான் பிரசுரமானது. பதிவில் இடம்பெற்றுள்ள இதழிலும் நான் எழுதிய விமர்சனக்கடிதம் பிரசுரமானது. ஆயிரம் ரூபாய் பரிசையும் பெற்றுத்தந்தது.

வீட்டு வேலை செய்பவர்களும் மனிதர்களே!


என் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்கள் குடும்பத்துடன் உணவருந்திவிட்டு எழுந்த நேரம் அது.

அனைவரும், தட்டில் ஒதுக்கப்பட்டிருந்ததை எல்லாம், தனியே ஒரு குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, தட்டை லேசாக கழுவி, பாத்திரம் தேய்க்கும் இடத்திலேயே போட்டுவிட்டு வந்தனர்.

நான் காரணம் கேட்டேன்.

பாத்திரம் தேய்க்க ஆள் வெச்சிருக்கோம். அப்படி இருந்தாலும், நாம் தட்டுல மிச்ச மீதியை அப்படியே வெச்சு காயவிட்டுட்டா, தேய்க்கும்போது சிரமமாகவும், கழுவி ஊற்றும்போது, குழாயில் அடைப்பும் ஏற்பட்டு, நாற்றம் அடிச்சு, நமக்கே அதிக வேலை வைக்கலாம்.

அது மட்டுமில்லாம அவங்க என்ன சூழ்நிலையால வீட்டு வேலைக்கு வர்றாங்கன்னு சொல்ல முடியாது. நம்ம எச்சிலை வழிச்சு எடுத்துப் போடும் போது, அவங்க மனசு வேதனைப் படலாம்.

எல்லாத்துக்கும் மேல், வீட்டு வேலை செய்யறவங்க வராவிட்டாலும், அநாவசியமான டென்ஷன் இருக்காது...என்று விளக்கம் கொடுத்து என்னை வியக்க வைத்துவிட்டார். உங்களுக்கு ஆச்சர்யம் வரலையா?

அய்யா...எனக்கு சில உண்மைகள் தெரிஞ்சாவணும்...


ரசிகர்களின்  மீது அக்கறை (?!) கொண்ட இயக்குநர்கள் சிலர் பெண்ணின் உன்னதமான பகுதியில் பம்பரம் விட்டு, ஆம்லெட் போட்டதோடு மட்டுமில்லாமல் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்துவிட்டார்கள்.

ஆனால் இந்தப் பெண் அந்த அளவுக்கெல்லாம் இறங்கிவிடவில்லை. அதனால அவங்க நேர்மை புடிச்சிருக்கு. தலையில வெச்சிருக்குற கேக்குல ஒருவேளை முட்டை (சைவமா அசைவமா?) கலந்துருக்கலாம். ஆனா இந்த ஒளிப்படத்தை தினமலர் இணைய தளத்துல பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட சந்தேகம் எல்லாம் சுத்தமான சைவம்தாங்க.

இந்த கேக் செங்குத்தா நிக்கிதே...உண்மையிலேயே கேக்குதானா?

நிஜமான கேக்கா இருந்தா கிளிப் போட்டு மாட்டியிருப்பாங்களா...இல்ல...ஃபெவிகால் போட்டு ஒட்டியிருப்பாங்களா?
அந்த கேக்கை சாப்பிடும்போது ஷாம்பூ வாசனை வருமா...இல்ல, ஒரு மாசமா தலையில அழுக்கு சேர்ந்துருந்தா அந்த நாற்றம் வருமா?

அமெரிக்க உளவுத்துறைக்கு தெரியாம நாம அணுகுண்டு வெடிச்சிருக்கலாம். ஆனா எறும்புக்குத் தெரியாம இனிப்பை வைக்க முடியாது.

இப்ப ஏன் இந்த கேள்வின்னுதானே யோசிக்கிறீங்க? காலையில இருந்து சீரியசாவே எழுதிகிட்டு இருக்கோமே...அப்புறம் நம்மளை எங்க ஏரியா, உள்ள வராதன்னு சொல்லிட்டீங்கன்னா?

அதனாலதான், நானும் காமெடியன்தான்..நம்புங்கப்பா...என்ற முயற்சிதான் இது.

நன்றி: தினமலர்