மக்கள் தவறு செய்யும்போது அவர்களைத் தடுக்கவோ பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தவோ அதிகாரம் படைத்தது காவல்துறை. ஆனால் சில போலீஸ் உயரதிகாரிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தாங்கள் செய்த தவறுகளை மூடி மறைத்துவிடுகிறார்கள்.
அதிலும் போலீசார் பலர் சமூகவிரோதிகளுடன் தொடர்பு வைத்திருப்பது நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது.
நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் இது போன்ற தவறுகள் செய்தால் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால்தான் இது போன்ற குற்றங்கள் கொஞ்சமாவது குறையும்.
மஹாராஷ்டிராவில் போலீஸ் அதிகாரிகளின் மீது எடுக்கப்பட்டதைப் போலவே எல்லா மாநிலங்களிலும் தவறு செய்யும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
