போனவாரத்துல யாராவது புயல் மையம் கொண்டிருக்குன்னு சொன்னா எங்க உங்க வீட்டு வாட்டர் டேங்க்லயான்னு நக்கலா கேட்டேன். திருவாரூர்ல அப்போ விடாம மழை பெய்தாலும் காத்து இல்லீங்க...ஒரு வழியா வார்டு எபிசோடு முடிஞ்சுது.
இப்ப ரெண்டு நாளைக்கு மழைதான் இருக்குன்னு சொன்னாங்க. ஆனா இன்னைக்கு மதியம் நம்மளையே தூக்கிட்டுப் போய் செல்போன் டவர் உச்சியில மாட்டி வெச்சுடுற அளவுக்கு காத்து அடிச்சுதுங்க. நான் கொஞ்சம் எடை குறைவுதான். பர்ஸ், செல்போன் மாதிரியான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எதையும் சேர்க்காம 65 கிலோ மட்டுமே.
என்னையே அவ்வளவு உயரத்துக்கு லிப்ட் உதவி இல்லாம தூக்குற வேகத்துக்கு காத்து அடிச்சுது. இதுல டயட் கண்ட்ரோல்ல இருக்குறதா
சொல்லிட்டு ஒரு வேளைக்கு ஒண்ணேமுக்கால் இட்லி மட்டுமே தின்னுட்டு முப்பது கிலோ மட்டுமே(தூக்கில்லாம் பார்க்கலைங்கோ.) இருக்குறவங்க நிலமை என்ன ஆகும்னு ஒரே கவலையாப் போச்சுங்க.(உன்னை மாதிரி யூத்து எல்லாம் இப்படி கவலைப்பட்டா நாடு எந்த காலத்துலப்பா வல்லரசாகுறது.)
சொல்லிட்டு ஒரு வேளைக்கு ஒண்ணேமுக்கால் இட்லி மட்டுமே தின்னுட்டு முப்பது கிலோ மட்டுமே(தூக்கில்லாம் பார்க்கலைங்கோ.) இருக்குறவங்க நிலமை என்ன ஆகும்னு ஒரே கவலையாப் போச்சுங்க.(உன்னை மாதிரி யூத்து எல்லாம் இப்படி கவலைப்பட்டா நாடு எந்த காலத்துலப்பா வல்லரசாகுறது.)ஆனா அடிக்கிற காத்துக்கு அஞ்சாம கோயிலுக்கு போறதுன்னு கிளம்பிட்டேன். 2009 மார்ச் மாசம் நாலாவது செவ்வாய்க்கிழமையில இருந்து அம்மாவோட விருப்பத்துக்காக ஒரு காளி கோயிலுக்குப் போறதை வழக்கமா
மதியம் 3.00 மணியிலேர்ந்து 4.30 மணிவரை ராகுகாலத்துல சிறப்பு பூஜை நடக்கும். பானகம், ஏலக்காய் - சர்க்கரை போட்டு நைவேத்யம் செய்த பால்,(ரெண்டு ஸ்பூன்தாங்க) வெண்பொங்கல் அல்லது புளிசாதம் இதுல ரெண்டு உறுதியா கிடைக்கும்.
ஆனா அதுக்காக போகலைங்க.(எப்படியும் நம்பப்போறது இல்லை)
38 வாரம் இந்த நேரத்துல தொடர்ந்து கோயிலுக்குப் போனது நமக்குத் தேவையில்லை. நான் இந்தப் பதிவை எழுதக் காரணம் - இன்னைக்கு நான் கோயிலுக்குப் போய் வந்தபோது ஒரு எதிர்பாராத தாக்குதல்ல சிக்கிட்டேங்க.
மதியம் மூணு மணிக்குதான் பூஜைக்குரிய பொருட்களை எல்லாம் வாங்கிட்டு சைக்கிள்ல கிளம்பினேன்.(வண்டி வாங்குற அளவுக்கு வசதி இல்லைங்க.) அந்த நேரத்துல மழை ரொம்ப அதிகமா பெய்ததால பாதை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுது.(ஆத்துல தண்ணி இல்லைன்னுதானே வருத்தப்படுறீங்க...இப்ப ரோட்டுலயே ஓடுறேன் பாருன்னு மழையோட குரல்.)
ரோட்டோட இந்த நிலமையைப் பார்த்ததும் பேசாம தனிப்படை அமைச்சு அவங்க துணையோட கோயிலுக்கு கிளம்பியிருக்கலா............மோன்னு மனசுக்குள்ள ஒரு சிந்தனை.(இது உனக்கே அதிகமா தெரியலை...)
நீங்க தப்பா நினைச்சுடாதீங்கப்பா. திருவாரூர்ல புதை சாக்கடை அமைக்கும் வேலை துவங்கி ரெண்டு வருஷம் ஒரு மாதம் ஆகிடுச்சு. எப்ப பணிகள் பூர்த்தி ஆகும்னுதான் தெரியலை. (வேலையின் மதிப்பு, பணி முடியும் காலம் இதெல்லாம் அறிவிப்பு பலகையில எழுதி வெச்சுருப்பாங்களேன்னுதானே கேட்குறீங்க?...அதுல போட்டுருக்குற காலக்கெடு முடிஞ்சு ஏழு மாசமாகுது. வேலை முடிஞ்சுருக்குற நிலவரப்படி பார்த்தா இன்னும் எத்தனை வருஷம் ஆகும்னு தெரியலை.
அதுக்கும் நீ கோயிலுக்குப் போறதுக்கும் என்னய்யா சம்மந்தம்....
இருக்கே...சம்மந்தம் இருக்கே...
நிறைய வீதிகள்ல குழாய் பதிச்சுட்டு அரைகுறையா மூடிட்டுப் போயிட்டாங்க.(சில நடிகைங்களுக்குப் போட்டி?) அதுல மழை தண்ணி வேற நிறைய ஓடுறதால ரோடு எங்க...குழி எங்கன்னு கண்டுபிடிக்கவே தனிப்படைதான் தேவைப்படும்னு தோணுச்சு.
அப்புறம் ஒரு வழியா நகர எல்லையைத் தாண்டினதுக்கப்புறம் குழித்தொல்லை இல்லை. ஆனா மயிலாடுதுறை செல்லும் பாதையில் மூணு கிலோ மீட்டர் தூரம் போறப்ப வேற ஒரு பிரச்சனை. அதிகமாவே திறந்தவெளி ஏரியாவா இருந்ததால குடையைக் காப்பாத்துறதுக்கு ரொம்பவே போராட வேண்டியதாயிடுச்சு.
திடீர்னு லாரி, பஸ் கிராஸ் ஆகிப் போகும்போது குடை கையை விட்டு ஏழெட்டு கிலோமீட்டர் தூரம் போயிடுமோன்னு ஒரு பயம் விலகவே இல்லைங்க.
இதெல்லாம் எனக்கு சிரமமா தெரியலை. வழிபாட்டை முடிச்சுட்டு திரும்பவும்
ஊருக்குள்ள வரும்போது மறுபடி அதே குழி, அதே ரோடு...அதே பயணம்.
சாலையின் குறுக்கே மிருகங்கள் போகும்போது நாம அதோட பின்பக்கமா விலகிப் போகணும்னு விதி இருக்கு. ஏன்னா அதுங்களுக்கு ரிவர்ஸ் கியர்னா என்னன்னே தெரியாது. இந்த விஷயம் நமக்குத் தெரியும் அதனால பிரச்சனை இல்லை.
ஆனா மனுஷன் பூனையை விட மோசம்னு நினைக்கிறேன். ஏன்னு கேட்குறீங்கிளா?
தேரோடும் வீதியைக் கடந்து ஒரு தெருவுக்குள்ள ரோட்டைக் கண்டுபிடிச்சு குடையையும் காப்பாத்தி வீட்டுக்குப் போய்கிட்டு இருக்கேன்.
மூணு பள்ளி மாணவிகள் ஒரு ஓரமாத்தான் போய்கிட்டு இருந்தாங்க. அவங்களும் குழிகளுக்கு நடுவுல இருந்த ரோட்டைக் கண்டுபிடிச்சுட்டாங்க போலிருக்கு. திடீர்னு சைக்கிளுக்கு குறுக்க வந்துட்டாங்க. ஒரு கையில குடை இருந்ததால பெல் அடிக்க முடியாத நிலை. "ஏய்..."அப்படின்னு கத்திட்டேன்.
சட்டுன்னு மூணு மாணவிகளும் ஓரமா விலகிட்டாங்க. அதுல ஒரு மாணவி சொன்ன வார்த்தைகளை சுத்தமா எதிர்பார்க்கலைங்க.
காலேஜ் முடிச்சு ஆறரை வருஷம்தான் ஆகுது... அதுக்குள்ள இப்படி ஒரு மரியாதை கிடைச்சது பெரிய அதிர்ச்சிதான்.
அப்படி என்னதான் சொன்னுச்சுன்னுதானே கேட்டீங்க? பதினோராம் வகுப்பு இல்லைன்னா பனிரெண்டாம் வகுப்பு படிக்கிற அந்த மாணவி என்னைப் பார்த்து "சாரி அங்கிள்" அப்படின்னு சொல்றதை தாங்கிக்கவே முடியலங்க.
வயசு ஏறிகிட்டு இருக்கு...கல்யாணம் பண்ணுடான்னு அம்மா சொன்னப்ப காதுல விழலை. இப்படி யாராச்சும் பேச்சுலேயே வெடி வெச்சாதான் நாம முழிச்சுக்குவோமோ?




