Search This Blog

கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 டிசம்பர், 2009

பத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை...கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை

கவியரசு கண்ணதாசன் வெளி நாடு போனப்ப நடந்த

சம்பவம்னு ஒரு விஷயத்தை சில ஆண்டுகளுக்கு முன்னால பத்திரிகையில் படித்து தெரிஞ்சுகிட்டேன்.

கவியரசு ஒரு விழாவுல கலந்துக்க மலேசியா போயிருந்தாராம். அந்த நாட்டு சாலைகளோட தரம்தான் சிறப்பானதாச்சே...இவர் போன காரோட ஓட்டுநர் மிக அதிக வேகத்துல போயிருக்கார்.

"இவ்வளவு வேகம் தேவையில்லையேப்பா..." அப்படின்னு கவியரசு சொல்லியிருக்கார்.

"விழாவுக்கு நேரமாயிடுச்சு...அதனாலதான் இந்த வேகம்"னு ஓட்டுநர்கிட்ட இருந்து பதில் வந்துருக்கு.

உடனே கவியரசு கண்ணதாசன்,"தம்பி...பத்து நிமிஷம் விழாவுக்கு தாமதமா போனாலும் பரவாயில்லை...பத்து வருஷம் சீக்கிரமாவே மேல போயிடக்கூடாது"ன்னு சொல்லியிருக்கார்.

இது சிரிப்பை ஏற்படுத்தினாலும் ரொம்பவே சிந்திக்க வேண்டிய விஷயங்க இது.

வாகன ஓட்டிகள்கிட்ட சாலைவிதிகளை மதிக்கச் சொல்லுங்களேன்...ஏதோ தேசத்துரோகம் செய்ய சொன்னது மாதிரி உங்ககிட்ட சண்டைக்கு வருவாங்க. அதுக்கு அவங்க சப்பைக்கட்டு கட்டுற காரணம் என்னன்னு தெரியுமா?

நான் ஒழுங்கா போனாலும் எதிரில் வர்ற ஆள் சரியா வரணுமே அப்படின்னு சொல்லுவாங்க...அட வெண்ணைங்களா...ரெண்டு பேரும் விதிகளை மதிச்சு வந்தா ரெண்டு பேரும் ஒழுங்கா ஊர் போய்ச் சேரலாம். ஒருத்தர் கவனமா வந்தா குறைந்தது ஆஸ்பத்திரியில சிகிச்சை எடுத்த உடனேயாவது வீடு போக கொஞ்சம் வாய்ப்பு இருக்கு.

இதையெல்லாம் காதுல வாங்காம நாயகன் படத்து கமல் மாதிரி அவனை சாலைவிதிகளை மதிக்கச் சொல்லு...நான் மதிக்கிறேன்னு கூவிகிட்டு இருந்தா வாகனம் உங்களை மிதிச்சுட்டு போயிடும்...அப்புறம் நீங்க ஒரேடியா போயிட வேண்டியதுதான்னு கத்தலாம் போல இருக்கும்.

சாலைவிதிகளை மீறுவதில் முதலிடம் பிடிக்கும் தவறு கட்டுப்பாடற்ற வேகம்தான். இது குறித்து நான் எழுதிய கட்டுரை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ஓசை நாளிதழ்ல வந்தது.

அழகான சாலைகள் - ஆரம்பமாகும் ஆபத்துக்கள் பக்கம் 1
அழகான சாலைகள் - ஆரம்பமாகும் ஆபத்துக்கள் பக்கம் 2

வெள்ளி, 11 டிசம்பர், 2009

தற்கொலைகளுக்கு யார் காரணம்?

செய்முறைத்தேர்வில் காப்பி அடித்த மாணவியை ஒரு ஆசிரியை தலைமையாசிரியை அறைக்கு அழைத்துச் செல்லும் போது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் கையில் தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பளியுங்கள் என்ற வாசகம்.

இப்படி நடக்கும் சம்பவங்களைப் பட்டியலிட்டால் அது எவ்வளவு நீளம் இருக்கும் என்று கூற முடியாது.

தற்கொலையை நினைத்து பயப்படாத இவர்கள் தேர்வைப் பார்த்து மட்டும் அஞ்சுவது ஏன்?

தேர்வில் தோற்றால் (இப்படிக் கூறுவதே தவறு...) மதிப்பெண்கள்

குறைவாக எடுத்தால் படிப்பு அவ்வளவுதான் என்று நினைக்காமல் அவர்களுக்கு ஆர்வம் உள்ள வழியில் செலுத்த முயற்சிக்காதது முதல் குற்றம் என்றால் படிப்பில் சிறந்த மதிப்பெண்ணைப் பெற மனப்பாடத்தை தவிர அங்கீகரிக்கப்பட்ட வேறு வழி எதையும் உருவாக்காமல் நாம் இருப்பதே இரண்டாவது குற்றம். இதனால்தான் முடிந்தவர்கள் காப்பி அடிக்கிறார்கள். முடியாதவர்கள் தற்கொலை முடிவை நாடுகிறார்கள்.

இது குறித்த கட்டுரை ஒன்றை "சமநிலைச் சமுதாயம்" என்ற சிற்றிதழில் எழுதியிருந்தேன். அந்த கட்டுரை இப்போது இரண்டு பக்கங்களாக என்னுடைய வடிவமைப்பில் உங்கள் பார்வைக்கு....

படங்களைக் 'க்ளிக்'கினால் கட்டுரையைப் படிக்கலாம்.

புதன், 9 டிசம்பர், 2009

ஈரம் - ஆன்ட்டி கிளைமாக்ஸ்

ஈரம் படம் சுட்ட கதையோ, சுடாத கதையோ... அதைப் பற்றி அப்புறம் பேசுவோம். அதுல சுயநலம் காரணமாவோ, ஜாலிக்காகவோ வாய்க்கு வந்த படி ஒருத்தரைப் பற்றி அதிலும் பெண்களைப் பற்றி பேசவே கூடாதுன்னு அருமையான அவசியமான  செய்தி இருக்குங்க.

அந்தப் படத்துல கல்லூரி மாணவி ஒரு வாலிபனோட தப்பு செஞ்சுட்டு மற்றவங்க கிட்ட இருந்து தப்பிக்க இன்னொரு பெண்ணோட நடத்தையை கொச்சைப்படுத்துவா பாருங்க...இது மாதிரி தினம் தினம் நமக்கு தெரிஞ்சும் தெரியாமலும் நிறையவே நடக்குது. இது ரொம்ப ரொம்ப தப்புங்க.

இந்த மாதிரி ஒரு பொண்ணால நடந்த விஷயத்தை எழுதுறேன்.

என்னுடைய உறவினர்  அவருக்கு பழக்கமான நண்பர் ஒருவர் உடல் நலமில்லாதபோது அவர் அட்மிட் ஆகியிருந்த மருத்துவமனைக்கு விசாரிக்கச் சென்றிருக்கிறார். அதன் பிறகு இரண்டொரு நாளில் உறவினருக்கு நான்கு வாலிபர்கள் வடிவில் அதிர்ச்சி காத்திருந்தது.

எடுத்த எடுப்பிலேயே மரியாதை இல்லாமல் பேசத் தொடங்கிய அந்த வாலிபர்கள், "காதலைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? நீ யார் காதலைப் பிரித்து வைக்க...உன்னைய என்ன பண்றோம்னு பார்..."என்றெல்லாம் ஆவேசமாகப் பேசியிருக்கிறார்கள். உறவினருக்குதான் எதுவும் புரியாத நிலை. அவர்களிடம் என்ன ஏதென்று விவரம் கேட்கலாம் என்று பார்த்தால் அவர்கள் இருந்த அந்த ஆக்ரோஷ நிலையில் கையை ஓங்கி விடுவார்களோ என்று பயந்திருக்கிறார் இவர்.

அவர்கள் அப்படி கத்திவிட்டுப் போன பிறகு என் உறவினர், அந்த வாலிபர்களை யார் என்று விசாரித்திருக்கிறார்.

உடல் நலமில்லாத நண்பரைப் பார்க்கச் சென்றார் அல்லவா?...அந்த நண்பரின் மகள் இந்த நான்கு வாலிபர்களில் ஒருவனை தீவிரமாக காதலித்திருக்கிறாள். பிறகுதான் அவன் நடத்தை மிக மோசம் என்று தெரிந்திருக்கிறது. அவனை விட்டு விலக ஏதாவது காரணம் தேடியபோது சிக்கியவர்தான் என் உறவினர்.

அவள் தன் காதலனிடம்,"அப்பா உடல் நலமில்லாம இருந்ததைப் பார்க்க வந்த அவர்தான் நம்ம விஷயத்தை எப்படியோ தெரிஞ்சுகிட்டு வீட்டுல சொல்லிட்டார். இனிமே நாம சந்திக்க வேணாம்... என்னை மறந்துடு." என்று கூறியிருக்கிறாள்.

அந்த வாலிபன் இதைக் கேட்டு ஒதுங்கிப் போகும் வகையில்லையே...அதனால்தான் என் உறவினரை வந்து மிரட்டியிருக்கிறான்.

இது தான் அதுவரை நடந்தது.

'அதெல்லாம் சரி... எங்க ஆன்ட்டி கிளைமாக்ஸ்'ன்னு நீங்க கேட்குறது என் காதுல விழுது.

உறவினரைத் திட்டிட்டு போனதோட விட்டிருந்தா இந்த கட்டுரைக்கு வேலையே இருந்திருக்காதுங்க. உன்னை என்ன பண்றேன் பாருன்னு சவால் விட்டுட்டு போன பசங்க இவரை அடிக்கணும்னு ஒரு தாதா(?!)கிட்ட பேசிட்டானுங்க. அந்த ஆளும் இவனுங்க காதலைப் பிரிச்ச வில்லனை அடிச்சு துவைச்சு காயப்போட்டுடுறேன்னு ஒத்துகிட்டாராம்.

அந்த பசங்களுக்கு கெட்ட நேரமா இல்ல எங்க சொந்தக்காரருக்கு நல்ல நேரமான்னு தெரியலை. அந்த தாதா வீட்டுக்குப் பக்கத்துல இவர் ரொம்ப நாள் குடியிருந்திருக்கார். இவர் மேல அந்த தாதாவுக்கு நல்ல மரியாதை இருந்திருக்கு. அது அந்த பசங்களுக்கு தெரியாம போய் ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க.

'ஒளியத் தெரியாதவன் தலையாரிவீட்டுல போய் ஒளிஞ்சானாம்'அப்படின்னு கிராமத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க. இந்த விளங்காத விளக்கெண்ணைங்களும் அதத்தான் செஞ்சிருக்காங்க.

அந்த தாதா என்ன பண்ணினாரு...இந்த பசங்களையும் அழைச்சுகிட்டே நம்ம உறவினரை பார்க்கப் போயிருக்காரு.(நீங்கதான் இந்த சம்பவத்தோட ஒன்றிப் போயிட்டீங்கிளே...அதான் நம்ம உறவினருன்னு சொன்னேன்.)

 இடி, மழை, அடி, உதை, மின்னல் எல்லாத்தையும் எதிர்பார்த்து அந்த பசங்க நிக்கிறாங்க. "என்னப்பு...பயலுக உங்களை உதைக்க எங்கிட்ட வந்து ரேட் பேசுறானுங்க...வாங்க...நாம ரெண்டு பேரும் சேர்ந்து இவனுங்களை போட்டு புரட்டிடுவோம்" அப்படின்னு கேட்கவும்  அவைங்களுக்கு கால்சட்டை நனையாததுதான் குறை.

நம்ம ஆளு செத்த பாம்பை அடிக்கவே பயப்படுறவர்தான். எப்பவும் இந்த தாதா கூடவே பாதுகாப்புக்கு வர மாட்டாருன்னு நல்லாவே தெரியும். இந்த எதார்த்தம் புரிஞ்சதால, "படிக்கிற புள்ளைங்கப்பா...விட்டுடுவோம். நண்பரோட பொண்ணும் இப்பதான் கல்லூரியில படிச்சுகிட்டு இருக்கு. அதுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காம இருக்கணும்னு கண்டிச்சு விட்டுடு..."ன்னு ரெண்டு பிரச்சனையை ஒரே நேரத்துல தீர்த்து வெச்சுட்டாரு.

ஆனா ஒரு விஷயம் மட்டும் உறுதிங்க... அந்த பசங்க மட்டும் வேற யார் கிட்டயாவது பஞ்சாயத்துக்கு போயிருந்தா நம்ம உறவினருக்கு பஞ்சர் ஒட்ட வேண்டியதாயிருக்கும்.

இப்ப சொல்லுங்க...இது ஆன்ட்டி கிளைமாக்ஸ் தானே.

வாசிப்புன்னா புத்தகம் படிக்கிறது மட்டுமா?

சட்டக் கல்லூரி சம்பவம் தொடர்பாக கைது செய்யப் பட்ட மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்,அவர்களை நூலகத்தில் படிக்கச் சொல்லி கட்டளை பிறப்பித்துள்ளது.

வாசிப்பின் மகத்துவத்தை நீதித்துறை உணர்ந்திருப்பதால்தான் இப்படி ஒரு உத்தரவு.வீடியோகேம், கார்ட்டூன் சேனல் என்று நம் குழந்தைகளின் பொழுதுபோக்கு அம்சத்தை சுருக்கி அவர்களின் மனதை பொலிவிழக்கச் செய்ததை இனியாவது தவிர்த்து அவர்களை பண்புள்ளவர்களாகச் செய்ய வேண்டியது நம் கடமை.

வாசிப்பு என்றால் புத்தகம் படிப்பது மட்டும் அல்ல.

நம்மை சுற்றி உள்ள சூழ்நிலைகளையும் மனிதர்களையும் நமக்கு கிடைக்கும் அனுபவங்களையும் சுவாசத்தைப் போல் நேசித்தால் எளிமையான தீர்வுகள் கிடைக்கும்.தவறுகளை அடுத்தவர்கள் சுட்டிக் காட்டாமலேயே உணரக் கூட பல நேரங்களில் வாய்ப்பு கிடைக்கும்.

ஆளில்லா கடையில யாருக்கு டீ?

சட்டக் கல்லூரி சம்பவம் தொடர்பாக கைது செய்யப் பட்ட மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்,அவர்களை நூலகத்தில் படிக்கச் சொல்லி கட்டளை பிறப்பித்துள்ளது.

வாசிப்பின் மகத்துவத்தை நீதித்துறை உணர்ந்திருப்பதால்தான் இப்படி ஒரு உத்தரவு.வீடியோகேம்,கார்ட்டூன் சேனல் என்று நம் குழந்தைகளின் பொழுதுபோக்கு அம்சத்தை சுருக்கி அவர்களின் மனதை பொலிவிழக்கச் செய்ததை இனியாவது தவிர்த்து அவர்களை பண்புள்ளவர்களாகச் செய்ய வேண்டியது நம் கடமை.

வாசிப்பு என்றால் புத்தகம் படிப்பது மட்டும் அல்ல.

நம்மை சுற்றி உள்ள சூழ்நிலைகளையும் மனிதர்களையும் நமக்கு கிடைக்கும் அனுபவங்களையும் சுவாசத்தைப் போல் நேசித்தால் எளிமையான தீர்வுகள் கிடைக்கும்.தவறுகளை அடுத்தவர்கள் சுட்டிக் காட்டாமலேயே உணரக் கூட பல நேரங்களில் வாய்ப்பு கிடைக்கும்.

என்னங்க...பழைய பதிவு மாதிரி இருக்கேன்னு பார்க்குறீங்கிளா?...ஆமாங்க...சில மாசங்களுக்கு முன்னால எழுதுனதுதான். அப்ப என்னுடைய பிளாக் என்னைத் தவிர ஒரே ஒரு நண்பருக்குதான் தெரியும். ஆளில்லாத கடையில யாருக்குய்யா டீ ஆத்துனன்னு நீங்க சொல்றது புரியுது. அதனாலதான் ரிப்பீட்டு...

நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா ஒருத்தருக்கு ரிவிட்டு அடிச்சாலே தப்பில்லை...நான் ரிப்பீட்டுதான செய்யுறேன்...பொறுத்துக்குங்க...

அப்பவும் ரெண்டு மூணு பேர் இதைப் படிச்சுட்டு கருத்து சொல்லியிருந்தாங்க. அவங்களுக்கெல்லாம் என் நன்றிகள்.

செவ்வாய், 8 டிசம்பர், 2009

கிரிக்கெட்டால் நமக்கு ஆப்பா? ஹெல்ப்பா?

கிரிக்கெட்டிற்கு இந்தியாவில்தான் ரசிகர்கள் மிக அதிகம்.ஆனால் இது நிறைய மனிதர்களின் நேரத்தை வீணாக்குகிறது என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.அதைப் பற்றி பிறகு பேசுவோம்.

விளையாட்டு என்பதையும் தாண்டி கிரிக்கெட்டில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே உண்டு.2008 ம் ஆண்டில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த நான்காவது டெஸ்டில் நாம் அறிந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன.

இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் கடைசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தும் நேரத்தில் கங்குலியின் வசம் கேப்டன் பொறுப்பைக் கொடுத்து தோனி அழகு பார்த்தார்.ஓய்வு பெற வேண்டிய டெஸ்டில் ரன் எதுவும் அடிக்காமல் மனவருத்தத்தில் இருந்த வீரருக்கு இதை விட கவுரவமும் மகிழ்ச்சியும் வேறு என்ன இருக்க முடியும்?

இதை விட ஒரு சந்தோஷமான விஷயம், வெற்றிக் கோப்பையை அதற்கு முதல் டெஸ்டிலேயே ஓய்வு பெற்ற வீரரான கும்ப்ளேயுடன் சேர்ந்து பெற்றுக்கொண்டதும் நெகிழ்ச்சியான விஷயம்.

நாமும் நம் வீட்டில் பெரியவர்களுக்கு இது போன்ற பெரிய அளவில் இல்லை என்றாலும் சின்ன சின்ன சந்தோஷங்களை அளிக்க முடியும்.எப்படி என்கிறீர்களா?

கோயிலுக்கு நன்கொடை அளிப்பது,நமது ஊழியர்களுக்கு ஊதியம்,போனஸ் வழங்குதல், குழந்தைகளுக்குப் பரிசளித்தல் போன்றவற்றை நம் வீட்டுப் பெரியவர்கள் கையால் செய்தால் இரண்டு நன்மைகள் உண்டு.

முதலாவது, நம் குழந்தைகள், நம்மிடம் வேலை செய்பவர்கள் ஆகியோருக்கு வீட்டுப் பெரியவர்கள் மீது மதிப்பு இருக்கும். இதனால் நமது கவுரவம் குறைந்து விடாது. பெற்றவர்களுக்கு இவ்வளவு மரியாதை தருகிறாரே என்று மதிப்பு ஒருபடி மேலேதான் உயரும்.

 "தான் ஒன்றுக்கும் உபயோகமில்லாதவராக ஆகி விட்டோமோ என்ற மன உளைச்சல்தான் பெரியவர்கள் பல நேரங்களில் பொறுமையிழந்து நடந்து கொள்ளக் காரணம். அவர்கள் வார்த்தையை அப்படியே கேட்டுக் கொள்ள வேண்டும் என்றில்லை. அவர்களிடம் ஆலோசனை கூட கேட்காமல் இருக்கிறோம் என்பதே வேதனைக்கு பல நேரங்களில் காரணமாக இருந்து விடும். இந்த எண்ணம் அவர்களை விழுங்கி விடாமல் இருக்க மேலே நான் சொன்ன யோசனை உதவும். இது இரண்டாவது நன்மை,

அவர்களின் அந்த நேரத்து மன நிறைவு நம்முடைய பல ஆண்டு நிம்மதியான வாழ்க்கைக்கான ஆசீர்வாதம் என்பதை நிச்சயம் உணர்வோம்.

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் முதலிடம் பிடித்தது இலங்கைக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற போதுதான். இதில் இரண்டாவது டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஸ்ரீசாந்த் சில காலம் முன்பு வரை  பந்து வீச்சை விட மைதானத்தில் அவரின் நடத்தையால்தான் அதிகம் பேசப்பட்டார்.

இப்போது அந்த பிரச்சனையில் சிக்காமல் விளையாட்டில் சாதித்திருக்கிறார்.

இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் கோபத்தை நாம் ஈடுபட்டிருக்கும் துறையில் முயற்சியாக மாற்றிவிட்டால் சாதனைகள் தேடி வரும் என்பதுதான்.

ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க டன் கணக்கில் தாதுக்களையும், மணலையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா என்பது இருக்கட்டும். எந்த விஷயத்திலும் நாம் கற்றுக் கொள்ள சிறு செய்தியாவது இருக்காமல் போகாது.

நன்றி : புகைப்படம் தந்து உதவிய இணையம்

வியாழன், 26 நவம்பர், 2009

சிமுலேட்டர் வெச்சு கத்துகுடுப்போமா? (சமச்சீர் கல்வி)

சிமுலேட்டர்னா என்னன்னு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னால இது தேவைப்படுற அளவுக்கு என்ன பிரச்சனைன்னு புரிஞ்சுக்குவோம். இப்ப நிறையபெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு இரு சக்கர மோட்டார் வாகனங்களை வாங்கிக்கொடுக்குறாங்க. இது சரியா?

நாங்க சம்பாதிக்கிறோம். செலவு பண்றோம்...இவனுக்கு ஏன் எரியுதுன்னு உங்க மனசுலயே என்னைய திட்டுறீங்க...புரியுது.

எனக்கு எரியலைங்க... அகால மரணத்தால இறந்தவங்க வீடுகள்ல போய்ப் பாருங்க. அந்த குடும்பத்துல அவதிப்படுறவங்க வயிறு எரியுறது தெரியும்.

ஓட்டுனரின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத வேகம், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், சாலை விதிகள் பற்றி அறியாமை அல்லது மதிக்காமை இவைகள் மட்டுமே எண்பது சதவீதம் விபத்துக்களுக்கு காரணமாக அமைகிறது. மற்றவரின் தவறும், வாகனக் குறைபாடும் இருபது சதவீத அளவுக்குதான் இருக்கும்.

சைக்கிளோ, மோட்டார் வாகனமோ இவற்றில் எதை இயக்கினாலும் தொண்ணூறு சதவீத பள்ளி மாணவர்கள், மாணவிகளுக்கு சைகை எதுவும் செய்யாமல் திரும்புவது, யாராவது தெரிந்தவர்களைப் பார்த்தால் அப்படியே நின்று பின்னால் வருபவரை அலறி ஓடச் செய்வது  இதெல்லாம் கை வந்த கலை.( பெரியவர்களும் பல நேரங்களில் இப்படி செய்வது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.)

சாலையைக் கடப்பவர்கள் அல்லது வாகனம்  திடீரென்று எதிர்ப்படுவது போன்ற சிக்கலான சூழ்நிலையில் எப்படி சமயோசிதமாக விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு மிக மிக குறைவு. பல நேரங்களில் அவர்கள், பதட்டத்தில் எதிரில் வருபவரையும் சேர்த்து கீழே தள்ளி விடுவார்கள்.

முறையான பயிற்சி இல்லாமல் அதிக சி.சி வாகனங்களை எடுத்து வந்து விபத்து ஏற்படுத்துவதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

படிக்கும் வயதில் இந்த பிரச்சனை என்றால் வளர்ந்து நன்றாக சம்பாதிக்கும் போது மது அருந்தி வாகனம் ஓட்டுவது மட்டுமின்றி இதை தவறு என்று மனதில் கூட நினைக்க மாட்டேன் என்ற போக்கு எந்த விளைவை ஏற்படுத்தி இருக்கிறது தெரியுமா?

ஒரு மணி நேரத்தில் சாலை விபத்தால் பதிமூன்று பேர் உயிரிழக்கிறார்கள் என்பது பதிவாகும் புள்ளி விபரம் என்றால், உண்மை நிலவரம் என்னவாக இருக்கும். இவற்றில் மதுவின் பங்கு பற்றி அறிய வரும்போது வேதனையாக இருக்கிறது.

இப்போதுள்ள தலைமுறை இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உயிர், பணம் அனைததையும் இழந்துகொண்டிருக்கிறது. இவர்களை மீட்பது இருக்கட்டும். வளரும் மாணவர்களை காக்கும் பொறுப்பு அதைவிட அவசரம், அவசியம்.

மது அருந்துபவருக்குதான் நேரடி பாதிப்பு. ஆனால் அவர் அந்த நிலையில் வாகனம் இயக்கும் போது அப்பாவிகளும் துன்பப்படுகிறார்களே. சாலைவிதிகளை மதிக்காத போதும் ஏறக்குறைய இதே விளைவுதான்.

சாலைவிதிகள் பற்றிய முழு விபரம், இவற்றை மதிக்காததால் ஏற்படும் விபத்துக்கள், விபத்துக்களில் ஒருவர் செய்யும் தவறால் இது எதிலும் சம்மந்தப்படாத நபர் எப்படி பாதிக்கப் படுகிறார், விபத்தில் ஒருவர் மரணமடைந்த பிறகு அல்லது படுகாயமடைந்த பின்பு பொருளாதார ரீதியாகவும் இன்னும் பிற வகைகளிலும் எவ்வளவு தூரம் பாதிப்பு அடைகிறார்கள் - இது போன்ற விஷயங்களை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிப்படியான பொதுப் பாடத்திட்டமாக வைக்க வேண்டும்.

இது தொடர்பான குறும்படங்கள் தயாரித்து பள்ளிகளில் திரையிட்டால் நல்ல பலன் இருக்கும். ஏனெனில், ஒரு விஷயம் சிறு வயதிலேயே தவறு என்று அழுத்தமாக பதிந்து விட்டால் அவன் வளர்ந்த பிறகு மோசமான அளவு பாதை மாற மாட்டான்.

ஆளில்லா சாலையில் ஒரு வாரம் ஓட்டிவிட்டு உரிமம் பெற்று விடுகிறார்கள். பிறகு போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் நாலு சக்கர வாகனத்தை  இயக்குவதால் பொதுவாக எல்லாருக்குமே சிரமமாகத்தான் இருக்கும்.

இப்போது சிமுலேட்டர் விஷயத்துக்கு வருகிறேன்.

கிளிக்கூண்டு போன்ற இந்த இயந்திரத்தில் அமர்ந்து கார் ஓட்ட பயிற்சி எடுத்தால் விரைவில் பதற்றம் நீங்கி விடும்., சென்னை அண்ணாசாலையின் சூழலில் கூட இயந்திரத்தின் உள்ளே இருந்து ஓட்டிப் பார்க்கலாமாம்.

சில மணி நேரப் பயிற்சி போதும் என்று சொல்கிறார்கள். ஒன்பதாம் வகுப்பு முதல் இந்த செய்முறைப்பயிற்சியையும் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்.

யோசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா... அப்படின்னு இழுக்குற சத்தம் எனக்கு கேட்குதே...

எந்த அருமையான யோசனையும் முதல்ல கேலிக்குரிய, சாத்தியமில்லாத விஷயம் மாதிரிதான் தெரியும். சிரமத்துடன் அதை நடைமுறைப்படுத்தின பிறகு கிடைக்கக்கூடிய பலனைப் பார்த்து இன்னும் கொஞ்சம் முன்னாடியே செஞ்சிருக்கலாமோ... அப்படின்னு நினைக்கத் தோணும்.

இதுதாங்க காலம் காலமா இருந்து வர்ற வரலாறு.

பாடத்திட்டத்துக்குள் கதைகள் விடலாமா? (சமச்சீர் கல்வி)

ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிக்குற பழக்கம் இருக்கான்னு கேட்டா, நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர் என்ன சொல்லுவாங்கன்னு தெரியுமா?

அதுக்கெல்லாம் எங்க சார் நேரம் இருக்கு. வீட்டுக்கே வர்ற நாளிதழ்களைக்கூட படிக்க முடியலைன்னு ரொம்ப சலிப்பா பேசுவாங்க. இந்த பதிலைக் கேட்டு சார் ரொம்ப பிசி அப்படின்னு  நினைத்தால் நீங்கதான் உ.அ.உ.இ. அர்த்தம் புரியலையா?அதுதான் சார் - உங்களை விட அப்பாவி உலகில் இல்லை.

ஏன் இப்படி சொல்றேன்னா, கால் மணி நேரம் நாளிதழ் படிக்க ஒதுக்க முடியாத நம்ம தலைவர் (நீங்க கட்சித்தலைவர்னு நினைச்சுக்காதீங்க...அவங்களுக்கு படிக்கத்தெரியலைன்னாலும் உதவியாளரை வைத்தாவது நாளிதழ்கள்ல வந்துருக்குற செய்திகளை தெரிஞ்சுக்குவாங்க. ஏன்னா அவர் கட்சியில இருக்காரா இல்லையான்னு அறிவிக்கிற ஆராய்ச்சி மணியே செய்த்திதாள்கள்தான்.) நான் சொன்னது குடும்பத் தலைவரைப் பற்றி. நடு ராத்திரி வரை தொலைக்காட்சியில மூழ்கி இருப்பார்.

அட...பெரியவங்களை விட்டுடுவோங்க. சின்னப் பசங்களை எடுத்துக்குங்க...வீட்டுப்பாடம், பள்ளிப்பாடம் அது இதுன்னு அவங்க தலையில அதிகமான சுமையை ஏற்றி வைக்கிறதால பாடப் புத்தகம் தவிர மற்ற எதையும் வாசிக்க அவங்களை நாம விடுறதே இல்லை.

பாடத்தை அளவுக்கு அதிகமா படிக்க வெச்சு நல்ல வேலைக்கு அனுப்பி வங்கி நிறைய சம்பாதிக்க வைக்கிறதெல்லாம் சரிதான். இப்படி உயர்ந்த நிலையில இருக்குற பலர் சின்ன சின்ன விஷயத்துல கூட ஒரு நேர்மை, அடுத்தவர்களுக்கு துன்பம் தராமை போன்ற குணங்கள் அப்படின்னா என்னன்னே தெரியாம இருக்காங்க.

வாகனங்களை மற்றவர்களுக்கு இடையூறா நிறுத்துறது, அடுத்தவங்க காதைக் கிழிக்கிற அளவுக்கு தடை செய்யப்பட்ட ஒலி அளவுக்கும் அதிகமா ஹாரன் வெச்சுக்குறது, பேராசை காரணமா குறுக்கு வழியில பணம் சம்பாதிக்கும் வழியில ஈடுபடுறது, (லஞ்சமும் இதில் தான் வருகிறது) தனக்கு கீழே அல்லது தன்னிடம் பணிபுரியும் நபர்களுக்கும் குடும்பம் சில பொறுப்புகள் இருக்கும் என்பதை மறந்து பல வகைகளிலும் துன்பம் கொடுப்பது என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம், நமது கல்விமுறை பணம் சம்பாதிக்க உதவும் அளவுக்கு பண்புகளை கற்றுத்தருவதில்லை. கொன்றைவேந்தன், ஆத்திசூடி, உலக நீதி, தெனாலிராமன், மரியாதைராமன், பீர்பால், விக்கிரமாதித்தன் ஆகிய கதைகள் உட்பட பல நூல்கள் சிறு வயதிலேயே அறிமுகம் செய்யப் பட்டால் நிச்சயம் பலன் இருக்கும்.

இவற்றை படிப்பதால் எல்லாரும் மகாத்மாவாகிவிடுவார்கள் என்று சொல்லவில்லை. ஆனால் அவ்வளவு எளிதில் மற்றவர்களை துன்பப்படுத்துபவர்களாக  மாட்டார்கள் என்று கூற முடியும்.

இந்த கதைகளை பாடத்திட்டமாக்குகிறேன் என்று வழக்கம் போல் தெனாலிராமனின் சிறுகதை ஒன்றை வரி மாறாமல் எழுதுக அப்படின்னு கேள்வி கேட்டுட்டா அவ்வளவுதான். நம்ம பசங்களுக்கு இந்த கதைகள் மேல வெறுப்பு வர வேற காரணமே தேவையில்லை.

ஒவ்வொரு வாரமும் ஒரு ஐந்து கதைகளை பற்றி மாணவர்கள் நினைப்பது என்ன என்று சொந்த நடையில் மனதில் தோன்றுவதை எழுத சொல்லி அதற்கு மதிப்பெண் அளிக்கலாம்.

ஆண்டுத்தேர்வுகளின் மார்க்குகளுடன் இவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

பாடத்திட்டத்துக்குள் கதைகள் விடலாமா? (சமச்சீர் கல்வி)

ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிக்குற பழக்கம் இருக்கான்னு கேட்டா, நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர் என்ன சொல்லுவாங்கன்னு தெரியுமா?

அதுக்கெல்லாம் எங்க சார் நேரம் இருக்கு. வீட்டுக்கே வர்ற நாளிதழ்களைக்கூட படிக்க முடியலைன்னு ரொம்ப சலிப்பா பேசுவாங்க. இந்த பதிலைக் கேட்டு சார் ரொம்ப பிசி அப்படின்னு  நினைத்தால் நீங்கதான் உ.அ.உ.இ. அர்த்தம் புரியலையா?அதுதான் சார் - உங்களை விட அப்பாவி உலகில் இல்லை.

ஏன் இப்படி சொல்றேன்னா, கால் மணி நேரம் நாளிதழ் படிக்க ஒதுக்க முடியாத நம்ம தலைவர் (நீங்க கட்சித்தலைவர்னு நினைச்சுக்காதீங்க...அவங்களுக்கு படிக்கத்தெரியலைன்னாலும் உதவியாளரை வைத்தாவது நாளிதழ்கள்ல வந்துருக்குற செய்திகளை தெரிஞ்சுக்குவாங்க. ஏன்னா அவர் கட்சியில இருக்காரா இல்லையான்னு அறிவிக்கிற ஆராய்ச்சி மணியே செய்த்திதாள்கள்தான். நான் சொன்னது குடும்பத் தலைவரைப் பற்றி.)  நடு ராத்திரி வரை தொலைக்காட்சியில மூழ்கி இருப்பார்.

அட...பெரியவங்களை விட்டுடுவோங்க. சின்னப் பசங்களை எடுத்துக்குங்க...வீட்டுப்பாடம், பள்ளிப்பாடம் அது இதுன்னு அவங்க தலையில அதிகமான சுமையை ஏற்றி வைக்கிறதால பாடப் புத்தகம் தவிர மற்ற எதையும் வாசிக்க அவங்களை நாம விடுறதே இல்லை.

பாடத்தை அளவுக்கு அதிகமா படிக்க வெச்சு நல்ல வேலைக்கு அனுப்பி வங்கி நிறைய சம்பாதிக்க வைக்கிறதெல்லாம் சரிதான். இப்படி உயர்ந்த நிலையில இருக்குற பலர் சின்ன சின்ன விஷயத்துல கூட ஒரு நேர்மை, அடுத்தவர்களுக்கு துன்பம் தராமை போன்ற குணங்கள் அப்படின்னா என்னன்னே தெரியாம இருக்காங்க.

வாகனங்களை மற்றவர்களுக்கு இடையூறா நிறுத்துறது, அடுத்தவங்க காதைக் கிழிக்கிற அளவுக்கு தடை செய்யப்பட்ட ஒலி அளவுக்கும் அதிகமா ஹாரன் வெச்சுக்குறது, பேராசை காரணமா குறுக்கு வழியில பணம் சம்பாதிக்கும் வழியில ஈடுபடுறது, (லஞ்சமும் இதில் தான் வருகிறது) தனக்கு கீழே அல்லது தன்னிடம் பணிபுரியும் நபர்களுக்கும் குடும்பம் சில பொறுப்புகள் இருக்கும் என்பதை மறந்து பல வகைகளிலும் துன்பம் கொடுப்பது என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம், நமது கல்விமுறை பணம் சம்பாதிக்க உதவும் அளவுக்கு பண்புகளை கற்றுத்தருவதில்லை. கொன்றைவேந்தன், ஆத்திசூடி, உலக நீதி, தெனாலிராமன், மரியாதைராமன், பீர்பால், விக்கிரமாதித்தன் ஆகிய கதைகள் உட்பட பல நூல்கள் சிறு வயதிலேயே அறிமுகம் செய்யப் பட்டால் நிச்சயம் பலன் இருக்கும்.

இவற்றை படிப்பதால் எல்லாரும் மகாத்மாவாகிவிடுவார்கள் என்று சொல்லவில்லை. ஆனால் அவ்வளவு எளிதில் மற்றவர்களை துன்பப்படுத்துபவர்களாக  மாட்டார்கள் என்று கூற முடியும்.

இந்த கதைகளை பாடத்திட்டமாக்குகிறேன் என்று வழக்கம் போல் தெனாலிராமனின் சிறுகதை ஒன்றை வரி மாறாமல் எழுதுக அப்படின்னு கேள்வி கேட்டுட்டா அவ்வளவுதான். நம்ம பசங்களுக்கு இந்த கதைகள் மேல வெறுப்பு வர வேற காரணமே தேவையில்லை.

ஒவ்வொரு வாரமும் ஒரு ஐந்து கதைகளை பற்றி மாணவர்கள் நினைப்பது என்ன என்று சொந்த நடையில் மனதில் தோன்றுவதை எழுத சொல்லி அதற்கு மதிப்பெண் அளிக்கலாம்.

ஆண்டுத்தேர்வுகளின் மார்க்குகளுடன் இவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

புதன், 25 நவம்பர், 2009

காலைக் கதிர் (25.11.2009) சமச்சீர் கல்வி எப்படி இருக்க வேண்டும்?

காலைக் கதிர் நாளிதழில் நான் எழுதி அனுப்பிய கருத்து பிரசுரமானது. மனப்பாடம் செய்யும் நேரத்தை குறைக்கலாம் என்பதுதான் இந்த கட்டுரையின் சாரம்சம்.

சமச்சீர் கல்வி முறையில் தேவைப்படும் முக்கிய மாற்றம் என்னவென்றால், தாய்மொழியிலேயே உயர்கல்வி வரை படிக்க வழி செய்வதுதான். தாய்மொழியிலேயே கல்வி கற்றால் உலக அளவில் போட்டியிட முடியாது என்பது நிரூபிக்கப்படாத வாதம்தான். ஏனெனில் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் தாய்மொழியிலேயேதான் பயில்கின்றனர். அவர்களுடைய முன்னேற்றம் நாம் அறிந்ததே.

பிற மொழியில் பயிலும்போது, அந்த பாடப் புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை மட்டுமே மனப்பாடம் செய்து தேர்ச்சி அடைவதே நமது மாணவர்களுக்கு பெரும்பாடாகிவிடுகிறது. ஆனால், தாய்மொழியில் படித்தால் எந்த நெருக்கடியும் இல்லாமல் பாடத்திட்டத்தில் உள்ளதையும் தாண்டி, சுயமாக சிந்தித்து, அவரவர்க்கு ஆர்வம் உள்ள துறையில் சாதிக்க முடியும்.

அதற்காக ஆங்கிலம் அறவே வேண்டாம் என்று சொல்லவில்லை. கணிதம், அறிவியல் போல ஆங்கிலமும் மற்றொரு பாடமாகவே இருக்க வேண்டும். அதில் உள்ள இலக்கணங்களை முழுமையாக கற்று, எந்த வழியிலும் அந்த மொழியைப் பயன்படுத்தும் திறனை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமைய வேண்டும்.

இதனால் மாணவர்கள் தன் திறன் முழுவதையும் ஆங்கில வழியில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்வதற்கே செலவிடுவது குறையும். தினமும் அதிகாலையில் இருந்து இரவு வரை பாடப்புத்தகங்களையே முதுகிலும் மூளையிலும் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருக்காது.

மது, புகை, ஈவ்டீசிங், சாலைவிபத்து உள்ளிட்ட தீமைகளுக்கு காரணம், அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள், அவற்றைத் தவிர்க்கும் வழிகள் போன்றவற்றை விளக்கும் வகையில் பள்ளிகளில் பொது பாடங்கள் உருவாக்க வழி செய்ய வேண்டும்.

வங்கி, அரசு அலுவலக நடைமுறைகள், சாலை விதிகள் ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் செய்முறைப் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

பாடத்திட்டத்தில் சமன்பாடு, அறிவியல் சூத்திரங்கள், இலக்கண விதிகள் போன்ற, மாற்றாமல் படிக்க வேண்டியவை மட்டும் மனதில் சுலபமாக பதியும் வகையில் எளிமையான பாடத்திட்டம் உருவாக்க வேண்டும். அவற்றிற்கு விளக்கம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று குறுகிய வட்டம் போட்டுவிடாமல், சொந்த நடையில் அவர்கள் பதிலளிக்க தூண்ட வேண்டும்.

மனப்பாடம் செய்யும் திறன் இல்லாத குழந்தைகள்தான் மதிப்பெண்கள் பெற முடியாமல் மக்குப் பிள்ளைகள் என்ற பெயரை சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நிச்சயமாக மற்ற திறன் ஏதோ ஒன்று இருக்கும். அதை வெளிக்கொண்டு வரும் வகையில் பாடத்திட்டம் அமைவது நல்லது.

பள்ளி அளவிலேயே கைத்தொழில், சுயதொழில் என்று ஒருவர் சொந்தக்காலில் நிற்கும் வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் மனப்பாட செய்யுள்கள் பாடத்திட்டத்தில் அவசியமா?(சமச்சீர் கல்வி)

திருக்குறள், நன்னூல், நாலடியார், நெடுநல் வாடை, கலிங்கத்துப் பரணி - ஆகிய பாடல்களின் சில வரிகளையாவது  அடி பிறழாமல் எழுதுமாறு தேர்வுகளில் கேட்கப் படும். அவர்களும் எழுதுவார்கள். ஆனால் பொருள் புரிந்து எழுதுவார்களா? என்ற கேள்விக்கு வேதனையுடன் இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

பாடல்களை படித்து புருந்து கொள்ளும் அளவுக்கு இத்தகைய விஷயங்கள் பாடத்திட்டத்தில் இருந்தால் போதும். அவற்றை அடி பிறழாமல் எழுதும் பயிற்சியை ஆய்வு மாணவர்கள் வேண்டுமானால் விருப்பத்தின் பேரில் செய்யட்டும். பள்ளி மாணவர்களின் தேர்வில் இந்த பாடல்களைக் கொடுத்து புரிந்து கொண்ட விஷயத்தை சொந்த நடையில் எழுத சொல்லுங்கள்.

அப்போதுதான் அந்த செய்யுளின் கருத்து ஒரு மாணவனின் மனதில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அறிய முடியும்.

இதில் வேறொரு நன்மையையும் இருக்கிறது.  இவற்றில் உள்ள பல நல்ல கருத்துக்கள் சிறு வயதிலேயே மனதில் பதிவதால் ஒருவன் வளர்ந்து பெரியவனாகும்போது சிறிதளவாவது தவறு செய்வதற்கு பயப்படுவான். அடுத்தவர்களுக்காக இல்லை என்றாலும் அவன் மனசாட்சி கொஞ்சம் யோசிக்க வைக்கும்.

பாடத்திட்டம் தயாரிப்பவர்களும் கொஞ்சம் யோசிங்க.

செவ்வாய், 24 நவம்பர், 2009

ஒரே பாடத்திட்டம் இருந்தால் மட்டும் சமச்சீர் கல்வியா? (சமச்சீர் கல்வி)

தமிழ் நாட்டில் தற்போதுள்ள நான்கு விதமான பாடத்திட்டங்களை மாற்றி பொதுவாக ஒரே முறை கல்வியாக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. அதற்கான வரைவு பாடத்திட்டத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.  அரசு ஒருபுறம் இந்த முயற்சியில் இருக்க நம் மக்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன?

ஒவ்வொருவரும் சமச்சீர் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்லும் கருத்து கந்தசாமியாகி விட்டார்கள்.  ஏதாவது சொல்ல வேண்டுமே என்று நான்  இந்த முயற்சியில் இறங்க வில்லை. நான் சொல்வது  நிஜமாகவே உருப்படியான யோசனையா என்ற சந்தேகத்துடன்தான் இப்போது எழுதுகிறேன்.

(வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் அரசால் வெளியிடப் பட்டுள்ளது. அதையும் பார்வையிட்டு விடுங்கள்)

நான் கல்லூரியில் பி.காம் முடித்த பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கே 75 வயதில் இருந்த ஒரு கணக்கு பிள்ளை என்னிடம் முதலில் என்ன சொன்னார் தெரியுமா?

பி.காம்., எம்.காம் அப்படின்னு பெருசா சொல்லிக்கிட்டு வர்றீங்க. கடைசியா இங்க எதுவும் செய்யத்தெரியல. எல்லாரும் என்னோட .............. அறுக்க வந்துடுங்க அப்படின்னு சலிப்பா பேசினார்.

அடுத்த நாளே அவர் அப்படி பேசினது தப்புன்னு ஒத்துகிட்டார். முதல் நாள் அவர் அப்படி பேசினதும் தப்பு இல்லை.  பாடத்தை படிச்சு முடிச்சவங்க கையில் சர்க்கரைன்னு எழுதுன பேப்பர்தான் அனுபவமா இருக்கு. அதை தின்னா இனிக்குமா? கழுதைன்னு பட்டம் தான் கிடைக்கும்.

ஒரு இடத்துல போய் வேலை செய்யறதுக்கு உள்ள அனுபவத்தை கல்வி கொடுக்குறது இல்லை. தொழில் கல்வியையும், விதிவிலக்குகளையும் விட்டுடுவோம்.

மனப்பாட கல்வி ஒரு இடத்துல வேலைக்கு போறவங்களை தடுமாற வெச்சுடுத்து.

மனப்பாடம் பண்ற முறையை எடுத்துட்டா எப்படி ஒருத்தனோட அறிவை எடை போடுறது...திறமை சாலிகளை கண்டு பிடிக்கிறதுன்னு  நீங்க கேக்குறது காதுல விழுதுங்க. அதுக்கு வழியை விளக்குறதுக்கு  முன்னால ஒரு செய்தியை சொல்லிடுறேன்.

என்கிட்டே அவர் இப்படி பேசினது தப்புதான்னு சொல்ல காரணம் என்னன்னு தெரியுமா?

எனக்கு கல்லூரியில கிடைத்த பேராசிரியர் புத்தகத்துல உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்யாம ஆறு தங்க விதிகளை மட்டும் வெச்சு எப்படி கணக்கு போடுறதுன்னு சொல்லிக் கொடுத்தார்.

கணக்குப் பதிவியல்ல உள்ள ஆறு தங்க விதிகளை மட்டும் மனப்பாடம் செய்தால் உலகத்துல உள்ள எந்த நிறுவனத்தோட கணக்குகளையும் போட்டு பேலன்ஸ் சீட் தயாரிச்சுடலாங்க. ஆனா அந்த விதிகளை எந்த ஒரு நிறுவனத்தோட அன்றாட கணக்கு நடவடிக்கையில  சரியா பொருத்திப் பார்க்குறதுலதான் வெற்றி அடங்கி இருக்கு.

இதுல அந்த ஆறு விதிகளை புரிஞ்சுகிட்டு  மனப்பாடம் செய்தால் போதும்.  அதை எப்படி பயன்படுத்துறதுன்னு விளையாட்டு போல தெரிஞ்சுக்கலாம். ஆனால் எல்லா நிறுவன கணக்குகளோட மாதிரியை வெச்சுகிட்டு மனப்பாடம் செய்தால் எவ்வளவு நேரம் வீண்.?

அவ்வளவு நேரம் செலவு செய்தாலும் எல்லாமும் மண்டையில ஏறணுமே?

இந்த மாதிரி ஒவ்வொரு பாடத்திலும் மனப்பாடம் செய்ய வேண்டியதும் கத்துக்க வேண்டியதும் தனித்தனியா இருந்தா மாணவர்களோட திறன் மனப்பாடம் செய்வதிலேயே கரைந்து போயிடாம வேறு பல சாதனைகளுக்கும் உதவும்.

அதனால்தான் ஒரே பாடத்திட்டம் மட்டுமே சமச்சீர் கல்வி இல்லை. மாணவர்களின் திறன் வீணடிக்கப் படாமல் முழுவதும் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளும் பாடத்திட்டம்தான் சமச்சீர் கல்வி என்பது என் கருத்து.

இன்னும் புரியலையா?

ஒரு கட்டிடத்தின் முதல் மாடிக்கு செல்ல படிகள் இருக்கும் போது அதன் வழியே செல்லாமல் வெளிப்புற சுவற்றில் பதிக்கப் பட்டிருக்கும் தண்ணீர்க் குழாயைப் பிடித்து மேலே ஏறி வருவதைப் போன்றது முழுவதும் மனப்பாடத்தை மட்டும் நம்பி உள்ள இப்போதைய கல்வி முறை.

மேலும் விஷயங்கள் அடுத்த பதிவில். 

புதன், 11 பிப்ரவரி, 2009

தேர்வுக் காய்ச்சல்